தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

நூல் அறிமுகம்

திருக்குறளில் அன்பு நட்பு காதல் (ஓர் அறிமுகம்)


முனைவர் கருவூர் கன்னல் வெளியீடு: குறள்
வீடு, 3/3 பாரதிதாசன் நகர், தான்தோன்றிமலை - 639 005 பக். 112 ரூ. 30/-
நூலிலிருந்து...


எவரை நாம் வெறுக்கிறோமோ அவர்-களை அனுதாபத்தோடு புரிந்துகொள்ள முயல வேண்டும். நம் உள்ளத்தில் வெறுப்பு இருக்கும்வரை நாம் அன்பினால் விளையும் மகிழ்வை அடைய முடியாது. பகைக்கு இடம் இருக்கும் வரை அன்பு கைதியாகவே காத்திருக்கும். ஒருவர்க்கு எதனால் வெறுப்பு விளைகிறதோ அது மற்றவர்க்கு அறமாகக் கூடத் தோன்றலாம்.
நம் குறைபாடுகளையும், குற்றங்களையும் தெரிந்துகொண்டவர்மேல் வெறுப்பு வெளிப்பட்டிருக்கலாம் என்று கூட நாம் நினைத்துப் பார்க்கலாம். இவ்வாறு ஒருவர் பிறர் மேல் கொண்ட வெறுப்பை ஆய்ந்து பார்த்தால் அவருக்குப் பிறரை வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சி மெல்ல மெல்ல மறைந்துபோக வாய்ப்புள்ளது. நாம் மனச் சாட்சிக்குத் துராகம் செய்யாமல் வாழ்ந்தால் நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க முடியும்.
நம்மை ஒருவன் ஆத்திரமூட்டும்போதும் எரிச்சல் ஊட்டும்போதும் அலட்சியப் புன்னகையோடு எதிர்கொண்டால் அவன் மீண்டும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டான் என்பர் ஆஸ்கர் ஓய்ல்டு. உன்னுடைய பகைவர்களை எப்போதும் மன்னித்துக் கொண்டே இரு. அதைக்காட்டிலும் வேறு எதுவும் அவர்களை அவமானப்படுத்துவது இல்லை. இக்கருத்தைத் திருவள்ளுவர்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்
என்ற குறளின் வழி குறிப்பிடுகின்றார்.


இதயத்தைத் தேடுகிறேன்...?


ந.காவியன் வெளியீடு: மண் வெளியீடு, பி1, ராமகிருஷ்ண பிளாட்ஸ், புது எண் 22, 3ஆவது தெரு, ராமகிருஷ்ணாபுரம், ஆதம்பாக்கம், சென்னை-88 பக்கம் 136 ரூ. 70
நூலிலிருந்து....


வர மண்டலத்தில் இருக்கின்ற எங்கள்
வாடிகன் கர்தினால்களே.
உங்கள் நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!
பர மண்டலத்தில் கர்த்தரின்
சித்தம் செய்யப்படுவது போல்
பூலோகத்திலும் உமது சித்தம்
செய்யப்படுவதாக!

எங்கள் அனுதின உணவு
எங்கள் உழைப்பினாலேயே
கிடைக்கப் பெறட்டும்!
எங்கள் நெடுங்கால ஆசை
இம்முறையும் நிறைவேறாமல் போனது...
தின்மை செய்பவர்களை
நாம் பொறுப்பது போல்
இது பாவச் செயலெனில் பொறுப்பீராக!

ரோம் சாம்ராஜ்ய சிறையிலிருந்து
ஏசுவையும் போப்பையும் விடுவித்து
அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக்குக!
கிறிஸ்துவத்தின் சமநீதி மலர்ந்தி...
நிறவெறி மாய்ந்திட...
மாட்சிமைக்குரிய எமது கர்தினால்களே,
இனி அடுத்த முறையேனும் -
ஒரு கறுப்பு போப்பாண்டவரைத்
தேர்ந்தெடுப்பீராக!

அது இயலாவிடில்
ஒரு கறுப்பு ஏசுநாதரை
உருவாக்கிக்கொள்ள
எங்களை அனுமதிப்பீராக!
எங்களை அனுமதிப்பீராக!

எம்மை மீண்டும் சோதனையில்
விழ விடாதேயும்!
தின்மையிலிருந்து எங்களை ரட்சித்தருளும்!
ஆமென்!


தொலைக்காட்சி உலகம்

பவா சமத்துவன் வெளியீடு: புதுயுகம் செய்முறை
செம்மையாக்கம், 72/40, ஓ.வி.எம். தெரு, சேப்பாக்கம், சென்னை - 5. பக். 555 ரூ. 300


