தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

பகுத்தறிவுப் பொங்கல்

பொங்கல் என்றதுமே பகுத்தறி-வாளர்களின் முத்திரை அங்கே பதிந்திருப்-பதைக் காண்கிறோம். என்றாலும்கூட, பொங்கலினுள்ளே மகர சங்கராந்தி என்ற ஒரு மதச் சரக்கைப் புகுத்தி சூரிய பகவானின் திருவிழாவாக ஆக்கி வைத்திருந்தனர். இன்னமும் ஆக்க முனைகின்றனர் பார்ப்பனர். இயற்கையான சூரியன், விண்வெளியின் ஒரு கோள் என்ற நிலை மாறி அது தெய்வமாக மாறியது எப்படி? பகுத்தறிவுக் கண்-ணோட்டத்-துடன் மத வரலாறுகளை ஆராய்ந்து சுவைபடப் பதில் தருகிறார் ஆராய்ச்சியாளர்.
பொங்கல் பண்டிகையின் தத்துவம் வேளாண்-மையை அடிப்படையாகக் கொண்-டது; அறுவடை - அதாவது ஆங்-கிலத்தில் ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் என்று கூறப்-படுவது போன்றது இப்பண்டிகை. அதா-வது மதக்கலப்பே இல்லாத, மதச்சார்பற்ற திருநாள்.
இது அப்பலோ யுகம் - லூனாகாட் யுகம்
என்ற போதிலும், மதச் சார்பற்ற எதைத்-தான் அப்படியே விட்டுவைத்தது பூசாரிக் கும்பல்? இந்த நாட்டில் பார்ப்பனப் பூசாரிகள் செய்தது போலவே உலகின் பிற நாடுகளிலும் ஆங்காங்குள்ள பூசாரி இனத்தினர் எல்லாப் பண்டிகைகளுக்கும் மதச் சாயம் பூசினார்கள். அந்த மதச் சாயத்தில் தங்கள் சுரண்டல் தொழிலை எதிர்ப்பின்றி ஏகபோகமாக செய்து வந்தனர்.
பொங்கலில் பிரதானமாக இடம் பெறுவது சூரியன். இன்றைய அப்பலோ யுகத்தில் லூனாகாட் யுகத்தில் சூரியன் ஜாதகமே மாறிப்போய் விட்டது என்றாலும், அந்த மாற்றத்தை விஞ்ஞான உலகம் ஏற்றாலும் சாதாரணப் பாமர மக்கள் பழைய சூரியனையே இன்னமும் விடாமல் பிடித்து வைத்துள்ள பரிதாப நிலையையும் நாம் காண்கிறோம்.
கடவுளாக மாறியது எப்படி?
தூங்கி விழித்ததும் சூரியனை நோக்கி வணக்கம் செலுத்தும் சூரிய நமஸ்காரப் பார்ப்பனர்கள், சூரியனை வெறும் கிரகமாக - அண்ட வெளியின் ஒரு கோளாக எங்கே காண்பார்கள்? இவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக் கதைகளை உண்மையென நம்பும் பாமரப் பக்தர்கள் சூரியனை விஞ்ஞான அடிப்படையில் பார்க்க முடியுமா? முடியாது. மாறாக, சூரிய நாராயணனாகவே காண்-கிறார்கள்.
கோளாக இருந்த சூரியன் எப்படிக் கடவுளாக மாறினான்? இந்தக் கேள்வியைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்-தால்தான் பொங்கல் திருநாள் பகுத்தறிவுப் பெருநாளாக அமையும்.
சூரியனுக்கு ஏன் கோயில் இல்லை?
சூரிய வழிபாடு இன்று இந்தியாவில் கூட மறைந்து போய்விட்டது. பிரபலமான கோனார்க் (ஒரிசா மாநிலம்) கோயில் சூரிய-பகவானின் பழைய கதையை இன்று நினைவு-படுத்தும் ஒரு சின்னம். தமிழ்நாட்டில் கூட - எதற்கெல்லாமோ கோயில் மலிந்துள்ள இந்தப் பிற்போக்கு மண்ணிலே கூட சூரிய வழிபாடு ஒளி மங்கிப் போய்விட்டது.
என்றாலும் ஆசியாக் கண்டம், ஆஃபிரிக்கா கண்டம், அமெரிக்கா கண்டத்தின் சில பகுதிகள், மத்திய தரைக்கடல் பகுதிகளில் பெருமளவில் ஒரு காலத்தில் நிலவியிருந்தது சூரிய வழிபாடு. இவையனைத்தும் ஆதி மனிதனின் பிறப்பிடங்கள் - குடியிருப்பிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கதோர் உண்மையாகும்.
