தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

மருத்துவமும், மூடநம்பிக்கைகளும்

நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்தி, தைராய்டு சுரப்பி நோயைப் பற்றி-யாகும். ஒருவர் அளவிற்கு அதிகமாக குண்டாக இருப்பார். அவர் உண்ணும் உணவு குறைவா-கவே இருக்கும். சாப்பிடுவதே இல்லை; உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கி-றோம். அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்பப்பாரு தின்று கொண்டே இருக்கிறான். ஆனால் ஆளைப் பாரு; ஒடிஞ்சி விழுவதைப் போல இருக்கிறான். வினயமானவன்; அதனால்தான் உண்ட உடலில் ஒட்டவில்லை என்றும் நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்..
நல்லவனுக்கு உடல் பெருக்குவதும், கெட்ட-வனுக்கு உடல் தேய்வதும் உண்மையா? உண்மையைச்சொன்னால் கெட்ட எண்ணங்-களுக்கோ, நல்ல எண்ணங்கக்கோ, உடல் பருமனுக்கோ ஒரு தொடர்பும் கிடையாது.
நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இனி அந்த சுரப்பியைப் பயீறியும் அதன் சுரப்புகள் பற்றியும் நோக்குவோம்.
தைராய்டு சுரப்பிகள் நம் முன் கழுத்துப் பதியில், மூச்சுக் குழாயின் (Trachea) மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா (Ductless) சுரப்பியாகும். மூச்சுக் குழாயின் இருபுறமும் ஒட்டி அமைந்துள்ள இரண்டு பகுதியான சுரப்பி (Lobes) நடுவில் இணைப்பு-டன் (Isthmus) மூச்சுக் குழல் மேல் படிந்-திருக்கும். இந்த சுரப்பி ஒரு நாளமில்லா சுரப்பியாகும். சுரப்பியின் சுரப்புகள் (Hormones) நேரடியாக இரத்தத்தில் கலக்கும். மேல் தைராய்டு தமனி, கீழ் தைராய்டு தமனி என இரண்டு தமணிகள் மூலம், அதிக அளவு இரத்தம் இச்சுரப்பிகளுக்குச் செல்லும். தைராக்யின் (Thyroxine) ட்ரை ஜடோ தைரோனின் (Tri-Iodo-Thyronine) என்ற இரு வகை சுரப்புகளும் இந்த சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த சுரப்புகளில், ஐயோடின் (Iodine) கூறுகள்தான் உள்ளன. மண்டை ஓட்டின் அடிப்புறம் உள்ள பிட்யூட்டரி (Pitutary Grand) சுரப்பி சுரக்கும். தைராய்டு தூண்டு சுரப்பு (Thyroid Stimulating Hormone) தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. டி.எஸ்.-ஹெச் (T.S.H.) என்று சுருக்கமாக அழைக்கப்-படும் இச்சுரப்பு, உடலின் தேவைக்கு ஏற்ப தைராய்டு சுரப்பியை தூண்டி, தைராக்ஸினை சுரக்கச் செய்யும். டிரை ஐடோ தைரோனின், தைராக்ஸினை விட வேகமாகச் செயல்படக் கூடியது. இதுவும் தைராய்டு தூண்டு சுரப்பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பே ஆகும். தைராய்டு சுரப்புகளான தைராக்ஸின் டிரை ஜடோ தைரோனின் இரண்டும் நம் உடலில் உள்ள அடிப்படை உயிரணுக்களான செல்-களின், வளர்சிதை மாற்றத்திற்கான (Metabolism) முக்கிய காரணிகளாகும். தைராக்ஸின் சுரப்பு சரியாக இருந்தால் செல்களின் உணவுத் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, அவை சத்தாக மாறி, உடல் இயக்கம் சீராக இருக்கும். தைராய்டு சுருப்பியின் மற்றொரு சுரப்பிற்கு கால்சிடோனின் (Calcitonin)என்று பெயர். நம் உடலில் ஏற்படும் சுண்ணச்சுத்து (Calcium)வளர்சிதை மாற்றத்தில் இந்த சுரப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி தைராக்ஸின் அதிகம் சுரந்தால், அல்லது குறைவாகச் சுரந்தால் ஏற்படும் பாதிப்புக்களையும், விளைவுகளையும் காண்போம்.
தைராக்ஸின் குறைபாடு: (Hyothyroidism)தைராய்டு சுரக்கும் தைராக்ஸின் குறைபாடு, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தைராய்டு குறைபாடு உடையவர்கள் உடல் பருமனாக தெரிவார்கள். தோலின் அடிப்புறம் சவ்வு போன்ற படிவுகள் படிந்து, வீக்கம் போன்று(Myxoedema)ஏற்படும். இதுவே தைராய்டு குறைபாடு உடையவர்கள் பருமனாவதற்குக் காரணம்.
நோய் காரணியம்: பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் நோய், அல்லது மாற்றங்களால் தைராய்டு தூண்டு சுரப்பு (TSH) குறைவாக சுரப்பதால் தைராக்ஸின் சுரப்பது குறைவா-கலாம். தைராய்டு சுரப்பியிலேயே ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை அறுவை செய்து எடுத்து விடுதல், முன் கழுத்து கழலை (Goitre)நோய் போன்றவை தைராய்டு குறைபாட்டை ஏற்படுத்தும். இந்நோய் பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்களுக்கே வரும். ஆனால் எந்த வயதிலும் வரக்கூடிய நிலைமையும் மறுக்க முடியாது.
