தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
பெண்கள் சாமியார்களை
அணு அணுவாய் - 4
மறக்கமுடியுமா?
கவிதை
சிறுகதை
எது உண்மை?
நீங்கள் எப்படி?
பழங்குடிகள்
ஹாலிவுட் கலை-11
வரலாறு
நூல் அறிமுகம்
மருத்துவம்
சிறந்த நூலிலிருந்து
தமிழர்கள் மீதான
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

சமஉரிமை கோரும் துரும்பர்கள்

ஊருக்கு ஒரு குடி என்றும் ஏகாலி, இரவாலி என்றும் அழைக்கப்பட்ட சேரி வண்ணார்கள், துரும்பர்கள் என்ற வரலாற்றுப் பெயரோடு ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். சேரிக்குள் சேரியாக ஒதுக்கப்பட்டவர்களாலேயே ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் சேரி வண்ணார்கள் தலித் விடுதலைப் போராட்-டங்களின் புது அத்தியாயமாக தங்களுக்-கென புது அடையாளத்தையும் அங்கீ-காரத்தையும் நிலை நாட்ட உரிமை கோரும் மாநாட்டை 2007 நவம்பர் 10 இல் விழுப்புரத்தில் நடத்தினார்கள்.
இம்மாநாட்டில் துரும்பர்களின் வாழ்-வாதார உரிமைக்காக கடந்த 6 ஆண்டு-களாகப் போராடி வரும் சாதனைப் பெண் விருது பெற்ற கொன் சாகா சபையைச் சேர்ந்த அருட்சகோ அல்போன்ஸ் பாராட்டப்பட்டார்.
சேரி வண்ணார்களில் 80 சதவிகிதம் மேற்பட்டோர் கத்தோலிக்க கிறித்தவர்-களாவர்.
சாதி படிநிலையிலே கடைசியில் இருக்கும் சேரி வண்ணார்கள், சாதியாலும், அரசாலும், மதத்தாலும் புறந்தள்ளப்பட்டு காலங்காலமாய் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். அனைவரும் இவ்வுரிமை கோரும் மாநாட்டில் கலந்து கொண்டு தாங்கள் இழந்துள்ள உரிமைகளை கட்டாயமாக பெறுவோம் பெறும் வரை போராடவும் தயங்கமாட்டோம் எதிர்வரும் பிரச்சினைகளையும் தகர்த்-தெரிய முற்படுவோம் இலக்கை அடையும் வரை - என்று மக்கள் அனைவரும் உறுதி-யேற்றனர்.
துரும்பர் விடுதலை இயக்க அமைப்-பாளர் அருட்தந்தை அருள்வளன் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். துரும்பர்களுக்கு இலவச குடியிருப்புகளை உருவாக்கித்தர வேண்-டும், விதவைகள் மற்றும் முதியோர் கட்டாய குலத்தொழிலைத் தடுக்க அவர்களுக்கு மாற்றுத் தொழிலை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிகைகள் வலியுறுத்தப்பட்டன.


ஒரே கூட்டமைப்பு

சமுதாய முன்னேற்றத்தில் பெண்-களின் பங்கு முக்கியமானது. பெண்-களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம். அதற்காக நாட்டில் உள்ள பெண்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வரவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில சமூக நல வாரியங்கள் எடுக்க வேண்டும்.
- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்


ஜாதிகளை ஒழிக்கும் இணையதளம்

இணையதளம் (Website) அறிவின் சாளரமாக நம் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. உலகைச் சுருக்கி உள்ளங்களை இணைக்கும் பணியைச் செய்கிறது. வாழ்க்கை இணையர்களைத் தேர்வு செய்யும் மேடரிமோனியல் (Matrimonial) இணைய தளங்கள் மத, மொழி, ஜாதி, இன வேற்றுமைகளைக் கடந்து மனிதம் வளர்க்கும் பணிகளைச் செய்கின்றன. இந்தியாவில் 90 சதவிகித திருமணங்கள் இன்னமும் உறவினர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மீதமுள்ளவர்கள் மேட்ரிமோனியல் இணைய தளங்கள் மூலம் மணமகன், மணமகளைத் தேடுகின்றனர். இவர்களில் 50 சதவிகிதம் பேர் ஜாதி,மொழிப் பாகுபாடுகள் பார்ப்பதில்லை. பெண்கள் தங்களுக்கு மணமகன் தேடும்போது தங்களுக்கு இணையான கல்வித் தகுதி, பொருளாதாரத் தகுதி உள்ளவரையே பார்த்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்கின்றனர் என்று அண்மையில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி திவ்யா மாத்தூர் மேற்கொண்ட தனது பி.எச்.டி. ஆய்வில் தெரியவந்துள்ளது.