அடிமைகளாக குழந்தைத் தொழிலாளர்கள்
உலகத் தொழிலாளர் அமைப்பின் ஆய்வுப்படி, சட்டவிரோதமான துறை-களில் 24 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
50 ஆயிரம் பெண்களும் குழந்தை-களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்-படுவதற்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் விபச்சார விடுதி-களிலும் கடுமையாக உழைப்பச் சுரண்டும் தொழிற்-சாலைகளுக்கும் விற்கப்படுகின்றன.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்-காவில் கொத்தடிமை முறை இன்னமும் இருக்கிறது.
அய்.நா. குழந்தைகள் அமைப்பின் (UNICEF) அறிக்கையின்படி ஆப்பிரிக்-காவில் மட்டும் விவசாயப் பணிகள், வீட்டுப்பணி மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக 2 இலட்சம் குழந்தைகள் விற்கப்-படுகின்றன. |