தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

அறிவியல்

நாம் வாழும் பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக்கொள்ளும் போது இரவும் பகலும் ஏற்படுவதை ஒரு நாள் என்று வரையறுத்துக் கொண்டார்கள் முன்னோர்கள். பூமியில் காணும் அனைத்திற்கும் பெயர் வைத்துக் கொண்டார்கள். இரவில் எல்லா திசைகளிலும் தெரியும் நட்சத்திரக் கூட்டங்-களை தொகுத்து பார்த்து பூமியில் உள்ள பொருட்களோடு பொருத்தி ஒப்பிட்டுக் கொண்டார்கள். அப்போதுதான் பூமியில் ஒரு பொருளுக்கு (விலங்குகள், தாவரம்) என்ன பெயர் வைத்தார்களோ அதைப் போலவே கற்பனை செய்து கொண்ட நட்சத்திரக் கூட்டங்களுக்கும் அதே பெயரை வைத்தார்கள்.
பூமியில் இருந்து வானத்தப் பார்க்க சூரியனும், நிலவும் நடுவர்கள் ஆனது. நிலவுக்-குப்பின் நேர்ப் பார்வையில் எந்த நட்சத்திரக் கூட்டங்கள் தெரிகிறதோ அதைத் தினமும் குறித்துக் கொண்டார்கள். நிலவானது பூமியை 27.3 நாட்களில் சுற்றுவதால் அதுவரை ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரிகிறது. அதற்குள் பூமியும் தன்னைத்தானே 27 முறை சுற்றி விட்டு சூரியனை சுற்றிவரும் நீள்வட்டப்பாதையிலும் ஒரு மாதத் தூரத்தை கடந்திருக்கும். ஆனால் அதுவரை நிலவு தன்னைத்தானே ஒருமுறை-தான் சுற்றியிருக்கும்.
பூமியிலிருந்து சூரியனுக்குப் பின் நேர்-பாதையில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்கள் தான் நடப்பில் நட்சத்திரம் என அழைக்கப்-படுகிறது
மேழம் - சூரியனிலிருந்து நேர்ப்பாதை
துலை - நிலவிலிருந்து நேர்ப்பாதை
பூமியிலிருந்து நிலவுக்குப் பின் நேர்பா-தையில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்கள் தான் மாதங்கள் எனவும் இராசிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
இதை எல்லாம் உணர்ந்த மறைமலை அடிகள், திரு.வி.க. போன்றேர் தமிழுக்கு ஒரு தொடர் ஆண்டு வேண்டும் என உணர்ந்து வரலாற்றை ஆய்வு செய்தார்கள். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று சொன்ன வள்ளுவர் காலம் கி.மு. 31 என அறியப்பட்டது. அதற்கும் முன்பே தொல்காப்பியர் அகத்தியர், சித்தர்கள் எல்லாம் வாழ்ந்த வரலாறு இருந்தாலும் வள்ளுவரின் குறள் எக்காலத்-திற்கும் ஏற்புடையது எனவே அதை வரலாற்றுத் தொடக்கமாக வைத்து கணக்கிடலாம் என முடிவு செய்தார்கள்.
2002-31 = 1971 கி.பி. 1971இல் தமிழக அரசிடம் இந்தக் கணக்கு அறிக்கையை அளித்தார்கள். அப்போதைய தமிழக அரசும் அதை ஏற்றுக் கொண்டது. அதன்படி இப்போது திருவள்ளுவர் ஆண்டு 2039 - 31 = 2008. 2038 முடிந்து 2039 தை முதல் நாள் தொடங்க உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் இன உணர்வு கொண்டு சித்திரை 1 - பார்ப்பனிய புத்தாண்டை புறக்கணிப்போம். சுறவம் 1 (தை) திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்போம்!
உதாரணம், ஏப்ரல் மாதத்தில் பூமியிலிருந்து நிலவுக்குப்பின் நேர்ப்பாதையில் பூமியில் உள்ள துலாக்கோல் போன்ற தோற்றமுடைய நட்சத்திரக் கூட்டம் தெரியும். அதைத்தான் துலாம் இராசி என்கிறார்கள்.
