அனு வனுவாய் - 2

இன்னும் 1 நொடி....
எனோலாகே விமானத்திலிருந்து வீசப்பட்ட உலகின் முதல் அணு குண்டு பூமியை முத்தமிடப்போகிறது. ஆனால்... இந்த முதல் தாக்குதலுக்கு ஹீரோஷிமா தேர்ந்தெடுக்கப்-பட்டது ஏன்? போகிற போக்கில் போட்டு விட்டுப்போன குண்டா அது... இல்லவே இல்லை.
சரியாக 87 நாட்களுக்கு முன்பு... அதே 1945 மே மாதம் 10-, 11 ஆகிய நாள்களில் அமெரிக்-காவின் லாஸ் அலமாஸ் நகரில் கூடுகிறது ஒரு குழு. இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்காக கூடியிருக்கிறது அக்குழு. போரில் பயன்படுத்தப்படப்போகும் முதல் அணு குண்டை எங்கே விதைத்து யாருக்குப் பெருமை சேர்ப்பது (!) என்பதை பரிசீலித்தனர் குழுவினர்.
ஏதோ ஒரு ராணுவ நிலையைத் தாக்கு-வதற்கோ, முக்கிய ஆயுதக் கிடங்கை அழிப்-பதற்கோ, சில ஆயிரம் ராணுவ வீரர்களை அழிப்பதற்கோ இந்த அற்புதமான அழிவுக் கருவியைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு ஒப்புதலே இல்லை. பன்னாட்டு அளவில் பேசப்படுவதற்கான முக்கியத்துவத்தைப் இக்குண்டுவீச்சு பெறவேண்டும் என்று கருதினர்.
இதுவரை உலகம் கண்டிராத வகையில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தவல்ல இம்முயற்சி உளவியல் ரீதியாக பெரும் அச்சத்தை உண்டாக்க வேண்டும். உலகமே இதைக் கண்டு மிரளவேண்டும். அப்படி-யானால் இந்தக் ஆயுதத்தை ஒரு முக்கியமான இடத்தின் மீதுதான் பயன்படுத்த வேண்டும். அதற்கான பட்டியல் தயாரிக்-கப்பட்டது.
முதலிடத்தில் இருந்தது கியோட்டோ. அடுத்து ஹிரோஷிமா, யோகோஹாமா மற்றும் கோகுரா போன்றவை குறி வைக்கப்பட்டன. கியோட்டோவை ஜப்பானின் அறிவு மய்யம் என்று சொல்லலாம். நல்ல மக்கள் தொகை கொண்ட நகரமும்கூட. அழிவு ஏற்படுத்தத் தகுந்த நகரம்தான். ஜப்பான் வரலாறு தொடங்குகிற காலத்தில் இருந்தே கியோட்டோவின் வரலாறும் தொடங்குகிறது. பெயர்கள் பல மாறினாலும் ஜப்பானின் பண்பாட்டுச் சின்னமாகவும் கியோட்டோவை மதிக்கலாம்.
ஹிரோஷிமா முற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. அளவில் பெரியதும், மக்கள் தொகை நிரம்பிய நகரமும் என்பது அமெரிக்காவின் பட்டியலில் இடம்பெறப் போதுமான தகுதிகளாயிருந்தது. மேலும் ஹிரோஷிமா தொழிற்துறையில் முன்னேறிய நகரமும்கூட. அதற்கு இராணுவ முக்கியத்து-வமும் இருந்தது.
தெற்கு ஜப்பானின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பீல்டு மார்ஷல் ஷூன்ரோகு ஹடாவின் இரண்டாவது பெரும்படையின் தலைமையக-மாகவும், ஜப்பானிய அய்ந்தாம் படைப்பிரிவின் தலைமையிடமாகவும் இருந் தது. மேலும் ஜப்பானிய இராணுவத்துக்கு தகவல் தொடர்பு மைய-மாகவும், இராணுவ தளவாடங் களைப் பரிமாறும் இடமாகவும் இருந்தது. ஆனால் அது நாள் வரை போரினாலோ அமெ ரிக்க குண்டு வீச்சாலோ எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாத நகரமாகவே இருந்தது ஹிரோஷிமா. அதனால்தான் ஹிரோஷிமா மக்கள் போரின் பாதிப்பை நேரடியாக அறியாமல் இருந்தனர்.
பட்டியலில் இருந்த நகரங்களில் பிற நாட்டு போர்க் கைதிகள் சிறை வைக்கப்படாத நகரமும் ஹிரோஷிமாதான் என்ற தகவலும் வாஷிங்ட-னைப் போய்ச் சேர்ந்தது.
பட்டியலில் இருந்த நகரங்கள் பரிசீலிக்கப்-பட்டன. முதல் குண்டை கியோட்டோவின் மீது பயன்படுத்த வேண்டும் என்று பெரும்-பாலானோர் விரும்பினர். மன்ஹாட்டன் திட்டத்திற்கு தலைமையேற்ற ஜெனரல் லெஸ்லிக்ரோவ்ஸ் உள்ளிட்ட பலரும் அதையே வலியுறுத்தினர்.
