தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

தலையங்கம்

போதிப்பதைவிட சாதிப்பதே முக்கியம்

7.12.2007 அன்று தஞ்சை வல்லத்தில் பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகம் ஓர் அமைதியான சமூகப் புரட்சியை - புதிய பாடத் திட்டங்களை உருவாக்கி, கிராமப்புற இளைஞர்களுக்கான மருத்துவம், வேளாண்மை மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த வேலை வாய்ப்பளிக்கும் கல்வி, மற்றும் பயிற்சி வகுப்புகளை தொடங்கி, சுமார் 500க்கும் மேற்பட்ட இருபால் கிராமப்புற இளைஞர்களை அது ஈர்த்து, அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியைப் போதித்து, அவர்கள் சொந்தக்காலில் நிற்கும்படியான அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது.
மேற்காட்டிய 3 துறைகளில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன், பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில், அவர்களது மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பவர் என்ற பெரியார் அமைப்பின் மூலமாக தக்க பயிற்சியை, ஊரக மேம்பாட்டு மய்யத்தின் வேலை வாய்ப்போடு இணைந்தும் செயல்படும் வாய்ப்பு உள்ளது.
பெரியார் புரா கிராமங்களிலிருந்து வரும் இளைஞர்கள் மற்றும் பற்பல மாவட்டங்களிலிருந்தும் 17 வயது முதல் 43 வயதுள்ளவர்கள் வரையில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். பயிற்சிக் காலம் 6 மாதங்கள் தான்!
அதைவிட ஒரு புதுமையான ஏற்பாடு என்னவென்றால், 5ஆம் வகுப்பு முதல், பட்டயப்படிப்பு, பட்டம் படிப்புப் படித்தவர்கள் வரை பலரும் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வேலை வாய்ப்பு உத்திரவாதப்படுத்தப்படுகிறது.
தேர்வில் தேர்ந்தவர்கள் மட்டுமல்ல; தேறாதவர்களும், வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் கல்வி - சான்றிதழ் - சர்டிபிகேட் (கோர்ஸ்) படிப்பாக, பயிற்சியாக இது உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது! குறைந்தபட்சக் கட்டணம் தான் அந்த ஏழை, எளியவர்களிடமிருந்து பெறப்படுகிறது.
அவர்களது பயிற்சிக் காலம் முடிந்தவுடன் க்ஷ.ழ.நு.டு. போன்ற பெரிய தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகளும் இவர்களை ஏற்றுக் கொள்கின்றன!
வெளிநாடுகளில், பெரியார் கல்வி நிறுவனங்களும் பெரிய தொழிற்சாலைகளும் இணைந்து கல்வி பெற்றிட (ஐனேரளவசல ஐளேவவைரவடி டுமேயபந) வாய்ப்பாக இப்புதிய தொழிற்கல்வித் திட்டத்தை ஒரு பல்கலைக் கழகம் முன்வந்து நடத்தி அவர்கள் இங்கு பெற்றுள்ள சான்றிதழ்கள் மூலம் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கும் சென்று வருங்காலத்தில் பொருளீட்டி உயரக் கூடிய ஒளிமயமான வாய்ப்புகள் ஏராளம்; மற்ற பல்கலைக் கழகங்கள் இதுவரை செய்யாத படிப்புகளை நாம் செய்து சமூக மாற்றத்தை உருவாக்குகிறோம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இலச்சினையில்,
புதியசிந்தனை, புத்தாக்கம், புதுஉலகு என்று குறிப்பிடப்பட்டுள் ளது வெறும் ஏட்டு எழுத்து அல்ல; நாட்டில் நடந்து வரும் புத்தாக்க மூலம் புதியதோர் உலகு எப்படி சமைக்க இந்த பல்கலைக் கழகம் உதவிடுகிறது என்று அறிகிறபோது மிகுந்த நம்பிக்கை ஒளியை நாளும் அது பாய்ச்சு கிறது.
ஆற்றல்மிகு துணை வேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன், பாடத் திட்டக் குழுவினர், அவருடன் கூட்டுப்பணி புரியும் பேராசிரியப் பெருமக்கள், தொழிலதிபர்கள், மருத்துவமனை நடத்தும் டாக்டர்கள், தொழில் கூட்டாளிகள், பெரியார் மகளிர் மன்றங்கள் - இப்படி பலரும் இணைந்த இந்தப் புரட்சியை - கல்வி, புரட்சியை நிகழ்த்துகின்றனர்.
வெல்க அவர்தம் முயற்சி!
இப்பல்கலைக் கழகம் முகிழ்த்துக் கிளம்பி முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இப்படி ஒரு புலிப் பாய்ச்சல் என்றால் அது மிகவும் சிறப்பானதல்லவா?
பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் பத்தோடு பதினொன்று ஆக இருக்காமல் அது மக்கள் நலம் பேணும் மக்கள் பல்கலைக் கழகமாகவே (ஞநடியீடநள ருஎநசளவைல) நடைபெறுகிறது. போதிப்பதை விட, சாதிப்பது அதிகம் என்று அகிலம் ஒப்புக்கொள்ளும் வண்ணம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் துணைவேந்தர் முதல் கீழ்மட்டப் பணித் தோழர்கள் தோழியர்கள் வரை அனைவரும் நம் பாராட்டுதலுக்குரியவர்கள்.
பல்கலைக்கழகங்கள் என்றால் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு மாத்திரம் தான் என்ற நிலையோடு கூடுதலாக இத்தகைய மக்கள் பயனுறு திட்டங்களுக்கும் வழி வகுக்கும் வகையில் இப்புத்தாக்கங்கள் உருவாகியுள்ளன.


கி. வீரமணி
ஆசிரியர்