எந்த கடவுள் பெரியவர் உன் கடவுளா - என் கடவுளா அகோபில மடத்து
ஐயர் கோதாவுக்குள் குதிக்கிறார்
 |
`இந்து மதம் என்று ஒரு மதம் முன்னர இருந்து, பின் அது அழிந்துவிட்டது போலவும் இப்போது அதை புனரமைக்கப் போவதாகவும் கூறிக் கொள்கின்றனர். சிலர் முக்கியமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவரும் இந்து முன்னணியினரும்.
தந்தை பெரியார் முதல் அறிஞர்கள் பலரும் இந்து மதம் என்ற ஒரு மதமே இருந்தது கிடையாது என்று கூறி உள்ளனர். சைவம், வைணவம் முதலான மதங்கள்தான் இருந்த-னேவே தவிர, `இந்து என்ற ஒரு மதமோ, அதற்கென்று கடவுள் மறறும் கொள்கைகள் எதுவும் கிடையாது. சைவம், வைணவம் இவைகளுக்கென்று தனித்தனியே கடவுளரும் சித்தாந்தங்களும் உள்ளன.
வைஷ்ணவ மதத்துத் தலைவரான அகோபில மடத்து ஜீயர்கள் அழகின சிங்கம் அரவ்-கள் சமீபத்தில் தெரிவித்தள்ள கரத்துக்-கள்கூட இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை-யென்பதை வலியுறுத்துவதாய் உள்ளன. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று 11-4-1982 கல்கி இதழில் வெளிவந்துள்ளது.
திருவரங்கத்தில் பெருமாள் கோவிலில் மொட்டைக் கோபுரம் என்று வழங்கப்பட்டு வந்த கோபுரத்தை சீர் செய்து இந்தியாவி-லேயே மிகவும் உயரமான (226 அடி உயரம்) நெட்டை கோபுரமாக ஆக்கும் வேலை (திருப்பணி) அகோபிய மடத்து ஜீயரின் தலைமையில் நடந்து வருகின்றது.
அந்த வைஷ்ணவ கோவிலின் கோபுரம் அமைக்கும் வேலைக்கு சைவ மதத்தைச் சேர்ந்த வரான காஞ்சி சங்கராச்சாரியாரும் மற்றும் பல சைவர்களும் பண உதவி ய்துள்ளனர். ``இதேபோல சைவ ஸ்தலப் பணிகளுக்கு வைணவர்-கள் ஏன் உதவுவதில்லை? நீங்கள் சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்-வீர்களா? என்ற கேள்விக்கு ஜீயர் தந்துள்ள பதிலைப் பாருங்கள்.
``நான் சிவன் கோயில்களுக்குச் செய்யமாட்-டேன். ஏன்னு கேட்டால், சிறீமத் நாராயணன்-தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம் பிரம்-மாவை நாராயணன் தன் நாவிலிருந்து படைத்-தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் ரூபண ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்-போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்-கிறவர். அவரை வழிப்படற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம். நாராயணனனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள். நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கி வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்கு சங்-கடம் இருக்கு. ஏன்னா, அங்கே போனா புத்தி கெட்டுப்போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டேன்.
ஜீயரின் இந்தப் பதிலிருந்து தெரிவது என்ன? வைச மதம் இருக்கிறது, வைணவ மதம் இருக்கிறது. ஆனால், இந்து மதம் ஒரு மதம் இல்லை. இந்து மதத்தை ஏற்றுக் கொண்டிருந்-திருப்பாரானால், அகோபில மடத்து ஜீயர், ``நான் சிவன் கோயிலுக்கு உதவ மாட்டேன் என்று கூறுவாரா? ``சிவபெருமான் சாதாரண கடவுள். நாரயணன் அல்லாத மற்றவைகள் எல்லாம் சாதாரண தெய்வங்கள்! அவற்றை நான் வணங்கமாட்டேன். அங்கு சென்றாலே புத்தி கெட்டுப் பேஆம் என்று கூறுவாரா?
சிலர் புத்திசாலித்தனமாக கேட்பதாக எண்ணிக் கொண்டு கேட்கலாம். ``நாராயணன் சிவனுக்கு பாட்டனார்தானே. எனவே இரண்டு மதங்களையும் இந்து மதத்தின் விரிவுகளாக ஏன் கருதக்கூடாது? என்று
முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தாங்கள் ஆப்ரகாம் (இப்ராஹிம்) என்பவரின் வழியில் வந்தவர்களாகத்தான் கூறிக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் ஒரே மதமாக ஆகிவிடுவாரா?
வைஷ்ணவர்கள் சிவனை கடவுளாகவே ஏற்றுக் கொள்ளாதபோது, ஏன் எங்கே இருக்கிறது இந்து மதம்? எனவே, இந்து மதம் இல்லாதது. இருப்பது சைவம். வைணவம் போன்ற மதங்களே.
