தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

பழங்குடிகள்

நீலமலை மாவட்டத்தில் 25 வகையான பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கூடலூர் வட்டம், மரப்பாலம், நாடுகாணி, பந்தலூர், சேரன்பாடி, எருமேடு, கொளப்-பள்ளி, சேரங்கோடு இன்றும் பல இடங்களில் கடும் காடுகளில் எந்த அடிப்படை வசதிகள், வாழ்ந்து வருகிறார்கள். நான் பல ஆண்டுகளாக காடுகளில் தனியாக நடந்தே சென்று பனியர் என்ற பழங்குடியினரிம் கொஞ்சம் கொஞ்சமாக அணுகி பழகி என்னை, பல மாதங்களுக்கு பிறகு மிகவும் பிடித்து போய் இன்று என்னை பனியர்கள் அவர்களின் குடிசைக்கு வர முதல் அனுமதியை வழங்கினார்கள். அவர்கள் வாழும் முறையை பார்த்து நான் அழுதே விட்டேன். பெண்கள் சரியான மேலாடையில்லை. சற்று நல்ல உணவுக்கூட இல்லை. வழியில்லை. மருத்துவம் இல்லை. இங்கெல்லாம் மழையோ ஓயாத மழைதான். கடைக்கு வந்து, உணவு பொருள்கள் வாங்க பல கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பணியர்களுக்கு ஆப்பிள், திராட்சைப் பழம் இன்னும் பல பழங்கள். நகரங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், நவீனப் பொருள்கள் இவர்களு-க்கு ஒன்றும் தெரியாது. இன்றும் தெரிய-வில்லை. பனியர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நான் இதை-யெல்லாம் உண்மை தொகுப்பை தொகுத்து நமது குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுப்-பியிருந்தேன். அவர்களிடமிருந்து பதிலும் வந்தது. ஆனாலும் பனியர்களுக்கு விடிவு இல்லை, நான் பழங்குடி மக்களுக்கு அ, ஆ,.. தமிழ் எழுத்துக்களை எழுதியும் பேசியும் கற்றுக் கொடுத்துள்ளேன். பழங்குடி மக்கள் மிகவும் அன்பானவர்கள், மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்-கள். இங்கு காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் பனியர், புழையர், காட்டு நாயகன், காட்டு வேடன், சோலகர், குருமார் இன்னும் 25 வகையான பழங்குடி மக்கள் வாழுகிறார்கள். உலகில் எங்கும் இல்லாத மரங்கள், செடி, கொடி, மலர்கள், பறவைகள், பாம்புகள், மான்கள், அதிசய எருமைகள், புலிகள், சிங்க வால் குரங்குகள், எறும்பு திண்ணிகள், கரடிகள், யானை இன்னும் பலவகை இன வன விலங்கு-களைக் காணலாம்.
பொதுவாக பழங்குடி மக்கள் வேறு யாரையும் அவர்கள் வாழும் இடங்களுக்கு அனுமதிப்பதில்லை. இந்த கூடலூர் வட்டம். கேரளம் மைசூர் ஆகிய மாநிலங்கள் அருகில்-தான் உள்ளன. இங்கு மிளகு, கிராம், பட்டை, பலவித வாசனைப் பொருட்கள், இஞ்சி மிக அதிகமாக விளைகின்றது. மிளகும் இது போலவே. பலவித பழங்கள் விளைகின்றன. இங்கு கடல் அருகில் இருப்பதால் (கோழிக்-கோடு, கேரளம்) ஆண்டு முழுவதும், மழையோ மழைதான். தேவாலா என்ற இடம் இரண்டா-வது சிரபுஞ்சி என்று பெயர் பெற்றுள்ளது.
சேரன் செங்குட்டுவன் நமது தமிழ் அரசன். படையெடுத்து சென்று வடநாட்டு அரசன் கனகவிஜயனை வென்று, திரும்பிய இடம்தான் கூடலூர். வெற்றி பெற்று வருகின்றபொழுது அரசனுக்கு வரவேற்பு கொடுத்த இடம் தான் பந்தலூர். சேரன்பாடி, சேரன்கோடு, படைச்-சேரி, நாடுகாணி, இன்னும் பல பெயர்கள் உள்ளன.
மேலும் யானைகள்,குதிரைகளை கட்டி வைத்து அதுகள் போடும் எருதான் எருமேடு என்று அழைக்கப்படுகின்றது. எருமேடு இன்று திரித்து, எருமாடு என்று பெயர் மாற்றப்-பட்டுள்ளது. மேலும் வாழைத்தோட்டம், அருகில் சிலம்பாவூர் என்ற பெயர் கொண்ட ஊரும் இருக்கின்றன.