தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

தமிழ்நாட்டில் பவுத்தம்

பவுத்த மதம் உலகப் பொது மதமாக எழுந்து உலகம் முழுவதும் பரவியதாகலின் தமிழ்நாட்டிலும் வேர்கொண்டு பரந்து வளர்ந்தது. அசோகரது கல்வெட்டு, அப்பேரரசர் தம் அறக் கொள்கைகளைச் சோழ பாண்டியர்-களது நாட்டிலும் நிலைநாட்டினார் எனக் கூறுகிறது. அசோகருடைய மகனார் மகேந்திரனார் கி.மு.250இல் இலங்கையில் பவுத்த மதத்தினைப்பரப்பச் சென்றார். இவருடைய பெயர் இலங்கையில் மகிந்தர் என வழங்கும் இவருடன் அறத்தொண்டு புரிந்தவர் இலங்கை அரசரின் உறவினரான அரிட்டர் என்பவராவர். மகேந்திரர் தமிழ்நாட்டு வழியாகவே சென்றிருத்தல் வேண்டும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பவுத்த சின்னங்களைத் தேடிவந்த யுவான் சுவாங் என்ற சீனப் பெரு-மகனார் தமிழ்நாட்டினைச் சுற்றிவந்தபோது, இந்த மகிந்தர் கட்டியதாக வழங்கிய பவுத்தப் பள்ளி ஒன்று மதுரையில் இருந்ததனைப் பற்றித் தம் நூலில் குறித்து வைத்துள்ளார். இந்த மகிந்தருடன் தொண்டாற்றிய அரிட்டர் பெயர் அரிட்டபாடி என்ற இடப் பெயரில் இன்றும் நின்று நிலவுகிறது. மகிந்தர் காலத்து எழுத்துக்கள் வெட்டிய குகைகள் இந்த அரிட்ட-பாடி என்ற பாண்டி நாட்டு ஊரருகே உள்ளன. தமிழ்-நாட்டில் இன்று கிடை-க்கும் இந்தப் பழைய எழுத்துக்கள் இவ்வாறு பவுத்தப் பள்ளிகளோடு தொடர்பு பெற்று தமிழ்நாட்டுத் தென்கோடியிலும் காட்சி அளிக்கின்றன. எழுத்தறிவு ஊட்டும் நிலையங்கள் இன்று பள்ளிக் கூடங்கள் எனப் பெயர் பெறுவது பொருத்தமே ஆம். எனவே, பவுத்தப் பேரறம் கிறித்தவ ஊழிக்கு முன்பே தமிழ்நாட்டில் சீரும் சிறப்பும் பெற்று ஓங்கியது எனலாம்.
போதியார் எனச் சம்பந்தர் பவுத்தர்களைக் குறிக்கின்றார். ஆதலால், இளம்போதியார் என்ற சங்கப் புலவர் பவுத்தப் பாவாணரே ஆவர். சங்கப் பாக்களில் பவுத்தக் கொள்கைகள் பாவடிவம் பெற்று மக்கள் மனத்தினைக் கவர்ந்திருத்தல் வேண்டும். இளம்போதியார் என்ற பெயரே போதியார் என மற்றொரு மூத்த தமிழ்ப் பாவாணர் இருந்ததனை நிலை-நாட்டுகிறது. சங்கப் புலவராம் சீத்தலைச் சாத்தனாரும் மணிமேகலை என்ற பவுத்தப் பெருங்காப்பியித்தினைப் பாடிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் ஒருவரே என்ற கொள்கையும் உண்டு. அப்படியானால், அவரும் பவுத்தரேயாவர். பவுத்தமதக் கொள்கைகளைப் பரப்பவும் புத்தர் பெருமைகளைப் பேசவும் எழுந்தது அந்தக் காப்பியம். உயர்ந்தோர் இழிந்-தோர் என்றுபிறர் கருதுவது போலக் கருதாமல் சமுதாயத் தொண்டினைப் பவுத்தப் பெரு-மக்கள் செய்து வந்ததனை அந்தத் தமிழ்ப் பெருங்காப்பியம் பரக்கப் பேசுகிறது. மணி-மேகலை பொதுமகள் குலத்தில் பிறந்தும் பவுத்த பிக்குணியாகிப் பவுத்த மத அறவுரை-களை வழங்கி அறம் வளர்த்து உயர்நிலை அடைந்த கதையன்றோ அக்கதை. மகாயாந பவுத்தம் எழுதுவதற்கு முன்னர்ப் புத்தருக்குக் கோயில் கட்டி வழிபடாமல் அவருடைய திருவடி நிலைகளை மட்டும் வணங்கிய காலத்தில் எழுந்தது மணிமேகலை. அதில் காணும் மந்திர தந்திரங்கள் மகாயாந பவுத்தம் தோன்றுவதற்கு வழிகோலுகின்றன எனக் கூறலாம்.
