தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சிறப்புச் சிறுகதை
கவிதை
எந்த கடவுள் பெரியவர்
மு.நீ. சிவராசன்
ஆய்வு
உள்ளே - வெளியே
எப்படி?
இசை
ஹாலிவுட் கலை - 12
தமிழும் தமிழணும்
தாலி கட்டாத
கலைஞரின் நகைச்சுவை
தமிழ்நாட்டில் பவுத்தம்
அறிவியல்
பகுத்தறிவுப் பொங்கல்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் எழுதாத்
நிகழ்வு
தமிழர்கள் மீதான - 4

 

 

திருவள்ளுவர் ஆண்டு

வள்ளுவனார் இன்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரிவான ஆராய்ச்சி செய்து, திருக்-குறளாராய்ச்சி என்று முன்னர் எழுதிய ஒரு முற்பகுதியிலும், மாணிக்-கவாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை - சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்தி-லேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றைஇயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக் கூறி அரசியல் பிழைத்-தோர்க்க கறங் கூற்றாவதூஉ முரைசால் பத்தினிக் குயர்ந்-தேரேத்தலும், ஊழ்வினை யுறுத்து வந்தூட்டு மென்பதூஉஞ், சூழ்வினை சிலம்பின் காரணமாகச், சிலப்பதிகார மென்னும் பெயரா, னாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரிய, தடிகணீரே யருளுக, என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்பது உற்றுநோக்கற்-பாலது. சாத்தனார்பின் பாண்டியன் அவைக்களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுவாராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங்கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும் உய்த்துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்கு முரிய தடிகணீரே யருளு கென்றாற்கு, என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின-சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனங் கூறினாரென்க என்று சொல்லிய வாறேவெனின், இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்-க்குமுரிய தென்பதால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக்கடவே மென்பது கருதி, நீரே அருளுமென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டா-ரென்பதாயிற்று என உரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.
இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார், சேரன் செங்குட்டுவனின் இளவல். ஒரு நாள் அரசவையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை, ஒரு நிமித்தகன் வந்து இவரை அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அது கேட்ட தமையன் செங்-குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை நோக்குவதைக் கண்ட இவர், உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு, சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமிலின்பத் தரைசாள் வேந்தராயினார்.

இத்தகைப் பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாமவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகாவமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, சிலப்பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும். அக்காலத்தே சத்தனார் பாத்திரமாகிய மணிமேகலையுமாகும். அம்மணிமேகலையில் தெய்வந் தொழா அள்கொழுநற்றெழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார். எனவே, திருவள்ளுவனார் காலம் 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.