வரவேற்கிறேன்
தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
நினைவுகள்
கவிதை
ஹாலிவுட் கலைவாணர் - 9
சிறுகதை
நினைவலையில் சில
நீதி கெட்டது யாரால் ?
அனு வனுவாய் - 2
சமூக (அ) நீதி
சாரங் கபாணியும்
மருத்துவம்
ஓப்படைத்துலிட்டேன் !
புதிய தொடர்
நமது ஆசிரியர்

 

 

தமிழர் தலைவர் - 75

அகவை எழுபத்தைந்தா?.. அயராது, கொள்கை விட்டு அகலாது மாபெரும் இந்தப் புயலுக்கு முக்கால் நூற்றாண்டா அகவை?
எனக்குள்ளே நான் கேட்டுக் கொள்கிறேன். நான் 80 அகவையை எட்டி விட்டேன். தமிழ்க்குல மறவர் வீரமணிக்கு எழுபத்தைந்து ஆவதில் என்ன வியப்பிருக்க முடியும்?
சேலம் மாவட்டம் வேலூர் எனும் சிற்றூரில் கந்தசாமி கவுண்டர் உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியரான புலவர் கண்ணப்பர் என் தமக்கையார் சரசுவதி இவர்களின் திருமணம் 1944 சனவரித் திங்களில் நடைபெற்றது. தந்தை பெரியார், கானாடுகாத்தான் வை.சு.மஞ்சுளா-பாய் திருமணத்தின் அழைப்பாளர்ககக் குறிப்பிட்ட அழைப்பிதழ் பகுத்தறிவியக்கத் தோழர்களுக்கெல்லாம் அனுப்பப்பெற்றன. கொள்கை மறவர் ஈரோடு சண்முக வேலாயுதம் ஏற்பாடுகள் செய்தார்.
காவிரி பாயும் சின்னஞ்சிறிய சிற்றூரான கட்டிபாளையத்தில் திருமணம், சுயமரியாதை இயக்க மாநாடு போல் நடந்தது. தந்தை பெரியார் உள்ளிட்ட எல்லா முன்னணிப் பேச்சாளர்களும் வந்து வாழ்த்தினர். இந்தத் திருமண நிகழ்ச்சியின் நல்விளைவாக அந்த வட்டாரத்துச் சிற்றூர்கள் அனைத்தும் விழிப்புணர்ச்சி பெற்றன. வேலாயுதம் பாளை-யம் இரத்தினவேல், ஆசிரியர் நடேசன் போன்ற பலர் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களாகினர்.
தமக்கையார் சரசுவதி, தம் செயற்பாடுகளால் சிற்றூர்ப் பெண்களை சீர்திருத்தி மூடநம்பிக்-கைளினின்று விடுவித்தார். இப்படி விழித்-தெழுந்த அந்த வேலாயுதம் பாளையத்தில் இளைஞர்கள் கூடி பகுத்தறிவியக்க விளக்கப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்தனர். இந்தப் பகுதி திருச்சி மாவட்டம் சேர்ந்தது. ஆற்றின் மறுகரை வேலூர் - சேலம் மாவட்டம் சேர்ந்தது. இவ்விரு பகுதி மக்களும் பரிசல் மூலம் ஆற்றை கடந்தாக வேண்டும். இத்தனை இடர்ப்-பாடுகளுக்கும் நடுவே இளைஞர்கள் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் காவிரி ஆற்று மணலில்!
நாலைந்து தென்னங்கீற்றுகளை வேய்ந்து பந்தல். அதனடியில் சில பலகைகள் ஒன்றி-ணைந்த மேடை. ஒரு சிறிய மேடை. மேடை விளிம்பில் மூங்கில் கம்பம். அதில் ஒரு பெட்ரோமக்ஸ் விளக்கு. இதன் அடியில் உயரத்தில் ஒரு சிறிய மேசை.
