எது உண்மை?

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் அவற்றை, படைத்தவனாகிய நானே நினைத்தால் கூட மாற்றியமைக்க முடியாது என்று கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணன் கூறுவதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக மனு தர்மசாஸ்திரம் ஸ்லோகம் 87இல் பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும் (பார்ப்பனர்கள்) தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடை-யிலிருந்து வைசியர்களையும் பாதத்திலிருந்து சூத்திரர்களையும் படைத்ததாக சொல்லப்-பட்டிருக்கிறது. ஆக 4 வருணத்தை;ம் தானே படைத்தாக கிருஷ்ணன் கூறுவது உண்மையா? அல்லது பிரம்மா படைத்தாகச் சொல்வது உண்மையா? கிருஷ்ணரின் காலம் புத்தர் காலத்திற்கு பிறகு என்று ஆராய்ச்-சியாளர்கள் கூறுகிறார்கள் அவ்வாறாயின் கிருஷ்ணன் நான்கு வர்ணத்தை எந்த வருடத்தில் உண்டு பண்ணினார். ஏற்கனவே இருந்த மக்களிடம் வர்ணபேதத்தை உண்டு பண்ணினாரா? இது உண்மையாயின் பிரம்மா தன் உடம்பின் பல்வேறு பாககங்களிலிருந்து நான்கு வர்ணத்தினைஉண்டு பண்ணினார் என்று கூறும் கூற்று அப்பட்டமான பொய் அல்லவா? பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும், தோளிலிருந்து சத்திரி-யர்களையும், தொடையில் இருந்து வைசியர்-களையும், பாதத்திலிருந்து சூத்திரர்-களையும் படைத்தார் என்று சொல்பவர்கள் எந்த ஆண்டு, எந்த மாதம் அவ்வாறு பிரம்மா படைத்தார். ஒவ்வொரு வருணத்திலும் எத்தனை எத்தனை பேரை படைத்தார். அதாவது என்ன விகிதத்தில் படைத்தார். அதில் ஆண் எவ்வளவு? பெண் எவ்-வளவு? குழந்தைகளாக படைத்தாரா? பெரியவர்களாகவே படைத்தாரா? போன்ற விவரங்கள் சொல்ல வேண்டாமா? அவ்வாறு பிரம்மா படைப்பதற்கு முன் பூமியில் மனித இனம் இருந்ததா? இல்லையா? பிரம்மா நான்கு வர்ண மக்களை படைத்தார் என்றால் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா போன்ற இதர நாட்டு மக்களை யார் படைத்தது? அங்கெல்லாம் நான்கு வர்ண பேதம் இல்லாதது ஏன்? கங்கைக் கரையை தவிர வேறு நாடுகள் உலகத்தில் உள்ள விவரம் பிரம்மாவிற்கும், கிருஷ்ணனுக்-கும் தெரியாததாலா? ஆக பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத திராவிட மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்-பொழுது புதிது புதிதாக கதை கட்டி அதை மக்களை நம்பச் செய்வதற்காக அவ்வப்பொழுது ஆட்சியிலிருப்-பவர்-களின் தயவைப் பெற்று பரப்பி வந்தததுடன் மாற்று கருத்துக் கொண்டவர்களை அதிகார வர்க்கத்-தினை கொண்டு மிரட்டி-யும், சாதுக்கள் போர்-வையில் கொலைகள் செய்தும் வந்துள்ள-னர், வருகின்றனர்.
எனவே நான்கு வர்ணங்-களை பிரம்மா/கிருஷ்ணன் படைத்ததாக கூறும் கூற்று அப்பட்ட-மான பொய் என்பது புரிகிறதா?
- ஆர்.டி. மூர்த்தி, திருச்சி - 17

|