ஹாலிவுட் கலைவாணர் - 12

1932இல் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் சாப்ளினுக்கு விருந்து அளித்தார். அப்பொழு தெல்லாம் ஸ்டுடியோ முதலாளி-கள்தான் பட முதலாளிகளும். நான்கு அய்ந்து முதலாளிகள்தான் ஒட்டுமொத்த ஹாலிவுட்-டையும் ஆதித்யம் செய்தார்கள். அப்படிப்-பட்டவர்களில் ஒருவர் ஆடம்பரக் கப்பல் ஒன்றில் விருந்து தந்தார். அங்கே தான் அவர் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அழகி அல்ல என்றாலும் கவர்ச்சிக் கன்னி. அது போதாதா இவரை வலையில் வீழ்த்த? இவரும் வீழ்ந்தார். அவள் பெயர் பாலின் லெவி (Pauline Levy) அவனுடன் சேர்ந்து கண்ட இடமெங்கும் சுற்றினார். அவனைக் காதலிக்கத் தொடங்-கினானாம். அவளை வைத்துப் படம் எடுக்கவும் முடிவு செய்து விட்டார். அதற்கு முன் அவர் செய்த காரியம் நம்மூர் பாரதிராஜாவைப் போல அவளின் பெயரை மாற்றினார். பாலெட் காடெர்ட் (Palette Goddard) எனப் புதுப் பெயர் சூட்டினார். அவளை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மாடர்ன் டைம்ஸ் (Modern Times). இப்பொழுதுகூட தொலைக் காட்சிகளிலும் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்படும் பெருமைக்குரிய படம்.
இந்தப் படத்தின் கதை படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தைப் பிரதிபலிக்கின்ற கதையாகும். 1930களில் உலகத்தில் வேலையிலலாத் திண்டாட்டம் தலைவிரித்-தாடியது. இயந்திரங்கள் கண்டு-பிடிக்கப்பட்டு பலபேர் வேலையை இந்த இயந்திரங்கள் செய்யும் நிலை உருவாகியது. இதன் விளைவாக நியூயார்க் பங்குச் சந்தை சரிந்துவிட்டது. பல வங்கிகள் மூடப்பட்டன. பல பணக்காரர்கள் பலமாடிக் கட்டடங்களின் உச்சியி-லிருந்து கீழே குதித்துத் தற்-கொலை செய்து கொண்டு விட்டனர். பல பணக்-காரர்கள் தலைச்-சுமையாகப் பென்-சிலும் ஆப்பிளும் விற்கும் வியாபாரிகளாகிப் போனார்கள். குடும்பம் நடத்துவதற்குப் பணம் வேண்டுமே என்பதற்காக எதையாவது செய்யும் நிலை. இதை வரலாற்றாசிரியர்கள் கிரேட் டிப்ரெஷன் (The Great Depression) என்றார்கள்.
இப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில் எந்திரங்களை எதிர்க்கும் இருவரின் பழக்கம் இவருக்கு ஏற்பட்டது. ஒருவர் அறிவியலாளர் அய்ன்ஸ்டீன். இன்னொருவர் இந்தியாவின் காந்தியார். அய்ன்ஸ்டீனுடன் புதுகண்டு-பிடிப்புகள் எந்திரங்கள் இவையெல்லாம் மனிதனின் வேலை வாய்ப்பை முழுமையாகச் சாப்பிட்டு விடுமோ என்பது பற்றி சாப்ளின் விவாதித்தார். அந்த விவாதத்தின் விளைவுதான் மாடர்ன் டைம்ஸ்.
காந்தியாரை லண்டனில் சந்தித்தபோது சாப்ளினுக்குப் பெருத்த ஏமாற்றமே ஏற்-பட்டது. காரணம், காந்தியார் சாப்ளினின் எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. அவர் பார்த்தது எல்லாம் இந்துமதப் புராணத்தில் வரும் அரிச்சந்திரன் கதையைக் கூறும் கூத்துதானே! உலகில் பெருந்தலைவர்களான ஸ்டாலின், சர்ச்சில், இட்லர் போனற் எல்லாருமே இவரது படங்களைப் பார்த்தவர்-கள். ரசிகர்கள். ஆனால் காந்தி ஏமாற்றத்தையே தந்தார்.