இயற்கை வழிபாட்டில் சூரியனின் இடம்
இயற்கை வழிபாட்டுமுறையின் விதையாக இருந்து வந்துள்ளது சூரிய வழிபாடு. ஏனென்றால், சூரியன்தான் வாழ்க்கையின் ஆதாரங்கள் அனைத்துக்கும் அதிபதியாக ஆதிகால மக்களால் உணரப்பட்டது.
இயற்கையின் சீற்றத்தினால் அலைக்-கழிக்கப்-பட்ட மக்கள், அதன் மீதான தங்களது பயத்தை பக்தியாக மாற்றிக் கொள்ள வெகுகாலம் பிடித்-திருக்காது. இயற்கையின் அம்சங்களில் முத-லிடம் வகிப்பது சூரியன் அல்லவா?
இரவின் குளிரில் நடுங்கும் மனிதனுக்கு வெப்பமாக - வெப்பம் தரும் கடவுளாகக் காட்சி தருகிறான் சூரியன். இருட்டில் பயப்படும் மனிதனுக்கு ஒளியாக - ஒளிதரும் கடவுளாகக் காட்சி தருகிறான் சூரியன். வெப்பத்தின் மிகுதி-யால் வறளும் மனிதன் அப்போதும்கூட சூரியனின் வல்லமையை எண்ணிப் பயப்-படுகிறான். மழையை நாடும் மனிதன். அம்மழையைத் தரும் முகில் உருவாவது சூரியனால் என்று எண்ணி மேலும் சூரியன் மீது பக்தி கொள்கிறான். இப்படியாக சூரியனே இயற்கை வழிபாட்டின் வல்லமைமிக்க கடவு-ளாக, வான சாம்ராஜ்யத்தின்அதிபதியாக அன்றைய மனிதனுக்குத் தென்பட்டது.
ஏழு குதிரைகள் ஏழும் பச்சை
எனவே, சூரியனுக்கு புராணம் படைப்பதில் பெரும் அக்கறை காட்டியது பூசாரி வர்க்கம். வேதரிஷிகள் சூரியனை வணங்க ஏராளமான பாடல்களை இயற்றினார்கள். இது பண்டைய இந்தியாவில்! பின்னர் அதை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டன.
சூரியனின் வேகமான போக்குக்குக் காரணம் அவன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலே பயணம் செய்வது தான் என்றான் ஒரு புளுகன். அந்த ஏழு குதிரைகளின் நிறமும் பச்சை என்று சித்திரம் தீட்டிக் காட்டினான் கலர் ரசிகன் ஒருவன். அவற்றின் பெயர்கள் இன்னின்ன என்று வாக்காளர் பட்டியல் பதிவு செய்யும் ஆசாமி போல வகைதொகையாகச் சொன்-னான் இன்னொருவன்!
இந்த ஏழு குதிரைகளையும் ஓட்டிடும் சாரதியின் பெயர் அருணன் என்றான் ஒரு பவுராணிகன் அவனுக்கு கால் ஒன்று முடம் என்று மருத்துவப் பரிசோதனைக்காரன் போலப் புதுப்புராணம் எழுதினான் இன்-னொருவன். சூரியனுக்குக் காதலி ஒருத்தியை சிருஷ்டி செய்தான்; அவள் பெயர் சாயா என்று மேலும் நீட்டினான் ஒருவதந்திப் பிரியன்! இப்படியாக சூரியனின் புராணம் நீண்டது இந்தியாவில்.
மேல்நாட்டில் சூரியன்
மேல்நாடுகளிலும் - இதற்குத் தாங்கள் கொஞ்-சமும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக் கொண்டார்கள் மதகுருக்கள்.
சூரியனை ஆண் என்றோ பெண் என்றோ கூறாமல் - பால் (Sex) ஏதுமற்ற ஒரு பரம் பொருளாக முதலில் கூறினார்கள். அதைப் பயன்-படுத்தி அதிகமாகச் சுரண்ட முடியாதே என்று - அதற்கு பால் கொடுத்தார்கள். ஆம், வெறும் சூரியன் ஆணாக - சூரியபகவான் அல்லது சூரியநாராயணனாக ஆக்கப்பட்டான்.
சூரியனின் காதலி
சாமி ஒன்று ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை அப்படியே பிரம்மச்சாரியாக விட்டு வைப்-பதைவிட அல்லது கன்னியாக விட்டு வைப்-பதைவிட, கல்யாணம் செய்த குடும்பியாக ஆக்கினால், சுரண்டும் பூசாரி வர்க்கத்துக்கு வசதி அல்லவா? மனைவியாக ஒரு கடவுளச்-சியை சிருஷ்டி செய்யலாம். அவளையும் அவனையும் காதலிக்க விடலாம். அதிலே கவர்ச்சியையும் காமரசத்தையும் ஓடவிட்டு கதை புனையலாம் அல்லவா? இதையெல்லாம் பயன்படுத்தி எத்தனை இலகுவாக வசதியாக மக்களிடமிருந்து காசு தண்டலாம்.
