கருத்துரிமை?

அண்மையில் கொல்கத்தாவில் வசித்து வந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ருதீனை மதவாதிகள் எதிர்க்க முற்பட்ட-போது, மேற்கு வங்க அரசு அவரை கொல்கத்தாவை விட்டு வெளி-யேறச் செய்தது. முதலில் ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தஸ்லிமா, பிரதமர் தலையிட்டுக் கூறியதன் பின்னர் டில்லி-யில் ஒரு பாதுகாப்பான இடத்தில் குடியேற்றப்பட்டார். சுதந்திரமாகத் தன் கருத்தை வெளியிட்டதற்காக 1993 முதல் மதவாதிகளால் வேட்டையாடப்பட்டு வரும் தலிஸ்மா இன்று நாடோடி போல, அகதி போல இங்குமங்கும் அலைக்-கழிக்கப்பட்டு வருகிறார். சுதந்திரமாக ஒருவர் அச்சமின்றி வாழும் நிலை இந்தியா-வில் இல்லாமல் போய்விட்டதா என்ற அச்சத்தை இது மக்கள் மனதில் எழச் செய்கிறது.
1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட-தற்கு எதிராக பங்களா தேஷில் நடந்-தேறிய இந்து மக்களுக்கு எதிரான கலவரங்களுக்குப் பின் 1993 ல் தஸ்லி-மாவின் லஜ்ஜா என்ற நூல் வங்காள மொழியில் வெளியானது. அந்த நூலில் அவர் தெரிவித்திருந்த சில கருத்துகளுக்-காக பழைமைவாத முஸ்லிம் அமைப்பு-கள் அவரது உயிரை வாங்கத் துடித்தன. பங்களாதேச அரசு அந்நூலைத் தடை செய்தது. மத, கடவுள் நிந்தனை செய்த குற்றத்துக்காக தஸ்லிமா மீது பங்களா-தேச அரசு 1994 ல் குற்றச்சாட்டுகள் பிறப்பித்து, கைது வாரண்டும் பிறப்-பித்தது. அதனால் அவர் ஸ்வீடன் நாட்டுக்-குக் குடி பெயர்ந்து செல்ல நேரிட்டது.
1999 இல் தனது சுயசரிதையின் 2 ஆம் பாகத்தை எனது இளமைப் பருவம் என்ற தலைப்பில் தஸ்லிமா வெளி-யிட்டார். தனது குடும்ப உறுப்பினர் களினாலேயே பாலியல் வன்கொடுமை-களுக்கு ஆளானதைப் பற்றி அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த நூலும் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டது. 2003 இல் வெளியிடப்பட்ட அவரது சுயசரி-தையின் மூன்றாவது பாகமான கா (பேசு) இரண்டு துண்களாக என்ற தலைப்பில் வெளியானது; அதுவும் உடனே பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டது. 2004 ல் அதே இருள் என்ற தலைப்பில் வெளியான நான்-காவது பாகமும் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டது.
 |
வங்காளத்தையே தனது தாயகமாகக் கருதிய தஸ்லிமா 2004 ல் கொல்கத்தா வந்து வாழத் தொடங்கினார். அவர் முகத்தில் கரி பூசுபவருக்கு பண முடிப்பு பரிசளிப்பதாக கொல்கத்தா திப்பு சுல்தான் மசூதி மவுல்வி அறிவித்தார். சுதந்திரமாகப் பேசவும், எழுதவும் இயன்ற நாடு இந்தியா என்ற எண்ணத்தி-லேயே தஸ்லிமா இந்தியாவுக்கு வந்தார். ஜனநாயகக் கருத்து கொண்டோருக்கும் சுதந்திர உரிமை விரும்பிகளுக்கும் புகலிடம் என்று இந்தியா மெய்ப்பித்து வந்துள்ளது. தலாய் லாமாவுக்கும் ஆயிரக்-கணக்கான அவரது சீடர்களுக்கும் இந்தியா அடைக்கலம் அளிக்க-வில்லையா? ஜனநாயகத்துக் காகப் போராடிய நேபாள காங்கிரஸ் தலைவர்-களுக்கும், பாகிஸ்தான் எழுத்தாளர்கள் ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ், ஃபமிதா ரியாஸ், ஷெயிக் முஜிபூர் ரஹ்மானின் மகளும் முன்னாள் பங்களா தேசப் பிரத-மருமான ஷெயிக் ஹஸினா வஜீத், ஆஃப்கானிஸ்தானின் நஜிபுல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அவர்களில் பலர் இன்னும் இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தஸ்லிமாவுக்கு மட்டும் என்ன நேர்ந்து விட்டது? உத்தரப் பிரதேசம் ராய்பரேலியில் உள்ள மில்லத் கவுன்சில், தஸ்லிமாவின் தலைக்கு ரூ 5 லட்சம் பரிசளிப்பதாக 2007 ல்அறிவித்தது. 2007 ஆகஸ்ட் மாதத்தில் அய்தராபாத்தில் பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி-யில் கலந்து கொண்ட தஸ்லிமா மீது மதவெறி-யர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
