தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

நூல் மதிப்புரை

நூல் தலைப்பு: இந்து ஆத்மா நாம்
நூல் ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: செங்கோ பதிப்பகம், கடலூர் - 607 003
பக்கங்கள்: 112 விலை: ரூ. 30
பெரியார் பன்முகம், பெண் என ஏற்கனவே இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான சு. அறிவுக்கரசு எழுதிய மூன்றாவது புத்தகம் இந்து ஆத்மா நாம் ஆகும். மொத்தம் 25 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரை-களின் தொகுப்பு இந்நூலாகும்.
சகோதரர் சு.அறிவுக்கரசு அவர்கள் நல்ல சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்து அதே முறையில் வளர்க்கப்பட்ட, ஆளாக்கப்பட்டு வளர்ந்து, பல அரசு பதவிகளை அலங்கரித்த நிலையில், அஞ்சாது தனது கொள்கை இது-தான் என்பதை தயக்கமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்காதவர்.
நல்ல நினைவாற்றல் படைத்தவர். நல்ல பேச்சாளர். சிறந்த எழுத்தாளர். இப்படி பல்திறன் பெற்றவர் என்று தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் பாராட்டப் பெற்றவர் இந்நூலின் ஆசிரியர். அவரின் பன்முக ஆற்றலும், அனுபவமும், ஆழ்ந்த படிப்பும் வெளிப்படும் களமாக இந்நூல் அமைந்-துள்ளது எனலாம்.
இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளை பற்றிய அடிப்படைச் செய்தி-கள் உள்ளன. தீபாவளி, மகாமகம், உலக்கைக் கொழுந்து, மகாவிஷ்ணுவின் மரணம் போன்றவை புதிய கோணத்தில் செய்திகளைச் சொல்லும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. கிறித்துவத்தின் பிரார்த்தனை மோசடியும் இஸ்லாமிய மதத்தின் முகரம் பண்டிகையின் மூடநம்பிக்கையும் விளக்கப்பட்டுள்ளது சில கட்டுரைகளில்.
சோதிடந்தனை யிகழ் என்னும் தலைப்பின் கீழ் சோதிடப் பொய்மைகளை அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் விளக்கு-கின்றார். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி என்று படித்தவன், பதவியில் இருப்பவன் எல்லாம் அரைப் பைத்தியங்களாக அலையும் நிலையில் சனி இடுபக்கம் என்னும் கட்டுரையில் சனி பகவான் என்று சொல்லப்-படும் கடவுளின் பொய்க் கதைகளை தோலுரிக்கும் அதே நேரத்தில், உண்மையான சனி கிரகம் பற்றிய பல அறிவியல் உண்மை-களைக் கூறுகின்றார்.
திராவிடோவியம் என்னும் தலைப்பில் யாருக்காக உழைத்தார் பெரியார் என்னும் கேள்வி கேட்டு, அடுக்கடுக்காய், ஆவேசமாய், உணர்ச்சியாய் கருத்துக்களை எடுத்து வைக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது.
எந்தவிதமான பூசி மெழுகல் இல்லாமல், தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் நூல் ஆசிரியர் மானமிகு சு.அறிவுக்-கரசு தந்தை பெரியார் சொல்லும் அதே பாணியை எழுத்தில் கையாண்டுள்ளார். ஆமாம் புரையோடிப் போன புண்ணுக்கு அறுவை சிகிச்சைதானே சரியான வைத்திய முறை. பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கும் ஆபாசக் கடவுள் கதைகளை பச்சையாகவே எழுதியிருக்-கின்றார் பல கட்டுரைகளில். மாணவர்களுக்கே பாலியல் கல்வி தேவை என்பதனை நாம் வலியுறுத்தும் காலம் இது. பாலியல் சார்ந்த கடவுள் கதைகளை, உண்மை-களைச் சொல்ல வேண்டிய காலம் இது. சொல்லியிருக்கின்றார். மூட நம்பிக்கைகளை அகற்றும் வைத்தியர் என்ற முறையில் வரவேற்போம்.
மேடைப் பேச்சாளர்கள், நமது கழகத் தோழர்கள், தோழியர்கள் கைகளில் மட்டு-மல்லாது, நமது இயக்கத்திற்கு நாம் வரவழைக்க நினைக்கும் ஒவ்வொருவர் கையிலும் நாம் கொடுக்க வேண்டிய புத்தகம் இது. இதனைப் போன்று இன்னும் பல புத்தகங்களை நூல் ஆசிரியர் வெளியிட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். நமது வேண்டு-கோளும் கூட.
- வா. நேரு, மதுரை