தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

ஹாலிவுட் கலைவாணர்-11

ஏழைப் பங்காளனான சார்லி சாப்ளினை கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தி வேவு பார்த்தது அமெரிக்காவின் FBIயும் CIAவும் என்றால் மிகப் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்-கையில் மூக்கை நுழைத்து, கிடைக்கும் சிறிய விசத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி எழுதித் தம் ஏடுகளின் விற்பனை-யைக் கூட்டிக் கொண்டனர். இத்தகைய பாங்கு எல்லா ஊர்களிலும் எல்லா காலங்களிலும் உள்ளது. இந்தப் பாங்குதான் இந்துநேசன் ஏட்டில் கலைவாணரைப் பற்றியும் பாகவத-ரைப் பற்றியும் எழுத வைத்தது. அந்த லட்சுமிகாந்தன் (இந்து நேசன் ஏட்டின் ஆசிரியர்) இறந்த பிறகும் அதே பெயரில் அதே பாணியில் ஏடு நடத்த ஏ.டி.சபாபதி எனும் ஒருவரைத் தயாராக்கியது சென்னை!
இத்தகைய அந்தரங்க அகிங்கங்களை பேசினால் பச்சை என்கிறார்கள். எழுதினால் மஞ்சள் என்கிறார்கள். படம் பிடித்துக் காண்பித்தால் நீலம் என்கிறார்கள் தொழி-லாகச் செய்தால் சிவப்பு என்கிறாகள். வானவில்லோ?
அப்படிப்பட்ட செய்திக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்குத் தீனிபோட்டு விட்டார் சாப்ளின். கேட்டலினா தீவில் இவருடன் சுற்றியது. ஒரு சிறுபெண். மாகாணம் விட்டு மாகாணத்திற்குச் சிறுவயதுப் பண்ணை அழைத்துப் போனார் என்கிற குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டது. பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, உடன் திரிவதே குற்றம் என்கிறது சட்டம். ஆம், 21 வயதை எட்டிப் பிடிக்காத பெண் ஒரு ஆணுடன் மாகாணம் விட்டு மாகாணம் சென்று திரிந்தால் அந்த ஆண் குற்றம் இழைத்தவன் என்று தி மேன் சட்டம் (The Mann Act) கூறுகிறது.

அப்படிப்பட்ட குற்றம் செய்ததாக, அப்படிப்-பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை இவர் மீது எடுக்கப்பட்டது. அப்படியாரு சட்டம் இருப்பதே இவருக்குத் தெரியாது. சட்டம் தெரியாது என்பது சமாதானம் கிடையாதே! இந்த நடவடிக்கையால் அவருக்கு இருந்த பெயரும் புகழும் பழுதாகிப் போனது. அமெரிக்கா முழுமையும் அதுபற்றியே பேச்சு. வெளி நாடுகளிலும் கெட்ட பெயர் ஏற்பட்டது. தனிமனித ஒழுக்கச் சிதைவு வெளி உலகுக்கு வந்துவிட்டால், ஆள் அதோ கதிதான்! எப்படி-யோ மீண்டு வந்துவிட்டார், புராண காலப் பறவை ஃபீனிக்ஸைப் போல!
பாரிஸ் பெண் படத்தின் நாயகன் அடால்ப் மென்ஜோ (Adolphe Menjou) என்பவர். வழமை போலவே இதுவும் பேசாத படம்தான். காதலனுடன் சுற்றிய கதாநாயகி தாமதமாக இரவில் வீட்டுக்கு வருகிறாள். தந்தைக்குக் கோபம். வீட்டை விட்டு நாயகியை விரட்டி விடுகிறார் அவளின் தந்தை. காதலன் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறான். அவனுடைய பெற்றோர்களும் இதை ஏற்காமல் இருவரையும் விரட்டி விடுகிறார்கள். எங்காவது போகலாம் என்று இருவரும் ரயில் நிலையத்-திற்குப் போகிறார்கள். ரயில் டிக்கெட் எடுக்கப் பணத்தை நாயகியிடம் கொடுத்த நாயகன் மூட்டை முடிச்சுகளுடன் வருவதாக அவளிடம் கூறிவிட்டுத் தன் வீட்டுக்குப் போவான்.
வீட்டில் அவன் தந்தை உடல் நலம் கெட்டுக் கிடப்பார். டாக்டரைத் தேடி ஓடுவான்.
இங்கே ரயில் நிலையத்தில் நாயகியைக் காட்டுவார். காதலனைக் காணாததால் பதை-பதைத்து இருப்பாள் நாயகி. அந்த டென்சனி-ல் இருக்கும்போது ஒரு ரயில் வரும். அதில் தான் மட்டும் ஏறிப்போவதா? வேண்டாமா? என்று நாயகி யோசிப்பாள்.
ரயில் வருவதையே, படத்தில் காட்டவில்லை. மாறாக, ரயிலுக்குள் உட்கார்ந்திருக்கும். கதாநாயகியின் முகத்தில் ரயிலுக்குள் இருக்கும் விளக்கின் ஒளியையும் ரயிலின் ஜன்னல்களின் மீது படியும் வெளிச்சத்தையும் நிழலையும் மாற்றி மாற்றிக் காட்டுவார். ரயிலில் நாயகி ஏறி அமர்ந்ததையும், ரயில் புறப்பட்டு ஓடுவதையும் படம் பார்ப்பவர்கள் உணர்வதற்கான படப்பிடிப்பு அது. இந்தக் காட்சியமைப்பு அதுவரை திரையில் வராத புதுமை.
பலபேர் இந்தக் காட்சியைக் காப்பி அடித்து வருகிறார்கள். இந்தியச் சினிமாக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
கதைக்கு வருவோம், பாரிஸ் நகரத்தில் நாயகிப் புத்தம் புதிய உடையணிந்து நடப்பாள். அருகில் ஒரு ஆண். புதிய நண்பன். வாழ்க்கை வாழ்வதற்கே என்றொரு சித்தாந்தத்தைக் கைக்கொண்டு பணக்கார வாலிபர்கள் சிலபேர் திரிகிறார்களே, அப்படிப்பட்ட ரகம் அவனு-க்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்பது உணவு விடுதியில் அவன் வரவழைக்கும் பண்டங்களே காட்டுகின்றன. அவனோடு கதாநாயகி பழகிக் கொண்டிருக்கிறாள்.
ஒருநாள் அவனுக்கும் வேறொரு பெண்ணு-க்கும் திருமணம் என்கிற செய்தி. இவள் அதிர்ச்சியடைகிறாள். அழுகிறாள். அவளைச் சமாதானப்படுத்துகிறான் அவன். கல்யாணம் என் குடும்பத்துக்காக. பெயருக்குத்தான் அவள் மனைவி. ஆனால் என் மனங்கவர்ந்த நீ தான் எப்போதுமே கட்டிலுக்கு என்றெல்லாம் கூறுகிறான். என்ன செய்வது? எதை நம்புவது? எனக் குழம்பித் தடுமாறுகிறாள்.
மனம் குழம்பியப் போய்க் கொண்டிருந்தவள் திறந்திருந்த ஒரு வீட்டிற்குள் நுழைகிறாள். அங்கே பழைய காதலன். ரயில் நிலையம் வரை அழைத்துக் கொண்டு வந்தவன். தன் தந்தை அன்று இறந்து விட்டதால் உடனே ரயில் நிலையத்துக்கு வர இயலவில்லை என்கிற விளக்கத்தைத் தருகிறான். கலைகளின் தலைந-கரான பாரிசில் அவன் ஓர் ஓவியன். இவளையும் ஓவியமாக்குகிறான்.

