பெட்டிச் செய்திகள்
காலையில் புனித கங்கையில் முழுக்கு - இரவில் மது, மாமிச விருந்து
வாரணாசி நகரில் கங்கை அமைதியாக ஓடுகிறது. பகல் நேரத்தில் த்வேஷஷமேத் கட்டத்தில் புனித நீராட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், இரவு நேரத்திலோ புனிதமற்ற செயல்கள் நடந்-தேறுவதற்கு வாய்மூடிய சாட்சியாக கங்கை விளங்குகிறது. அண்மையில் நடந்த ஓர் நிகழ்ச்சி. சிரகான் இடைத் தேர்தலுக்காகக் கடுமையான பிரச்சாரத்தில் நாள் முழுவதும் ஈடுபட்ட பிரச்சாரகர்கள் ஒரு பெருங் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருந்தனர். இந்த பெரு விருந்து எந்த ஓட்டலிலும் நடைபெறவில்லை. கங்கையின் குளிக்கும் இடத்தில் இருந்த இரு தோணிகள் மற்றும் ஒரு பெரிய படகில்தான் அந்த விருந்து நடந்தது. இந்த விருந்தில் அளிக்கப்பட்ட மது, பீர், கோழிக்கறி, புலவு, ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் மிகப் பொருத்-தமாக இருந்தன. இரு மரியாதைக்குரிய விருந்தினர்கள், ஒரு மாநில கேபினட் அமைச்சர், அவர் அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் ஆகியவர்களுக்காக உள்ளூர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதி ஒருவர்தான் இந்த விருந்தளித்தார் என்று கங்கையில் குளிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் கூறினார்கள். மாநிலத்தில் மரியாதை மிகுந்த அமைச்சர் ஒருவருக்காக இந்த விருந்து அளிக்கப்-பட்டதாக தோணியின் உரிமையாளர் கூறினார்.
விருந்து நடக்கும் இடத்திற்கு டைம்ஸ் செய்தி இணையதளத்தினர் சென்றபோது, தோணிகளுக்கு பீர் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. விருந்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரால் பீர் பாட்டில்களைக் கையாள முடிய வில்லை. அண்மையில் தசரா கொண்டாடப்பட்ட கங்கை ஸ்நான கட்டத்தின் மீது விழுந்து கண்ணாடி பாட்டில்கள் உடைந்தன.
எவரைப் பற்றிய கவலையுமின்றி, அவ்வாறு உடைந்த பாட்டில் துண்டுகள் கங்கைக் கரைப் படிகள் மீது தள்ளி-விடப்பட்டன. காலை வேளைகளில் புனித நீராட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கங்கைக் கரையில் இந்தப் படிகளில்தான் இறங்கிச் செல்வார்கள். அது மட்டுமல்ல, பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், எலும்புத் துண்டுகள் ஆகியவை புனித கங்கையில் கொட்டப்பட்டன.
அமைச்சர் நீண்ட நேரம் இந்த விருந்தில் இருக்கவில்லை என்று உள்ளூர்க்காரர் ஒருவர் கூறுகிறார். ஒரு மணி நேரம் வரை அவர் அங்கிருந்தார். அவ்வளவுதான். அவரது அமைச்சரக அதிகாரியோ பின்னிரவு நேரம் வரை விருந்தில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விருந்து கொண்டாட்டங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போது, ஆற்றங்கரையில் பாதுகாப்புக்காக இருக்க வேண்டிய காவல்துறையினர் எங்கே போனார்கள்?
அருகில் உள்ள ராஜேந்திரபிரசாத் கட்டத்தில் உள்ள காவல் துறைக் குழுவிடம் இந்த கங்கைக் கரை கட்டங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆற்றை யாரேனும் மாசுபடுத்த முயன்றால், அதை அவர்-கள் தடுத்து நிறுத்தவேண்டும். இது போன்ற விருந்து ஒன்று நடந்தது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று இக்காவல்துறைக் குழுவுக்குப் பொறுப்பான கவுதம் என்பவர் கூறினார்.
