தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

திரைப்பார்வை

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஜாதியின் கூறுகளெல்லாம் கிடை-யாது. அவர்களெல்லாம் சமத்துவம் பேசி ஜாதியை விட்டுவிட்டார்கள். முற்போக்கு பேசி கருப்புச் சட்டை போட்டிருப்போர்தான் இன்னும் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்-கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மணிரத்னத்திடம் பயிற்சி பெற்று வந்திருக்கும் மாமி!
சமூக அக்கறையோடு படம் எடுக்கிறோம் என சொல்லி தன் கருத்தை விதைக்காமல், குடும்பப்-படம் எடுக்கிறேன் என்று சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுகிறார் இயக்குநர் பிரியா.
கண்ணாமூச்சி ஏனடா திரைப்படத்தின் நாயகன் பிருத்விராஜின் கதாபாத்திரம் வெளி-நாட்டில் வாழும், ஆவணி அவிட்டத்திற்குக் கூட கட்டாயம் காரணமாக மட்டும் பூணூல் போடும் இளைஞன். அங்கு படிக்கும் சத்யராஜின் மகளைக் காதலித்து, அவளுக்காக தன்னை வளர்த்த மாமா ராதாரவியையும் கோடிக்கணக்கான சொத்துகளையும் துறந்து-விட்டு இந்தியா வருகிறார்.
தமிழ்நாட்டில் உயர் போலீஸ் அதிகாரி-களுள் ஒருவராக, வெளியில் முற்போக்கு, பெண்ணுரிமை பேசுபவராக சத்யராஜ். ஆனால் வீட்டில் அவர் பேணுவது பெண்ணடிமை. வெளியில பேசுவான்யா. உள்ளே அப்படி-யில்லை என்று வாயடி வம்பளக்காரர்கள் கூறுவதுபோல் பாவம் பிரியாவும் முயல்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜாதி மறுப்புத் திருமணத்-திற்குத் தயாராக இருக்கும் பார்ப்பன இளைஞன் பிருத்விராஜை ஏற்க சத்யராஜ் மறுப்பது அவருக்கு இருக்கும் ஜாதிப் பற்றி-னால் தான் என்று வசனங்களால் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார் பிரியா. ஒரு கட்டத்தில் பிருத்விராஜ் நேரே சத்யராஜிடமே கேட்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை? என் ஜாதியா? அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? நான் இந்த ஜாதியில பிறந்தது-க்கு நான் பொறுப்பேற்க முடியுமா? என்று வெடிக்கிறார். அட்ரா... அட்ரா... அட்ரா... சக்கை! இவ்வளவு காலம் நாம் கேட்ட கேள்வியை இடம் மாற்றி பார்ப்பனர் வாயிலிருந்து வரவழைத்து அவர்களின் சமத்துவ சிந்த-னையை எடுத்துக் காட்டுகிறாராம்.
இந்தக் காட்சியில் கருப்பு டி.சர்ட் அணிந்திருக்கிறார் சத்யராஜ். பின்னர் எழும் போட்டியில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு கட்டுமஸ்தான உடலோடிருக்கும் சத்யராஜூம், சதுரங்கக் கட்டங்களைத் தாண்டாத பிருத்விராஜூம் ஓட்டப் பந்தயத்தில் மோத... அட... பார்றா... பயிற்சியே இல்லாமல் தன் தகுதியை நிரூபித்து சத்யராஜூக்கு சமமாக இடம் பிடிக்கிறார் பார்ப்பன இளைஞர்.
ஜாதிப் பற்று கொண்ட பார்ப்பனர் ராதாரவியோ, சத்யராஜை உசுப்பேத்த நீங்க மெரிட்ல வந்தீங்களா? இல்ல கோட்டா-ல வந்தீங்களா? என்று கேட்டு கோபத்தைத் தூண்டுகிறார். இடஒதுக்கீட்டை கோட்டா என்று கோட்டா (கேலி) செய்யாவிட்டால் கொட்டாவி வராதே அக்கிரகாரத்துக்கு!
அங்கு சுற்றி இங்கு சுற்றி மாமி எங்கு வருகிறார் தெரிகிறதா? போலிக் கருத்துரு-வாக்கத்தை குடும்பப்படம் என்ற பெயரில் போனி பண்ணுகிறார் இயக்குநர் பிரியா!
அக்கிரகாரத்துப் பெண்கள் பூணூல் அணிவதில்லை தான்; ஆனால் பூணூல் புத்தி போகுதோ?