இரண்டாம் முறை அக்குழுவினர் கூடி விவாதித்தபோது கியோட்டோவை பட்டியலி-லிருந்து நீக்கிவிட்டார், அமெரிக்காவின் போர்ச்செயலாளர் ஹென்றி எல்.ஸ்டிம்சன்! கியோட்டோ கலாச்சாரப் பெருமை வாய்ந்தது எனவே அதை பட்டியலிலிருந்து நீக்குவதாகக் கூறினார் ஸ்டிம்சன். லெஸ்லிக்ரோவ்ஸ் இறுதி-வரை போராடினார். ஆனாலும் ஸ்டிம்சன் உறுதியாக இருந்தார்.
ஜூலை 25ஆம் தேதி ஜெனரல் கார்ல் ஸ்பாட்ஸ் ஹிரோஷிமா, கோகுரா, நீகாடர், நாகசாகி போன்ற நகரங்களில் ஆகஸ்ட் 3, 1945க்குப் பிறகு வெகுவிரைவில் அணுகுண்டு வீசலாம் என பச்சைக் கொடி காட்டினார். ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டது- ஜூலை 26ஆம் தேதியன்று! அமெரிக்க அதிபர் ட்ரூமென்னும் பிற நேச நாட்டுத் தலைவர்களும் விடுத்த இந்த அறிவிப்பு போட்ஸ்டேம் அறிவிப்பு (கூந ஞடிவளனயஅ னநஉடயசயவடி) எனப்படுகிறது. ஆனால் இதில் அணு ஆயுதம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
நேசநாடுகளின் இந்தக் கெடுவை ஏற்க மறுத்தது ஜப்பான். ஜப்பான் பிரதமர் கண் டாரோ சுசுகி மறுப்பை உடனடியாக அறி வித்து-விட்டார். மன்னர் ஹிரோஹிட்டோவும் அதையே பிரதிபலித்தார். அமெரிக்காவும் இதையே எதிர்பார்த்தது. தனது ஆயுதத்தை சோதிக்கவும், தனது வலிமையை வெளிக்காட்டவும் இதை விடவும் சிறந்த தருணம் இனி வாய்க்குமா? ட்ருமென் ஆணையிட்டார்... ஜப்பான் மீது அணுகுண்டு வீசச் சோதனை செய்ய!
அடுத்த 6 நாட்களில் என்ன நடந்தது என்பதைத்தான் பார்த்தோமே! 509வது ஒருங்கிணைந்த குழுவின் தளபதி கலோனல் பால் டிப்பெட்ஸ் தன் குழுவினருடன் டினியனிலிருந்து கிளம்பியது... சின்னப்பையன் என்று பெயரிடப்பட்ட 60 கிலோ எடை கொண்ட யுரேனியம் 235 அணுகுண்டு பெர்பியின் கரங்களால் விடுவிக்கப்பட்டு, விண்ணிலிருந்து மண்ணுக்கு விரைந்தது....
குண்டு வீச்சு என்று உணர்வதற்குள் குரல் வளையை நெறித்தது போல புவியைத் தொட வந்தது முதல் அணு ஆயுதம். இன்னும் ஒரு நொடி...
ஹிரோஷிமா எல்லைக்குட்பட்ட தொழில் வளர்ச்சி அரங்கத்தின்மீது விழுந்தது குண்டு. பூமியிலிருந்து எழுந்த மிகப்பெரிய காளான் வடிவ புகையைப் பார்த்தபடி திரும்பப் பறந்து சென்றது எனோலாகே.
ஜப்பான் தலைமையகமான டோக்கியோ-வில் உள்ள தகவல் தொடர்பு மையத்தில் திடீரென ஹிரோஷிமாவிலிருந்து வந்த தொடர்பு அறுந்தது தெரிய வந்தது. மீண்டும் ஹிரோஷிமாவைத் தொடர்பு கொள்ள முயன்றார்கள். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. முயற்சி தொடர்ந்தது. ஹிரோஷிமா-வின் இராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
ஹிரோஷிமாவைச் சுற்றி 16 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பல்வேறு நிலையங்களி-லிருந்தும் தொடர்ந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருந்தன. தந்தித் தொடர்பும் அறுந்து போயிருந்தது. என்ன நடந்தது என்பதைத் தீர்க்கமாக உணரமுடிய-வில்லை. டோக்கியோ பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. மிகப் பெரிய படையெடுப்பு எதுவும் நடந்ததாகத் தகவலில்லை. அதிக அளவு வெடிபொருள் ஷிரோஷிமாவில் சேமிக்கப்படவும் இல்லை என்பதில் மட்டும் அவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிய-வில்லை.
ஹிரோஷிமாவிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் நிலவிய அசாத்திய மௌனம் தலைமையகத்தையே குழப்பியது. என்ன நடந்ததென்பதைப் பார்க்க உடனடியாக ஒரு விமானத்தை அனுப்புவது என்று முடிவெடுத்தனர். இளம் அதிகாரி ஒருவரை அனுப்பினர், சேதத்தை மதிப்பிட! ஹிரோஷிமா சென்று பார்த்துவிட்டு திரும்பி டோக்கியோ வந்து அவர் அறிக்கை தரவேண்டும். ஒன்றும் பெரிதாய் இருக்காது; எல்லாம் வதந்தி என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டது ஜப்பான்.
டோக்கியோவிருந்து தென்மேற்கு நோக்கிக் கிளம்பியது விமானம். 3 மணி நேரப் பயணம்... ஹிரோஷிமாவை நெருங்க இன்னும் 160 கி.மீ. இருக்கிறது... விமானத்திலிருந்த அதிகாரியும் விமானியும் மிகப்பெரிய மேகக்கூட்டம் போன்ற புகை மண்டலம் ஹிரோஷிமாவின் மேல் எழுந்திருப்பதைப் பார்க்கின்றனர். என்ன இது? என்று விழிகளை விரிக்க முடியாதபடி கண்கூசச் செய்யும் காட்சி. எனோலாகே சென்று 4 மணி நேரத்துக்குப் பிறகு இப்போது-தான் ஹிரோஷிமா வானில் பறக்கிறது ஒரு விமானம். இடையில் நடந்தது என்ன-? கண்டவர் விண்டிலர்.
ஹிரோஷிமாவின் எஞ்சிய பகுதிகள் எரிந்து கொண்டிருந்தன 90 சதவிகிதம் ஹிரோஷிமா தரைமட்டமாகியிருந்து. சாம்பல் மேடுகள் என்று கூட சொல்ல முடியா வண்ணம் எரிந்து கொண்டிருக்கிறது இன்னும். 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எதுவும் இல்லை ஹிரோஷிமாவில்! 12 சதுர கிலோ மீட்டர் பரப்பெங்கும் நெருப்பு மயம் அதிகாரி உடன் தகவல் அனுப்பினர்.
குண்டு வீசப்பட்டு 16 மணி நேரத்திற்குப்-பிறகு அமெரிக்கத் தலைமையகத்திலிருந்து அணுகுண்டு தாக்குதல் என்ற செய்தி வந்தபிறகுதான் என்ன நடந்தது என்பதே டோக்கியோவுக்குப் புரிந்தது. ஹிரோஷிமாவில் இருந்த உயிர்கள் எதுவும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று டோக்கியோவிலிருந்து வந்த செய்தியை முன்னிறுத்தி அமொக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குண்டு விழுந்தவுடன் இறந்தோர் எண்ணிக்கை மட்டும் எழுபதாயிரத்தைத் தாண்டும். அதுவரை எந்தத் தாக்குதலுக்கும் ஹிரோஷிமா ஆளானதில்லை என்பதால் அணு ஆயுத அழிவைக் கணக்கிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. 1945ஆம் ஆண்டின் முடிவில் கடும் பாதிப்புக்-குள்ளானவர்களில் 1,50,000 பேர் வரை மாண்டு போயிருந்தனர். 1950ஆம் ஆண்டுக்குள் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் இறந்தோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தொட்டது. ஒவ்வொரு எண்ணும் ஓருயிர் என்றெல்லாம் இல்லாமல் எண்ணிக்கை-களாகவே கருதப்பட்டது. அணுக்கதிரின் வீச்சு இன்று வரை தொடர்கிறது ஹிரோஷிமாவில். சில உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளை இன்றும் ஈன்றெடுக்கிறது ஹிரோஷிமா.
ஹிரோஷிமாவுக்கு இது முதல் முறை நடந்த துர்ப்பாக்கியமல்ல! இந்தத் தாக்குதலிலிருந்து ஸ்டிம்சனின் புண்ணியத்தால் (!) கியோட்டோ தப்பியதே நினைவிருக்கிறதா? கலாச்சார மையம் என்ற காரணமெல்லாம் தவிர்த்து அதற்கு இன்னொரு காரணமிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கப் போர்ச் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சன் தனது துணைவியாரோடு கியோட்-டோவில் தான் தேனிலவு கொண்டாடி-யிருந்தார். அதனால் கியோட்டோவை அழிக்க மனமில்லாமல் பட்டியிலிருந்து அழித்து-விட்டார் ஸ்டிம்சன். பாவம் அந்த பாக்கியம் (!) கிடைக்காத துர்ப்பாக்கியசாலிதானே ஹிரோஷிமா! தேனிலவில் ஸ்டிம்சன் ஜோடி ஹிரோஷிமா வுக்கும் வந்து போயிருந்-தால் அந்நகரமும் தப்பியிருக்கும் அல்லவா?
அடுத்த 3 நாட்களில்.... (நாகசாகியில் நடந்த நாசகார வேலை...) |