குறுங்கதை
 |
ஊருக்கு ஒதுக்குப்புறமா அமைந்-திருந்தது அந்த சிவன் கோவில். தந்தை சொக்க லிங்க குருக்களின் மறைவுக்கு பின் பூஜை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ராமலிங்க குருக்களை மட்டும் சிவன் வாழவைத்-தார். ராமலிங்க குருக்களுக்கும், மீனாட்சிக்கும் பிறந்த ஒரே மகனான பட்டாபி படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்-தான். சிறு வயதிலேயே ஏன்? எதற்கு? எப்படி? எனும் அறிவுக்கண்ணோடு ஒவ்வொரு பொருளையும் ஆராயத் தொடங்கினான். பூஜை முடிந்து பழங்கள், பூக்களோடு உள்ளே நுழைந்த ராமலிங்க குருக்களைப் பார்த்த பட்டாபி, ஏன் டாடி பழங்களை எல்லாம் சிவபெருமான் சாப்பிடலையா?
அவரு சாப்பிட ஆரம்பிச்சா சனங்க கோவிலுக்கே வரமாட்டாங்கடா
அது சரி ராமர் பாலத்தை கட்டினது யாருப்பா?
இதுல நோக்கு என்னடா சந்தேகம். ராமர் பாலத்தை கட்டினது சாட்சாத் அந்த ராமபிரான் தான்.
தப்புப்பா... ராமர் பாலத்தை கட்டினது ராமர் இல்லே! கம்பர்தான்!
என்னடா சொல்றே?
கம்பர் கட்டிவிட்ட கட்டுக்கதைன்னு சொல்றேன். நான் வரலாறு சொல்றதைத் தாம்பா சொல்றேன். கிரேக்க மொழியில் உருவான இலியட் ஒடிசிங்கிற நூலைத்-தான் திருடி வடமொழியில் ராமாயணமா எழுதினாரு அந்தத் திருட்டு வால்மீகி. அந்த வால்மீகியோட ராமாயணத்தில் ராமர் சரயு நதியில விழுந்து தற்கொலை பண்ணிக்கிறதா கதை முடிவு இருக்கும். ஆனா தன் கதாநாயகனான ராமனை சாகடிக்க விரும்பாத கம்பர் கோழையான ராமனை வீரனாக்கி அவன் இலங்கைக்கு பாலம் கட்டினதா கதை விட்டாரு. அந்தக் கதைக்கு உயிர் கொடுத்தாங்க நம்ம சனங்க. ராமனோட கதையை நாடகமாக்கி கோவில் திருவிழாக்கள்லே போட்டாங்க. ராமனோட நாடகம் இல்லேன்னா நம்ம சனங்களுக்கு ராமனோட பேரே தெரிஞ்சிருக்காது. இதில என்ன கொடுமைன்னா ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அவனை தெய்வமாக்கி... என்ன கொடுமைப்பா இது மகன் வெறுப்போடு சொன்னான்.
அப்படின்னா ராமர் பாலங்கிறது? ராமலிங்க குருக்கள் கேட்டார். பட்டாபி விளக்கமாகச் சொன்னான்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்ற மாதிரி வெறும் பாறைத் திட்டுதான்... ராமர் பாலம்னு சனங்க நெனைக்கிறது மேற்கு மலைத் தொடர்ச்சியின் தொடர்ச்சிதான்.
மகன் சொன்னதைக் கேட்டு சிரித்தார் ராமலிங்க குருக்கள். ஏம்பா சிரிக்கிறீங்க? பட்டாபி கேட்டான்.
எல்லாமே பொய்னு நேக்குத் தெரியும்டா. நாமெல்லாம் ஆரிய வர்க்கம். நாம பூஜை செய்ற சிலைகளை கும்புடுறவா எல்லாம் இதே நாட்டில் பரம்பரை பரம்பரையா இருந்தவங்க. நாமெல்-லாம் இங்க பொழைக்கிறதுக்காக கைபர், போலன் கணவாய் வழியா இங்க வந்தவங்க.
பின்னே ஏம்பா நாட்டுக்கு பலன் செய்யப் போற சேதுசமுத்திரத் திட்டத்தை எதுக்கணும்?
இதுக்கெல்லாம் பதில் சொன்னா நாம பிழைக்க முடியாதுடா. ஆரியர்கள் வருகைக்கு முன்னாடி இங்கே ராமனும் கிடையாது. சிவனும் கிடையாது. எல்லாம் நம்ம ஆரியக் கூட்டம் பொழைக்கிறதுக்காக உருவாக்கின கதைகள்தான். மத்தவங்களைப் போல நம்ம கிட்ட உழைச்சி சாப்பிடுற அளவுக்கு உடம்புல வலு இல்லை. அவங்களை ஏமாத்தி பொழைக்க நம்மாளுக போட்ட நாடகம்தான் ஆன்மீகமும், ஜோஸ்யமும்
அப்படின்னா ராமர் பாலத்தை கட்டுனது கம்பர்தான்னு ஒத்துக்கிறீங்களா?
ராமலிங்க குருக்கள் சிரித்தபடி சொன்னார்: டேய், பொழைப்பைக் கெடுத்திடாதடா! |