வடநாட்டில் அமைதியின்மையால் பல நூல்கள் தென்னாட்டிற் புகுந்து வளர்ந்-தோங்கிய நிலையை மணிமேகலையில் காண்கி-றோம். பட்டி மண்டபம் என்பது தமிழ்-நாட்டின் அரிய நிலையம். அறிவாராய்ச்சி செய்வார் - வெறுப்பு விருப்பின்றி உண்மையை அறிய முயலும் மன்றம் அது. பல மதங்களின் கொள்கைகளையும் மணிமேகலை அறிய முயல்கின்றாள். இதனை ஒரு காப்பியப் பெருவாய்ப்பாகக் கொண்டு சாத்தனார் சர்வமத சங்கிரகமே ஒன்று பாடுகின்றார். சர்வமத சங்கிரகம் எழுதும் வழக்கம் மணி-மேகலையில் முளைவிடுகிறது எனலாம். இதிலிருந்து புதுவகைக் காப்பியங்கள் தமிழில் வளர்ந்தன. நீலகேசி, குண்டலகேசி எனக் கேசி என முடியும் பெயருள்ள காப்பியங்களை நோக்குதல் வேண்டும். ஒரு பெண் உண்மையை அறிய முயன்று பல மதக் கொள்கையின-ரோடும் வாதம் செய்து தான் கொண்ட உண்மையினை நிலைநாட்டுவதனைக் கூறும் காப்பியங்களே இவை எனலாம். தத்துவப் போராட்டம் காப்பியமாக வளரும் காட்சியைத் தமிழ்நாட்டில் இந்த நூல்களிலே காண்கிறோம். மணிமேகலைக் காப்பியமே இவற்றிற்குத் தாயகமாம். குண்டலகேசி என்பது பவுத்தக் கொள்கையைக் குண்டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களைத் தகர்த்-தெறிந்ததனைப் பாடுகின்றது என அறிகின்-றோம். சில பாடல்கள் அன்றி இந்தக் காப்-பியம் முழுதும் இன்று கிடைக்கவில்லை. இதனைப்-பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறுகின்றது.
காஞ்சி மாநகர் பவுத்தப் பேரறிஞர்களது அறிவுக்களஞ்சியமாக உலகம் முழுவதும் பேர் பெற்றிருந்தது என்பதில் அய்யம் இல்லை. நாளந்தாப் பல்கலைக் கழகம் ஒருபுறமிருக்க உலகம் போற்றும் சென் பவுததம் காஞ்சி நகர் கண்டதே ஆம். உலகத்தில் இன்றுநிலவும் பவுத்தமதப் பெரும் பிரிவு சென் பவுத்தம் அல்லது தியான பவுத்தம் என்பதேயாம். சீனாவிலும், அதனைவிட ஜப்பானிலும் இது பேரும் புகழும் பெற்று விளங்குகிறது. இதனை அங்குச் சென்று கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நிலைநாட்டியவர் காஞ்சியரசரின் பிள்ளை-களில் ஒருவரான போதிதருமராவர். இந்த மதத்தினைச் சீனாவில் மேலும் வளர்த்தவர் நரசிங்க வர்ம பல்லவன் காலத்தவரான மற்றொரு தமிழர்; இவர் பெயர் வச்சரபோதி. இவரும் காஞ்சியில் பவுத்தர்களுக்குத் தலை-வராக விளங்கினார்.


இவர்களுக்கு முன்பே அய்ந்தாம் நூற்றாண்டிலும் புத்த தத்தத்தேரர் காஞ்சியில் பவுத்த மதத் தலைவராக வீற்றிருந்துள்ளார். இவர் காவிரிப்பூம்பட்டினத்த் தமது காலத்-தில் வாழ்ந்த அச்சுதக் களப்பிரனோடு சேர்த்துப் புனைந்து அபிதம்மாவதாரம் என்ற நூலில் பாடிப் புகழ்கின்றார். முதல் நூற்றாண்டிலும் காஞ்சி பேர் பெற்று விளங்கியது. அந்த கட்டஹ காதை அந்தக மொழியில் அந்தக நாட்டில் பரசமுத்ர வாசிகளால் காஞ்சியில் கொண்டாடப்பட்டதாகப் பாலி நூல்கள் வழியே அறிகின்றோம். பதினோராம் நூற்-றாண்டில் தீபாங்கர தேவரும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அநிருத்தரும் காஞ்சி மாநகரில் பவுத்தர்கள் தலைவர்களாகப் பல நூல்கள் இயற்றியமை பவுத்த நூல்கள் வழியே தெரியவருகிறது.
