தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

கலைஞரின் நகைச்சுவை

சட்டப்பேரவையில் 1997 ஜூலைத் திங்களில் அறநிலையத்துறை மானியக் கோரிக்-கையின் மீதான விவாதம் நடந்தபோது,
எதிர்க்கட்சி உறுப்பினர்: மதுரை மீனாட்சி கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் அங்கே இருந்தது ஆறு நிமிடமே. முன்பும் பின்பும் பாதுகாப்பு. அதனால், பல திரு-மணங்கள் நடைபெறுவது தடையாகி விடடன.
முதல்வர் கலைஞர்: அளிக்காவிட்டால் - ஏன் அளிக்கவில்லை? அளித்து விட்டால் ஏன் அளிக்க வேண்டும்? என்ற கேள்விகள்...
உறுப்பினர்: ஆண்டவன் கொடுக்க முடியாத பாதுகாப்பையா நீங்கள் குடியரசுத் தலை-வருக்குக் கொடுத்துவிட முடியும்?
முதல்வர் கலைஞர்: ஏன் - அந்த ஆண்ட-வனுக்கே தமிழ்நாடு காவல்துறை தானே பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கு. எவ்வளவு சிலைகள் களவாடப்பட்டிருக்-கின்றன? பொன், ஆபரணங்கள் களவு போயுள்ளன. தமிழ்நாடு காவல்துறை தானே கண்டுபிடித்துள்ளது.
கம்ப ராஜ்யத்தில் கள்வர்
1969ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில், கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, காவல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அப்போதைய எதிர்க்-கட்சித் தலைவர் கருத்திருமன், காவல்-துறையைக் கடுமையாகச் சாடிப் பேசினார். பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் இடைமறித்து, எதிர்க்கட்சித் தலைவர் இலக்கியம் அறிந்தவர், கோவைக் கம்பன் எனப் பெயரெடுத்தவர். அவர் இப்படிப் பேசலாமா? என்றார்.
உடனே கருத்திருமன், இங்கு கம்பன் ராஜ்ஜியம் போல ஆட்சி நடந்தால், நானும் கம்பரைப் போல் பேசியிருப்பேன். கள்வர் இல்லாமையால் காவலரும் இல்லை என்று கம்பன் கூறியது போல் அமைந்-திருந்தால், நானும் கம்பனைப் போல பாராட்டியிருப்பேன். ஆனால், இன்றைய காவல் துறையின் நிலை அப்படி இல்லையே என்று நான் நினைப்பதால்தான் அவ்வாறு நான் சொன்னேன் என்று பேசினார்.
உடனே முதல்வர் கலைஞர் எழுந்து, கம்பன் கண்ட ராஜ்ஜியத்தில் கள்வர் இல்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், சீதை கடத்தப்பட்டதாகத்தானே கம்பர் எழுதியிருக்கிறார். இதற்கு என்ன பதில்? என்றார்.
கடவுளை நம்பாதவர்களா?
35 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்கள், கண் சிகிச்சைக்காக மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் ஒரு செவிலியர்...
கடவுளை நம்பாததால்தான் இவ்வளவு சோதனை. எனவே இனியாவது கடவுளை நம்புகள் அய்யா என்றாராம்.
உடனே கலைஞர், உங்கள் அன்புக்கு எனது நன்றி. அதுசரி... இங்குள்ள மற்றவர்களும் அதுபோலத்தானா? எனக் கேட்டதும் - அவர் தங்கியிருந்த அந்த அறை அன்றைக்குத்தான் சிரிப்பால் மகிழ்ந்தது.