வரலாறு

பெண்களுக்குப் பெண்களே எதிரிகள் என்பார் தந்தை பெரியார். பெண் குழந்தையைப் படிக்க வைப்பதற்கு எதிர்ப்பு முதலில் வீட்டுப் பெண்களிடம் இருந்துதான் வரும். படித்த பெண்கள் வேலைக்குப் போவதற்கும் எதிர்ப்பு அவர்களிடமிருந்துதான் வரும். இம்மாதிரி ஒவ்வொன்றும் எதிர்ப்பு இருந்த நிலை 20-30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது என்றால் 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.
தேவதாசிகள் என்று பெண்களை முத்தரை குத்தி, கோயிலில் சதிராட்டம் என்னும் கடவுள் பொம்மையின் முன்பு நாட்டியம் என்றும் பெயர் கூறிப் பணக்காரர்களும் பார்ப்பனர்-களும் தம் காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. இதனை எதிர்த்துப் போராடிக் களம் கண்டு அதற்காக ஒரு மாநாட்டினை மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து நடத்தி வெற்றி கண்டு அதனை ஒழித்தவர் பெரியார் என்பது வரலாறு.
இந்த ஒழிப்பினைச் சட்டப்பூர்வமாக் கிடப் பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) அவர்கள் என்பதும், அதனை எதிர்த்துச் சட்டமன்றத்தில் பேசியவர் (வாயாடி) சத்ய-மூர்த்தி அய்யர் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அனைவரும் அறிந்திராத சில செய்திகளும் இது தொடர்பாக உண்டு.
80 ஆண்டுகளுக்கு முன்பு 1927 அக்டோபர் திங்களில்தான் தேவதாசி எதிர்ப்பு குறித்துச் சட்டம் பற்றிய நடவடிக்கைகள் தொடங்கப்-பட்டன. நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான விவாதம் நடைபெறவிருந்தது. பார்ப்பனச் சூழ்ச்சி வழக்கம் போலவே, தன் வஞ்சக வேலையைத் தொடங்கியது.
எல்லா வேலை வாய்ப்புகளையும் பார்ப்-பனர்களே அடித்துக் கொண்டு போன நிலையில் பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு தரப்பட வேண்டுமெனும் கோரிக்-கையை 1916இல் நீதிக்கட்சி வைத்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போட்டி அமைப்பைப் பார்ப்பனர்கள் சூத்திரர்களைக் கொண்டு உருவாக்கினர்.
அதேபோல, தேவதாசி முறைக்கு எதிர்ப்-பைத் தேவதாசிகளைக் கொண்டே தெரிவிக்கக் குல்லுகப்பட்டர் கூட்டம் ஏற்பாடு செய்தது. பெங்களூர் நாகரத்தினம்மா என்கிற தேவதாசி-யைப் பிடித்து சென்னை ராஜதானி தேவதாசிகள் சங்கம் என்கிற ஒன்றினை 3.11.1927இல் தொடங்கினர். சென்னையைச் சேர்ந்த தேவதாசி ஜீவரத்தினம்மாள் என்பவரின் வீட்டிலேயே சங்கம் செயல்-பட்டது(?) அவர்தான் சங்கத்தின் தலைவர். துரைக் கண்ணம்மாள் என்பவர் செயலாளர்.
 |
நம் விரல்களையே நம் கண்ணில் குத்துவது போன்ற காரியத்தை இச்சங்கத்தின் பின்னா-லிருந்து பார்ப்பனர்கள் செய்தனர். அப்போது ஆங்கில அரசின் சட்ட உறுப்பினராக சர்.சி.பி.ராமசாமி அய்யர் இருந்தார். அவரிடம் மனு கொடுத்தார்கள். தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று தேவதாசிகள் சங்கம் மனு கொடுத்தது. அய்யர் தம் பங்குக்கு வஞ்சகம் புரிந்தார். இன்னும் சிலவற்றைச் சேர்த்துப் பெரிதாகப் பத்து பக்கங்களுக்கு மேல் உள்ள கோரிக்கை மனுவாகக் கொடுக்குமாறு செய்தார்.
11.11.1927இல் சென்னை கோட்டையில் சர்.சி.பி.ராமசாமி அய்யரைச் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. சில ஊர்களில் பெண்கள் மாநாடு என்ற பெயரில் பார்ப்பனத்திகள் கூடி கூட்டத்திற்கு எதிர்ப்பாகப் பேசி, சட்டம் கூடாது எனத் தீர்மானம் போட்டதாக எழுதி அனுப்பினர். எதுவும் சில காலம் என்பது போல மூன்றே மாதங்களில் மூக்கை உடைத்துக் கொண்டனர்.
