தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

தமிழர் தலைவர் - 75

நம் உண்மை ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு கடந்த டிசம்பர் 2-இல் 75 ஆவது பிறந்தநாள். பலரும் கேட்ட கேள்வி ஆசிரியருக்கு அகவை எழுபத்தைந்தா? 65 வயதுதான் இருக்கும் என்று கருதினோம் என்றார்கள். அவ்வளவு இளமைப் பொலிவோடு இருக்கிறார். உடல் மட்டுமல்ல, உள்ளமும் அப்படியே; இல்லாவிடில் அரசியல் ஆதாயங்களை நோக்கி இளைஞர்கள் கொள்கையில்லா கூடாரங்களில் குவியும் காலத்தில் பெரியார் கொள்கையைப் பற்றிக் கொண்டு கருஞ்சட்டைக் காளையர்களை ஆசிரியரால் எப்படி உருவாக்கியிருக்க முடியும்.
எண்ணம், செயல், உழைப்பு என அனைத்-திலும் இளமையின் வீச்சு; 75 ஆண்டு அகவையில் 65 ஆண்டு பொதுவாழ்வு இந்தியாவில் இவரைத் தவிர வேறு எவருக்கும் சாத்தியப்படவில்லை. பெரியார், - பெரியாரின் இயக்கம், பெரியார் தொண்டர்-கள் தவிர வேறு எதையும் அறிந்திடாத ஆசிரியர் அவர்களை அமர்த்தி பிறந்தநாள் கொண்டாட கழகம் 10 ஆண்டுகளாக முயன்ற-போதும் மறுத்தே வந்தார். இம்முறை முக்கால் நூற்றாண்டு கடக்கும் முக்கிய ஆண்டு. முதலமைச்சர் அழைக்க தட்ட முடியாமல் தலையாட்டினார். டிசம்பர் 1 அன்றே பெரியார் திடல் விழாக்கோலம் பூண்டது. அன்று பேராசிரியர் க. அன்பழகன் தலைமையில் பாராட்டரங்கம் நிகழ்ந்தது.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கத்தைத் தொடர்ந்து வீரமணி அவர்கள் காப்பாற்றி வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலைஞர் அவர்கள் எதையும் திட்மிட்டு செயலாற்றக் கூடியவர். வீரமணி அவர்களோ மற்றொரு கலைஞராக எதையும் திட்டமிட்டு செயலாற்ற கூடியவர். பெரியாரு-டைய கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் பரவுவதற்கு காரணமான வீரமணி அவர்கள் இன்று பணியாற்றிக் கொண்டிருக்-கின்றார். ஒருவேளை பெரியாரே இருந்திருந்-தால் இவ்வளவு பணிகளை செய்திருப்பாரா? என்றால் செய்திருக்க முடியாது, என்று பேராசிரியர் குறிப்பிட்டார். தா. பாண்டியன் (இ. கம்யூ.,) தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), உ. பலராமன் (இ. காங்கிரஸ்), திருகச்சூர் ஆறுமுகம் (பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்), காதர் மொகிதீன் (முஸ்லிம் லீக்), பி.எஸ்.ஏ. சாமி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