- இளையமகன்


எவனோ ஓருவனல்ல: அவனும் அந்நியனே!

சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கிறேன் பேர்வழி என்று போட்டுத் தள்ளக் கிளம்பும் இளைஞர் பற்றிய சமூக விழிப்புணர்வுப் படம் என்று ஏகப்பட்ட திரைப்படங்கள் வருகின்றன. இந்த சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களின் பார்வை லஞ்சத்தைத் தாண்டி அப்பால் செல்லாது. ஜாதிப் பிரிவினையா? ம்ஹூம். சமூக நீதியா? மூச். அவ்வளவுதான்.
அப்படியொரு சமூக அக்கறை கொண்ட படம் எவனோ ஒருவன். மாதவன், சீமான் மற்றும் பலர் நடித்து, மாதவன் நடித்த மராத்தி படத்தின் தமிழ்ப் பதிப்பாக வந்துள்ளது. சாது என்றாலே தயிர்சாதம் என்று என்னதான் காம்பி னேஷன் வைத் திருப்பார்களோ தெரியாது! கதை நாயகன் நங்கநல்லூரில் அக்கிரகாரத் தெருவில் குடியிரு க்கும் ஒழுக்கமான, நாணயமான, சமூக அக்கறை யினால் சிறுதவறும் செய்யாத (பூணூல் மட்டும் அணிந்த) பார்ப்பனர். தனது தினசரி அலுவல் களுக்காக அலுத்துப் போகும் அளவுக்கு மின் தொடர் வண்டியின் நெருக்கடிக்கிடையில் பயணம் செய்யும் சாட்சாத் சென்னைக்காரர். ஆம்பிளையா இருந்தா ஏதாவது செய்யுங்கோ என்று ஆத்துக்காரி கிளப்பிவிடும் வேகத்தில், கோபத்தில் கிளம்பி கிரிக்கெட் மட்டையில் தொடங்கி குண்டில்லாத துப்பாக்கி வரை தனது ஆயுதங் களாக்கிக் கொண்டு வெறும் தமிழர்களாகப் பார்த்து பதம் பார்க்கிறார். தண்ணீர் வண்டிக்காரன், புரோட்டா கடை, லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்கள், அரசியல்வாதி என்று மாட்டுபவர்களெல்லாம் கருப்பர்களாகவே இருக் கிறார்கள்.
மனசாட்சியுள்ள காவல்துறை அதிகாரியாக இயக்குநர் சீமான் நடித்திருக்கும் வெற்றிமாறன் கதாபாத்திரமும் வேறு வழியின்றி மாதவனை சுட்டுத் தள்ளிவிட்டு இந்த சமூகததில் தன் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ முடியுமா என்ற சந்தேகத்தில் தனது மாமூல் வாழக்கையைத் தொடர்கிறது.
அவதார புருஷர்கள் அக்கிரகாரத்திலிருந்து தான் வருவார்கள் அக்கிரமங்களை அழித்தொழிப் பார்கள் என்ற ஆரிய சிந்தனையை பரப்பும் அந்நியன் போன்றவன்தான் எவனோ ஒருவனும்!

