சிறுகதை
 |
ராகவனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இன்று காலை அம்மா, ராகவனை செல்லில் அழைத்து, இந்த வாரம் ஊருக்கு வர முடியுமா? பெண்ணை நீ வந்து நேரில் பார்க்கவேண்டும், என்று கேட்டிருந்தாள்.
அலுவலக நண்பர்களிடம் இந்த தகவல் பரவியபோது ட்ரீட் கேட்டார்கள். அவனைத் தோழமையோடு நையாண்டி செய்தார்கள்.
மாலை நண்பர்கள் மீண்டும் கூடியபோது சந்தானம் ஒரு தகவலை வெளியிட்டான்.
திருவிடைக்கழி சாமியாரைப் பார்க்கப் போறேன். யார்... யார் வர்றீங்க? என்று கண் சிமிட்டினான்.
சாமியார் ரொம்ப சக்தி உள்ளவர். மற்ற சாமியார்கள் மாதிரி வாயிலேருந்து லிங்கம் வரவழைக்கிறேன். வெறும் கையில் விபூதி வரவழைக்கிறேன் ன்ற சித்து விளையாட்டுப் பேர்வழி இல்லே. காசு பணம்னு அலையற ஆளுமில்ல. அவர் கிட்டப்போனா, நினைச்ச காரியம் நடக்கும்... மனசு அமைதி அடையும். டேய்! ராகவன் உன்னோட கல்யாணம் பத்தி கூட சாமியார்கிட்டே கேக்கலாம். யார் யார் வர்றீங்க?
நான் வர்றேம்பா, என்றான் மனோகர் உடனடியாக.
ராகவன்! உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கிறது எனக்கு தெரியும். சாமியார் நல்ல மாரிதி.. ஒரு தடவை நீ சும்மா வந்து பார்த்திட்டு வரலாம்... வாடா... அதோடு அவர் இருக்கிற ஆசிரமம் இயற்கை சுழல்ல அற்புதமா இருக்கு... கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.. சதா ஃபைலைக் கட்டிக்கிட்டு அழுவறதுக்கு ஒரு மாறுதலா இந்த ட்ரிப் அமையும், என்று சந்தாம் அவனை ஆர்வமாக அழைத்தான்.
ராகவன் முதலில் மறுத்தாலும், நண்பர்கள் எல்லாரும் கட்டாயப்படுத்தவே அரை மனதோடு ஒத்துக்கெண்டான்.
நமக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஏதோ ஒரு சாமியாரைப் பார்ப்பதால் என்ன வந்துவிடப் போகிறது என்று நினைத்துக் கொண்டான்.
சந்தானம் சொன்னதுபோல் அருமையான இயற்கை சூழலில் ஆசிரமம் அமைந்துள்ளது. மா, பலா, தேக்கு போன்ற மரங்கள் அடர்ந்த பெரிய தோப்பு. ஓரத்தில் சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
சாமியாரைப் பார்க்க வந்த மனிதர்களில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்-பட்டிருந்தன.
சாமியாரைப் பார்க்க வந்த ஆண்களும் பெண்களும் ஓபங்கற்ற ரீதியில் ஆங்காங்கே நின்று கொண்டும், அமர்ந்தவாறும் அவரவர்-களுக்குரிய பிரச்சினைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
சந்தானம் ஏற்கனவே சாமியாருக்கு நன்கு பரிச்சயமாகி இருந்ததால் அவன் பெயரைச் சொன்னவுடனே சாமியாரைப் பார்க்க உடனடியாக அனுமதி கிடைத்தது.
நண்பர்கள் குழாம் சாமியார் அறைக்குள் நுழைந்தது. சாமியாருக்கு அறுபது வயது இருக்கலாம். பெரிய மீசை வைத்திருந்தார். பெரிய பித்தளை குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவரில் சாமி படங்கள். எதிரே உண்டியல்.
சாமியார் சப்பணமிட்டு தரையில உட்கார்ந்-திருந்தார். அனைவரையும் ஆழமாகப் பார்த்தார். சைகையால் அமரச் செய்தார்.