வர்ணாஸ்ரமம்
வர்ணாஸ்ரம `தரமமானது மக்களை பிராமணன், க்ஷத்திரிகள், வைசியன், சூத்திரன் எகனறு நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றது. இப்பிரிவு பிறப்பு வழியாகவே அமைந்துள்ளது. ஆனால் சிலர், ``வர்ணாஸ்ரமம் மக்களை பிறப்பினால் பிரிக்கவில்லை. அவர்கள் செய்யும் தொழிலை வைத்துத்தான் நான்கு வரணங்-களும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்-பத்திலேயே நான்கு வரணத்தாரும் இருக்கலாம். செய்யும் தொழில் மாறுபடும்போது வருணமும் மாறிவிடும் என்ற இக்கொடுமையான பிரிவினைக்கு `சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
இவர்கள் வாதத்தையும் தவிடு-பொடி-யாக்கிவிடுகிறார் அகோபில மடத்து ஜீயர்.
சுப்பிரமணிய பாரதியார்கூட தனது ஜாதக் குழப்பம் என்ற கட்டுரையில் கீழ் ஜாதியாரை நல்ல ஸமஸ்காரங்களால் பிராமணர்-களாக்கிவிட முடியுமென்றுறம் எந்த ஜாதினாயிருந்தாலும் சரி, அவனை ஸ்ணப வேறு வேறு பிரிவாக இருந்த மக்கள் அனை-வரும், ``பிராமணருக்குத் தொண்டு செய்யப் பிறப்பிக்-கப்-பட்ட `சூத்திரர் என்ற எண்ணத்திற் ஆட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்களிடையே தாழ் நிலையில் இருந்த உழைப்பாளிகளான ஆதி திராவிடர்களை தீண்டப்படாதவர்கள் பஞ்சமர்கள் எனவும் வகைப்படுத்தினர்.
பிராமணர்களுக்குச் சூத்திரர்களும் தீண்டப்-படாதவர்களே! சூத்திரகட்கும் தீண்டப்-படாதவர் பஞ்சமர்! வடநாட்டில் ஆரியக் கலாச்சார ஆதிக்கம் வளர்ச்சியுற்ற வந்த காலத்தில் வடிவு கொண்டு பிராமண, க்ஷத்திரிய, வைசீய, சூத்திரர் என்னும் நால்-வகைச் சாதி முறையும் அதன் உயர்வு தாழ்வும் தென்னகத்தில் அதேபோன்று இடம் பெறவில்லை. இங்கே ஆரியம் மத குருமார் வடிவம் கொண்ட பிராமணர்கள் பெற்ற செல்வாக்கின் பயனாக நாட்டு மக்கள் அனைவரையும் சூத்திரர் எனப் பறை சாற்றியது.
ஆரியர் திராவிடர் உறவின் விளைவு
பிராமணியச் செல்வாக்கு முதலில் பல்லவர் ஆட்சியிலும், பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியிலும் வேரூன்றி, ஏராளமான சதுர்வேதி மங்கலச் சாரனக் கட்டளைகளுடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்ததலாயிற்று. அதன் தொடர்-விளைவாக குறுநில மன்னர், நிலவுடை-மையாளர், செல்வம், வணிகர் முதலானோர் பிராமணியத்தை ஏற்கும் நிலை வளர்ந்து, வருணாசிரமக்கேடு பால்கொண்டு, மற்ற மக்கள் (உழைப்பாளரிகளும், உழவர்களும்) அதனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதன் சூதான விளைவை அறியாமலே அதனை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
மக்களின் தெய்வ நம்பிக்கையையே ஏதுவாகக் கொண்டு, அந்த மக்களின் தெய்வங்-களின் வரலாற்றையே திரித்து, பெயரையும், வழிபாட்டு முறையையும் மாற்றி,ப தாமே அர்ச்சகருமாகி, மதக்குருமார்களுமாகி, அந்த மக்களின் தன்னிகரற்ற மொழியையும் தாழ்த்தி ஒதுக்கி இழிவுபடுத்தி தமது இன மொழியான வட மொழியை உயர்வாகக் கற்பித்து, ஆதிக்க மொழியாக்கி, மற்ற மக்களையும், இழிபிறவி-களே என்று நம்ப வைத்து, தெய்வ பக்தியில் தம்மை மறந்த தன் இனம் அறியாத ஏமாளிக்-கூட்டமாக ஆக்கி, ஒருவகை அடிமை மனப்பான்மையில் ஊறியவர்களாக மாற்றி-விட்ட வரலாறுதான், ஆரிய - திராவிடக் கலாச்-சார உறவு விளைவித்த வரலாறு ஆகும். |