அதே ஏப்ரல் மாதத்தில் பூமியிலிருந்து சூரியனுக்குப் பின் நேர்ப்பாதையில் பூமியில் உள்ள விலங்கான ஆடு போன்ற தோற்ற-முடைய நட்சத்திரக் கூட்டம் தெரியும். ஆடு என்பதற்கு தூய தமிழில் மேழம் என்று பெயர் உண்டு. அதுவே சமக்கிருதத்தில் சைத்ரா என்றால் ஆடு என்று அர்த்தம் உண்டு. சைத்ரா என்பது மருவி சித்திரை என ஆகியுள்ளது. மேழம் என்பது மருவி மேஷம் ஆகியுள்ளது.
இப்போது நிலவில் பின்னணியில் வேறொரு நட்சத்திரக் கூட்டம் தெரிய ஆரம்பிக்கிறது. அந்த நட்சத்திரக்கூட்டம் பூமியில் ஏற்கெனவே பெயரிடப்பட்ட எந்தப் பொருளைப்போல் இருக்கிறதோ அந்தப் பெயரையே வைத்துள்-ளார்கள். அடுத்த ஒரு மாதத்தில் வேறொரு நட்சத்திரக் கூட்டம். இப்படியே 12 முறைக்கு பிறகு மீண்டும் அதே நட்சத்திரக் கூட்டம் தெரிகிறது. இப்படியே ஒருநாள் என்பது 7 நாள்கள் சேர்ந்து ஒரு வாரமாகவும், நான்கு வாரங்கள் சேர்ந்து ஒரு மாதமாகவும் 12 மாதங்கள் சேர்ந்து ஓர் ஆண்டாகவும் கணக்-கிடப்படுகிறது.
30 நாட்களுக்கு எந்த நட்சத்திரக் கூட்டம் தெரிகிறதோ அதற்கு ஒப்பான தோற்றமுடைய பொருளுக்கு பூமியில் என்ன பெயர் வைக்கப்பட்டதோ, அதுவே ஒரு மாதத்துக்-குண்டான பெயராக சூட்டப்படுகிறது. இப்படி நிலவுக்குப்பின் நேர்ப்பாதையில் 12 நட்சத்திரக் கூட்டங்களை பூமியின் பெயர்ச்சியினால் உணர முடிகிறது. அதையேதான் 12 ராசிகள் எனவும் கூறப்படுகிற. நிலவின் சுழற்சியும் பெயர்ச்சியும் சமமானது. அதாவது 27.3 நாட்கள். இந்த அடிப்படையில்தான் 12 ராசிகள் (பூமியின் பெயர்ச்சி) 27 நட்சத்திரங்கள் என ஜோதிடக்-காரர்களால் சொல்லப்பட்டு அறியாமையில் இருக்கும் பக்தர்களின் பணம் சுரண்டப்-படுகிறது.
சரி இப்படி சுழற்சியும் பெயர்ச்சியும் எத்தனை முறை நடந்திருக்கும் எனக் கூற முடியுமா? முடியும். சூரியனில் இருந்து பூமி வெடித்துச் சிதறி சுமார் 460 கோடி ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதன் தோன்றி 10 லட்சம் ஆண்டுகள்தான் ஆகியது. காட்டுமிராண்டிக் கூட்டமாக வாழ்ந்த மனிதன் அறிவு சார்ந்த மனிதனாக வாழ ஆரம்பித்து 10 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர ஒரு ஆண்டு என தொடர் ஆண்டு பிற்பற்றுவதற்கு வரலாற்றில் ஒரு வரையறை செய்யப்பட்டு கி.மு., கி.பி. என அழைக்கப்-பட்டது. கிறித்துவுக்குப் பின் 2008 என்பதையே நாம் இப்போது நடைமுறையில் பின்பற்று-கிறோம்.
ஆனால் பார்ப்பனியப் புளுகான சித்திரை, தமிழ் வருடப் பிறப்பு இதுவரை எத்தனை ஆண்டு முடிந்து எத்தனை ஆண்டு தொடங்கு-கிறது எனச் சொல்ல முடியாமல் மக்களை அறியாமையிலேயே புதைத்து வைத்துள்ளது.