தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

இசை

தமிழில் இசை இல்லையா?

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக அகழ்-வாராய்ச்சியில், யாழ் முத்திரையும், குழுவின் முத்திரைகள் இரண்டும், தவுல் வைத்துள்ள ஆண் மகன் களிமண் உருவம் ஒன்றும், இன்றும் ஊதக்கூடிய ஊது ழல் ஒன்றும் கஞ்சக் கருவிகளும் இசைப்புதையல்களாகக் கண்-டெடுக்கப்பட்டன! தமிழின் இசைப் பழமைக்கு இந்தப் பழமை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
வள்ளுவர் கண்ட இசை
கிமு. 31இல் பிறந்த திருவள்ளுவர் தம் குறள் பாக்களில்,
யாழினிது குழலினிதுஎன்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
எனக் குழல் பற்றியும், பண்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பரிபாடலில், தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னன் பொருப்பன் எனப் பாண்டியன் முத்தமிழும் அறிந்தவன் எனக் குறிப்-பிட்டுள்ளது.
மலை மூங்கிலின் - வண்டு துளைத்த துளையில் காற்று புகுந்து இசையெழுப்பிய புல்லாங்குழலே உலகின் முதல் இசை என்கின்றனர்!
ஆடமைக்குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை யவ்வழி குரலிசையாக என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது.
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி!
கொன்றையந்தீங்குழல் கேளாமோ தோழி!
ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழி! - என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழிலார் குழலிசையைக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியத்தில் அகத்திணையில் கருப்-பொருள்களில் ஒன்றாக யாழும் குறிப்பிடப்-பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பேரியாழ், மகர யாழ், சகோடயாழ், செங்கோட்டி யாழ் என நால்வகை யாழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் சீறியாழும் இருந்தது.
திருக்குறள் வீ. முனுசாமி, தம் பண் ஆராய்ச்சி உரையில், தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நால்வகை இசைக்கருவிகள் தமிழகத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இராசராசனின் பெரிய பாட்-டனார் கண்டராதித்தன் திருவிசைப்பா என்ற இசைப் பாடலைப் பாடியுள்ளார். முதலாம் குலோத்துங்கச் சோழன் சிறந்த இசைப்-பாடலாசிரியர். வாழிசோழ என்ற கலிங்-கத்துப் பரணி பாடல் குலோத்துங்கச் சோழன் இசை நூல் எழுதியதைக் குறிப்பிடுகிறது மன்னனின் பட்டத்தரசி ஏழிசை வல்லபி இசையில் வல்லவராய் இருந்தார்.
பெருங்கதையில் யாழ் குறிப்பிடப்-பட்டுள்ளது சீவக சிந்தாமணியில், விருந்தாக யாழ் பண்ணி வீணைதான் தோற்பான் என யாழிசைத்து வீணையில் தோற்பான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலத்தை வென்ற கல் வெட்டு!
புதுக்கோட்டை மாவட்டக் குடுமியான் மலைக் கல்வெட்டை முதலாம் மகந்திரவர்-மன் ஏற்படுத்தினான். இதுதான் உலகிலேயே இசைக்கு வெட்டப்பட்ட முதல் சாசனமாகும்! அதில் காந்தாரம், கைசிக மத்திமம், பஞ்சமம், சாதாரிகம் முதலிய பண்கள் குறிப்பிடப்-பட்டுள்ளன. இசைக் குறிப்புகள் உள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்தனர். இசைத் தொண்டு செய்பவர்களை தேவாரநாயகம் எனக் கல்வெட்டில் அரசன் பொறித்துள்ளான். யாழிசைக்கும் பாணர்களும் அங்கிருந்தனர்.
இந்தியா முழுவதும் சிந்து பாடிய இசை!
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகார்ச்சுன கொண்டாவில் அய்ந்து நரம்புகள் யாழும், நான்காம் நூற்றாண்டில் அசந்தா குகையில் ஒரு யாழும், எட்டாம் நூற்றாண்டில் அவுரங்காபாத் சிற்பத்தில் ஒரு யாழும் காணப்படுகிறது. திராவிடர்களின் இசை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் சிந்து பாடிச் சிறகடித்துப் பறந்திருக்கிறது!
பழங்கால இசைக் கலைஞர்கள் தொல்காப்பியத்தின் புறத்திணையியலில்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்னபக்கமும்
எனப் பழங்கால இசைக்கலைஞர்களைப் பற்றிக் காண்கிறோம்.
சிலம்பின் முப்பது காதைகளுள் பத்துக் கதைகளுக்கும் மேலாக இசைப்பாடல்கள் உடையதாக உள்ளன.
கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, கந்துகவரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தின் இசைப்பாடல்களாகும். எண் வகையால் இசை வழீஇ என்பதில் வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல் போன்ற எட்டு வகையாக யாழ் மீட்டல் உள்ளன என்பதைக் குறிக்கும். இன்னும் அள்ள அள்ளக் குறையா அமுத சுரபி-யாகவும் அரும்பெரும் இசைக் களஞ்சிய-மாகவும் சிலப்பதிகாரம் சிறந்து நிற்கிறது.
இறந்த இசைநூல்கள்

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம் சில சூத்திரங்களுடன் இருந்தன எனவும் - அகத்தியம், குருகு, கூத்த நூல், தாள-வகையோத்து பெருநாரை முதலியன இறந்த இசை நூல்கள் எனவும் குறிப்பிடுகிறார்.
சாமவேதத்திலிருந்து இசை வந்ததா?
கி.பி. 5ஆம் நூற்றாண்டில்தான் எழுத்தறியா வேத மொழியைப் பேசி வந்த ஆரியர்-களுக்குப்பாணினி சமசுகிருதத்தை உண்டாக்-கினார். கி.பி. 5ம் நூற்றாண்டில் பரதரால் எழுதப்பட்ட நாட்டிய சாத்திரம் எனும் நூலில் இந்திய இசை சாம வேதத்திலிருந்து பிறந்தது என எழுதியுள்ளார். ஆனால், அவரே,
தத்ர தாணாத் யாஸ்தாவத் ப ஹூ
கைசிகிம்ராய சதுர மதுர லலிதாங்கா
தசிணஸ்யா ஸமுத்திரய்யா ததா
விந்தயஸ்தா சாந்தரெ என்ற சுலோகத்தில்
தென்னிந்திய மக்கள் பற்பல நடனங்களிலும் வாய்பாட்டிலும் வாத்தியச் சங்கீதத்திலும் தனிப்பட்ட ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்-களின் கலைகளில் அழகும் மதுரமும் இன்றி-யமையாதவைகளாக உள்ளன. அவி நயங்கள் பொலிவுடன் உள்ளன. இத்தகைய நுண்-கலைகள் உள்ள நாடு, வடக்கே விந்தயமும் மற்ற- மூன்று பக்கங்களிலும் கடல்களாலும் சூழப்-பட்டுள்ளன எனத் தெளிவாகக் கூறுகிறார்.
சாமவேதத்திலிருந்து இசையா? மனு மறுப்பு!
இருக்கு வேதத்தில், ஆரிய முனிவர்கள், சாமகானம் நரி ஊளையிடுவது போலவும் தவளை கத்துவது போலவும் உள்ளன எனக் கூறுகின்றனர். மனுதருமம் எழுதிய மனு, அந்த இசை ஒழுங்கற்றது; சாம வேதத்திற்கு உரியது அன்று என மறுத்துள்ளார். ஆதலால் சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறக்கவில்லை என்பது வெள்ளிடைமலை.
1. சீர்காழி முத்துத்தாண்டவர் (கி.பி. 1500-1600) இவர்தான் தமிழ்ப் பண்ணிசைகளுக்கு முதன் முதலில் கீர்த்தனை வடிவம் கொடுத்து, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அமைப்பைத் தந்தவர் ஆவார்.
2. தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை. கி.பி. 1712இல் பிறந்தார். இவர் பாடிய நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளில் 25 மட்டுமே கிடைத்தன.
3. சீர்காழி மு.அருணாசலக் கவிராயர் கி.பி. 1745இல் பிறந்தார். இவர் இராமாயண நாடகக் கீர்த்தனை என்னும் இசை நாடகத்தை எழுதினார்.
தியாகராயர். இவர் 1767இல் பிறந்தவர். இவர் புரந்தரதாசர், அன்னமய்யர் மூலம் கீர்த்தனை-களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்வது பொய்! ஏனெனில் அன்னமய்யர் இறந்தது கி.பி. 1503. தியாகராயர் பிறப்பு 1767 ஆகும். முத்தமிழ் முழங்க திருவையாற்றில் வளர்ந்ததால், இவர் மேளக்காரர், முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகியோர் கீர்த்-தனைகளை அறிந்து தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். மேளக்காரர்கள் பாணர் வழி வந்தவர் என்பர்.
சியாமா சாஸ்திரி தெலுங்கில் கீர்த்தனங்-களைத் தந்தார் சில தமிழ்க் கீர்த்தனங்களையும் தந்துள்ளார். முத்துசாமி தீட்சதர் வடமொழி-யிலும் தெலுங்கிலும் கீர்த்தனங்கள் பாடியுள்ளார்.
