ஹாலிவுட் கலைவாணர்-10

சிட்டி லைட்ஸ் படத்தின் வெற்றி அவரைப் புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்தப் படம், அந்தப் படம் என்று எடுத்த படங்கள் எல்லாமே வெற்றியின் உச்சத்தைத் தொட்டன. அந்த நிலையில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சகல வசதிகளோடும் அமர்த்-தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த சாப்ளினின் தாய் நோய் வாய்ப்பட்டார். தாம் ஏழ்மையில் அனுபவித்த துயரங்களில் இருந்து அவர் முழுவதும் மீளவில்லை. வறுமையால் பீடிக்கப்-பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலை நீடித்தது. அவ்வப்போது தலை தூக்கியது.
கடைசி நாள்களில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்து அவரைக் கவனித்துக் கொண்ட கிட்னி, சாப்ளின் ஆகிய தம் இருமகன்களைப் பற்றி... இவர்கள் என் மகன்கள் அல்ல என்று கூறும் அளவுக்குப் பாதிப்பு! ஆனால் இருமகன்களும் தம் தாயைக் கவனித்துக் கொண்ட விதம் பற்றி மருத்துவர் மட்டும் மிகப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அந்தத் தாய் சிதறிய மனநிலையிலேயே மரணத்தைத் தழுவினார். தாய் அல்லவா?
தாயின் இறப்பு - அவரை வெகுவாகவே பாதித்து விட்டது. இருப்பினும் மிகவும் ஆடம்-பரமாகத் தாயின் இறுதி ஊர்வலத்தை நடத்தி அடக்கம் செய்தார். எங்கே தெரியுமா? அவரின் மூன்று நாள் குழந்தையைப் புதைத்த இடத்-திற்கு அருகிலேயே தன் தாயின் உடலை அடக்கம் செய்தார். அவரால் மறக்க முடியாத, அவரின் அன்புக்குப் பாத்திரமான இருவரும் அருகருகே!
கவலைகள் அவரது மனத்தை நெருக்கிக் கொண்டன. என்ன வாழ்க்கை? எவ்வளவு பணம்? எவ்வளவு புகழ்? எல்லாம் இருந்தும் என்ன? மன அமைதி இல்லையே! இதை எப்படி வெல்வது? இதற்கு அவர் கண்டுபிடித்த வழி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழி ஆகும்! உடனே தாடி வளர்த்துக் கொண்டு, குடிப்பதிலும், புகைப்பதிலும் தங்களை ஆழ்த்திக் கொண்டு அழிந்து போகும் பலரையும் நாம் பார்க்கிறோம். ஆனால் இவரோ...
மீண்டும் படத் தயாரிப்புப் பணிகளில் மூழ்கித் தம்மை ஆழ்த்திக் கொண்டார். பல இடங்களுக்கும் சென்றார். உணவு விடுதி-களுக்கும் கடற்கரைக்கும் சென்றார். ஒரு இடத்தில் ஒரு துணை நடிகையைச் சந்தித்தார். அவள் பெயர் ஜீன் ஹார்லோ (Jean Harlow). அந்தக் காலத்தில் ஆலிவுட் வரலாற்றில் ஒரு சினிமா நடிகை தன் அழகாலும் நடிப்பாலும் உலக மக்களைச் சொக்க வைத்தவர் ஒருவர் என்றால் அவர் ஜீன் ஹார்லோதான்! ஒரு உதாரணத்தைச் சொன்னால் நன்றாக விளங்கும்! இவர்தான் மர்லின் மன்றோவுக்கு முன்-னோடி! அழகில், கனவுக் கன்னியாக விளங்கியவதில் என்று மட்டும் இல்லை! இளம்-வயதிலேயே இறந்து விட்டதிலும்!
ஜீன் ஹார்லோ முப்பது வயதை அடையும் முன்பே இறந்து விட்டார். மர்லின் மன்றோ இறப்பை வரவழைத்துக் கொண்டார்.
இள வயதுக் காதலி ஹெட்டி இவரை விட்டுப் போய்விட்ட நிலையில் நிரந்தர ஏக்கம் குடி கொண்ட செஞ்சினராய் சாப்ளின் ஆக்கி-விட்டார். அதற்குப் பின் இரண்டு முறை திருமணங்கள் செய்து கொண்டாலும் நிம்மதி-யோ, மகிழ்ச்சியோ நிலவவில்லை, அவர் வாழ்வில்! அதன் விளைவு அவருடைய வாழ்வில் பல பெண்களின் குறுக்கீடுகள். தற்காலிக காதலிகள் என நிறையப் பேர் குறுக்-கிட்டனர். இவரும் அவர்களை விரட்ட-வில்லை. ஆனால் எல்லாருமே இவரின் பணத்-திற்குக் குறி வைத்தார்கள். அது கிடைக்காத நிலையில் கிடைக்கவே கிடைக்காது எனத் தெரிந்துவிட்ட நிலையில் சிட்டுக் குருவிகள் விட்டு விலகி விட்டன. இவரும் கவலைப்-படவில்லை.