- சமன்


மீண்டும் ஒருமுறை முந்திரித் தோப்புகளிலும், பலாத் தோப்பு-களிலும், வாழைத் தோப்புகளிலும் நுழைந்து அதன் வாசனையை படம் பார்ப்பவர்களின் ஒவ்வொருவர்மீதும் தெளித்திருக்கிறார் மக்கள் இயக்குநர் தங்கர்பச்சான்.
சாதாரணமாக - திரைப்பட பார்முலா என்று பார்த்தால் இது செல்லாத நோட்டுதான். அந்த செல்லாத நோட்டு (கதாநாயகன்) எப்படி செல்லுபடியாக்கப்படுகிறது. என்பதை திடீர் திடீர் திருப்பங்களுடன் மசாலா கலந்து சொல்வதுதான். ஆனால், தங்கர் செல்லாத நோட்டை, செல்லாத நோட்டுகளாகவே காட்டி, அதில் மண்ணின் மணத்தை கண்ணீருடன் குழைத்து நமது நெஞ்சில் பாரம் ஏற்றுகிறார்.
கதைக்காக நடிகர், நடிகருக்காக கதை என்ற இந்த இரண்டு உத்திகள்தான் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறன. இந்த இரண்டிலும் கதைக்காக நடிகர் என்ற உத்திதான் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. விதி விலக்குகள் எதிலும் உண்டு. நல்ல படம் என்கிற வகையில் தங்கர்வெற்றி பெற்றிருக்கிறார். பெரியாராக நடித்த பிறகு, தனது நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை தொட்டு, உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையை, மரியாதையை - இனமுரசு சத்யராஜ் அவற்றை இதில் தக்க வைத்திருக்கிறார். ஒரு மாபெரும் கலைஞனை இத்தனை ஆண்டுகளாக `லொள்ளு - ஜொள்ளு என்று வீணடித்து விட்டிருக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு விருது கிடைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
கதை நடக்கும் களம் - ஏற்கெனவே தங்கர் படத்தில் பார்த்திருந்தாலும், கதை புதியது. மீண்டும் அவரது புதினம் படமாகியிருக்கிறது. பெற்றவர்கள் தவறு செய்தால் பிள்ளைகள் திருத்துவதாகவும், பிள்ளைகள் தவறு செய்-தால் பெற்றவர்கள் திருத்துவதாகவும் பார்த்திருக்-கிறோம். இதில் இருவருமே தவறு செய்கிறார்கள். பெற்றவர்களை புரிந்துகொள்ளாமல் சொத்தில் பாகம் பிரிக்கச் சொல்லும்போது பிள்ளைகள் தவறு செய்கிறார்கள் என்பதை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கவேண்டும் என்றில்-லாமல், பாசத்தால் கட்டுண்டு, கண்டிக்க இயலா-மல் வீசிய கையும், வெறும் கையுமாக மனைவியு-டன் வீட்டை விட்டு வெளியேறி, பெற்றவர்களும் தவறு செய்வதாக கதையை அமைத்திருக்கிறார். விளைவு குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போகிறது.
நாயகன் (மாதவ படையாச்சி) வாழ்க்கையை தொலைத்து, முதிய பருவத்தில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது கிராமத்திற்கு பேருந்தில் வருவதுபோல ஆரம்பிக்கிறது. அதில் பயணம் செய்யும் தனக்கு பேரன் உறவாக வேண்டியே வாலிபனுடன் பேச்சு கொடுக்க நேருகிறது. இருவரும் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள நமக்கு சுமை கூடுகிறது. அந்த வாலிபனிடம் தன் கதையை சொல்வதாக செல்கிறது கதை.
