|
|
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

டி. ஞானையா
வெளியீடு: பாட்டாளித் தோழன் பதிப்பகம், 4, ஆலங்காத்தார் தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005 / பக். 152 ரூ. 60
நூலிலிருந்து...
நான் கரூர் போஸ்ட் ஆபிஸில் வேலை-க்கு சேர்ந்த 3ஆம் நாள் ஒரு சம்பவம் நடந்தது. நான் கவுண்டரில் வேலை செய்து கொண்டிருந்-தேன். மதியம் 3 மணி இருக்கும். தண்ணீர்த் தாகம். ஆபிஸ் ஹால் நடுவில் போஸ்ட் மாஸ்டரின் இருக்கை. அவரைத் தாண்டித் தான் மண்-பானைகளில் குடிநீர். தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். போஸ்ட் மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு, நீ இந்தப் பானையில் தண்ணீர் எடுக்க வேண்டாம். அடுத்த பானையி-லிருந்து தான் குடிக்க வேண்டும் என்று சொன்னார். நான் தலையை ஆட்டிவிட்டு எனது வேலையை கவனித்தேன்.
மறுநாளும் அதே நேரத்தில் தாகம். நேற்று போஸ்ட் மாஸ்டர் சொன்னது நினைவில் இல்லாததால் அதே பானையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினேன். போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்து என் மீது சீறி-விட்டார். (அன்று, எல்லாமே ஆங்கிலம்தான்) “Did I not tell you yesterday that you should not drink water from that Pot? What do you think of yourself? I will show you who I am if you repeat it again” என்று பொரிந்து தள்ளினார். நான் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். உடனே ஒரு Flash வந்தது. மதுரையில் பிராமணாள்கள் சாப்பிடும் இடம் என்று பல ஓட்டல்களில் பலகை தொங்குவதை பார்த்திருக்கின்றேன். நாங்கள் பலகையை பிராமணாள் கள் சாப்பிடும் இடம் என்று படித்துச் சிரிப்ப-துண்டு. அதுதான் இது என்று எனக்குக்ளிக் ஆனது.
எனக்கும் கோபக்கனல் சுடர்விட்டது. ஒன்றும் பேசமுடியவில்லை. உடல் நடுங்கியது. வெறிபிடித்தது போல் வேகமாகப் போய் அங்கிருந்த கனமான வெண்கலத் தம்ளரை எடுத்து ஒரே அடியில் பானையை உடைத்-தேன். பானை உடைந்து தண்ணீர் சிதறிப்-பரவியது. டார்ஜான் சினிமா பார்த்திருக்-கிறேன். டார்ஜானாக என்னை உருவகப்-படுத்திக் கொண்டு போஸ்ட் மாஸ்ட்டரையும், மற்றவர்களையும் முறைத்துப் பார்த்தேன். யாரும் என் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டனர். நேரே எனது கவுன்டருக்கு வந்து அமர்ந்து வேலையை பார்த்தேன். ஒரே மயான நிசப்தம். யாரும் குச்சுக் குச்சுவாகக் கூட பேசிக் கொள்ள-வில்லை.
அன்று அந்த போஸ்ட் ஆபிசில் போஸ்ட் மாஸ்டர் ஒரு அய்யங்கார். நாமம் போட்டு, தார்பாச்சி வேட்டி கட்டி, கோட் அணிந்து டை (கூநை) கழுத்தில் கட்டியிருப்பார். தலைப்பாகை அணிந்திருப்பார். அன்று இது ஒரு ஸ்டாண்ட்ர்ட் டிரஸ். கிளார்க்குகளில் 6 பேர் பிராமணர்கள். ஒரே ஒருவர் பிராமணரல்-லாதவர். இவர் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தங்கவேலு பிள்ளை, ஐந்து தபால்காரர்களும், மூன்று ப்யூன்களும் சூத்திரங்கள். அதில் இருவர் முஸ்லீம்கள்.