தமிழின் முதல் முழுமையான தொலைக்காட்சி ஊடக நூல் என்ற அறிவிப்போடு வெளியிடப்பட்ட இந்நூலில் முழுமையான தகவல்கள் விரவிக்கிடக்கின்றன. உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்துகொண்டே இருக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி உடனுக்குடன் தமிழில் நூல்கள் வருவது அவசியம். தொலைக்காட்சி தொழில்நுட்பம் குறித்த இந்தத் தேவையை நிறைவு செய்கிறது இந்த நூல். திரைப்படத்தொழில் நுட்பத்தையே விஞ்சிவிட்ட தொலைக்காட்சித் துறை பற்றிய ஏராளமான தகவல்களை நூலாசிரியர் தேடித்தேடி சேகரித்துள்ளார்.
ஊடகத் தொழில் நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்நூலில் ஊடகத் துறையில் பணியாற்றுவோர் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய பல செய்திகள் உள்ளன. ஊடகவியலைக் கற்றுத்தரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடநூலாகாக வைக்கும் அளவுக்கு தகுதி பெற்றது இந்நூல். ஊடகத் துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக பெரியார் விருது, ஊடகச் செம்மல் உள்ளிட்ட பல பெருமைகளைப் பெற்றுள்ள நூலாசிரியர் பவா.சமத்துவன் பாராட்டுக்குரியவர்
நூலிலிருந்து...
தொலைக்காட்சி, இணையம் போன்ற காட்சித் தகவல்கள் ஊடகங்கள் வளர்ந்து விட்ட இன்றைய நிலையிலும், பி.பி.சி. வானொலியின் தமிழோசை நிகழ்ச்சி பல இலட்சக்கணக்கான நேயர்களைக் கொண்டி-ருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கக்-கூடும். உலகத்தின் பல்வேறு இடங்களில் பரவியுள்ள பல இலட்சம் தமிழர்கள் தமிழகத்தின் அரசியல் நிலவரங்களையும் ஈழத்தின் போர்ச் சூழல்களையும் பி.பி.சி. தமிழோசையின் மூலமே நாள்தோறும் அறிந்து கொள்கின்றனர்.
பசிபிக் கடலில் மனித நடமாட்டமே இல்லாத தீவு அது. பிரிபாட்டி என்றழைக்-கப்படும் அந்தத் தீவு மனிதன் வாழ்வதற்கான தட்ப வெப்பநிலை எதையும் கொண்டிக்க-வில்லை. ஆண்டின் பெரும்பகுதி உறைபனியால் மூடப்பட்டிருக்கும். பல்வேறு இடையூறுகள், இன்னல்களைத் தாண்டி அவர்கள் ஒரு குழுவாக அந்தத் தீவை வந்தடைகின்றனர். மகிழ்ச்சியும், பெருமிதமும் அவர்கள் முகத்தில் பொங்கி வழிகிறது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் சாதனையாளர்கள்.
யார் இவர்கள்? என்ன செய்யப்போகிறார்-கள்? அவசரப்படாதீர்கள்; சரியாக 15:43 கிரீன்விச் நேரம். வானத்தின் கீழ் விளிம்-பிலிருந்து சூரியன் மெதுவாக எழுந்து மெலிதாக ஒருவரை ஒருவர் கட்டித் தழுவு-கிறார்கள். சிலர் மகிழ்ச்சியில் அழுகிறார்கள். ஒருவர் புகைப்படம் எடுக்கிறார். இன்னொரு-வர் வீடியோ கருவியால் அனைத்தையும் பதிவு செய்கிறார். அன்று தான் டிசம்பர் 31, 1999.
ஆம்! அவர்கள்தான் புதிய நூற்றாண்டின் (Millennium) சூரியக் கதிரை முதன்முதலாகக் கண்டவர்கள். இப்படித்தான் புதியனவற்றைக் காண வேண்டும். எந்த ஒன்றிலும், தான் முதலாவதாக நிற்க வேண்டும் என்ற வேட்கை, மனிதனிடத்தில் இருபது நூற்றாண்டாய்த் தொடர்கிறது.
தேசியப் புவியியல் தொலைக்காட்சி
1888இல் சில புவியியலாளர்கள், புதியன கண்டுபிடிப்பாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற இராணுவ அலுவலர்கள் மற்றும் சில செல்வந்தர்கள் ஒன்றுகூடித் தங்களுக்குள் விவாதித்தார்கள். நாம் வாழும் இந்தப் புவிக்கோளை நன்கு அறிந்து, ஆராய்ந்து, மக்களுக்குச் சொல்ல வேண்டும் என எண்ணுகிறார்கள்.
அவர்களின் அந்த முடிவு ஓர் அமைப்பாக மாறுகிறது. தேசயிப் புவியியல் கல்விக்கழகம் (National Geographic Educational Soceity) எனப் பெயரிட்டு அந்த அமைப்பைப் பதிவு செய்-கிறார்கள். இலாப நோக்கமற்ற அறிவூட்டும் நிறுவனமாக (Education Institution) அது இன்றும் செயல்படுகிறது.
கடந்த 114 ஆண்டுகளாக, நாம் வாழும் இந்தப் புவிக் கோளைப்பற்றி புதுப்புதுச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டுவம் அக்கழகம், மாறிவரும் அறிவியல் யுகத்திற்கு ஏற்ப, மின்னணு ஊடகத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தித் தன்னை மாற்றிக்-கொண்டது.
செப்டம்பர் 1997இல் அக்கழகம் அய்-ரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் முதன்-முதலாக நேஷனல் ஜியாகரபி தொலைக்-காட்சியைத் தொடங்கியது. தொடங்கிய அடுத்த ஆண்டே ஆசிசியாவிற்காகவும் தன் தொலைகாட்சிப் பணியை நீட்டித்தது.