தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

அணு அணுவாய் - 3

ஹிரோஷிமாவை அழித்த பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரூமேன், எங்கள் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், இதுவரை உலகம் கண்டிராத அழிவைத் தரும் குண்டு மழையை எதிர்நோக்க வேண்டி-யிருக்கும் என எச்சரிக்கை செய்தார். ஹிரோஷிமா மீதான இத்தகைய தாக்குதலிலும் தப்பித்த கட்டடங்கள் அங்கே உண்டு. இயற்கைப் பேரழிவுகளைத் தரும் பூகம்பம் விளையாடும் பூமி ஜப்பான். அதனைச் சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அமெரிக்கா உருவாக்கிய செயற்கைப் பேரழிவும் அழிக்க முடியவில்லை.
அணு ஆயுதம் நேரடியாக விழுந்த இடத்-திற்கு வெகு அருகில் இருந்த கட்டங்கள் சிலவும் தரை மட்டம் ஆகாமல் தப்பித்தன. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. அணு ஆயுதம் வெடித்தபோது அதன் வீச்சு பக்கவாட்டில் இருந்ததைவிட, கீழ்நோக்கியதாக இருந்தது. அப்படி இருந்தும்கூட ஹிரோஷி-மாவைச் சுற்றி அழித்திருந்தது ஆயுதம்.
ஹிரோஷிமா போகட்டும்; நாம் அடுத்த இலக்கைக் கவனிப்போம் எனத் தயாரானது அமெரிக்கா. ரேடியோ சாய்பானிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டது ஜப்பானுக்கு! அமெரிக்க விமானங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜப்பானிய வானிலிருந்து எச்சரிக்கை அறிவிப்பை துண்டறிக்கைகளாகத் தூவியது.
ஜப்பான் அரசு இன்னும் போஸ்டாம் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜப்பான் அரசர் ஹிரோஷிட்டோ, மற்றும் போர்க் குழுவினர் சரணடைவதற்கு நான்கு நிபந்தனை-களை விதித்தனர். கோகுடாய் எனப்படும் தேசிய அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பது அந்நிபந்தனைகளில் தலையாயது. இதற்கிடையில் ஜப்பான் மீது போர் அறிவிப்பைச் செய்தது சோவியத் யூனியன். ஜப்பானுக்கு மேலும் ஒரு தலைவலி.
இன்னொரு புறத்தில் ஜப்பான் மீது வீசுவதற்கான அடுத்த குண்டோடு தயாராக இருந்தது டினியனிலிருந்த கலோனல் டிப்பெட்ஸ் தலைமையிலான 509வது ஒருங்-கிணைந்த படைப்பிரிவு. கோகுரா மீது குண்டு வீசப்படுவதற்கு குறிக்கப்பட்டிருந்த நாள் - ஆகஸ்ட் 11. ஆனால் ஜப்பான் தனி இரண்டா-வது அழிவை அதற்கு முன்பே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் வானிலை!
ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தொடங்கும் மோசமான வானிலை தொடர்ந்து 5 நாட்கள் நீடிக்கும். இதனால் குண்டு வீச்சு தள்ளிப் போகக் கூடும். அதனைத் தவிர்க்க வேண்டு-மானால் முன்கூட்டியே அது நிகழ்த்தப்பட வேண்டும்.

F-31, F-32 மற்றும் F-33 என்று எண்ணிடப்பட்ட குண்டு மாதிரிகள் டிஸியனுக்-குக் கொண்டு வரப்பட்டன. மேஜர் சார்லஸ் ஸ்வீனே தான் இம்முறை தாக்குதலுக்குத் தலைவர். ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர் தனது போக்ஸ்கார் விமானத்தில் கு-31 மாதிரியை எடுத்துக் கொண்டு சென்று, சோதனை செய்து பார்த்தார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி இரண்டாம் குண்டு வீச்சுக்கு நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க போர்விமானமான பி-29இல் போக்ஸ்கார் எனப் பெயரிடப்பட்ட சிறந்த அரண் வகை விமானத்-தில் ஏறி அமர்ந்து சார்லஸ் ஸ்வீனே தலைமை-யிலான குழு அவர்களுடன் வழக்கம்போல இன்னும் இரண்டு விமானங்களும் கிளம்பின.
குண்டு மனிதன் (Fatman) என்று பெயரிடப்பட்ட குண்டைச் சுமந்து கொண்டு கிளம்பியது போக்ஸ்கார். அவர்களுக்கு முன்னால் இருக்கும் இலக்குகள் இரண்டு. முதல் இலக்கு கோகுரா... அது தவறினால் அடுத்த இலக்கு நாகசாகி. இம்முறையும் இரண்டாம் இலக்குதான் இழப்பைச் சந்தித்தது. கோகுரா தப்பியது. நாகசாகி நாசமானது!
(எவ்வாறு... அடுத்த இதழில்)