எனவே, சூரியனுக்குக் காதல் நோய் பிறக்கும்படி செய்தார்கள். சூரியனுக்கு மனைவி-யாக யாரை வைத்தால் நன்றாக இருக்கும்? என்று யோசனை செய்து பூமியைத் தேர்ந்-தெடுத்தார்கள். அதாவது பூமாதேவிக்கும் சூரிய நாராயணனுக்கும் திருமணம்!
பரமண்டலங்களில் இருக்கிற பிதா
சூரியன் ஆண் கடவுள் - நமது தந்தை. இதுதான் கிரேக்கப் புராணங்களின் சாரமான கதை. இங்கே சூரியனின் பெயர் - அதாவது தலைமைக் கடவுளின் பெயர் சீயஸ் (Zeus) என்பது.
இந்தக் கடவுளுக்கு மனைவியாக கடவுளச்-சியாக வாய்த்தவள் பெயர் கயியா (Gaia). இவள் வேறு யாரும் அல்ல பூமாதேவிதான்.
மேலே வானம் - அதன் கடவுள் சூரியன். கீழே பூமி இதன் கடவுளச்சி பூமாதேவி. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது கல்யாணம் செய்வது என்றால், அது உலக-ளாவிய கற்பனைக்கு - அக்கற்பனையை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?
இதுமட்டுமல்ல - இந்த சம்பந்தத்தில் திருமணத் தொடர்பில் மிகவும் ஆழமான ஒரு தத்துவமும் அடங்கிக்கிடப்பதாக பகுத்தறிவுப் பாசறையின் ஆராய்ச்சியாளர்கள் கண்டு-பிடித்துள்ளனர்.
பெண்அடிமை கொண்டது மதம்
சூரியன் என்பது சர்வ சக்திகளுக்கு ஆதியானது; ஆதாரமானது; யாரும் அண்ட முடியாததது; கடுமையும் மிடுக்கும் நிறைந்தது. அது ஆண்மையின் பண்புகள் நிறைந்த கடவுள்.
இதற்கு நேர் எதிரிடையானது பூமி. பூமியின் சக்திகள் மென்மையானவை; வெளியே தெரியும்படி ஆர்ப்பாட்டமானவை அல்ல; யாவரும் நெருங்கிப் பழகலாம் - தாயின் மடியில் மக்கள் தவழ்வது புரள்வது போன்றது உலக மக்களுக்கு பூமியின் பண்புகள்.
எனவே, சூரியனைத் தந்தையின் - ஆணின் அம்சமாக்கி, பூமியைத் தாயின் - பெண்ணின் அம்சமாக்கியதில் வியப்பில்லை. பூமா-தேவிக்கும், சூரியனுக்கும் கல்யாணம் என்றால் அதன் பொருள் என்ன? பெண்மையை ஆண்மைக்கு அடிமையாக்கும் தத்துவமே இங்கே புதைந்து கிடப்பதாக பகுத்தறி-வாளர்களும் தத்துவவாதிகளும் கருது-கிறார்கள்.
தந்தை பெரியார் கூறும் உண்மை
பெண்மையை அடக்கி ஆள்வதுதான் ஆண்மை என்ற கண்மூடித்தனமான கொள்கை மதத்தின் நிழலில் ஒதுங்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இது தர்க்கப்-பூர்வமான உண்மை.
சுயமரியாதைத் திருமணங்கள் நடை-பெறும் போது மணமக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் - தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறும் ஓர் கருத்து இங்கே ஒப்பு நோக்கத்தகுந்தது.
பெண்கள் சம உரிமை பெறாமல் ஆண்களுக்கு அடிமையாக ஆனது ஏன்? என்று கேள்வியை எழுப்பிக் கொண்டு, பதில் கூறும் பொது - பெண்ணடிமையை மதம் தான் புகுத்தி-யது என்பார்.
இந்த உண்மையை - மதத்தின் தத்துவத்தை சூரியன் - பூமி தம்பதிகளான கதை எத்தனை தெளிவாக விளக்குகிறது பார்த்தீர்களா?
கண்மூடிப்பழக்கம் மண்மூடிப்போக
மதம் என்றால் உலகம் எங்கும் ஒரே அடிப்படைதான். புராணமும் இதிகாசமும் வெறும் இலக்கியமாகப் படிக்கப்படுகின்றன மேலை நாட்டில். ஆனால், இந்தக் கேடுகெட்ட இந்திய நாட்டில்தான் இன்னமும் அவை வெறும் இலக்கியங்களாக அல்லாமல், மத நம்பிக்கையுடன் படிக்கப்படுகின்றன.
இத்தகைய கண்மூடிப்பழக்கம் மண்மூடிப்-போக பொங்கல் திருநாளில் நாம் பகுத்தறிவுப் பொங்கலிடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
(14.1.1971 - விடுதலை)