தஸ்லிமாவுக்கு எதிராக ஒரு சிறுகும்-பல் வீதிகளில் முழக்கம் எழுப்பிக் கொண்டு வந்ததையடுத்து மேற்கு வங்க கம்யூனிஸ்ட் மாநில அரசு தஸ்லிமாவை கொல்கத்தாவை விட்டு வெளியேறச் செய்தது. ஜனநாயகப் பண்புகள், சுதந்திர உணர்வுகள் எல்லாம் வாக்கு வங்கிக்கு முன் செயலற்றுப் போய் விடும் அலங்காரச் சொற்களே என்பதை கம்யூனிஸ்ட் அரசு மெய்ப்பித்துவிட்டது. ஒரு தஸ்லிமாவுக்காக பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க அது தயாராக இல்லை. இவரது நூலை 2003 இல் மேற்கு வங்க அரசு தானாகவே தடை செய்தது. உயர்நீதி மன்றத்தில் எழுத்தாளர் அமைப்பு வழக்கு போட்டதில் தடையை நீக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. எனினும் ஆட்சே-பணைக்குரிய பகுதிகள் எழுதியவரா லேயே நீக்கப்படும் நிர்பந்தத்தை மய்ய, மாநில அரசுகள் உருவாக்கி விட்டன.
இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லிம்களை வேட்டையாடித் திரியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குஜராத்தில் வந்து வசிக்கும்படி தஸ்லிமாவுக்கு அழைப்பு விடுத்திருப்-பதுதான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவமோ? முஸ்லிம்கள் கொல்லத் துடிக்கும் தஸ்லிமாவுக்கு மோடி பாது-காப்பு அளிப்பாராம்!
மக்களின் உணர்வுகளைப் புண்-படுத்தும்படி தஸ்லிமா பேசாமலிருப்பார் என்று எதிர் பார்க்கிறோம் என்று அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதுவும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து பேசப் பட்டதே. புகழ் பெற்ற ஓவியர் சுவப்-பிரன்னா இதைக் கண்டித்து, தஸ்லிமா-வின் பிரச்சினையே பேச்சு, எழுத்து சுதந்திரம் வேண்டுமென்பதுதான். அரசு இப்போது இது போல் அறிவித்துள்ளது. அவர் தனது எழுத்துக்களை அவ்வப்-போது தகவல் ஒலிபரப்புத் துறைக்கு ஒப்புதலுக்கு அனுப்பவேண்டுமா? என்று கேட்கிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜோயா ஹாசன், தஸ்லிமா பற்றி எவரும் எந்த ஒரு முடிவான நிலையும் மேற்-கொள்ளாதது வருந்தத்தக்கது. இவ்வாறு நடத்தப் படுவதற்கு அவர் அத்தகைய தவறு ஏதும் செய்து விடவில்லை என்று கூறுகிறார். எழுத்தாளர் சுனில் கங்கோ-பாத்யாயா, யாராவது ஒருவர் இதற்காகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளர் எவ்வாறு இப்படி விலங்கைப் போல் வேட்டை-யாடப்-படுகிறார்? என்று கோபமாகக் கேட்கிறார்.
இதற்கிடையே ஸ்வீடனுக்கு வந்து-விடும்படி அந்நாட்டு தூதர் தஸ்லி-மாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வைத்திருப்பது ஸ்வீடன் நாட்டுக் கடவுச் சீட்டு. ஆம், அவர் அந்நாட்டுக் குடிமகள். ஆனால் இவ்வாறு இந்தியாவை விட்டு தஸ்லிமா வெளியேறுவது இந்தியாவிற்கு நல்ல தோற்றத்தை ஈட்டித் தராது என்பது மட்டும் உண்மை.
-வு.ஸீ.ட்யூஹஙுஙீர்றூக் |