தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

எப்படி?

கொம்பேறி மூக்கன் - கன்கொத்திப் பாம்பு உன்டா?

கொம்பேறி மூக்கன் பாம்பு கடித்தால் மனிதன் சாவான். அவன் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போனார்களா என்பதை அந்தப் பாம்பு மரத்தின் மேல் ஏறிப்பார்க்கும் என்று சொல்வார்கள். எல்லாம் கதைதான். புளுகுதான்.
மரத்தில் இருக்கும் பாம்பு ஒன்று உண்டு. பச்சை நிறத்தில் மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு தேமேனு கிடக்கும். இதன் பெயர் அதனாலேயே (Emerald Tree Boa) என்று பெயர். இந்த வகைப் பாம்புகளின் இரையைத் தாக்கும் வேகம் மிக அதிகம். மரக்கிளைகளில் அமரும் பறவைகள், அருகில் பறக்கும் பறவைகள் ஆகியவற்றின் தலையைக் குறிவைத்துத் தாக்கிச் சாப்பிடும். பார்க்க: படங்கள்.
கண்கொத்திப் பாம்பு என்று எதுவும் கிடையாது. கண்களில் விஷத்தைப் பீய்ச்சி அடிக்கும் பாம்பு உண்டு (Spitting Cobra) பொதுவாகவே பாம்புகள் தாமாக எதையும் தாக்கா. தன்னைத் தாக்க வரும் எதிரிகளைத் தாக்கும். அந்த வகையில் ராஜநாகம் (முபே ஊடிசெய) மட்டும் வித்தியாசமானது. மனிதனைத் தாக்கிப் பயமுறுத்தப் படம் எடுத்து 3,4 அடி உயரத்துக்குக் கூடத் தன் தலையைத் தூக்கும்.
விஷத்தைப் பீச்சி அடிக்கும் பாம்புகள் ஆசிய, ஆப்ரிக்கக் காடுகளில் உண்டு.