***
டென்மார்க் தலைநகரம் கோபன்ஹாகனில் 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமாதான காங்கிரசிற்கு இந்தியாவின் பிரதிநிதிக்குழுவில் ஒருவனாக நான் பங்கேற்றேன். என்னுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அகில இந்திய சமாதான ஒருமைப்-பாட்டுக்கழகத்தின் தமிழ் மாநிலப் பிரிவின் தலைவர் எஸ்.மணி (கலைமணி பிரிண்டிங் இன்டஸ்ட்ரீஸ்) பொதுச் செயலாளர் ஆர்.-கோபாலன் ஆகிய எனது இரு கோவை நண்பர்களும் பிரநிதிக்குழுவில் வந்தனர். இந்திய தூதுக்குழுவில் பொறுப்பாளர்களில் ஒரு-வனாக நான் இருந்ததால் காங்கிரசில் இந்திய தூதுக்குழுவின் சார்பில் சில நிமிடங்கள் உரையாற்றும் வாய்ப்பளிக்கப்பட்டது.
மணி அவர்களுடன் தொழில் ரீதியான உறவு கொண்டிருந்த ஒரு (டென்மார்க்) டேனிஷ் நண்பர் தன்னுடைய தொழிற்-சாலையை பார்வையிட எங்கள் மூவரையும் அழைத்துச் சென்றார். சுமார் ஒரு மணி நேரம் கார் பயணம். அவருக்கு வயது சுமார் அறுபது இருக்கலாம். அவருடன் அவருடைய 22 வயது மகனும் உடனிருந்தார். இருவரும் எஞ்சீனியர்-கள். என்னுடன் நடந்த உரையாடலை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்: நீங்கள் இந்துக்கள்தானே
நான்: எனது நண்பர்கள் இருவரும் இந்துக்கள். ஆனால் நான் கிறிஸ்துவன்.
அவர்: கத்தோலிக்கரா?
நான்: இல்லை, புராட்டஸ்டன்ட்.
அவர்: எந்த திருச்சபை (சர்ச்)
நான்: லுத்தரன் திருச்சபை.
அவர்: ஓ அப்படியா? நாங்களும் லுத்தரன்கள் தான்.
நான்: டேனிஷ்லுத்தரன் திருச்சபையின் பிரிவு எங்களது நாட்டிலும் உண்டு.
அவர்: மிக்க மகிழ்ச்சி
நான்: நீங்கள் விரைவில் வர இருக்கும் கிறிஸ்துமஸை விமரிசையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள் அல்லவா?
அவா: ஆம்.
நான்: தேவாலயத்தில் எந்த ஆராதனைக்குச் செல்வீர்கள்? நள்ளிரவு ஆராதனைக்கு போவீர்களா?
அவர்: இல்லை, இல்லை!
நான்: காலை ஆராதனைக்குச் சென்று வருவீர்களா?
அவர்: இல்லை, இல்லை! தேவாலயத்திற்கெல்லாம் போவதில்லை.
நான்: உங்களது குடும்பம்?
அவர்: அவர்களும் போவது கிடையாது.
நான்: நீங்கள் நாத்திகரா?
அவர்: இல்லையே?
நான்: நீங்கள் கம்யூனிஸ்டா?
அவர்: ஓ! இல்லவே இல்லை. எங்கள் நாட்டில் ஒரு சிலரே தேவாலயத்திற்கு செல்பவர்கள். வீடுகளில், குடும்பங்களில் இறைவனை பிரார்த்திருக்கின்ற பழக்கமும் இல்லை என்று விளக்கினார்.
அநேகமாக வளர்ச்சி பெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மத நம்பிக்கை மறைந்து விட்டது. மூன்றில் ஒரு பிரிவினருக்கு மத நம்பிக்கையுண்டு. ஆனால் ஆலயங்களுக்குச் செல்வதோ அல்லது மத ஆசாரங்கள், சடங்குகளில் பங்குபெறுவதோ கிடையாது. மூன்றில் ஒரு பிரிவினர் தான் மத ஆசாரங்களை பின்பற்றுபவர்கள். இதில் பத்து விழுக்-காட்டினர் தான் அடிக்கடி தேவாலயங்-களுக்குப் போய் முறைப்படி ஆராதனைகளில் பங்கேற்கின்றனர்.
இந்நாடுகளில் மக்கள் கணக்கெடுப்பில் (சென்சஸ்) மத நம்பிக்கையற்றவர்கள் என்ற ஒரு தலைப்பு உள்ளது. 2001ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி நெதர்லாண்டில் 33 விழுக்காடு, டென்மார்கில் 30, பிரான்சில் 22, இத்தாலியில் 23 விழுக்காடு மக்கள் மத நம்பிக்கையற்றவர்-களின் எண்ணிக்கை என்று படித்திருக்கிறேன்.
