தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : அத்வானியை அடுத்த பிரதமரென அறிவிக்கிறதே பா.ஜ.க. இது மக்கள் ஆட்சியில், மக்களைக் கேலி செய்வது போலிருக்கிறதே?
- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில்: அவர்களது கட்சியே பாசீசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சிதானே, எனவே இதுபோன்ற அறிவிப்பு சகஜம் தானே!

கேள்வி: பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டைக்குப் பிறகு நம்பிக்கை ஊட்டுகிற வகையில் கவிஞர்கள் இல்லையே? இப்போது எழுதுகிற கவிஞர்கள் பெரும்பாலும், வெறும் காதலைப்பற்றி மட்டும் தானே அதிகமாக எழுதுகிறார்கள்! இன்னும் சிலரோ, காசு பார்க்க சினிமா பக்கம் போய்விடுகிறார்கள். சமுதாயத்தை மேம்படுத்த பாக்கள் எழுதுவது தானே கவிஞர்களின் பணியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காலங்கடந்து நிற்கும் கவிஞர்களை எப்படி உருவாக்குவது?
- இரா. இராஜேந்திரன், மயிலாடுதுறை

பதில்: உங்கள் கருத்து சரியானதல்ல. காசி ஆனந்தன், ஈரோடு தமிழன்பன் அவர்களைப் போன்ற, கவிஞர் அறிவுமதி போன்ற பல கவிஞர்களுக்கு பஞ்சமில்லையே!

கேள்வி: சமீபத்தில் - சேலம் நீதிமன்றம் ஜாதியைக் குறிப்பிடுவதும் - கேட்பதும் தவிர்க்க இயலாதது என்று தீர்ப்பு வழங்கியுள்ளதே! எப்படி ஜாதி ஒழியும்? ஒழிக்கப்பட இயலும்?
- ந.அரவிந்தர்தாசன், புதுச்சேரி - 5

பதில்: ஜாதியை அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் ஒழித்தால் ஒழிய இது போன்ற நிகழ்வுகளை ஒழிக்க முடியாது.

கேள்வி: அமெரிக்காவில் நூலகங்களிலிருந்து கழித்துக் கட்டப்படும் நூல்களை அந்த நூலகங்களே 10 சதவிகிதம் - வரையுள்ள மதிப்பில் விற்பனை செய்கின்றனவாம்.
நம்நாட்டில் விளையுயர்ந்த நூல்களையெல்லாம் வியாபாரிகள் எடைக்கு வாங்கிப் பொட்டலம் கட்டுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
நூலகங்களே மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தால், வீணாகப் போகும் நூல்களை மக்கள் வாங்கிப் பயன்பெறுவார்கள்

அல்லவா?
- அ. வையாபுரி, நத்தம் வேலூர்

பதில்: நல்ல யோசனை. செய்யலாம்! சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப் நூலகத்தில் சிற்சில நேரங்களில் நடைபெறுவது உண்டு. தமிழகஅரசின் கண்காணிப்பில் உள்ள நூலகங்கள் இதனைப் பின்பற்றலாம்.

கேள்வி: தமிழ் இலக்கியங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்தது அகப்பாடல்களா? புறப்பாடல்களா?
- வீர. செல்வம், பூம்புகார்

பதில்: புரட்சிக்கவிஞரின் கவிதைகள்.- அகமும் புறமும் எல்லாமும் அவைகளில் உள்ளனவே.

கேள்வி: ஈராக்கிலே அமெரிக்க புஷ்ஷின் அடாவடித்தனத்தால் சதாம் உசேன் தூக்கிலிடப்படுகிறார். ஈழத்திலே தமிழ்ச் செல்வன் சிங்கள வெறியர்க்குப் பலியாகிறார். பர்மியர்கள் படும்பாடோ சொல்லுவதற்கில்லை. அய்.நா. சபை என்ற ஒன்று எதற்குத் தான் இருக்கிறது?
- புலவர் ந.ஞானசேகரன், திருலோக்கி

பதில்: பேன் குத்துவதற்காக; பொரி தின்பதற்காக

கேள்வி: தங்கள் 75வது பிறந்த நாளில் நடந்த மகிழ்ச்சிகரமான சம்பவம்...
- அ. யாழினி பர்வதம், சென்னை - 78

பதில்: கழகக் குடும்பங்களின் பாசம் பொங்கிய சந்திப்புகள்

கேள்வி: குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் வென்றுவிட்டாரே? அவர்மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றுதானே ஆகும்?
மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை
பதில்: தேர்தல் வெற்றிகளுக்கும் உண்மை-களுக்கும் சிற்சில நேரங்களில் பொருத்தம் இருப்பது இல்லை!
தேர்தல் நம்நாட்டில் பல நேரங்களில் சூதாட்டம் போன்று நடைபெறுகிறது. என்ன செய்ய!