
கடவுள்
மதம்
சாதி
சாத்திரம்
தந்திரம்
தாயத்து
பில்லி
சூனியம்
கொலை
கொள்ளை
நரபலி
தீவைத்தல்
சூறையாடுதல்....
இந்நாட்டின் இழிநிலை அளவுகோலான
பெண்களை தீயிட்டுக் கொளுத்தும் கொடுமை
உலகில் எங்குமில்லாத உடன்கட்டையேறும் வழக்கம்...
ஒரு வயோதிகமன்னன் இறந்தானெனின்
ஒரு பெண்கள் கூட்டமே அவன்கூடவே
சிதையில் வெந்துசாகும் வெங்கொடுமை..
பன்னிரண்டு வயதுக்குள் பெண்களின் திருமணம்
பார்ப்பனர் மடாதிபதியின் திருமணச்சட்டம்...
கங்கையில் தூக்கியெறியப்படும் மரணவாயிலிருக்கும் வயதானப்பெண்கள்
தப்பித்து வந்தால் உயிரோடு புதைக்கும் வழக்கம்..
அக்காலத்து ஆரிய உணவுச் சாலைகளில்
அவர்களின் எச்சில் இலைகளிலிருந்து
ஆரியரல்லாதோர்க்கு காய்கறி வகைகள்
பரிமாறப்படும் வழக்கம்..
பூரி சகந்நாதர் கோயில்
சக்கரபூசையன்று தேர்ச்சக்கரங்களில்
கட்டப்படும் மனிதர்கள்
சிதறுண்டு செத்துமடிவதையே மோட்சமெனும் கொடுமை...
மாற்றம் செய்யப்படாத மரபுவழிக் கல்விமுறை
பகுத்தறிவுக்கும் பௌத்தக் கருத்துக்களுக்கும் எதிரான
பார்ப்பனச் சட்டங்கள்...
இப்படி
முற்போக்குச் சிந்தனைகளுக்கு முற்றிலும் முரண்பாடான
மூடநம்பிக்கைகளை விற்றுத்திரியும் வீதிவணிகர்கள்
நிறைந்துதான் நம்பாரத பழம்பெரும்நாடு
வாழ்க இந்தியா! உலகே அறிவியல் நோக்கி
ஆனால், நீ மட்டும் தமிழா
அயன்மொழி கலாச்சாரங்களில் கரைந்துபோ
நடிகனுக்கு மன்றம் திற
தொன்மங்கள் தொலை
தொலைக்காட்சியிலும் அலைபேசியிலும்
தொலைந்து போ... |