எங்கள் நாட்டில் மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இறைவனிடம் பல வேண்டுதல்-களை வைக்கின்றனர். இவைகளில் பல வேண்டுதல் இல்லாமலேயே அய்ரோப்பிய மக்களுக்கு கிடைக்கின்றன அல்லவா! என்றேன் நான்.
***
மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமை-யாக ஆதரித்து தேசிய கவுன்சிலில் வாதாடிய-வர்களில் நான் முன்னணியில் நின்றேன். இந்தய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்-களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டிற்கு ஒரே ஒரு அடிப்படை சாதிதான், சாதி மட்டும்தான், சாதி தவிர வேறு காரணம் இல்லை என்று ஆணித்தரமாக கருத்து தெரிவித்தேன். ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்காக அல்ல, ஏனெனில் எல்லா நாடுகளிலும் ஏழைகள் ஏராளமாக இருந்தனர். இருக்கின்றனர். ஆனால் சாதி அமைப்பு என்று பிறப்பால் மத ரீதியாக, சட்ட ரீதியாக (மனு சாஸ்திரம்) கல்வியும், நல்வாழ்-வும் தடை செய்யப்பட்டது வேறு எந்த நாட்டிலும் கிடையாது. ஆதலால் இதர நாடுகளில் ஒதுக்கீடும் கிடையாது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே பிற்படுத்தப்பட்டவருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு என்பதாகும். வாழை-யடி வாழையாக இருந்து வந்த அநியாய, அடாவடி ஒதுக்கீட்டை (வருணாசிரம தர்மம்) ஒழிப்பதே இன்றைய ஒதுக்கீட்டிற்கு அடிப்-படை என்பதை எந்த சமரசத்திற்கும் இடமின்றி எடுத்துரைத்தேன்.
மண்டல் கமிசனைப் பற்றி நான் எழுதிய சிறு நூல் இரண்டு பதிப்புகளாக அமோக வரவேற்பை பெற்றது. கலைஞர், அன்பழகன், கி.வீரமணி ஆகியோர் கூட இந்நூலை வாங்கிப் படித்தனர்.
மற்றும் தேசிய கவுன்சிலில் சாதி ஒழிப்புப் பற்றி நான் துணிந்து முன் வைத்த யோசனை பலருக்கு அதிர்ச்சியூட்டியது. அதாவது, சாதிக்குள்ளேயே திருமணம் செய்து வைப்பது (அகமண முறை) நடைமுறையிலிருக்கும் வரை சாதி முறையை ஒழிக்க முடியாது என்றேன். சோசலிசம் வந்தாலும் விரைவில் ஒழியாது. ஆதலால் அக மணமுறையை (சாதிக்குள்ளேயே திருமணம்) என்பதை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும். இதை ஒரு புரட்சிகர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோர வேண்டும். இயக்கமும் நடத்தப்பட வேண்டும் என்றேன்.
***
இந்து மதம் எனப்படும் ஆரிய மதம், அதாவது பிராமண மதம் இந்துஸ்தானத்தி-லிருந்து தென்னிந்தியா-வின் தமிழ், கேரளா, தெலுங்கு, நாடுகளுக்கு கொண்டு வரப்பட்ட-தாக கார்ல் மார்க்ஸ் அவர்களே குறிப்பிட்டுள்-ளார். வெற்றிகரமாக படையெடுத்து முன்னேறி வந்த இந்துக்கள் டெக்கானில் (தச்சிணத்தில்) நாகரிக-மடைந்திருந்த பல தேசிய இனங்களை கண்டார்கள் என்றும் தமிழ் மொழி பேசுகின்ற தமிழர்களின் ராஜியங்கள் இவை-களில் தொன்மையானது என்றும், இந்துஸ்-தானத்தின் பிராமணர்கள் கேராளாவில் வந்து குடியேறி அந்த சாதியின் பிரபுக்கள் ஆட்சி நடத்தினர் என்றும் மார்க்ஸ் தனது கைப்பட எழுதிய இந்திய வரலாற்றுக் குறிப்புகள் என்ற தொகுப்பில் காணலாம்.
