தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

குமுறல்

1949இல் பிறந்த மோகன்தாஸ் நெமிஷ்ராய், எஸ்.சி.க்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், அவர்களின் முன்னேற்றத்-திற்காக எழுத்து, செயல்கள் மூலம் போராடும் ஒரு தீவிர படைப்பாளி, புதினம், சிறுகதை, நாடகம், சுயசரிதை, கட்டுரை என இலக்கியத்-தின் பல பிரிவு-களில் ஆக்ரோஷமாகத் தன் சிந்தனை-களை வெளிப்படுத்துபவர். இவரது சுயசரிதை-யான அப்னே அப்னே பிஞ்ரே (அவரவர் கூண்டு) அதன் வெளிப்பைடயான கருத்துக்-களுக்காக, பூச்செண்டுகளோடு நிறைய கல்லடியும் பட்டிருக்கிறது.
இவரது பல படைப்புகள் வானொலி; மேடை நாடகங்களாகவும், ஒரு புதினம் திரைப்படமாகவும் வெளிவந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை சமூகத்தவர் அறிந்து, அதிர்ந்து, சிந்திக்கத் தூண்டியுள்ளன. கல்லூரி ஆசிரியராகவும், பல பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் இவருக்குண்டு.
பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை-களை மனப்பூர்வமாய் ஏற்று, தீவிரமாய் பின்பற்றும் இவருக்கு, டாக்டர் அம்பேத்கர் அகில உலக இலக்கிய விருது, ஹிந்தி அகாடமி விருது, பிர்ஸா முண்டா விருது போன்ற உயரிய கௌரவங்களை இவரது படைப்புகள் பெற்றுத் தந்துள்ளன.
அவரைப் பேட்டி கண்டு சிவசங்கரி, அம்ருதா - டிசம்பர் 2007 இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:-
ஆங்கில மொழிபெயர்ப்பில் உங்களுடைய படைப்புகள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஒரு படைப்பாளியாக சிறுகதைகள், புதினம், வாழ்க்கை வரலாறு, நாடகம் என்று இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நீங்கள் செய்திருக்கும் பங்களிப்பைப் பற்றிப் பேசும் முன்னர், உங்களுடைய கட்டுரைகளில் அழுத்தமாக வெளிப் படும் சிந்தனைகள் குறித்து விளக்கம் பெற நினைக்கிறேன். ஒரு கட்டுரையில், உத்திரப்பிர தேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி, காந்தியத்தை ஒழித்துவிட்டு, அம்பேத்கரியத்தை வேரூன்றச் செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். காந்தியம், அம்பேத்கரியம் இவ்விரண்டு சிந்தனைத் தாக்கத்துக்கும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன? அவற்றினூடே காணும் வேறுபாடு என்ன?
காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் என்ற இரு மாபெரும் தலைவர்களின் குறிக்கோள் - தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களின் நிலைமையை உயர்த்த வேண்டும் என்பதாக இருந்தபோதும், அவர்கள் அதை அடையத் தேர்ந்தெடுத்த பாதைகள் வெவ்வேறானதுதான். இவ்விரு சிந்தனைத் தாக்கத்திற்குமிடையே உள்ள பெரிய வேறு-பாடு, சுதந்திரத்திற்குப் பின் மெள்ள மெள்ள தலித்துக்கள் முன்னேற வேண்டும் என்பது காந்திஜியின் எண்ணம்... ஆனால், மாற்றம் உடனடியாக வரவேண்டும் என்பது அம்பேத்-கரின் வாதம். ஹிந்து மதத்தின் முக்கிய கோட்பாடாகத் திகழும் வர்ணாசிரம தர்மத்தில் காந்திஜிக்கு உடன்பாடு இருந்தது; ஆனால், ஜாதியக் கொடுமைகளுக்கு வித்திட்ட வர்ணாசிரம தர்மத்தை அம்பேத்கர் அடியோடு எதிர்த்தார்.
தாழ்த்தப்பட்டோர் என்று முத்திரை குத்தி சமுதாயத்தின் ஒரு பகுதியினரை ஒதுக்குவது தவறு; இனி அவர்களை ஹரிஜன் என்று கௌரவமாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிவித்து, தீண்டாமை ஒழிய பாடுபட்டவர்தானே காந்திஜி?