இசைத்தொண்டில் இருவர்
1. ஆபிரகாம் பண்டிதர் (2.8.1859-31.8.1919) இவர் திருக்குற்றாலப் பக்கமுள்ள சாம்பூர் வடகரை சாமபுவனோடை எனும் ஊரினர். தஞ்சையில் தம் சொந்தச் செலவில் 1912-1917 வரை ஏழு இசை மாநாடுகளை நடத்தினார். 1916இல் பரோடா அகில இந்திய இசை மாநாட்டில் கலந்து கொண்டு இன்றைய இந்திய இசை பழந்தமிழர் இசையே யாகும் என மெய்ப்பித்தார். தமிழனின் ஆய்பாலையே இன்றைய கருநாடக இசை என விளக்கினார். நமது செம்பாலைப் பண்தான் எல்லா இராகங்களுக்கும் தாய் என்றார்.
2 விபுலானந்த அடிகளார் (29.3.1892-19.9.1947) இவர் ஈழநாட்டில் பிறந்தவர். பழந்தமிழ் இசைக் கருவிகளையும் இலக்கியச் சான்றுகளையும் ஆராய்ந்து கி.பி. 1947இல் யாழ் நூல் என்ற இசைத் தமிழ் இலக்கண நூலை வெளியிட்டார்.
பண்ணத்தியே கீர்த்தனை
தொல்காப்பியத்தில்,
பாட்டிடைக் கிடந்த பொருளவாகிப்
பாட்டின் இயல்பே பண்ணத்தி என்ப
எனக் கூறப்படுகிறது. பண்ணத்தி என்றால் பண்ணுடைய பாடல் ஆகும். இதுவே இன்று கீர்த்தனையானது.
பல்லவி, பல்லவம் என்றால் தளிர். பல்லவி எடுப்பு என்றால் மலர்ந்த மலர். கண்ணி என்றால் மாலை. இசையானது தளிராகி மலராகி மாலையாவது போல இசைக்கப்-படுகிறது என்பதே பொருள்எனப் புலவர் குழந்தை யாப்பதிகாரத்தில் கூறுகிறார்.
இசையிலே பிறந்து இசையிலே முடியும் வாழ்வு!
பத்துப்பாட்டின் மதுரைக் காஞ்சியில் பிள்ளை பெறும் ஒரு தாய் நலம் பெறச் செவ்வழிப் பண் பாடப்பட்டதாம். தாலாட்டு, கும்மி, நடவுப் பாட்டு, ஏற்றப்பாட்டு, பூசாரிப் பாட்டு, தெம்மாங்கு, சிந்து, கழங்கு, ஊசல், அம்மானை, ஒப்பாரி.... என எண்ணிலா இசைப்பாட்டுகள் தமிழனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பாடப்-பட்டு வந்துள்ள இத்தகைய இசைப் பெருக்கம் எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் இல்லை என்பேன்!
சரிகமபதநி...
இசையின் ஏழு சுரங்களான ஷட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய வடமொழிக்கு ஈடாக முறையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்கப்-பட்டன.
இராகலட்சணங்கள் இல்லையா?
வடமொழியில் கரகரப்பிரியா என்பதைத் தமிழில் படுமலைப் பாலை என்றும், கல்யாணியை அரும்பாலைப் பண் என்றும், அரிகாம்போதியைக் கோடிப் பாலைப் பண் என்றும், தோடியைச் செவ்வழிப் பாலைப் பண் என்றும் வழங்கப்பட்டு வந்த இராகலட்-சணங்கள் தமிழில் இருந்தன; மறைந்தன! ஆரியத்தால் மங்கின! அழிந்தனவும் உண்டு!
ஆலாபனம், கமகம்
ஆலாபனம் என்பதைத் தமிழர் ஆலத்தி என்றும் - ஆரோகணம், அவுரோகணம் என்-பவைகளை ஏற்றம், இறக்கம் என்றும், கமகம் என்பதனை அலுக்கு என்றும் அழைத்தனர்.
மனுநீதி சாத்திரப்படி அத்தியாயம் 15இல் பார்ப்பனர்கள் இசைபாடி பொருள் ஈட்டக்-கூடாது என்று இருக்கின்றதே! ஆனால், இன்று இசை அவர்களின் சொத்தாகக் கருதப்-படுகிறதே!
அறிவுலக மேதை அன்றே சொன்னார்!
தமிழர் என்றும் தமிழர் அல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது என்று தமிழர்-களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெரு-மான்களே, தமிழில் பாட வேண்டும் என்பது, பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை உலகத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் தமிழர் அல்லாதவர் உணர்ச்சியைக் குறையச் செய்-பவர்களா? அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்பவர்களா? என்று கேட்கிறேன் என அறிவுலக மேதை தந்தை பெரியார் அவர்கள் அன்று ஆத்திரப்பட்டு வினாக்களைத் தொடுத்துள்ளார் (குடிஅரசு, 19.2.1944)