டெல்லியிலுள்ள நாடாளுமன்ற மாநிலங்-கள் அவை (ராஜ்ய சபா) என்பது இன்று பெயரளவில் தான். இது ஓர் அரசியல் ஏமாற்று வேலை. ஒரு மோசடி என்று கூட சொல்லலாம்! அவை உண்மையிலேயே தேசிய இனங்களின் அவையாக்கப்பட்டு சமபிரதிநிதித்வம் கொடுக்-கப்படுவது அவசியம். அதாவது ஒவ்வொரு தேசிய இன மாநிலத்திற்கும் 25 பிரதிநிதிகள் என்றால் இதே சம எண்ணிக்கையில் மக்கள் தொகை எவ்வளவு குறைவாகவிருந்த போதி-லும் ஒதுக்கப்பட வேண்டும். இவர்கள் நேரடியாக விகிதாசார முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது பரிசீலனை செய்யலாம். இரு அவைகளுக்கும் சம அதிகாரம் தேவை. தீர்வு எதுவாக இருந்தாலும் இப்பிரச்சினைப் பற்றி விரிவான விவாதம் தேவை. இந்திய அரசியல் கட்சிகள். கம்யூனிஸ்ட்கள் கூட தேச பக்த மயக்கத்தில் இது பற்றி உரிய கவனம் செலுத்தவில்லை என்பது எனது உணர்வு.
இலங்கை பிரிந்தால் இந்தியாவை பாதிக்கும் என்கிற வாதம் சொத்தையானது. இதனடிப்-படையில் ஈழத் தமிழர் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை இந்திய அரசியல் கட்சிகள் மறுப்பது என்ன நியாயம் என்பது எனக்குப் புரியவில்லை. சோவியத் யூனியன் சிதறியது. யூகோஸ்லாவியா சிதறடிக்கப்பட்டது. தேசீய இன சுதந்திர குடியரசுகள் உருவாகின. இந்தியா சிறிதும் பாதிக்கப்படவில்லையே! ஏனெனில் இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி-யடைந்த தேசிய இனங்கள் உள்ளன. ருஷ்ய தேசிய இனம் போன்ற ஒசி ஏகாதிபத்திய இனம் வரலாற்றில் இந்தியாவில் உருவாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு செக்கோஸ்லாவாகியா என்ற இரு தேசிய இனங்களின் ஒரே நாடு அமைதியாக இஷ்டபூர்வமாக இரண்டு நாடுகளாக பிரிந்தன அல்லவா? அயர்ந்லாந்து நூறாண்டு காலமாக சுதந்திரப் போர் நடத்தி பிரிட்டனிலிருந்து பிரியவில்லையா? இவை எல்லாம் இந்திய ஒற்றுமை மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அயர்லாந்து பிரச்சினை பற்றி மார்க்ஸ் எடுத்த நிலை நினைவூட்டப்பட வேண்டும். சில அண்மைக்-கால நிகழ்ச்சிகள் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும். யூகோஸ்லாவியா சிதறிவிட்டது. முதலில் பிரிந்தது போஸ்னியா. மக்கள் தொகை 40 லட்சம் முஸ்லிம் 40 சதவிகிதம். கிறிஸ்தவர் 46 சதவிகிதம். தொடர்ந்து உள்நாட்டுப் போர்கள். குழப்பங்களுக்கு மத்தியில் 1992 வாக்கெடுப்பின் மூலம் யூகேஸ்லாவியவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது. கிழக்கு டைமூர் மக்கள் தொகை 10 லட்சம். கத்தோலிக்கர் 24 ஆண்டுகள் ஆயுதமேந்திய போராட்டம். அய்.நா. மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தி 2002 செப்டம்பரில் தனி நாடாகியது. மே 2006 யூகோஸ்லாவியாவின் மற்றொரு குட்டி மாநிம் மாண்டிநீக்ரோ மக்கள் தொகை 6,50,000 தான். மக்கள் வாக்கெடுப்பில் 55.4 சத்தம் தனி நாடு ஆதரவு. பத்து மடங்கு அதிக மக்களான செர்பியருடன் சேர்ந்து வாழ இயலாமை. விரைவில் தனி நாடாகி அய்ரோப்பிய யூனிய-னில் இணையலாம். தேசிய இன உரிமை பிரச்சினை மிக மிக சிக்கலானதுதான். ஆனால் உரிமைப் மறுப்பு அடிப்படையில் தீர்வு காண முடியாது. இந்திய அரசியல் அமைப்பு முறை இலங்கைக்கு பொருந்தாது. தமிழ் தேசிய இனம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
|