தமிழும் தமிழணும் தாழ்ந்தது எப்படி

பிராமணர் பெருந்தொகையினராய்த் தமிழகம் வந்து சேர்ந்த பின், தமிழர் திருமணங்-களிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
பிராமணர் தேவர்வழி வந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும்; அவர் முன்னோர் மொழி-யாகிய வேதமொழியும் அதனொடு வேத கால இந்திய வட்டாரமொழிகளாகிய பிராகிருதங் கலந்த இலக்கிய மொழியாகிய சமற்கிருதமும், தேவமொழியென்றும்; இரு பெருந்தவறான கருத்துகள் கடைச்சங்க காலத்திலேயே அரசர் உள்ளத்தில் ஆழ வேரூன்றிவிட்டதனால், பிற்காலத்தில் பிராமணப் புரோகிதம் தமிழ-கத்தில் விரைந்து பரவுவதற்கு மிகுந்த வசதியாயிருந்தது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரன் பல்யானைச் செல்-கெழுகுட்டுவனும் போன்ற தமிழ் வேந்தரும் பிற சிற்றரசரும், பிராமணரை நிலத்தேவரினும் மேலாகத் தேவரென்றேகொண்டு, அவர் சொன்னதையெல்லாம் நம்பி, அவர் ஏவியதை-யெல்லாம் இயற்றி, வடமொழி மந்திரம் வரையிறந்த வலிமையுள்ளதென்றும், இறைவன் செவிக்கு எல்லையற்ற இன்பந்தருவதென்றும், ஆரிய கேள்விகளெல்லாம் தப்பாது ஒருவனை உயர்கதிக்குச் செலுத்தும் என்றும், தெய்வத்-தன்மையுள்ள வடமொழி மந்திரத்தைத் தெய்-வத்தன்மையுள்ள பிராமணனே ஓதவல்லா-னென்றும், பிறர் அதை ஓதினால் அதன் ஆற்றல் கெடுமென்றும், தமிழருள் உயர்ந்தோர் மட்டும் அதைக் காதாற் கேட்கவும் அதனாற் பயன்பெறவுந் தக்கவர் என்றும், தமிழ் மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி அன்றோ!
பிராமணர் முதலாவது சிறு தொகையினரா-யிருந்ததினால், அரசரிடத்து மட்டும் ஆரியக்-கரணமும் சடங்கும் ஆற்றி வந்தனர். பின்பு சற்றுத் தொகைமிக்கபின், பெருஞ்செல்வரான பெரு வணிகர்க்கும் ஆற்றி வந்தனர். அதன்பின், தொகை மிகமிகச் சிறுவணிகர்க்கும் உயர் வேளாளர்க்கும் ஆற்றத் தலைப்பட்டனர். அதனால், பெரும்பாலும் ஒவ்வொரு பேரூரிலும் ஒரு பிராமணன் குடியமர அல்லது அமர்த்தப்பட நேர்ந்தது. ஓர் ஊர்க்குப் பொது-வாயிருந்து அவ்வூரிலுள்ள உயர்ந்தோர் சடங்-குகளையெல்லாம் ஆற்றி வந்த பிராமணன், ஊர்ப்பார்ப்பான் எனப்பட்டான், பிராமணன் குடியிராத ஊர்ச் சடங்குகளை, அடுத்தவூர்ப் பார்ப்பான் வந்து செய்வது வழக்கம்.
வடமொழி வழிபாட்டு மொழியும் சடங்கு மொழியுமாய் வழக்கூன்றியபின், தமிழ் அவற்றிற்-குத் தகாததென்று தள்ளப்பட்டுத் தன் பழந் தலைமையை இழந்ததுடன், தாழ்வும் அடைந்தது. வடசொற்களைச் சொன்னால் உயர்வும் தென்சொற்களைச் சொன்னால் தாழ்வும் உண்டாகுமென்ற தவறான கருத்து, தமிழ்-மக்கள் உள்ளத்திற் புகுந்ததினால், வட-சொற்கள் ஒவ்வொன்றாய் வழக்கிற் புகுந்து, ஆயிரக்கணக்கான தூய தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்திவிட்டன.
தமிழுக்கு நேர்ந்த தாழ்வு தமிழனுக்கும் நேர்ந்தது. அதனால், பிராமணன் தொட்டதை எல்லாத் தமிழரும் உண்ணலாமென்றும், எத்துணை உயர்ந்த தமிழனாயினும், அவன் தொட்ட-தைப் பிராமணன் உண்ணக் கூடா-தென்றும் கூட்டரவு (சமுதாய) ஏற்பாடுகள் எழுந்தன. இது தமிழன் பொருளியல் வாழ்வை மிகமிகத் தாக்கிற்று.
சில தூய தமிழ்க்குலத்தார். தமிழன் உயர்வையும் வரலாற்றையும் அறியாது. தம்மைச் சத்திரியரென்றும் வைசியரென்றும் சொல்லித் தமக்கு ஆரியத் தொடர்பு கோரவும், சில உயர் வேளாளர் தம்மைச் சற்சூத்திரர் என்றழைத்து, தம்மை உயர்த்துவதுபோற் கருதிக்கொண்டு உண்மையில் தாழ்த்தவும், நிலைமை ஏற்பட்டு விட்டது.
தமிழருள் உயர்ந்தவராகக் கருதப்பெறும் நெல்லை மரவூண் (சைவ) வேளாளரும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டுவிட்டதனால், தமிழரெல்லாரும் தாழ்த்தப்பட்டு விட்டனர். இன்று தாழ்த்தப்பட்டவர் எனப்படுவார் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே. |