வரவேற்கிறேன்
தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
நினைவுகள்
கவிதை
ஹாலிவுட் கலைவாணர் - 9
சிறுகதை
நினைவலையில் சில
நீதி கெட்டது யாரால் ?
அனு வனுவாய் - 2
சமூக (அ) நீதி
சாரங் கபாணியும்
மருத்துவம்
ஓப்படைத்துலிட்டேன் !
புதிய தொடர்
நமது ஆசிரியர்

 

 

நினைவுகள்

ஆசிரியருக்குக் கொள்கைப் பிடிவாதம் எப்போதும் உண்டு. இது ஏற்கெனவே ஒரு வாரப் பத்திரிகைக்கு பேட்டியாகக் கொடுத்தது-தான். இருந்தாலும் நம் இயக்கப் பத்திரிகையில் பதிவு செய்கிறேன்.
அவருடைய மாமனார் சிதம்பரம் இயற்கை எய்தியபோது பெரியார் திடலில்தான் அவருடைய உடல் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியருக்கு அவர்மேல் அளவு கடந்த மரியாதை. அவருக்கும் ஆசிரியரை, தன் மகனாகவே பாவித்து பாசமுடன் இருந்தார்.
மாமனார் சிதம்பரம் உடலுக்கு கொள்ளி வைக்கவேண்டுமென்று அவருடைய துணைவி-யார் (ஆசிரியரின் மாமியார்) மிகவும் ஆசைப்பட்டார்கள். ஆசிரியரிடம் சொன்ன-தற்கு கொள்கைக்கு விரோதமாக நாமே செய்தால் மற்றவர்கள் எப்படி செய்வார்கள். எனக்கு என் மாமனார் மீது மிகவும் பிரியம் இருந்தாலும், கொள்ளி வைப்பதெல்லாம் தேவையற்றது. எவ்வித சடங்கும் இல்லாமல் சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிக்கலாம் என்றார்கள்.
எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்ட அவர் மாமியார், ஆசிரியர்தான் கொள்ளி வைக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். மாமியாருக்காக செய்து விடு என்று அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னார்-கள். நான் சொல்லி எதையும் மறுத்த-தில்லை. அன்று மறுத்துவிட்டார்கள். கடைசி-யாக அய்யாவிடம் சென்றது. அய்யா-விடம் சொல்லி ஆசிரியரை கொள்ளி வைக்கச் சொன்னால் மறுக்க மாட்டார் என்று எண்ணினோம்.
அய்யா அவர்கள் ஆசிரியரை அழைத்து, என்னங்க நமக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றாலும், கணவனைப் பிரிந்து கவலையாக இருக்கும் ரங்கம்மாளைத் திருப்தி செய்ய, நெருப்பை அதன்மீது வைத்துவிட்டு வந்து-விடுங்கள் - மற்றவர்கள் பார்த்துக் கொள்-வார்கள் என்றார்.
அதுவும் தப்புதானுங்களே, அய்யா. நான் எப்படி செய்வது என்றார்; அய்யா ஒன்றும் சொல்லவில்லை.
நான் உடனே அய்யா சொல்லை தட்டலாமா? அவர் சொன்னதைக் கேளுங்கள் என்றேன். அதற்கு ஆசிரியர், அய்யா சொல்லை நான் மீற மாட்டேன். கொள்கைப்படி நான் கொள்ளி வைப்பது சரிதான் என்று அய்யா சொல்லட்டும் என்றார். நான் அய்யாவிடம் சென்று, ஆசிரியர் சொன்னதை சொன்னேன்; அய்யா, அது தப்புதான்; தப்பில்லை என்று நான் எப்படி சொல்ல முடியும்? என்றார். அத்தோடு ரங்கம்மாள் யாரும் நெருப்பு வைக்க வேண்டாம் என்றார்கள். ஆனால், அதுமுதலே ஆசிரியர்மீது கோபமாக இருந்தார்கள். அதன் பின்விளைவுகள் ஏராளம்.
ஆனால், அய்யாவுக்கு ஆசிரியர் கொள்கை பிடிப்பில் பிடிவாதமாக இருப்பது மகிழ்ச்சி-யாகவே இருந்தது. பற்றும் அதிகம்.
அடுத்து மற்றொரு தகவல். அய்யா அவர்கள் மறைவதற்கு முன் அனைத்து சொத்துகளையும் டிரஸ்டுக்கு எழுதி வைத்துவிட்டு மீரான் சாயபு தெருவில் உள்ள வீட்டை அம்மாவுக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இது அம்மாவுக்குத் தெரியாது. அய்யா மறைந்த பின் உயில் விவரம் தெரிந்ததும், அம்மா மிகவும் கோபப்-பட்டார்கள். சொத்துக்காக நான் அய்யாவிடம் வந்ததாக மற்றவர்கள் சொல்வது மாதிரி-யல்லவா இருக்கிறது. உடனே, இந்த சொத்தையும் ஒரு டிரஸ்டுக்கு எழுதி, பெரியார் டிரஸ்ட்டின் கொள்கைப்படி பயன்படும்படி செய்யுங்கள் என்று ஆசிரியரிடம் சொன்னார்-கள். சட்ட வல்லுநர்களைக் கலந்து ஏற்பாடு செய்தார்கள். டிரஸ்டிகளாக யாரைப் போடுவது என்று அம்மாவிடம் கேட்டபோது, ஆசிரியரையே கேளுங்கள். ஆசிரியரிடம் கேட்டதும், அவர் அம்மாவிடம் வந்து, அம்மா, நீங்கள் சொத்தை கொடுக்கிறீர்கள். நீங்களே பெயரைகளைச் சொல்லுங்கள் என்றார். அம்மா ஆசிரியர் பெயரைச் சொல்லி, நீங தலைமை டிரஸ்டியாக இரு. உனக்கு சரி என்று நினைக்கிறபடி மற்றவர்கள் பெயர்-களைச் சொல்லிக் கொள் என்றதும், அதையும் அம்மாவே சொல்லும்படி ஆசிரியர் சொன்னார்.