கூட்டத் தலைமை உரையாற்றினார் புரட்சிக் கவிஞர். வரவேற்புரை ஈரோடு சண்முக வேலாயுதம். அவர் பேசி முடிக்கையில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை எடுத்துக் கூறக் கடலூர் சிறுவன் வீரமணி இப்போது பேசுவார் என்று அறிவித்து விட்டார் புரட்சிக் கவிஞர். ஒரு சிறுவன் வந்து வணக்கம் கூறியதும், வேலாயுதம்பாளையம் ரத்தினவேலு சிறுவன் கை தூக்கிச் சிறு மேசை மீது ஏறி நிற்க வைத்தார்!
வீரமணி! - அந்தச் சின்னஞ்சிறிய பருவத்தில் எடுத்து வீசிய அனல் - புரட்சிக்கவிஞரையே வியப்பில் ஆழ்த்தியது. கூட்டத்தை விரைவில் முடித்தால்தான் புகலூரில் ரயிலைப் பிடிக்க முடியும் என்று சிலர் நினைவூட்டினர்.
புரட்சிக்கவிஞர் எழுந்து இருக்க விரும்புறவங்க இருங்க இல்லே... போவனும்னா போங்க. கூட்டத்தை உடனே முடிக்க முடியாது! என்று கட்டளையிட்டுவிட்டார்.
வீரமணி பேசிமுடித்த பின் தமது பாராட்டைத் தெரிவித்து அமர்ந்தார். வீரமணி தன் உரையை நிறைவு செய்து மேடை மீது வந்தபோது என் அளவு உயரமே இருந்தார் என்று எனக்கு நினைவு!
அன்று தொட்டு இவரின் பேச்சும் எழுத்தும் செயல்பாடும் எனக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது மட்டுமன்று. எனக்குத் தெம்பும் தந்துவருகிறது என்பதும் உண்மை.
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதுடன், தந்தை பெரியாரின் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வருவதையும் கண்டு வியந்திருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிச் சென்ற சில வரலாறுகளில் முதன்மையானது, மற்றவர்களுக்கு மதிப்புத் தருவது; இணக்கமாய்ப் பேசுவது; மாற்றுக் கொள்கை உடையவரையும் மதிப்பது; சிக்கன வாழ்க்கை; அயர்வில்லாத தொண்டு!
இவற்றை பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள், ஆசிரியர் வீரமணி போன்ற சிலரிடம் மட்டுமே காணமுடியும்.
என் வானொலி நிலையப் பணியின்போது ஒரு நிகழ்ச்சிக்காக ஆசிரியர் வீரமணியைப் புதுச்சேரி வானொலிக்கு அழைத்தேன். திருமதி அகிலா சிவராமன் நம் கருத்துக்கெல்லாம் எதிர் அணியில் இருப்பவரானாலும் நிலைய இயக்குநர் என்ற தகுதியில், தந்தை பெரியார் நினைவு நாள் பேருரையாற்ற அழைத்தோம். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர் வீரமணி வானொலி நிலையத்துள் வந்தார்; கறுப்புடை அணிந்த நண்பர்கள் சிலர் தொடர்ந்தனர்; வானொலி நிலையத்தின் முகப்பு வாயிலில் கறுப்புடையினர் நுழைவது கண்ட பலர், என்னவோ போராட்டம் நடைபெற உள்ளதாக நினைத்து, தெரு ஓரத்தில் நின்றனர். ஆசிரியர் அவர்களை வரவேற்று இயக்குநர் அறைக்கு அழைத்துச் சென்றேன். வானொலி நிலையச் சடங்கு வரவேற்-பது. சில சொற்கள் பேசிவிட்டு - சுவைநீர் தருவது, ஒலிப்-பதிவு செய்யவேண்டிய உரை-யின் எழுத்துப் படியைப் பெற்று ஒப்பமளிப்பது.- இவை பெருமக்க-ள் என்று குறிக்கப்பட்ட-வருக்கான சடங்கு! இருக்கையில் அமர்ந்தபடி, ஆசிரியர் தாம் கொணர்ந்த எழுத்துப்-படியை நிலைய அதிகாரியி-டம் நீட்டினார்.
