பயணம்

கோச்டா - ரீக்கா (நடு அமெரிக்கா) பயணம் பெயர்த்தி அமைதி தாத்தாப் பாட்டிக்கு அக்டோபர் 7ஆம் தேதி விடுமுறை கொடுத்து ஒரு வாரம் உல்லாசமாக எங்காவது போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தாள். பாதி மனதோடு திரும்பவும் பயணத்தை தொடங்கினோம். நியூவார்க் விமான நிலையத்தி-லிருந்து டல்லாச் நகர் சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் ஏறி கோச்டா நீக்கா என்கிற நடு அமெரிக்கா நாட்டை மொத்தம் 12 மணி நேரங்கழித்து வந்தடைந்தோம். டல்லாச்சில் இறங்காமல் வந்தால் 8 மணி நேரத்தில் வந்திருக்கலாம். டல்லாச் விமான நிலையத்தில் காத்திருக்கும் நான்கு மணி நேரத்தில் நல்ல புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
கோச்டா ரிக்கா தலைநகரான சான் கோசே என்ற நகரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் அந்நாட்டின் மலைப்-பாங்கான இடத்தை காணச் சென்றோம். நாங்கள் தங்கியிருந்த இடம் பசிபிக் மாக்-கடலை ஒட்டிய இடம். இங்கு பெரும்பாலும் ஸ்போனிச் மக்கள் வாழ்கிறார்கள். காலை ஏழு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை உழைக்கிறார்கள். பல வெளிநாட்டு தொழிலதி-பர்கள் இங்கு தொழிற்ச்சாலைகள் வைத்-துள்ளனர்.
இதனால் இங்குள்ள மக்களுக்கு வேலைகள் கிடைக்கின்றன. மற்றபடி காபி தோட்டங்கள், பழத்தோட்டங்கள், வண்ண வண்ண பூக்கள் தோட்டங்கள் எல்லாம் வேலை வாய்ப்புதான். நாட்டுக்கு வருமானம் வரும் இன்னொரு வழி உல்லாசப் பயணிகள் தான். இங்குள்ள மழைக்காடுகள் ஏராளமான உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இங்கு வாழும் பிராணிகள், பறவைகள் எல்லாம் புதுவித-மானவைகளாக உள்ளன.
இந்நாடு கி.பி. 1643இல் ஸ்பெயின் நாட்டிட-மிருந்து விடுதலைப் பெற்றது. சனநாயகத்தை தழுவிய இந்நாட்டின் தலைவர் நல்ல கல்வி கற்றவர். அமெரிக்க கார்வோடு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர். இரண்டாம் முறை-யாக இத்தலைவரை இந்நாட்டு மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்து உள்ளனர்.
இந்நாட்டில் கல்வி என்பது கல்லூரி முடியும் வரை இலவசம். ஆதலால் கல்வி அறிவு இல்லாதவர்கள் மிகமிகக் குறைவு. ஆங்கிலத்-திலும், ஸ்பானிச்சிலும் சரளமாகப் பேசு-கிறார்கள். எங்கள் கார் ஓட்டுனர்களும் பட்டதாரி, பிச்சைகாரர்களை காண்பதறிது.
இப்பொழுது மலைப்பாங்கான இடங்கள் எப்படி இருந்தன என்று பார்ப்போம். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு வளைந்து வளைந்து காரில் ஆறு மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
கொட்டும் மழையும், மேகக் கூட்டங்களும் பச்சை பசேலன, மரங்கள், கொடிகள், காடுகள் இவையெல்லாம் கேரள நாட்டின் மலைப் பகுதிகளை நினைவுப்படுத்தின. முக்கியமான எனக்கு பிடித்தது என்னவென்றால் அருமை-யான தார்போட்ட சாலைகள், மலையை ஒட்டிய சாலை ஓரத்தில் கான்கரீட் வடிகால்கள்.