ஆனாலும் இவரது லீலைகள் தொடர்ந்தன, வேறு வேறு பெண்களுடன்! சிசு சிசுக்களுக்-காகவே ஏடு நடத்துவோர் இவரைச் சுற்றி வந்து இவரைப் பற்றிய செய்திகளைப் போட்டார்கள். இவர்கள்தான் என்றில்லை. அரசியல்வாதிகளும் இவர் செய்கைகளில் ஆர்வம் காட்டினார்கள். அரசு அதிகாரிகள் இவரைக் கவனிப்பதில் அக்கறை அதிகமாகக் காட்டினார்கள்.
இங்கிலாந்து நாட்டுக்காரரான சாப்ளின் அமெரிக்காவில் மோடி கோடியாகச் சம்பாதித்-தாலும் அமெரிக்காவிலேயே வகித்தாலும், அமெரிக்கக் குடிமகன் ஆகவில்லை. அதற்கு முற்சிக்கக்கூட இல்லை. அமெரிக்க நாட்டுக்-காரனுக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. இதை அந்த நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே கூடப் பேசினார்கள். இதை மறுத்துத் தாம் அமெரிக்காமீது பாகமும் பற்றும் உண்டு என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறிவந்தார். ஆனாலும் அவரது வாய்ச் சொற்களை நம்பத் தயாரில்லை அமெரிக்கர்கள்.
அமெரிக்காவின் குக்ஷஐ, மற்றும் ஊஐஹ போன்ற உளவு நிறுவனங்கள் இவரை உளவு பார்க்கத் தொடங்கின. இந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாரையும் வேவு பார்ப்-பார்கள். அந்த நாட்டுக் குடியரசுத் தலைவர் பற்றியே உளவு பார்ப்பவர்கள். மிக ஆபத்தான-வர்கள். அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது. சாப்ளினுக்கு அது தெரியாது. கலைஞன், வெண்மையாக இருப்பதெல்லாமே பால்தான் என்று நம்பக் கூடியவன்.
அவர் ஏழை. ஏழை என்பதை ஏற்றம் வந்த பிறகும் மறக்காதவர். தன் உடன்பணியாளர்-களை வயதின் காரணமாக ஓய்வு கொடுத்து அனுப்பவில்லை. உட்கார வைத்தே சம்பளம் கொடுத்தார். ஓய்வு பெற்றுக் கொண்டவர்-களுக்குக் கூட ஊதியம் அளித்து வந்தார். ஏழைகளின் நேசன் என்றே அனைவரும் இவரைப் பெருமைப்படுத்தினர்.
பல நாடுகளிலிருந்து குடியேறிய கூட்டுக் கலவைக் கும்பலாக இருந்தாலும் அமெரிக்-கர்கள் அனைவரும் முதலாளித்துவத்துக்கு ஆட்பட்டவர்கள். கம்யூனிசம் என்ற சொல்லே இவர்களைக்குச் சிம்ம செய்பனம். அந்தக் கொள்கைக்காரர்களை அறவே பிடிக்காது. வேண்டாதவர்களை அந்தச் சொல்லால் அர்ச்சித்து அழிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். அவர்கள், சார்லி சாப்ளினை ஒரு கம்யூனிஸ்ட் என்றே கருதிவிட்டனர்.
இப்படிப்பட்ட கெடுநினைப்புக்கு, கேடு கெட்ட புத்திக்கு வித்திட்டவர் மெக்கார்த்தி. அவரின் பெயராலேயே அந்த இயக்கம் மெக்கார்த்திகம் என்றே கூறப்பட்டது. இந்த ஆள் அமெரிக்க செனட்டராக இருந்த ஓர் அரசியல்வாதி.
உளவுக்காரர்களும் கிசுகிசுப் பத்திரிகைக்-காரர்களும் எப்போதுமே ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றித்தான் அக்கறை காட்டி அதனை அம்பலப்-படுத்துவதில் அற்ப சந்தோஷத்தையும், பத்திரிகை விற்பனையையும் பெருக்கிக் கொள்-வார்கள். அவர்களுக்குத் தீனி போடுகிற வகையில் சாப்ளினும் நடந்து கொள்வார். எதையும் மூடி மறைத்துச் செய்யாமலே இருந்து வந்தார்.
காட்டலினா என்று ஒரு தீவு. பசிபிக் கூலில் உள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகில் இருக்கிறது. இன்றைய மியாமி கடற்கரைபோல. தாய்லாந்தின் பட்டயா கடற்கரை போல ஒரு கேளிக்கை இடம். இங்கு வருபவர்கள், இருப்பவர்கள் யாரும் கார், ஸ்கூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கூடாது. எல்லாமே சைக்கிள், குதிரை வண்டிகள் தான்! விடுமுறை நாள்களை ஜாலியாகப் பொழுது போக்க வரும் ஜோடிகளுக்கு உல்லாசத் தீவு இது! தனியராக வந்தாலும் இணை கிடைத்திடும் வசதியும் இங்கு உண்டு.