கவுதமின் மறுப்பு வியப்பளிப்பதாக உள்ளது. படகுகள் இல்லாத காரணத்தால், தங்களால் கங்கை நதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கண்காணிக்க இயலவில்லை என்று சில நாட்களுக்கு முன்புதான் கவுதம் கூறியிருந்தார். (நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 19-6-2003)
உத்தரப் பிரதேச கோவில் நகரங்களில் எய்ட்ஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது
நீங்கள் சிறிதும் எதிர்பாராத இடங்களில் எய்ட்ஸ் நோய் தனது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில் நகரங்களில்தான் எய்ட்ஸ் நோயின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இப் புனித நகரங்களில் எய்ட்ஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுவிஸ் அரசு நிதி உதவியில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இந்நகரங் களில் எய்ட்சினால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நோயைப் பரப்புவர்களில் பெரும்பாலோர் போதை மருந்துக்கு அடிமையான மேற்கத்திய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளே ஆவர். சுகாதார, எய்ட்ஸ் நோய் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால், உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. போதை மருந்துக்கு அடிமையான இந்த சுற்றுப் பயணிகள் பயன்படுத்திய மாசுபட்ட ஊசிகளின் மூலம் எய்ட்ஸ் கிருமிகள் பரவியது தெரிய வந்தது. உத்தரப் பிரதேசத்தில் கங்கைக் கரை மீதுள்ள புனித நகரங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ், வாரணாசி, அலஹாபாத் மற்றும் சில இதர நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிகக் குறைந்த வழிச் செலவுக்கான பணத்துடன் சுற்றுலா வரும் இத்தகைய மேற்கத்திய பயணிகள் வழக்கமாக அதிக செலவில்லாத கஞ்சா, மற்றும் ஹெராயின் அடிமைகளாக உள்ளவர் கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. நிர்வாண நிலையை அடைய விரும்பும் இத்தகைய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களை நண்பர் களாக்கிக் கொண்டு, அவர்களுக்கு போதை மருந்தும் கொடுத்து பழக்கப்படுத்துகின்றனர். பெரும்பாலான பயணிகள் நரம்புக்குள் போதை மருந்தை ஊசியின் மூலம் செலுத்திக் கொள்பவர்கள் என்பதால், அவர்கள் பயன்படுத்திய அதே ஊசி, சிரஞ்சை மற்றவர்களின் பயன்பாட்டுக்கும் அளிப்பதால், எய்ட்ஸ் நோய்க்கிருமி பரவுகிறது. போதை மருந்துக்கு அடிமையான உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அளவிலேயே இந்த எய்ட்ஸ் நோய் கிருமிகள் நின்றிருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது. போதை மருந்துக்கு அடிமையானவர்களில் பல உள்ளூர் ஆசாமிகள் வழக்கமாக ரத்த தானம் செய்பவர்கள். இதனால் எய்ட்ஸ் நோய்க் கிருமி பெரும் அளவில் மக்களைச் சென்றடைகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வழக்கமான சாதாரண சோதனைகளைக் கூட செய்ய இயலாதவைகளாக உள்ளூர் ரத்த வங்கிகள் மோசமான நிலையில் உள்ளன என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எலிசா அல்லது வெஸ்டர்ன் பிளாட் சோதனைகள் எதுவும் இத்தகைய நன்கொடையாளர் களால் அளிக்கப்படும் ரத்தத்தின் மீது செய்யப் படுவதில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால் இம்மாநிலத்திலேயே உள்ள, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் சுற்றுலாத் தலங்களான முசவுரி, நைனிடால் ஆகிய இடங்களில் இவ்வாறு எய்ட்ஸ் நோயின் பாதிப்பு இல்லாமல் இருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. மிகவும் வசதி படைத்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளே இத்தகைய இடங்களுக்கு