காஞ்சியில் மட்டும் அன்றிப் பொதிகை, உறையூர் வஞ்சி, புத்தத்த தேரரது பூதமங்கலம், சாக்கிய நாயனாரது சங்கமங்கை போதிமங்கை, மதுரை முதலியனவும் பவுத்தப் பெருநிலையங்-களாக விளங்கின. நாகப்பட்டின வரலாறு பவுத்த மத வரலாற்றின் எதிர்ஒலி எனலாம். 1867 வரை அங்குப் புத்த விகாரை விளங்கியதாம். இங்கு நரசிங்கப் போத்தரையர் காலத்தில் சீன அரசன் கட்டிய சீனக் கோயிலை மார்கொ-போலோ குறித்து வைத்துள்ளார். இந்தச் சீனக் கோயில் உலகம் அறிந்த ஒன்று. 1477இல் இதனைப் பர்மா அரசர் தமது கல்வெட்டில் குறிக்கின்றார்; 1725இல் வாழ்ந்த வாலன்டைன் என்ற பெரியாரும் குறிக்கின்றார். திருமங்கை மன்னர் காலத்தில் இங்குப் புத்தரது பொற்-சிலை ஒன்று இருந்ததென அறிகிறோம். இராசராச சோழரும், அவர் மகனார் இராஜேந்திர சோழரும் அவர்கள் காலத்தில் சுமத்திரா தீவில் அரசாண்ட ஸ்ரீவிஜய அரசர்-களில் ஒருவருக்கு நாகப்பட்டினத்தில் பவுத்தப் பள்ளி கட்ட உரிமை தந்தமையை லேடன் பட்டயத்தின் வழியே அறிகின்றோம். விகா-ரையை இடித்துக் கிறித்தவக் கோயில் கட்டிய-போது பல புத்தச் சிலைகள் அங்குக் கிடைத்-தனவாம். தமிழரது வாணிபத்தின் காவற் கடவுளாக மணிமேகலை விளங்குவதற்கேற்ப நாகப்பட்டினம் தமிழ்ப் புத்தப்பெரு வணிக நிலையமாகவும் பிறநாட்டுத் தொடர்பின் கலங்கரை விளக்கமாகவும் விளங்குகின்றது.
பவுத்த மதம் தமிழ்நாட்டில் மறைந்த போதிலும் அக்கொள்கை தமிழொடு தமிழாய்ப் போய்விட்டது. புத்தர் திருமாலின் அவதாரமாகி விடுகின்றார். சாத்தனார், அய்யனார், தர்மராசர், போதிராசர் என்று தமிழ்நாடு வழிபடுவது உண்மையில் பழைய புத்த-ரையே எனலாம். அரசமர வழிபாடும். சிங்கப் பெருமாள் கோயில் போன்ற இடங்-களில் காணப்பெறும் திருவடி நிலை வழிபாடும் போதி மரத்தனையும் புத்தரது பாதபங்-கயத்தினையும் நினைவூட்டாமல் இல்லை. திருவரங்கக் கோலத்தினைப் புத்தர் பெரு-மானது நிரியாணக் கோலம் எனக் கூறுவோரும் உண்டு. தமிழ்நாட்டில் தோன்றிய அத்துவிதக் கொள்கையில் பவுத்த மதத்தின் மாற்றுரு-வத்தினை (பிரச்சன்ன பவுத்தம்) இராமாநுஜர் முதலானோர் காண்கின்றனர் என்பதனையும் மறத்தலாகாது. தமிழ்நாட்டுப் பலபல வழி-பாட்டு முறைகளுக்கும் பவுத்த தந்திரங்கள் கூறும் முறைகளுக்கும் உள்ள ஒற்றுமையையும் மறைக்க முடியாது. பள்ளிகள், மடங்கள், கோயில்கள் - இவை பவுத்தர்கள் வளர்த்த சமு-தாய நிலையங்கள்; அறச் சாலைகள்; கல்லூரி-கள் இவற்றை ஒட்டியே இந்த நாட்டுக் கோயில்கள் நாட்டின் உயிர்நிலையாக வளர்ந் ஓங்கியுள்ளன.