கதையில் வரும் ஒவ்வொரு-வரும் - தனது பங்கை தெளிவாக உணர்ந்து உள்வாங்கி நடித்திருப்பதால் கதை மெதுவாக நகர்ந்தாலும், அலுப்புத் தட்டாமல் இருக்கிறது. அர்ச்சனாவின் பாத்திரம் மட்டும் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. சத்யராஜ் ஓவியம் மிகச் சிறப்பாக செதுக்கப்-பட்டிருக்கிறது. அந்த பாத்திரத்திற்காகவே பிறந்ததுபோல கச்சிதமாக பொருந்துகிறார். பல இடங்களில் நடிப்பதே தெரியாமல் நடித்து மீண்டும் மீண்டும் தனது முத்திரையை பதிக்கிறார். குறிப்பாக மனைவி பாம்பு கடித்து இறந்ததும் பதறிப்போய் தள்ளாத வயதில் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு புலம்பிய-படியே செல்லும்போது, கலங்காத மனமும் கலங்கிவிடும். இறுதிக்காட்சியில் தனது பேரன் நடு இரவில் பசிக்கிறது என்று மழலைக் குரலில் கதறுவதைக் கண்டு நமக்கே அடி வயிறு கலங்கி விடுகிறது. அந்த உணர்வை துல்லிய-மாகக் காட்டி கச்சிதமாக கைதட்டல் பெற்று விடுகிறார். அந்த மன அழுத்தத்திலே இறந்து விடுவதாக காட்டுவது பொருத்தம்.
நாடே இந்துத்துவத்தால் மனித நேயம் துறந்து, இந்துக்கள் என்றும், இஸ்லாமியர் என்றும், கிறித்துவர் என்றும் ஆயிரக்-கணக்கான ஜாதிகளாலும் பிரிந்து கிடக்கையில் சத்யராஜ், நாசர் நட்பு கண்ணிய-மாகவும், கவிதையாகவும் காட்டி உள்ளத்தை நிறைக்-கிறார் தங்கர். ஆனால் கோவணாண்டி-யாக கோணல்மாணலாக நடந்து நமது கவனத்தை கவர்ந்த (இவர்தான் வில்லனாக சித்தரிக்கப்-பட்டிருக்கிறார்) மனிதரின் மகள் தன் வீட்டு வேலைக்காரனை காதலித்து, கலந்து கருவையும் சுமந்து நிற்பதை அறிந்து தன் மகளாகவே இருந்தாலும் வெட்டிப் போடத்-தான் வேண்டும் என்று அரிவாளை தூக்கி நிற்கும் பொழுது, வேறு காரணம் எதுவும் சொல்லா-மல் சத்யராஜ், போனாப் போகுது உன் ஜாதிக்காரன்தானே கல்யாணம் பண்ணி வை என்று சொல்லும்போதும், தன் மகன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதை பார்த்துவிட்டு கருத்து எதுவும் சொல்லாமல், அந்தக் காதலை எதிர்க்கும் தன் மனைவியான அர்ச்சனாவை ஆறுதல் படுத்துவதும், மதத்தில் காட்டும் கண்ணி-யம், ஜாதியில் ஏன் காட்டவில்லை? என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை கதைக்-காக சொல்லப்பட்டு இருந்தாலும், இன்னமும் கிராமங்களில் பொத்தி பொத்திப் பாதுகாத்து-வரும் ஜாதிய வேறுபாடுகளின் வெளிப்-பாடாகத்-தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தவிர்த்-திருக்கலாம்.

ஒளிப்பதிவும், பாடல்களும், பின்னணி இசையும் கதையோட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது நல்ல ஆறுதல். இறுதியில் சத்யராஜூயுடன் தொடக்கத்தில் பேருந்தில் வந்த அவருடைய பேரன் (நேரடி பேரனல்ல) விடுமுறை முடிந்து மீண்டும் பட்டணத்திற்குப் போவதா வேண்டாமா, என்று தயங்கி கடைசியில் நச்சரிக்கும் அவனு-டைய தாயிடம் தனக்கு தலைவலி என்று படுத்துக்கொள்ளும் போது, உறவுகளின் பெருமையும், இது போன்று மதில்மேல் பூனையாக கோடானுகோடி மக்கள் வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்லி படம் முடிகிறது.
நம் மனம் கனக்கிறது. - உடுமலை வடிவேல்