அவளை மணந் கொள்ள விரும்புகிறான். அவன் தாய் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மென்ஜோ இவர்கள் இருவரையும் பார்த்து விடுகிறான். நீ அவனைக் கட்டிக்கொள்; நான் உனக்குக் காதலனாகவே இருக்கிறேன் என்கிறான். ஓர் ஆணுக்கு இரண்டு பெண்கள் என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்கள் என்-பதையும் ஏற்றுக் கொண்டால் என்ன என்கிற கொள்கை அவனுக்கு!
ஒருநாள் உணவு விடுதியில் நாயகி மென்-ஜோவுடன் இருக்கும்போது அவனை அடிக்க முயல்கிறான் ஓவியன். உணவு விடுதிக் காவலர்களால் வெளியே துரத்தப்படுகிறான். மென்ஜோ பணக்கார வாடிக்கைக்காரன் அல்லவா! மனம் கஷ்டப்பட்ட ஓவியன் கைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான். அவன் உடலின் மீது விழுந்து நாயகி அழுகிறாள். ஓவியனின் தாய் அதைப் பார்த்து மனம் மாறி அவளைத் தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். இருவருமாக அநா-தைக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்கள்.
வைக்கோல் வண்டியில் நாயகி பயணம் போவாள். அவளை ஓவர்டேக் செய்யும் மோட்டார் காரில் மென்ஜோ. அவன் நண்பன் அவனைக் கேட்பான் - எட்னா எங்கே? என்று. தனக்குத் தெரியாது என்று மென்ஜோ உதட்டைப் பிதுக்குவான். இரண்டு பேர் பயணம் செய்யும் வண்டிகளும் ஓடிக்-கொண்டே இருக்கும். படம் முடிவடைந்து-விடும்.
படம் பெரும் பணச் செலவில் தயாரிக்கப்-பட்டது. ஆனாலும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அடையவில்லை. சாப்ளின் படம் என்றாலே சிரித்து வயிறு புண்ணாகும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம். ஜனரஞ்சக-மாக இல்லை. ஆனால் அறிவாளிகளும் பத்திரிகையாளர்களும் மிகவும் போற்றிய படமாக அமைந்துவிட்டது. வறுமையில் வாடினாலும் நல்லவனான ஓவியன் வாழ வழியில்லாமல் சாகிறான்; ஆனால் பணக்-காரன் சகல சவுபாக்கியங்களையும் அனு-பவித்துக் கொண்டு பணக்காரனாகவே வாழ்கிறான். இவர்களுக்கிடையில் பாக்கு-வெட்டிக்கு இடையில் வைக்கப்பட்ட பாக்கு போல எட்னாவின் கதைப் படைப்பு. மக்களி-டையே மகத்துவம் பெறவில்லை.
ஆனாலும் அவரைக் கலைக் காவியம் படைத்த மேதை என்றார்கள் அறி-வாளிகள். சார்ல்ஸ் டிக்கன்-சுடன் அவரை ஒப்பிட்டு எழுதினார்கள். சார்லி சாப்ளினு-க்கு இந்தப் புதிய பெருமை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.