வருவதே இதன் காரணம் என்று இந்த ஆய்வு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு (1996) நவம்பரில் தொடங்கிய இந்த ஆய்வு, அது முதற்கொண்டு 65 பேர்களுக்கு மேல் எய்ட்ஸ் நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார் கள் என்று கண்டுபிடித்துள்ளது. எய்ட்சினால் பாதிக்கப் பட்டவர்கள் 29 பேர் ரிஷிகேஷிலும், 61 பேர் வாரணாசி யிலும் 19 பேர் அலஹாபாதிலும் இருப்பதைக் கண்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கான்பூர், மீரட், ஆக்ரா மற்றும் லக்னோ போன்ற மாநிலத்தின் பிற நகரங்களிலும் இந்தக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. கான்பூரில் எய்ட்சினால் 16 பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் 10 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்தம் இன்னும் சோதனையிடப் படாமல் ஆய்வில் உள்ளது. லக்னோவில் 18 பேரும், மீரட் ஆக்ராவில் 22 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நகரங்களில், எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் ரத்தம் தானம் செய்வது, ரத்தம் பெறுவது மற்றும் விபசாரத்தின் மூலம் பரவுகிறது. லாரி ஓட்டுனர்கள்தான் இந்த எய்ட்ஸ் நோய்க்கிருமிகளை இந்நகரங்களில் அதிகமாகப் பரப்புபவர்களாவர். உலக சுகாதார நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் இறுதியில் அனுப்புவதற்காக இந்த ஆய்வுக் குழு சில பரிந்துரைகளைப் பட்டியலிட்டுள்ளது. தானம் செய்யப் படும் ரத்தம் அனைத்தும் குறைந்த அளவு எலிசா மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை களாவது செய்யப்பட வேண்டும். சோதனை உபகரணங்களுக்கு மானியம் வழங்குதல், ரத்த வங்கியில் தூய்மையின் தரத்தை வலியுறுத்துதல், பாதுகாப்பான உடலுறவு பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்தல், போதை மருந்து கடத்துபவர்களைக் கண்டுபிடித்து தடுத்தல், கோவில் நகரங்களில் சமூகப் பணியாளர்களாலோ அல்லது சுகாதாரப் பணியாளர்களாலோ இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ ஊசி மற்றும் சிரஞ் சுளை விற்பது ஆகியவற்றையும் இக் குழு பரிந்துரைத் துள்ளது.
பிகார், மத்தியப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களிலும் இதைப் போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள சுவீடன் நிதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏழு வட கிழக்கு மாநிலங்களிலும் சிக்கிமிலும் இத்தகைய ஆய்வு மேற் கொள்ள நெதர்லாந்து அரசு நிதி உதவி அளித்துள்ள தாகவும் தெரிய வருகிறது. (நன்றி: தி பயனியர் - 21-7-97)
கடல் ஆமை அடை காக்குமா?
கடல் ஆமைகள் முட்டை இடுவதற்குக் கரைக்குத் தான் வருகின்றன. ஒரிசா மாநிலக் கடல் கரைகளில் இப்படி முட்டையிடுவது பிரசித்தம். முட்டைகளை இட்டுவிட்டுத் தாய் ஆமை கடலுக்குள்ளே போய்விடும். முட்டைகள் பொரிந்து ஆமைக் குட்டிகள் தாமாகவே நகர்ந்து கடலுக்குள் போய்விடும்.
முட்டைகளிலிருந்து ஆமைக் குட்டிகள் வெளிவந்ததும். பறவைகளிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டும். இந்த மாதிரிப் பகுதிகளில் இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் சில பறவைகளும் விலங்குகளும் அவற்றைக் கபளீகரம் செய்துவிடும். அவையும் பிழைக்க வேண்டுமல்லவா?
இதையெல்லாம் எதிர்பார்த்து தான் நிறைய முட்டைகளை இடுகிறது தாய். சென்றவை போக நின்றவை நிற்கட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் உள்ளது. தாக்குப் பிடித்துக் குட்டிகள் கடலுக்குள் போய் விட்டால் அவ்வளவுதான். நூறு ஆண்டு நூற்றைம்பது ஆண்டு என அதன் ஆயுள் வளரும்.
- செங்கோ
மக்களை நாம் திருத்த வேண்டாமா?