ஆனாலும் காந்தியும் இயந்திரங்களை எதிர்த்தவர். கட்டை வண்டிப் பயணத்தைப் பரிந்துரைத்தவரல்லவா! தக்ளியும், ராட்டையும் இந்தியாவின் வறுமையை ஓட்டி விடும் என்கிற புதிய பொருளாதாரக் கொள்-கையைக் கண்டு பிடித்த-வரல்லவா! இவருடன் சாப்ளின் விவாதம் செய்தார். இயந்திர மய-மானதை வைத்துக் கதை அமைத்தால் சிரிப்பு-க்குப் பஞ்சம் இருக்காது என்பதை உணர்ந்து கதையைத் திட்ட-மிட்டு விட்டார்.
இரண்டு ஆண்டுகள் உழைத்துப் படத்தைத் தயாரித்தார். ஊமைப் படமாகவே தயாரித்தார். பேசும் படமும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் படமான மிக்கி மவுசும் உலகைக் கலக்கிக் கொண்டிருந்த கால-கட்டத்தில் ஊமைப் படத்தைப் பிடிவாதமாக எடுத்தார். அவரது துணிச்சலைச் சிலர் பாராட்டினர். சிலர் அவருக்காக அனுதாபப்-படடனர். அவரோ, தூற்றுதலையும் போற்று-தலையும் ஒன்று போலவே கருதி அவரின் பாட்டையில் நடைபோட்டார். அது ராஜநடையாகவே அமைந்தது.
ஊகங்களை வெளியிடும் பத்திரிகைகக்-காரர்கள் அந்தப் படத்தைப் பொது உடைமைக் கொள்கைப் பிரச்சாரப் படமாக வருணித்தனர். முதல் காட்சியில் ஆடுகள் மந்தையாக நடை-போட்டுப் போவதைக் காட்டினார். அடுத்த ஃபிரேமில் தொழிலாளர்கள் கூட்டமாகத் தொழிற்சாலைக்குப் போவதைக் காட்டினார். இந்த ஷாட்கள் மக்களிடையே சிரிப்பை வரவழைத்தன. சிந்திக்கவும் வைத்தன. இயந்-திரங்களை நம்பிப் போவது கசாப்புக்காரனை நம்புவது போலவோ?
சாப்ளின் தொழிலாளியாக நடிப்பார். கன்வேயர் பெல்ட்டில நகரும் போல்ட்டுகளை (Bolt) முருக்குவது இவரது வேலை. மளமள வென்று செய்வார். எல்லாம் முடிந்த பிறகும் கூட இவரது தோள்கள் குலுங்கும்; கைகள் போல்ட்டை முருக்குவது போல அபிநயம் செய்து கொண்டே இருக்கும். மனித உறுப்பு-கள்கூட இயந்திரங்கள் போல...
உணவு இடைவேளைக்குத் தொழிலாளிகள் போகும்போது இயந்திரங்கள் இயங்குவதில்லை. இந்த நேரத்தில் உற்பத்தி கிடையாது. அதற்கு என்ன வழி? முதலாளி யோசித்து ஒரு இயந்திரத்தைக் கண்டு பிடிக்கிறார். உணவு ஊட்டும் இயந்திரம். சூப் கொடுக்கும். வேக வைத்த மக்காச் சோளத்தை ஊட்டும். கட்லெட் தரும். இனிப்பு கொடுக்கலாம். எல்லாவற்றையும் வாயிலேயே ஊட்டி விடும்.
இது சரிவர வேலை செய்கிறதா என டெஸ்ட் செய்ய வேண்டுமே! சாப்ளின் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலை அசையாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இரண்டு விசைகள், காதுக்கருகில் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். முதலில் சூப்பை ஊட்டும். இயந்-திரத்தில் ஏதோ கோளாறு! வாயில் ஊற்று-வதற்குப் பதில் சட்டைக்குள் ஊற்றிவிடும். ஆனால் வாயைத் துடைக்கும். ஸ்பாஞ்ச் உள்ள கருவி வாயை ஒழுங்காகத் துடைத்துவிடுகிறது. சோளத்தை ஊட்டும் போது வாய்க்குப் பதில் கொஞ்சம் தான் மேலே போய்விடுகிறது. அதாவது மூக்கில் வைக்கிறது. இனிப்போ முகத்தில் அப்பிவிடப்படுகிறது.
இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் சிரித்துச் சிரித்துத் துவண்டு போய்விட்டனர். சம்பாதிக்க வேண்டும் எனும் வெறியில் முதலாளிகள் தொழிலாளர்களைப் படுத்தும் பாட்டைக் காட்டும் காட்சி இது.
மற்றொரு காட்சியில் லாரியிலிருந்து கீழே விழுவார் சாப்ளின். லாரிக்குப் பின்னால் நீளமாக நீட்டிக் கொண்டிருக்கும் மரத்தில் எச்சரிக்கையாகக் கட்டப்பட்டிருக்கும் சிவப்புக் கொடியைப் பிடித்துக் கீழே விழுந்துவிடுவார். பின்னால் வந்து கொண்டிருக்கும் தொழி-லாளர்களின் ஊர்வலத்திற்குஇவர்தான் தலைவர் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார். சிறையில் இவர் வாழும் வாழ்க்கை வெளியுலக வாழ்க்கை-யைவிட நன்கு இருப்பதால் விடுதலை செய்யப்-பட்ட போதும் வெளியே வர மறுத்துவிடுவார். மணி அடித்தால் சோறு - வீட்டில் கூடக் கிடைக்காது உள்ளே கிடைக்கும்.
1947இல் நம் கலைவாணர் எடுத்த பைத்தியக்காரன் படத்தில் சிறை வாழ்க்கை பற்றிய பாடலைப் பாடுவார். அவர் நேரில் கண்டு அனுபவித்த வாழ்க்கை அது. ஆனால் சாப்ளின் கேள்வி ஞானத்தை வைத்து உருவாக்கிய காட்சி அது.
இன்னொரு காட்சியில் காலில் ரோலர் ஸ்கேட்சை வைத்துக் கொண்டு நடக்காமால், நகர்ந்து கொண்டு பாலே (Ballet) நடனம் ஆடுவார். அவரது பல படங்களில் இதுபோன்ற காட்சி வரும்.
நவீன விக்கிரமாதித்தன் எனும் படத்தில் நம் கலைவாணர் இதேபோல நடிப்பார்.
தன் ஏழைக் காதலியுடன் பல்வேறு இன்னல்-களையும் சிறைவாசங்களையும் அனுபவித்த சாப்ளின் மீண்டும் கைதாகாமல் காவலர்-களிடமிருந்து தப்பி ஓடி, நடமாட்டமே இல்லாத தெருவில் கைகோத்து ஜாலியாக நடந்து போவார்கள். புதுப்பாதை... புது வாழ்வு... புது உலகம்... கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
இந்தக் காட்சியை இன்றளவும், உலகம் முழுவதும் ஏராளமான படங்களில் பார்க்-கலாம். ஆனால் இதை முதன் முதல் பயன்-படுத்தியவர் சார்லி சாப்ளின்தான். அதனால்-தான் இந்தக் காட்சிக்குப் பெயரே சாப்ளினின் முடிவு (Chaplinesque Ending) என்பதாகும்.
இப்படத்தில் சாப்ளினின் காதலியாக நடித்த ஹாலெட் கார்டெட் அவரின் மனைவியாகிக் குடித்தனம் நடத்தினாள். வாழ்க்கையில் மாறுதலைப் படம் தந்ததைப் போலவே உலகிலும் மாறுதலைப் பெற்றது படம். கருத்தும், சாப்ளின் கையில் பிடித்த செங்-கொடியும் அந்தப் படத்தைக் கம்யூனிஸ்ட் படம் எனச் சொல்ல வைத்தன. ஆனால் படம் சோவியத் நாட்டிலேயே பலருக்குப் பிடிக்க-வில்லை! ஜெர்மனியில் இட்லர் இந்தப் படத்-தைத் தடை செய்தார். அவரைப் பின்பற்றி முசோலினி இத்தாலியிலும் தடைவிதித்தார்.
இதுவும் சிலகாலம்தான். தடை நீங்கிப் படம் அந்த நாடுகளில் திரையிடப்பட்டபோது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
ஆனாலும் இட்லரும் முசோலினியும் படத்திற்குத் தடை விதித்ததன் மூலம் சர்வாதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டிவிட்டனர். அதையே கருப்பொருளாகக் கொண்டு படம் எடுக்கச் சிந்தித்தார். அந்தப் படம்தான் தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator).
அதற்கும் முன்பாக அவர் வாழ்க்கையில் மேலும் ஒரு பெண். அவரும் தந்தையானார். அது ஒரு தனிக்கதை. |