சந்தானத்தை மட்டும் அருகில் அழைத்து விசாரித்தார். அவன் நண்பர்கள் பெயர்களை சாமியாரிடம் பவ்யமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்-தவர், ராகவனிடம் வந்த போது அவனை ஊடுருவிப் பார்த்தார்.
தம்பிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை போலிருக்கு? என்றார் கேள்விக்குறியோடு.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாத சந்தானம் அவனுக்கு கல்யாணம் நிச்சயமாகப் போவுது. இவன் பெண் பார்க்க கிளம்பிக்-கிட்டிருந்தான். நான் தான் நல்ல காரியத்துக்கு போறதுக்கு முன்னே சாமியைப் பாத்துட்டுப் போகலாம்னு அழைச்சிக்கிட்டு வந்தேன் சாமி... என்றான்.
சாமியார் சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக இருந்தார்.
நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ராகவனுக்கு அங்கே அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. அந்த சூழல் அவனுக்குப் பொருந்தி வரவில்லை. எங்கும் அமைதி.
சிறிது நேரத்துக்குப் பிறகு கண் திறந்தவர்.
தம்பி! உனக்கு காதல் திருமணம் தான் நடக்கும். இப்ப ஏற்பாடு செய்கிற திருமணம் நடக்க சாத்திய-மில்லை என்றார் மென்-மையாக.
ராகவனுக்கோ, அவனது நண்பர்களுக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரிய-வில்லை. சற்று நேரம் அங்கே இருந்து விட்டு சாமி-யாரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்.
இதைப் பற்றி எல்லாம் பெரிதாகக் கவலைப்படாத ராகவன் ஊருக்குப் போ-னான். பெண்ணை நேரில் பார்த்தான். பிடித்துப் போய் திருமணம் நிச்சயமாயிற்று.
அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடந்தது.
திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் சாமியார் சொன்னது போல் இந்த திருமணம் நடக்கா. காதல் திருமணம் தான் நடைபெறும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்.
சினிமா போல கடைசி நேரத் தடங்கல் ஏதும் ஏற்பட்டு திருமணம் நின்று போகும் என்றே நம்பினார்கள்.
இது வாழ்க்கை ஆயிற்றே. சினிமா அல்லவே. திருமணம் எந்த வித சிக்கலும் இல்லாமல் நடந்தேறியது.
ஒரு மாதம் வேகமாக உருண்டோடியது.
ராகவன் தனது புது மனைவியுடன் வேலை பார்க்கும் நகரத்திலேயே குடியேறிவிட்டான்.
சந்தானம் மீண்டும் சாமியாரைப் போய்ப் பார்த்து வரலாம் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தான். நண்பர்கள் சேர்ந்து கொண்டனர்.
ராகவன் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தான். இந்த முறை வேறொரு தந்திரம் கையாண்டான் சந்தானம்.
சரிப்பா... நான் உன்னைக் கட்டாயப்-படுத்தல. போன தட-வையே நீ ரொம்ப நெளிஞ்சே. சாமிஜி உனக்கு கடவுள் நம்-பிக்கை இல்லைன்னு சந்தேகப்பட்டு கேட்டாரு... எல்லாம் நீ முழிச்ச முழி தான் காரணம். சரி, போகட்டும்... வீட்டுக்குப் போய் உன் மனைவியிடம் சொல்லு. அவங்க சரின்னு ஒத்துக்கிட்டா, தம்பதி சமேதரா சாமிஜீ பாக்க வாங்க... இல்லேன்னா நாங்க போய்ட்டு வர்-றோம் என்றான்.
சந்தானத்தின் உத்தி பலித்தது. ராகவன் மனைவி பச்சைக் கொடி காட்ட மீண்டும் சாமியார் பார்க்கும் படலம்.
சாமியார், ராகவனையும் அவன் மனை-வியையும் அன்போடு அத்து ஆசீர்வதித்தார். சிறிது நேரங்கழித்து.
உங்கள் திருமணம் காதல் திருமணந்-தானே! என்று கேட்டார்.
பெற்றோர்கள் ஏற்பாடு செய்த கல்யாணம். இது காதல் திருமணம் இல்லே என்றாள்.
நண்பர்களின் முகம் விழுந்தது.
ராகவன் முகத்தில் புன்னகை அரும்பியது. |