6.11.1927இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானத்தின் மீது அரசு எந்த நடவடிக்கைகயும் எடுக்காமல் பார்ப்பனப் பாதுகாவலர் பார்த்துக் கொண்டார். டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) மாற்று ஏற்பாடு செய்தார். புதிய சட்டம் கொண் வரப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி தடையாக இருப்பதை விளங்கிக் கொண்டு இந்து அறநிலையச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன்படி, தேவதாசி-களுக்குத் தரப்பட்ட நிலம், கோயில் மான்யம் போன்றவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அதற்கீடாக இழப்பீடு பெற்றுக் கொண்டு தேவதாசிப் பழக்கத்தை விட்டொழித்து விடலாம் என்கிற திருத்தச் சட்டம் 1929ஆம் ஆண்டின் 5ஆம் சட்டமாக்கப்பட்டது.
 |
பலபேர் இந்தச் சட்டத்தின்படிச் செயல்பட்டு தம் சுயமரியாதையை எண்பித்-தனர். ஆனால் இழப்பீடு தராமல் பார்ப்பன அரசு அதிகாரிகள் பழிவாங்கினர். வறுமையில் அவர்கள் வாடினர். பலரை டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) ஆதரித்தார் தம் சொந்தப் பொறுப்பில்! அற்கெனத் தொடங்கப்-பட்டதுதான் இன்றளவும் செயல்பட்டு வரும் அவ்வை இல்லம். பணத்திமிர் கொண்டவர்-களின் வீடுகளில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சி-களிலும், கோயில்-களிலும், கடவுள் பொம்மை ஊர்வலங்களிலும் ஆடப்பட்டு வந்த சதிர் நின்று போனது. ஆனாலும், சிலரைப் பிடித்து, மியூசிக் அகாடெமி எனும் பார்ப்பனக் கச்சேரியில் 1932இல் நடன நிகழ்ச்சி எனும் பெயரில் அதை நிகழ்த்தி மகிழ்ந்தனர் பார்ப்-பனர்களும் அவர்-களின் பாதந் தாங்கிகளான பணக்காரர்களும்! இதனையும் எதிர்த்தார் டாக்டர் முத்துலட்சுமி. பார்ப்பனக் கச்சேரிக்-கார இ.கிருஷ்ண அய்யர் என்பவரும் பழைய சத்யமூர்த்தி அய்யரும் இதற்கும் எதிர்ப்புக் காட்டினர். ஒன்றும் பலிக்காத நிலையில் 1932 டிசம்பர் 28இல் மியூசிக் அகாடெமி கூட்டத்தல் நடனத்தை பரதநாட்டியம் எனப் பெயர் மாற்றி வைத்தனர்.
மறு ஆண்டு முதல் பரத நாட்டியம் சபைகளில் நடத்தப்பட்டது. புதிய மொந்தை-யில் பழையகள். பல ஜாதிக்காரர்களும் ஆடத் தொடங்கினர். 1947 நவம்பர் 26இல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. டாக்டர் சுப்புராயன் அவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு நிறைவேறச் செய்தவர்.
பாரம்பரியமாக இதனை ஆடிவந்தவர்கள். ஆட்டுவிக்கத் தொடங்கினர். ஆம், நடனக் கலையைப் பிறர்க்குக் கற்பித்தனர். பல ஜாதிக்-காரர்களும், கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவர்கள் ஆடும் போது இழிவாகப் பேசியவர்-கள், இழிவாகப் பார்த்தவர்கள், இழிவாக நடத்தியவர்கள் எல்லாம் அவரவர் ஜாதிப் பெண்கள், குறிப்பாகப் பார்ப்பனப் பெண்கள் ஆடும் போது மகிழ்ந்தனர். கும்பாரத்தி எனப் பெயரிட்டு தேவதாசி-களைப் பூஜை முடிவில் இழிவுபடுத்தியதும் கோயில்களில் ஆடச் செய்து கூடிக் குலவியதும் குலக் கடமையாக்கப்பட்ட நிலை மாறி விட்டது. பரத நாட்டியமாக்கி, பரத முனி-வரைக் காட்டி, பதஞ்சலி யோகத்க் கூறி, இனாமாகப் பெற்ற இடத்தில் கோயில் கட்டிக் கும்மாளம் போடுகின்றனர் பார்ப்பன நர்த்தகிகள்! |