இதனால் சாலைகள் நீர் தேங்காமலும் பழுது படாமலும் இருந்தன. எங்களுக்கு ஸ்பானிச் பேசத் தெரியாததால் அந்த ஊர் ஊர்தி ஓட்டுபவரை நியமித்துக் கொண்டோம். முதலில் மலை உச்சியில் அமைந்த உணவகத்தில் காலை உணவு அருந்தினோம். அந்த உணவ-கத்தில் அழகிய கலைப் பொருட்கள் கண்ணை கவரும் விதத்தில் வைக்கப்பட்டிருந்தன. மரவேலைப்பாடுகள், கல், மண் கலை வேலைப்-பாடுகள், விதவிதமான காபிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. மழையை சேகரிக்க கல் மலையைத் தோண்டி கிணறு வைத்திருந்-தார்கள். இன்னொரு தடவை மலை உச்சிகளின் அழகை கண்டு விட்டு பயணத்தை தொடங்கி-னோம். அடுத்த இடம் போவாச் என்கிற எரிமலைதான். இந்த மலை தற்பொழுது எரிமலை குழம்பை கக்காமல் அமைதியாக இருக்கிறது.
 |
இந்த எரிமலை குழியில் தண்ணீர் நிரம்பி அழகிய வெளிர்நீலமாக காட்சி அளித்தது. கொஞ்சம் புகை வெளியே வந்து கொண்டே இருந்தது. மேக மூட்டங்கள் அடிக்கடி இந்த எரிமலை குழியை மறைத்து விடும். ஆனால் நாங்கள் தெளிவாக எரிமலையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் வந்திருந்த இந்த நாட்கள் அடை மழை காலம். ஆக மழையில் தான் இவற்றையெல்லாம் பார்த்தோம். அதுவும் இனிமையாகத்தான் இருந்தது. பிறகு எரிம-லையிலிருந்து இரண்டு மணி நேரம் மலைகள் நடுவே பயணம் செய்து மலைக்காடுகள் மேல் தொங்குபால சவாரிக்கு சென்றோம்.
போகும் வழியில் ஏராளமான மலை சார்ந்த குக்கிராமங்களையும் ஆறுகளையும், நீர்வீழ்ச்சி களையும் கண்கவர் பள்ளத்தாக்குகளையும் கண்டுச் சென்றோம். எங்கோ மூலைகளில் கிராமங்கள் இருந்தாலும், அவ்வூரிலும் குழந்-தைகள் சிறுவர் சிறுமியர் சீருடை அணிந்து கொண்டு, மழையைப் பொருட்படுத்தாது பள்ளிக்கூடம் செல்லுகின்றனர். ஆண்கள், பெண்கள் வேலைக்கு போகிறார்கள். தெருவில் கூட்டங் கூட்டமாய் நின்று வம்பு இழுத்துக் கொள்ளாமல் அமைதியாக வாழுகிறார்கள். முக்கியமாக ஆறுகளைத் தாண்டும் போது பாலங்களில் ஒரு ஊர்தி செல்லத்தான் இடமிருக்கும். அங்கேயும் ஊர்தி ஒட்டுபவர்கள் ஒரு காவலாளி உதவியில்லாமல் அவர்களே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக பாலத்தை கடந்து செல்கிறார்கள்.
தொங்கு பால சவாரி எனக்கு மிகுந்த அச்சத்தை கொடுத்தது, கம்பி அறுந்து விழுந்துவிட்டால், அல்லது நான் கைப்பிடியை விட்டுவிட்டால் என்ற பயம் தொந்தரவு செய்தது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம். எவ்வளவோ பேர்இந்த சவாரி செய்து பத்திரமாக ஊர்போய் சேர்ந்திருப்-பார்கள். நாமும் தைரியமாக செய்ய வேண்டியதுதான் என்ற மனஉறுதி கொண்-டேன். தோலால் ஆன சிறு கூடை போன்ற நாற்காலியில் நம்மை உட்கார வைத்து கொக்கிகளால் அந்த கூடையை, தொங்கு கம்பிகளில் மாட்டி விடுகிறார்கள். நாம் பிடித்துக் கொள்வதற்கு கம்பியில் ஓடுகின்ற இரும்பு உருளையை கொடுத்து விடுகிறார்கள். இந்த மாதிரி சவாரிக்கு அமர்ந்த காடுகளுக்குள் நடந்து சென்று மரத்தைச் சுற்றி கட்டியுள்ள பலகணியை அடைய வேண்டும்.
இம்மரங்கள் 200லிருந்து 300 அடி உயரமுள்ளவை. அம்மரத்தைச் சுற்றி பிடிக்க அய்ந்திலிருந்து பத்து ஆட்களின் கைகள் தேவை. முதல் பலகணி மகாகனி மரத்தி-லிருந்து கிளம்பினோம்.
