தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

தந்தை பெரியார்

தமிழர்கே உரிய பொங்கள்

பொங்கல் என்பது - தமிழனுக்கு பார்ப்-பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.
இந்தப் பண்டிகையின் பொருள் என்ன-வென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வவ்வாண்டு முதல் தடவையாக சமைப்-பது மூலம் பயன்-படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பது தான் பொருள். இது தமிழனுக்கே (விவசாயிக்கே) உரியதாகும்.
பார்ப்பனக் கற்பனை இல்லாத பண்டிகை
நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதை-களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்-பனரால் கற்பனை செய்தவைக-ளேயாகும்.
இது விவசாயிக்கு உரிய பண்டிகை ஆனதினால்தான் - முதல்-நாள் தானியம் சமைக்கும் பண்டி-கையும், அடுத்தநாள் விவசாயிக்கு முக்கியமான - இன்றியமையாததுமான கால்-நடை ஜீவன்-களைப் பாராட்-டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டி-கையாக ஏற்பாடு செய்யப்-பட்டிருக்கிறது. அதனால்-தான் இந்த நிகழ்ச்சி-களுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்-கப்பட்டு வருகிறது.
மூதேவி வருவதைத் தடுக்க வேண்டுமாம்
இதைப் பார்ப்-பனர்கள் தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்றவண்ணம் திருத்தி, கற்பனை செய்து, இதை சங்கராந்திப் பண்டிகை என்று ஆக்கி, இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்தி விட்டார்கள்.
இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்கி, அந்த நாளில் துஷ்ட தேவதை-யான மூதேவி மக்களைப் பற்று-வதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்-பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால் மூதேவி வராது உள்ளே நுழையாது என்றும்; மற்றும் பல முட்டாள்-தனமாக கருத்துக்களைக் கற்பனை செய்து, மக்களை அறிவிலியாக ஆக்கி விட்டார்-கள். மற்றும் இப்பண்டிகைக்குப் போகி பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.
கிருஷ்ணன்-இந்திரன் மோதல் என்று கட்டுக்கதை
இந்தப் போகி என்னும் சொல்லுக்குப் போக போக்கியங்களை அனுபவித்தவென்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்த கருத்துக் கொண்டே போகி பண்டிகை என்பதையும், பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக்கதை உண்டாக்கி இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோதச் சம்பவம் என்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கிவிட்டார்கள். இவையெல்லாம் மகா மகா புரட்டுகளாகும். எப்படி எனில் கிருஷ்ணனையும் இந்திரனையும் இவர்கள் யார்? எப்போது இருந்தார்கள். இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது? இவர்கள் எவ்வளவு அற்பர்கள்? என்றெல்லாம் பகுத்தறிவுப்படி பார்த்தால் இதன் புரட்டு வெளியாகும் எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனருக்கு இதில் ஏதும் சமபந்தமில்லை.
கலப்பையைத் தொட்டால் பார்ப்பானுக்கு பாவம்
இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்கு சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்பது ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றது யாவரும் அறிந்ததே.
இந்தக் கன்னிப் பொங்கல் என்பது சிறு பெண்களை - அதாவது பூப்படையாத - கல்யாண-மில்லாத - கலவி அறியாத பெண் என்பவர்கள். இந்தவிதமான சிறு பெண்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆகஅவர்-களையே கொண்டு சமையல் செய்யப்படு-வதாகும். இதில் பெரிய பெண்கள் அந்த சிறு பெண்களுக்கு சமையல் முறை சொல்லிக் கொடுப்பார்கள். ஆகவே, இந்த நிகழ்ச்சி-களுக்குத்-தான் பொங்கல் - மாட்டுப் பொங்கல் - கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்கத் தமிழர்களுக்கே உரிய தமிழர் (பார்ப்பனரல்லாதார்) பண்டிகையாகும். எப்படி எனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். இதை நமது பண்டிகை என்னும் நூலில் விவரமாகக் காணலாம்.
(விடுதலை 14.1.1972)