அதிகாரி அதனைப் படித்துப் பாராமலே, ஒலிப்பதிவுக் கூடத்துக்குப் போகலாமா என்று என்னிடம் வினவி-னார். தொலை-பேசியில் தொடர்பு கொண்டு ஒலிப்பதிவுக்கான ஏற்பாடுகள் அணியமாய் உள்ளன என்ற தகவல் பெற்றார். எழுந்து கும்பிட்டு நிலைய இயக்குநர் நீங்கள் சென்று ஒலிப்பதிவு செய்யலாமே... என்று இழுத்தார். நான் எழுத்துப்படியைப் பெற்றுக் கொண்டு ஒலிப்பதிவுக் கூடம் சென்று ஒலிப்பதிவாக்கத் தொடங்கினேன். சரியாக 56 மணித்துளிகள் இடை நிறுத்தாமல் தெளிவான குரலில் வானொலிக்கு ஏற்ற வகையில் படித்து முடித்தார் ஆசிரியர்.
நிலைய இயக்குநர் அங்கே வந்தார். ரொம்ப நன்றிங்க! என்றார். ஒலிப்பதிவில் ஏதாவது திருத்தம் தேவையிருந்தால் அதனைச் செய்து விட்டுப்போகிறேன் என்று ஆசிரியர் சொல்ல, தேவையில்லை. ஒலிப்பதிவு ஆகும்போதே என் அறையில் உள்ள தொடர்பு மூலம் கேட்டுக் கொண்டிருந்தேன். குறை சொல்ல முடியாதபடி இருந்தது உங்கள் உரை! என்று பாராட்டினார்.
இச்சமயத்தில்தான் ஆசிரியரிடம் பெரியா-ரின் ஒழுகலாறு பளிச்சிடக் கண்டேன்.
இது வானொலி உரை. அய்யாவைப் பற்றிய பொதுமைக் கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். எங்கள் இயக்கக் கருத்துகளை எடுத்துச் சொல்ல எங்கள் மேடை இருக்கிறதே! அங்கே சொல்ல வேண்டியவற்றை வானொலியில் சொல்லும் அவசியம் இல்லை - அது முறையும் ஆகாது. இது-தான் அய்யா கற்பித்த நாகரிகம் என்றாரே ஆசிரியர்! நிலைய இயக்குநர் அம்மையாரின் மன நிறைவு அவரின் கண்ணில் பளிச்சிட்டது.
ஆசிரியருக்கு உரிய தொகைக்கான காசோலை அளித்து விடைபெற்றார் நிலைய இயக்குநர். தெரு (அப்போது வானொலி நிலையம் புதுவை கடற்கரைச் சாலையில் இருந்தது), ஓரத்தில் நின்றிருந்த கூட்டம் ஆசிரியரைச் சூழ்ந்து கொண்டு கையொலி எழுப்-பினர். ஆசிரியர், வானொலி நிலையத்-துக்கு வந்த விவரத்தை எல்லோரிடமும் சொல்லி, உரை ஒலிப்பரப்பாகும் நேரமும் நாளும் விவரமும் கூறி அனுப்பினேன்.
நயத்தக்க நனி நாகரிகராகத்தான் பகுத்தறிவியக்கத்தினர் வாழ்ந்து
காட்டுவர் என்பதை
புலப்படுத்திய ஆசிரியர் கறுப்புச் சட்டை அணிந்த வெள்ளைப் புறா என்று என்னுடன் ஒலிப்பதிவு அலுவல் முடித்த பொறியாளர் என்னிடம் சொன்னது என் இதயத்தில் பதிவாகி இருக்கிறது.
காவிரி ஆற்றின் கரையில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் கீழே உயர் மேசை மேல் நின்ற அந்த சிறு வீரமணி, மலையாக எழுந்து, எழுபத்தைந்து அகவையில் சலியாத தொண்டாற்றி வருவது என் நெஞ்சை நிமிர வைக்கிறது.