டிசம்பர் 2-ஆம் நாள் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை தோழர்கள் வாழ்த்தொலி எழுப்ப பெரியார் திடலில் நுழைந்தார் ஆசிரியர்.
காலை 8 மணிக்கு வாழ்த்துகளை பெறத் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணிவரை நீடித்தது. ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சியை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து-வைத்தார். புத்தகக் கண்காட்சியை செய்தித்-துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்து-வைத்தார். தொடர்ந்து கல்வியாளர் அரங்கம் நடைபெற்றது.
மாலை வள்ளுவர் கோட்டத்தில் திருச்சி பெரியார் கல்வி நிறுவன மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகளோடு பாராட்டு விழா தொடங்கியது. பெரியார் களஞ்சியம் (மதம்), காலம் வெல்லும் ஒலி குறுந்தகடு, சிங்கப்பூரில் தமிழர் தலைவர், வாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 4) ஆகியவற்றை வெளியிட்டும், புதிய பெரியார் புத்தக விற்பனை ஊர்தியினை வழங்கியும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்-கள் பாராட்டுரை வழங்கினார்.
இன்று நம்முடைய இளவல், தமிழர் தலைவர் வீரமணி அவர்களுக்குத் தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் எப்படி வலியுறுத்தி ஒரு திருமணத்தை நடத்தி வைத்தாரோ, அதே நிலையில், இன்றைக்கு நானும் வலியுறுத்தி இந்தத் திருமண விழாவை இந்த மேடையில் நடத்தி வைத்திருக்கிறேன். எனவே, மணமக்கள் வாழ்க என்றுதான் நான் என்னுடைய பேச்சைத் தொடங்கவேண்டியிருக்கிறது, என்று உற்சா-மாப் பேசத் தொடங்கினார் முதல்வர்.
பெரியாரின் உண்மைத் தளபதிகளிலே ஒருவராக விளங்குபவர் இளவல் கி.வீரமணி! கொள்கைப் பிடிப்பிலே எவ்வளவு அழுத்த-மானவர், எந்த அளவிற்கு பெரியாருடைய அறிவுரைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியவர், பெரியார் பச்சையாகச் சொல்-வார் - நான் ஒன்று சொல்கிறேன் என்றால், நான் ஆராய்ந்து, அறிவைப் பயன்படுத்தி எதைச் சொல்லலாம் என்று தெளிந்த பிறகுதான் சொல்லுகிறேன், அதைக் கேட்பவன் என்னோடு இருக்கலாம், கேட்க மறுப்பவன் போய்விடலாம். இது பெரியாருடைய அன்பான கட்டளையாக அடிக்கடி எங்களுக்கெல்லாம் சொல்லப்-பட்டதுண்டு. அந்தப் பெரியார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றுகிற மாணவனாக - அவருடைய உண்மைத் தளபதி-களிலே ஒருவராக - என்னுடைய இளவல் வீரமணி அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று பெருமிதம் கொண்ட முதல்வர் கலைஞர், இவரிடத்திலே நான் கேட்டது ஒரு வரம் - அவர் என்னிடத்திலே பெற்றிருப்பது இரண்டு வரங்கள் தயவு செய்து இந்த விழாவிற்கு வாருங்கள், தலைமையேற்று நான் நடத்துகிறேன் என்று ஒத்துக்கொள்ள வைத்தேன். அந்த ஒரு வரம் பலித்தது. அதற்கு மாறாக இரண்டு வரத்தை அவர் பெற்றிருக்கிறார். ஒரு வரம் பெரியார் அவர்களுடைய மாபெரும் சிலை - இரண்டாவது வரம், பெரியாரின் உயிர்க் கொள்கையான சாதி ஒழிப்புக்குத் தரப்படுகின்ற பரிசு - அந்தத் தியாகிகளுக்குத் தருகின்ற பரிசு. இரண்டுக்கும் இந்த விழாவிலே நான் உறுதி அளிக்கிறேன், நிறைவுறுவதற்கான முயற்சிகளை நான் மேற் கொள்வேன் என்று உறுதி அளித்து வாழ்க வீரமணி தம்பதியர் என்று வாழ்த்தி அவர்கள் வாழ்ந்தால், தமிழ் வாழும், தமிழர்கள் வாழ்வார்கள், திராவிடர்கள் வாழ்வார்கள், நாம் மகிழ்வோம் என்று கூறி மீண்டும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை வழங்கி விடை பெறுகிறேன், என நிறைவு செய்தார்.
ஆசிரியர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழா ஒரு தனி மனிதருக்கு எடுக்கப்பட்ட விழா அல்ல. பெரியார் தத்துவத்தை உலகம் எங்கும் பரப்பும் தூதுவருக்கு நன்றி காட்டும் விழா. பிறந்தநாள் நன்கொடைகளை விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்களை வழங்க வேண்டும் என்ற ஆசிரியர் அவர்களின் விருப்பத்தை ஏற்று தோழர்கள், இயக்க ஆதரவாளர்கள் சந்தாக்களை அளித்-தனர். பெரியார் கொள்கைகளைப் பரப்பும் நிரந்தரப் பணிகளைச் செய்யும் இதழ்களை மேலும் வலுவுள்ளதாக்கவே ஆசிரியரின் பிறந்தநாள் பயன்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் தமிழகம் முழுவதும் ஒரு திங்கள் ஓயாது திரட்டிய 10 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் (ரூ. 50 லட்சம்) ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜாதி ஒழிப்பு வீரர்-களுக்கு அரசின் அங்கீகாரம் தரவும், தந்தை பெரியாருக்கு 95 அடிக்கு குறையாத உயரத்தில் வானாளவிய சிலை அமைக்கவும் முதலமைச்சர் அளித்த உறுதி -இப்படி ஒவ்வொரு நிகழ்வும் பெரியார் கொள்கையை உயர்த்தி பிடித்ததாக அமைந்தது.
- மணிமகன்