அப்போது அம்மா, என் பெயரையும், இன்னும் சிலர் பெயரையும் சொல்லி அது எழுதப்பட்டது. அந்த சமயத்தில் அம்மா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவ-மனையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்-தார்கள். நாங்கள் அம்மாவுக்குத் துணையாக மருத்துவமனையில் இருந்தோம்.
அது சமயம் ஒரு நாள் மதியம் நான் மட்டில் இருந்தேன். என்னை அருகில் அழைத்து ஒரு குறிப்பிட்ட தோழரைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர் சாப்பிட வீட்டுக்குப் போயிருக்-கிறார் என்றேன். உடனே அந்த வார்டு கதவை மூடச் சொன்னார்கள். என்னிடம் அந்த நபரின் பெயரை டிரஸ்டில் போடவில்லை. அவன் வீரமணிக்கு ஏதாவது தொந்தரவு கொடுப்பான். வீரமணியும் கோபக்காரன். நீதான் வீரமணியை பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்கள். அம்மா நீங்கள் சொன்னாலும், சொல்லா-விட்டாலும் நான் அவரை விட்டு எங்கே போகப் போகிறேன். எந்தக் கவலையும் வேண்டாம் அம்மா என்றேன்.
அந்தப்படி அய்யாவோ, அம்மாவோ ஆசிரியர்மீது மிகவும் பற்றுதலுடன் இருந்-தார்கள். அந்த நம்பிக்கைதான் ஆசிரியரைக் கழகத் தலைவராக ஆக்கியது. இன்றுவரை அய்யா, அம்மா காட்டிய வழியில் இயக்கத்தை நடத்திச் செல்கிறார்கள்.