நோயின் அறிகுறிகள்: தைராய்டு குறைபாடு லேசாகத் துவங்கி, அதிகமாகிக் கொண்டே வரும். அறிகுறிகளும் அதைப் பொறுத்தே வேறுபடும். ஆரம்ப நிலையில் சோம்பல், மறதி, இரத்த சோகை, தோலில் வறட்சி ஆகியவை தெரியும். வளர்சிதை மாற்றங்களில் தொய்வு ஏற்படத் துவங்கும். இதனால் மனம், உடல் தளர்வு உண்டாகும். சுறுசுறுப்பு குறையும். குளிர் தாங்க முடியாமை, கண்ணிமைகளில் வீக்கம், முடி உதிர்தல், குரல் தடித்தல், செவிட்டுத் தன்மை, பசியின்மை, உடல் பருமன், மலச்சிக்கல், மாதவிலக்கு மாற்றமடைதல், சோர்வு, பணியில் நாட்டமின்மை, உடல் வலி போன்றவை ஏற்படும். மருத்துவம் செய்யாவி-டில் இந்த நிலமைகள் அதிகமாகும். முகம், உடல் ஆகியவை அதிகம் வீங்கி, பருமனம-டையும். கண்ணிமைகள் வீங்கும், உதடுகள் பருமடையும், நாக்கு பருக்கும், உடல் முழுவதும் பருமனாகும். வியர்வை சுரப்பது நின்றுவிடும். அதனால் தோல் காய்ந்து, வறண்டு காணப்படும். பேசுவது நிதானப்படும். குரல் கடுமையாக ஆண் தன்மையுடன் தெரியும். நினைவாற்றல் குறைந்து, மறதி அதிகமாகும். உடல் களைப்பு, சோர்வுடன் பசியின்மையால் தேவையான அளவு உணவு உட்கொள்ள முடியாது. ஆனால் உடல் மட்டும் பருமனாகிக் கொண்டே வரும். நாடித்துடிப்பு குறைவு படும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் நாளடைவில் மாரடைப்பு ஏற்படக் கூடிய சூழல் ஏற்படும். இந்த நிலையிலும் சரியாக மருத்துவம் செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரத்த சோகை, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு, நோயாளியின் நிலை கவலைக்கிட-மாக மாறும்.
சில சமயங்களில் குழந்தைகளும் தைராய்டு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதுண்டு. பிறவிக் கோளாறாகத் தோன்றும் இந்த வியாதியில் தைராய்டு சுரப்பிகள் சரியான வளர்ச்சி அடையாமல் தைராக்ஸின் சுரப்பு குறைபாடு உண்டாகும். குழந்தையின் உடல், மன வளர்ச்சி முழுமையாக பாதிப்படையும். முகத்தில் அதிக அளவு மாற்றங்கள் இருக்கும். அகன்ற சப்பை-யான மூக்கு, தடித்த உதடுகள், தடித்த நாக்கு, வாயின் வெளியே துருத்திக் கொண்டு இருக்கும் நிலை, வீங்கிய வயிறு, தொப்புள் குடல் இறக்கம் போன்றவை சாதாரணமாகத் தோன்றும். சரியாக மருத்துவம் செய்யாவிடில், மேற்கண்ட அறிகுறிகள் நிரந்தரமாகிவிடும். ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, நோயாளிக் குழந்தை, மற்ற குழந்தைகள் போல் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ஆய்வுகள்: இந்நோயை ஆய்வின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இரத்தப் பரிசோதனையில், தைராக்ஸின் அளவு, டிரை ஜடே தைரோனின் அளவு, தைராய்டு தூண்டு சுரப்பியின் அளவு ஆகியவை பார்ப்பதின் மூலம் இந்நோயின் தன்மையை உணர முடியும்.
மருத்துவம்: தைராய்டு குறைபாடு நோயின் அறிகுறிகள் மோசமாக இருந்தாலும், நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். தைராக்ஸின் குறைப்பாட்டால் இந்நோய் ஏற்படுவதால், அந்த குறைபாட்டை நிறைவு செய்வதன் மூலம், இந்நோயிலிருந்து குணமடையலாம். தைராக்-ஸின், மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சாதாரணமாக, ஆரம்ப நிலையில் 0.1 mgஅளவில் இம்மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆனால் இம்மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ மருத்துவரின் ஆலோசனை அவசியம். இம்மாத்திரையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டே வரவேண்டும். தைராய்டு பற்றாக்குறையோடு, இதய நோயும் சேர்ந்துள்ள நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இம்மருந்துகளை சாப்பிட்டு வரவேண்டும். பொதுவாக எளிமையாக கட்டு-படுத்தக்கூடிய இந்நோய், சரியான முறையில் மருத்துவம் செய்யப்படாவிட்டால், பலவித தொல்லைகளை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கும். அதனால் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலும், மருத்துவம் செய்தலும் அவசியம்.
- மருத்துவம் தொடரும்