இந்த கம்பி சவாரி வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம். மரங்களின் உள்ளும், காடுகள் மேலும் பறந்து செல்வது போல் இருந்தது. அடுத்த பலகணியில் ஒரு ஆள் நமக்காக காத்திருந்து பாதுகாப்பாக நம்மை பிடித்து இறக்கி விடுகிறார். இப்படியாக பத்து பலகணிகளைத் தாண்டி 300 அடியிலிருந்து 400 அடி இறங்கி பள்ளத்தாக்கைச் சென்றடைந்-தோம். சிறிது ஒய்வெடுத்தபின், அடுத்த பாதி சவாரி, 100லிருந்து 150 படிகள் ஏறி வேறு மலைகளிலிருந்து அடுத்த மலைகளுக்கு கம்பி சவாரி செய்தோம். மூச்சு முட்ட கால் வலிக்க மேற்கொண்ட இந்த சவாரி பறக்கும் இன்-பத்தை தந்து இனிமையாக்கியது. இந்த சவாரியை முடிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் ஆகியது. நாங்கள் செய்த சவாரியை புகைப்படம், ஒளிப்படம் எடுத்து உடனே எங்களிடம் கொடுத்தார்கள்.
இச்சவாரி முடியும் போது மாலை ஆறு மணி போல் ஆகிவிட்டது. பிறகு இருட்டில் மழையில் நான்கு மணி பயணம் செய்து பசிபிக் கடலோரம் அமைந்த கேப்பச் என்ற நகரத்தை அடைந்தோம். இங்கு உல்லாச பயணிகள் தங்கும் விடுதியில் நான்கு நாட்கள் தங்கினோம். இங்கு பார்க்க வேண்டியவை மலையோரத்தில் அமைந்த அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட காடு. இக்காட்டில் முதலைகள், குரங்குகள், விதவிதமான பறவைகள் உள்ளன. காடுகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபா-தைகள் செங்குத்தாகவும் சரிவாகவும் உள்ளன. கால்வலியால் இவற்றை தள்ளிப்போட்டு விட்டு, கடலில் குளித்து மகிழ்ந்தோம்.
இந்த கோச்டா ரீக்கா நாட்டின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஆண்டு முழுவதும் மிதமான 80லிருந்து 85 வரை (பாரன்கீட்) சூடுதான்.
இந்த சூழ்நிலையை விரும்பி நிறைய அமெரிக்கர்கள், கனடா நாட்டவர்கள், அய்ரோப்பியர்கள் நிலம் வாங்கி, வீடு கட்டிக் கொண்டு நிரந்தரமாக ஓய்வு எடுத்து கொள்கிறார்கள்.
அடுத்த நாள் இவ்வூரிலிருந்து 60 கிலோ மீட்டரில் உள்ள மழைக்காடுகளில் தொங்கு பால பயணம் செய்தோம். முந்தைய கம்பி சவாரிக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது. 12 பேர் ஒரு பெட்டியில் அமர்ந்து மெதுவாக கம்பி பாலம் வழியாக ஊர்ந்து ஊர்ந்து சென்றோம். போகும் வழியில் பலவகை மரங்கள், டூகான் என்ற பெரிய மூக்குள்ள அழகிய பறவை வெள்ளை கழுகு, வெள்ளை முக குரங்குகள் நீர்வீழ்ச்சிகள் பார்த்தோம்.
பலவித வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் தோட்டம், பாம்பு வகைகள் உள்ள கண்காட்சி அகங்கள், மூலிகைத் தோட்டங்களைப் பார்த்தோம். கடைசி நாள் மீன்பிடி படகில் மிக வேகமாக கடலில் 20 மைல் கல் உள்ளே சென்று ஒரு மீனும் பிடிக்காமல் வந்து சேர்ந்தோம். மழையும், காற்றும் சுழன்று அடித்து படகை ஆட்டின. இருப்பினும் மாலுமி பத்திரமாக துறைமுகத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
அடுத்த நாள் ஒரு வழியாக சூரியன் எட்டிப் பார்த்தது. திரும்ப ஆறு மணி நேரம் தொடர் மலைகளின் உள்ளே பயணம் செய்து சான்-கோசே விமான நிலையம் அடைந்து அங்கிருந்து பிலடெல்பியா வந்து அடைந்-தோம். எங்கள் பெயர்த்தி அமைதி ஆவலுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்-டாள். எங்களுடைய அன்புப்பணி பெயர்த்தியுடன் தொடர்ந்தது. |