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.க. பொதுக் கூட்டங்களில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு நிகழ்ச்சி-யைக் கூறுவார். புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கி-லேயர் ஒருவர் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தபோது அவர் கையிலிருந்த தாள் நழுவி விழுந்தது. உடனே நம்ம ஆள் அந்தத் தாளை கையால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
ஆங்கிலேயர் காரணம் கேட்டபோது அது சரஸ்வதி எங்க படிப்புக்கு கடவுள், என்றார் நம்ம ஆள். சிறிது நேரங்கழித்துச் செய்தித் தாளுடன் கழிப்பறைக்குச் சென்றார். அவர் திரும்பி வரும்போது தாள் இல்லை. நம்ம ஆள் தாள் எங்கே சார்? என்றார். கழிப்பறையில் துடைத்துப் போட்டு விட்டேன் என்றாராம், ஆங்கிலேயர்.
நாவலர் இதைச் சொல்லிவிட்டுத் தொடர்வார், தாளை சரஸ்வதின்று மதிக்கிற நம்ம நாட்டில எழுத்தறிவு பெற்றவர்கள் இருபது சதவீதம் கூட இல்லை. ஆனால் துடைச்சுப் போடு-கிறவன் நாட்டில கல்வியறிவு நூறு சதவீதம். நம்ம மக்களை நாம் திருத்த வேண்டாமா?
- தகவல்: சு. கொண்டல்சாமி, ஒட்டநத்தம்
பா.ஜ.க.,வின் கருத்து சுதந்திரம்
விதவிதமாகப் பேசுகிறவர்கள் பா.ஜ.க.,-காரர்களைத் தவிர வேறு எவரும் இருக்க-மாட்டார்கள். தஸ்லிமாவுக்கு பா.ஜ.க., ஆதரவு என்று ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. தஸ்லிமா நஸ்ரீன் வங்க தேசத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். மதக் கட்டுமானங்களை எதிர்த்து துணிச்சலுடன் எழுதிவருகிறார். பலமுறை இஸ்லாமிய அடிப்படை-வாதிகளால் தாக்கப்பட்டபோதும், தனது கருத்தைத் தயங்காது வெளிப்படுத்துகிறார். இவருக்கு பா.ஜ.க., ஆதரவு அளிப்பதாக ஒரு செய்தி. அதில், இந்து மதத்துக்கு எதிரான பல்வேறு எழுத்தாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்-பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது தஸ்லிமாவை மட்டும் ஏன் வெளியேற்ற-வேண்டும். தலாய்லாமாவுக்கு வழங்கப்-பட்டுள்ளதைப்போல தஸ்லிமாவுக்கு, இந்தியாவில் தங்க நிரந்தர விசா அளித்து அடைக்கலம் தரவேண்டும் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் மல்ஹோத்ரா கூறியுள்ளார். இந்த இந்துத்துவா குரல் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதே தவிர, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவானது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை எந்த மத அடிப்படைவாதிகளும் அனுமதிப்-பதில்லை. இதே பா.ஜ.க.,வின் முன்னாள் எம்.பி., வேதாந்திதான், இராமன் பாலப் பிரச்சினையில் கருத்து சொன்ன கலைஞர் அவர்களின் தலையை எடு என்று சொன்னார். சில நாள்களுக்கு முன்புகூட ஆர்.எஸ்.எஸ்.-சின் தலைமை ராஜஸ்தான் பத்திரிகா எனும் இதழுக்கு பட்வா (மதக்கட்டளை) விதித்து அந்தப் பத்திரி-கையைக் கொளுத்தச் சொல்லியிருக்-கிறது. கருத்துச் சுதந்திரம்பற்றிப் பேசும் பா.ஜ.க., உ.பி.,யில் பெரியாரின் சச்சி இராமாயணத்-தைக் கொளுத்தியது ஏன்? இந்து மதத்துக்கு எதிரான கருத்து கொண்ட எழுத்தாளர்களுக்கு இந்தியாவில் தங்க இடமளிப்பதாகக் கூறும் பா.ஜ.க., இந்தியாவி-லேயே உள்ள இந்து மத எதிர்ப்பாளர்களை எதிர்த்து வன்முறை-யைக் கட்டவிழ்ப்பது ஏன்? எங்கள் மனம் புண்படும் என்று இன்னும் பழைய பல்லவியைப் பாடுவது ஏனோ? |