தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

தொண்டறம்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த 10277 நூல்கள்

தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் இளம் வயது முதல் இன்று வரை சேர்த்தும், தொகுத்தும் வைத்திருந்த நூல்கள் அனைத்தையும் தம்முடைய 75ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது (டிச 2) சென்னை - பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு நன்கொடையாக வழங்கினார்கள்.
வழங்கப்பட்ட நூல்கள் தலைப்பு வாரியாக பிரித்து, அனைத்தும் திராவிட இயக்கம் பற்றிய அறிவு ஆய்வுக்கு பயன்படும் வகையில் தனிப்பகுதியாக நூலகத்தில் வைக்கப்பட்டு. ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரிய தொகுப்புகளாக அமைந்துள்ளன. இப்பகுதியை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களும் கலந்து கொண்டார்.
தந்தை பெரியார் படைப்புகள் மற்றும் பெரியார் பற்றி பிற எழுத்தாளர்கள் நூல்கள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள், அறிஞர் அண்ணா படைப்புகள், கலைஞர் மு.கருணாநிதி படைப்புகள், அறிவியல் நூல்கள், நூலக அறிவியல், விவசாயம், மருத்துவம், இதழியல், தமிழ் இலக்கிய நூல்கள், ஆங்கில இலக்கிய நூல்கள், விளையாட்டு - ஆன்மிகம் - யோகாசனம், கல்வியியல், உளவியல், தத்துவவியல், மதம் - இந்து மதம் நூல்கள், இஸ்லாமிய மதம் நூல்கள், கிருஸ்தவ மதம் நூல்கள், பவுத்தம் நூல்கள், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், மனித உரிமையியல், பகுத்தறிவியல் - பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமைத் தத்துவ நூல்கள், சமூகவியல், பொருளாதாரம், சட்டத் துறையியல், தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர்கள், உண்மை, மார்டன் ரேஸ்னலிஸ்ட், குழந்தை இலக்கிய நூல்கள், குழந்தைகள் கலைக் களஞ்சியங்கள், அகராதிகள், ஊடிஅஅளைளடிளே சுநயீடிசவள, மத்திய - மாநில ஆய்வு அறிக்கைகள் ஆகிய 10277 நூல்கள் இதில் அடங்கும்.
- நூலகர் கோவிந்தன்