நினைவலையில் சில திவலைகள்

கண்டுபிடித்துத் தருவார்
கடலூர் துறைமுக நகரில் எஸ்.பி.ஜி. உயர் நிலைப் பள்ளியில் படித்தது எல்லோர்க்கும் தெரியும். அந்தப் பள்ளியின் பின்புறம் சரக்கு ரயில் போக்குவரத்து இருந்தது என்பது சிலருக்கே தெரிந்த உண்மை. இங்கிருந்து நிலக்கரி, கோதுமை, அரிசி, உரங்கள் போன்றவை கப்பலிலிருந்து இறக்கி குட்ஸில் ஏற்றப்பட்டு கடலூர் தொடர்வண்டிச் சந்திப்புக்-குக் கொண்டு செல்லப்பட்டு பல ஊர்களுக்கும் அனுப்பப்படும்.
அந்த நிலையில் காலியான சரக்குப் பெட்டிகள் தொடர்ச்சியாக இணைக்கப்படு-வதற்காக ஷன்டிங் செய்யப்படும். அப்படிக் காலியான பெட்டிகள் பள்ளிக்கூடத்தின் பின்பகுதியிலிருந்து ரயில்வே சந்திப்புக்கு சுமார் ஒரு கி.மீ. தூரம் போகும். இந்தக் காலிப் பெட்டியில் ஏறி பதுங்கிக் கொண்டு முருகேசன் என்ற மாணவர் போய்விடுவார். சில நேரங்-களில் ஆசிரியர் இதைக் கவனித்து விடுவார்.
ஆசிரியரின் வீட்டுக்குப் பின்புறம் இந்தத் தண்டவாளப் பாதை செல்லும். பக்கத்தில் ரயில்வே கேட் திறப்பதற்காக சரக்கு ரயில் நிற்கும். அந்தச் சமயத்தில் முருகேசன் இறங்கிப் பக்கத்திலுள்ள தோப்புக்குள் சென்று மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வார்.
மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு வராத முருகேசன் எங்கே என்று ஆசிரியரிடம் விசாரிப்பார்கள். அவர் இருக்கும் இடம் இவருக்குத் தெரியும். ஆதலால், இவர் கண்டுபிடித்துக் கொடுப்பார். அந்த நாளைய முருகேசன் இன்றைய ஜெயகாந்தன். இருவரும் பள்ளித் தோழர்கள்.
அவரிடம் ஒப்படை
1947இல் சுதந்திர நாள் என்பது துக்க நாள் என்று தந்தை பெரியார் சொன்னதால் நாடு முழுக்க ஒரு மாதிரி உணர்வு தேசியவாதி-களிடம் இருந்த நேரம். கடலூர் பழைய பட்டினத்தில் திராவிட நாடு பிரிவினை மாநில மாநாடு நடந்தது 14.9.1947இல்!
தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் தோழர்கள் கடலூருக்கு வந்தனர். அவர்களின் பெட்டி, பைகளை வைத்துச் செல்ல ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது. கடலூர் சந்திப்பு தொடர் வண்டி நிலையத்திலிருந்து மாநாடு நடக்கும் இடம் சுமார் 2 கி.மீ. இருக்கும். பொருள்களை வாங்கிப் பாதுகாப்பாக வைத்திருந்துத் திருப்பித் தரும் பொறுப்பு (ஊடடியம சுடிடிஅ) ஆசிரியருடையது. 14 வயதிலேயே இவரிடம் காணப்பட்ட பொறுப்புணர்ச்சிதான், விடுதலை ஏட்டினை இவரிடம் ஒப்படைப்-பதற்கும் அதற்கும் மேலாகக் கழகத்தையே இவரிடம் ஒப்படைத்ததற்கும் காரணம்! விளையும் பயிர் முளையிலேயே தெரியும்!
மிக்க பண்பின் குடியிருப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆனர்சு படிப்பு மாணவர். பொருளாதாரப் பேராசிரி-யருடன் சேர்ந்து வகுப்பு முடிந்ததும் மாணவர்-கள் நடந்து வருவது வழக்கம். பேராசிரியர்கள் பெரும்பாலும் சைக்கிள்களில்தான் வருவார்-கள். கொஞ்ச தூரம் மாணவர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்த பேராசிரியர் தம் சைக்கிளை சாஸ்திரி ஹாலின் எதிரே நிறுத்தி வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே தம் கோட் பையிலிருந்து சாவியை எடுத்து ஆசிரியரிடம் கொடுத்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். தனக்குப் பிடித்த மாணவர்களிடம் தங்கள் சொந்தப் பணிகளைத் தருவது அன்றைய ஆசிரியர்களின் பழக்கம்.
நம் ஆசிரியரும் சாவியை வாங்கிக் கொண்டு திரும்பிப் போனார். சுற்றிலும் இருந்த மற்ற மாணவர்கள் சிரித்தனர். சிரித்தது ஏன் என்று பேராசிரியருக்கு அப்போது விளங்க-வில்லை. பிறகுதான் விளங்கியது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆசிரியர் சில நிமிடங்கள் கழித்து வந்தார். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். ஆசிரியரின் சைக்கிளில் தான் உட்கார்ந்து மிதித்து வரக்-கூடாது என்ற அடக்க உணர்வால் தள்ளிக் கொண்டு வருகிறார் எனப் புரிந்த பேராசிரியர், ஏன் வீரமணி! சைக்கிளை ஓட்டிக் கொண்டு வராமல், தள்ளிக் கொண்டு வருகிறாய்? என்று கேட்டார்.
ஆசிரியர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். சக மாணவர்கள் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தனர். ஒரு மாணவர் முந்திக் கொண்டு அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, சார் என்றார். ஏம்ப்பா, என்னிடம் அப்பவே சொல்லியிருக்-கலாமே! வேறு மாணவரை அனுப்பியிருப்-பேனே! என்றார் பேராசிரியர்.
பேராசிரியர் இட்ட பணியைத் தட்டக்-கூடாது என்கிற மிக்க பண்பின் இருப்பிடம் தான் என்பதை மாணவப் பருவத்திலேயே காட்டியவர், ஆசிரியர்.
இருக்கும்! இயங்கும்!
தந்தை பெரியார் நம்மைவிட்டு உடலால் மறைந்த நாள். மாலுமியை இழந்த கப்பல் போல, அனைவரும் கலக்கமுற்று இருந்த வேளையில் செய்தியாளர்கள் கேட்கிறார்கள் - கழகம் இருக்குமா?
இருக்கும்! இயங்கும்! என்றார்.
இருக்கிறது; இயங்குகிறது! மிகவும் சிறப்-பாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்குகிறது! |