இந்தத் தீவுக்கு சாப்ளின் போய் வருவார். எல்லோரும் விடுமுறை நாள்களில் சென்றால் இவர் வேலை நாள்களில் செல்வார்! ஒரு செய்தி அல்லது வதந்தி சாப்ளினைப் பற்றிப் பரப்பப்பட்டதுண்டு. இந்தத் தீவில் இவரும் இவருக்கு ஜேடியும் ஆதாம் ஏவாளாக மாறி ஆடிப்பாடி ஓடியாடி விளையாடுவார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
அதைப் படம் பிடிக்க வேண்டும் என்று அலைந்து திரிந்த பப்பராசிகள் எனப்படும் பத்திரிகை ஒளிப்படக்காரர்கள் நாயாய்ப் பேராய் அலைந்திருக்கின்றனர்.
காட்டலினா தீவில் அவருக்குக் கிடைத்த ஒரு துணை அந்தக் காலத்தின் புகழ்பெற்ற அழகு நடிகை பெக்கி ஹாம்கின்ஸ் ஜாய்ஸ் (Peggy Hopkins Jayce) என்பவர். நடனக் காட்சிகளில் நடனமாடும் எளிய நடிகை. என்றாலும் அங்க அமைப்புகளும் அழகுடன் அமையப் பெற்று அதனை வஞ்சனையின்றி வாரி வழங்கும் வழக்கமும் பெற்றவள். இந்தத் தாராளம் அவனுக்குப் பணத்தை வாரிக் கொடுத்தது. ஆண்கள் சொக்கிக் கிடந்து சுகபோகம் பெற்று தாம் ஒருவருக்கே அவள் சொந்தமாக வேண்டும் என்கிற சுயநலம் நாடி அவளைத் திருமணம் செய்து கொண்டனர்.
ஆம், அய்ந்து பேர் திருமணம் செய்து கொண்டு மணவிலக்குக்கும் பெற்றனர். இதற்குப் பெரும் தொகையைக் கொடுத்துதான் சட்டப்பூர்வ விலக்கு வாங்கினர். ஒருவரின் அனுபவத்திலிருந்தாவது அடுத்தவர் பாடம் பெற வேண்டாமா? முன்னாலே செல்பவர் தடுக்கி விழுந்த இடத்தில் பின்னாலே வருபவரும் தடுக்கி விழலாமா? விழுந்தார்கள் அதன் விளைவு அய்ஸ் கோடிக்கணக்கான பணத்துக்குச் சொந்தக்காரியானாள்.
அப்பேர்ப்பட்ட அரம்பை சாப்ளினிடம் வந்தாள். அல்ல, இவர் அவனிடம் சேர்ந்தார் அவளும் கோடீஸ்வரி. இவரும் அப்படியே? எனவே பணத்துக்காகவா இவர்கள் கூடினர்? அல்ல, சாப்ளினைப் பொறுத்தவரை அவர் பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் எனப் பாடியவர். அந்த அம்மையோ, ஆண்மகனைத் தேடினார். அவரின் வாக்கு மூலப்படி, ஆலிவுட்டின் காதல் மன்னர்கள், ஆண் அழகர்கள் அத்துணைப் பேரிலும் ஆண்மையுள்ளவர் சாப்ளின் மட்டுமே என்றே சொல்லிவிட்டார். அவன் பெற்ற அனு-பவத்தின் வெளிப்பாடாக அது இருந்திருக்கலாம்.
அவளுடைய கடந்த கால அனுபவங்களை அவளே கூற, இவர் கேட்டுக் கேட்டுப் புதிய சினிமாவே உருவாகிவிட்டது. அவள் வாழ்க்-கைச் சம்பவங்களைப் புகுத்தி அவர் தயாரித்த படம் பாரிஸ் பெண் (The Woman of Paris) தன் தொடக்கக்காலக் காதலி எட்னா பர்வேயன்-ஸைக் கதாநாயகியாக வைத்துப் படம் எடுத்தார். இந்தப் படத்தில் நடித்த பிறகு எட்னா சாப்ளினுடைய எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்தப் படத்திலும் சாப்ளின் நடிக்கவில்லை. படக்கதையை எழுதி, இயக்கினார்.
பட்டாம்பூச்சி சாப்ளினின் தேடுதலில் படக்கதைகளும், நடிகைகளும் கிடைத்தார்கள் என்றால்.... மறு பக்கத்தில் வம்பும் வழக்கும் வந்து சேர்நத்து பெயருக்கும் புகழுக்கும் களங்கமும் சேர்ந்தது. |