வரலாற்றை ஊன்றிப் படித்தால் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஹரிஜன் என்ற வார்த்தையை காந்திஜி பயன்படுத்தும் முன்னரே துளசிதாஸர் தனது ராமசரிதமானஸ் கவிதையிலும், நர்ஸிங் மேத்தா தனது கவிதையிலும் பயன்-படுத்தியுள்ளனர். 1932இல் நாடுதழுவிய தீண்டாமை ஒழிப்பை காந்திஜி துவங்கிய-போது, தீண்டாமை ஒழிப்புக் கட்சியாக (Anti Untouchability league) இருந்ததை ஹரிஜன் சேவக் சங் (Harijian Sevak Sangh) என்று மாற்றினார். ஹரிஜன் என்று ஒரு பத்திரி-கையைத் துவக்கியதும் அப்போதுதான். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் கடவுளின் மக்கள் என்று அழைப்பதை டாக்டர் அம்பேத்கர் வெகுவாக எதிர்த்தார். தீண்டத்தகாதவர்களெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால், மற்றவர்கள் பேய்களின் பிள்ளைகளா? ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் ஹரிஜன் என்று அழைப்பது-தான் முறை. ஆக்கபூர்வமான காரியங்கள் செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்துவதை விட்டுவிட்டு, இந்த மாதிரி இனிப்பான பெயரைத் தந்து சமாதானப்-படுத்தும் முயற்சி தவிர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்ததும் அப்போது-தான். சமுதாய மனமாற்றம் இயல்பாக, தானாக வரவேண்டும் என்றார் காந்திஜி. இல்லை, வரவழைக்கப்பட வேண்டும் என்று வாதாடினார் அம்பேத்கர். இதேபோல, கிராம சுயராஜ்யம் அவசியம் என்றார் காந்திஜி. தலித்துக்களை வீடுகளில் சிறை வைத்து மேல்ஜாதியினரால் நிர்வகிக்கப்படும் கிராம ஆட்சி தவறு என்பது அம்பேத்கரின் வாதம். ஆக, பெரிய அளவில் வேற்றுமை இல்லா-விடினும், தேர்ந்தெடுத்த பாதைகளிலுள்ள கருத்து வேறுபாடுகள் காந்தியத்தையும் அம்பேத்காரியத்தையும் வெவ்வேறு இயக்கங்-களாகச் செயல்பட வைத்துள்ளன. டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ள காங்கிரஸும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? (What Congress and Gandhi hae done to the Untouchables?) என்ற புத்தகத்தைப் படித்தால், உங்களுக்கு விவரங்கள் புரியும்.
உங்கள் இளமைப் பருவத்தைப் பற்றி பேசலாமா? நீங்கள் எதிர்கொண்ட காயங்களை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?
நான் மீரட்டில் பிறந்தேன். என் தந்தை அந்தக் காலத்திலேயே மேல்நிலைப் பள்ளியில் படித்து விட்டு, ராணுவத் தொழிற்கூடத்தில் உதவி ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்தார். என்னுடைய மூன்றாவது வயதில் அம்மா இறந்துவிட, கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, பெரியம்மாவுடன் (இவர்களை பா தாய் (க்ஷயய, கூய) என்று அழைப்போம்) வசித்தேன். நாங்கள் வாழ்ந்த பகுதியில் ஒரு கோவில் இருந்தது. சின்னப் பையனாய் இருந்தபோது அந்தக் கோவிலுக்குள் நாங்கள் சென்றதும், உயர்ஜாதி மக்கள் திட்டி அடித்து விரட்டியது எனக்குள் முதன்முதலில் பதிந்த வடு. என் அக்காவை 10 மைல் தள்ளியிருந்த கிராமத்தில் மணமுடித்திருந்தோம். அந்தச் சின்ன வயதில், வெயிலில் அத்தனை தொலைவு நடந்து சென்றபோது, தாகத்துக்கு ஒருத்தர்கூட தண்ணீர் தர மறுத்தார்கள். தீண்டத்த-காதவனுக்குத் தண்ணீர் தர முடியாது என்று சிவனான எனக்குக் குடிக்க நீர் தர மறுத்துத் திட்டியது, என்னுள் பதிந்த இரண்டாவது வடு. பள்ளியில், கூடப் படித்த உயர்ஜாதி மாணவர்-கள் செய்த கிண்டல், கேலி, அறியாப் பருவத்திலேயே எனக்கு ஏற்பட்ட மூன்றாவது வடு. இப்படிப் பல கசப்பான வேதனை மிகுந்த அனுபவங்களால் நிறைந்தது தான் என் இளமைப்பருவம்.
நாட்டின் பல இடங்களில் இன்றைக்கும் வழக்கத்தி லிருக்கும் ஜாதியக் கொடுமைகள் ஒழிய, உங்கள் தீவிர ஆலோசனைகள் என்ன?
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்டால் ஜாதி வெறி ஒழிந்து விடும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், அது எதிர்பார்க்கும் பலனை இதுவரை தரவில்லை என்ற உண்மையை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். என்னைக் கேட்டால், ஒரே வழி, அற்புதமான விளைவு-களைத் தரக்கூடிய ஒரே தீர்வு ஆயிரம் வருஷங்களாகப் பின்பற்றப் பட்டுவரும் குலத்தொழில் முறையை ஒழிப்பதுதான். செருப்புத் தைப்பவரின், தெருக் கூட்டுபவரின், மகனும் மகளும் கல்வி பெற்று, அலுவலகங்-களில் வேலை பார்க்க வேண்டும். உயர் ஜாதியில் பிறந்தவர்கள் இதுநாள் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் செய்த பணிகளைச் செய்ய முன்வரவேண்டும். இப்படி இடம் மாறி வேலை பார்ப்பது தொடர்ந்தால், அவர்கள் உணர்வுகளை இவர்களும், இவர்களது சிரமங்களை அவர்களும் அனுபவத்தால் உணர முடியும். அப்படி பரஸ்பர அவஸ்தைகளை உணரும் நொடி, புது சிந்தனைகளை, புது மனிதர்-களை, புது சமுதாயத்தை உருவாக்கி, ஜாதிகளையும், அவற்றின் மூலம் பிறக்கும் உயர்வு தாழ்வு வித்தியாசங்களையும், அவற்றைத் தொடரும் கொடுமைகளையும் அறவே ஒழித்துவிடும். வம்சாவழித் தொழில், குலத்தொழில் முறையை கைவிடுவது ஒன்று-தான் நாங்கள் விரும்பும் சமத்துவ சமுதாயம் ஜனிக்க வழிசெய்யும். இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.