தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மதிப்பிழக்கும் தீபாவளி
எப்படி?
துளிகள்
தேவாரம் சுடுகிறது
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்-8
சிறந்த நூலிலிருந்து
கவிதை
வரலாறு
நெசந்தானுங்க
தினமலரின் மேதாவித்தனம்
பதிலடி
குறுங்கதை
வரலாற்றுப் பதிவுகள்

 

 

குறுங்கதை

உண்மையாவே கடவுள் இருக்கிறாரப்பா? அப்பாவிடம் கேட்டான் பையன்
இந்த கேள்விக்கு பதில் நாளைக்கு சொல்றேன்ப்பா,என்றார் அப்பா
மறுநாள் பையனுக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அப்பா
பையன் சைக்கிள் ஓட்ட, பிடித்துகொண்டு பின்னாலேயே ஓடி வந்தார் அப்பா.
கொஞ்ச தூரம் போனதும் கையை விட்டுவிட்டு பிடிக்கிற பாவனை செய்துகொண்டே பின்னால் ஓடி வந்தார்
வீடு திரும்பும்போது அப்பா சொன்னார்,பாத்தியாப்பா இன்னைக்கு நீ சைக்கிள் ஓட்டும் போது கொஞ்ச தூராம்தான் நான் பிடிச்சுகிட்டே வந்தேன்,அதுக்கப்புறம் சும்மா தான் ஓடி வந்தேன்.ஆனா நான் பிடிச்சிருக்கிறேன்ற நம்பிக்கைல நீ சைக்கிள் ஓட்ன பாட்தியா?,அதுமாதிரிதாம்ப்பா கடவுள் நம்பிக்கையும்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையான்னு எனக்கும் தெரியாது,ஆனா மனுசன் வாழ்க்கையைல வர்ற கஷ்டங்களை,தடங்கல்களை நம்பிக்கையோட எதிர் கொள்ள கடவுள் நம்பிக்கை தேவைப்படுது.புரிஞ்சதா?
பையன் கேட்டான் ஆனா நானே தனியா சைக்கிள் ஓட்ட பழகுனதுக்கப்புறம் நீங்க சும்மா என் கூட ஓடி வர தேவையே இல்லையேப்பா?
பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் அப்பா.

- ராசகுமார் kilvaanam.blogspot.com