தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 4

 |
எந்தத் துறைகளில் எல்லாம் திராவிடர்கள் வஞ்சிக்கப் பட்டார்கள்; அடிமைப்-படுத்தப்-பட்டனர் என்பதற்கு முக்கியச் சான்றுகள் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழங்கங்களாகவும் வழக்கங்களாகவும் கொண்டாடும் விழாக்கள் ஆகும்!
உழைப்பவர் திருநாளாம் பொங்கல் விழா என்ற அறுவடைத் திருவிழா, தமிழர்தம் புத்தாண்டு தொடக்க விழா தவிர, இன்று தமிழர்-கள் - திராவிடர்கள் கொண்டாடும் விழாக்-கள், சுவைக்கும் இசை, நாட்டியம், கூத்து, - இவைகளை ஆய்வு செய்தால் போதுமே!
அண்ணல் அம்பேத்கர் சொன்னார்
அண்ணல் அம்பேத்கர் ஒரு முறை அழ-காகச் சொன்னார். அடிமைகளாக எம் மக்கள் இருப்பதை விட அவமானம் அதை அவர்கள் உணராமலேயே, அதை ஏதோ தமக்குக் கிடைத்த பெருமை என்று எண்ணும் வகையில் மனமயக்கத்தில் அல்லவா உழலுகிறார்கள்? என்று. அது எவ்வளவு சரியானது!
ஆரிய நாகரிகம், கலை, பண்பாடு, மொழி, இசை, கூத்து, உடற்பயிற்சி, எல்லாம் திராவிட நாகரிகத்திலிருந்து அவர்கள் களவாடியவை.
களவாடிய பொருள்களை களவு கொடுத்த-வரிடமே விற்று லாபம் அனுபவிக்கும் விநோத சுரண்டல் கூட்டம் இந்த சுரர் கூட்டம்.
சொல்லாட்சியில் கூட அன்றாட வழக்கில் அசுரன் என்ற நல்ல சொல்லையே ஏதோ அருவருப்-பானது போல அவர்களது பிரச்சாரத் தந்திரத்தின் மூலம் ஆக்கி விட்டார்களே
இவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே பெருமைப் படுத்திக் கொண்டார்கள் என்ப-தைப் பின்வரும் பகுதி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் : பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் பி. குப்புசாமி எழுதியுள்ள நூலின் பகுதிகள்.
வேதகாலச் சமூகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது; ஆடு, மாடு மேய்த்திடும் ஆயர் குலத்துக்கான வேத சம்கிதைகளை இயற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் துடிப்-பான ஆரியர்களும், உயர்ந்த நாகரிகத்து-க்குச் சொந்தமான ஆனால் வெற்றி-கொள்ளப்-பட்ட அழிவுப் பண்பாட்டாளர்-களான தஸ்யுக்கள் என்பவர்களும் கொண்டது. ஆரியர்கள் தஸ்யுக்-களை வெற்றி கொண்ட-தோடு இனப்பாகு-பாட்டையும் வர்ணத்தையும் புகுத்தி விட்டனர். கருத்த நிறத்தவரான இந்நாட்டு மக்களை விட சிவந்த தோற்றம் உள்ளவர்களான இவர்கள் பூர்வ குடிகளின் கருத்தாக்கத்தையே கவர்ந்து-விட்டனர் என்று பணிக்கர் எழுதுகிறார். வேதங்களின் வாயிலாகக் கடவுள் காட்சி தந்து, தஸ்யுக்களை வெல்லும் சக்தியைம் மந்திர உபாயங்களையும் மந்திரங்களையும் அருளி, வெற்றி பெறச் செய்தார் என்றும் அந்த மந்திரங்கள் ஒருவருக்கும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்ட-னர். (பக்கம் 9) அவர்கள் தங்களை இருபிறப்-பாளர்கள் (துவிஜா) என்றும் அவர்களுக்-கேயுரிய சில சடங்குகளைச் செய்தபின் (உபநயனம்) புனித அறிவு பெறுவதாகவும் அதனால் பூர்வகுடி மக்களை விட அவர்கள் உயர்ந்-தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர்; இவர்களுக்குப் பிறகு இந்-நாட்டில் குடியேறிய ஆரிய இனத்தவரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும் கூறிக் கொண்டனர்; ஏனெனில் இந்த வகை ஆரியர்களுக்கு வேதங்களில் அதிகப் பரிச்சயம் இருந்திருக்கவில்லை. இதுதான் இந்தியாவில் வர்ண முறை தோன்றுவதற்கும், இனவாதம், பிற்படுத்தப்பட்டோர் என்ற பாகுபாடு உருவாவதற்கும் காரணமாகும். ஆனால் இனக்கலப்பு ஏற்பட்டதற்கும் கருப்பு நிறத்தவர்களை ஆரியர்கள் அவர்களின் ரிஷிகளிலும் முனிவர்களிலும் ஒரு-வராக ஏற்றுக் கொண்டமைக்கும் சான்றுகள் ஏளமாக உள்ளன. பாதராயண வேதவியாசர் எனும் வேதங்களைத் தொகுத்தவர் கருப்பு நிறமுடைய ஒரு மீனவப் பெண்ணின் மகன் என்பதும் ஆரிய முனிவர் ஒருவருடன் தகாத உறவு கொண்ட-தால் பிறந்தவர் என்-பதும் அதனா-லேயே கருப்பு எனும் பொருளுடைய பாராயணர் என அழைக்-கப் பட்டார் என்பதும் காணக்கிடக்கிறது. (பக்கம் 9-10)
கருப்பாகவும் தட்டையாகவும் விநோதமான கடவுள் வழிபாட்டைக் கொண்டிருந்தவர்-களுமான மக்களிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளதை வேதசம்கிதைகள் தெரிவிக்-கின்றன. எனவே, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற பேதம் தோன்றுவதற்கும், வலுக்குறைந்த பூர்வ மக்களை விட வலுப் பெற்றிருந்ததாலேயே உயர்குடியினர் எனக் கூறிக் கொண்டதற்கும், கருப்பு நிறங்கொண்டிருந்த வெற்றி கொள்ளப்பட்ட மக்களை விட மேன்மையான நிறம் கொண்டிருந்ததாலேயே உயர் இனம் என்கிற பெருமை கொள்வதற்கும் தஸ்யுக்கள் என்பவர்களுக்கும் பிற ஆரிய இனவந்தேறி-களுக்கும் தெரியாத வேதச் சடங்குகளைச் செய்த காரணம் ஒன்றே இவர்கள் பெருமை பீற்றிக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தன.
க்ஷயஉமறயசன ஊடயளளநள ஆடிஎநஅநவே முயசயேவயமய - னுச.க்ஷ.முரயீயீரளயஅல, க்ஷயபேயடடிசந ருஎநசளவைல, க்ஷயபேயடடிசந-1978)
காவிப்படுத்தினார்கள்
அரசியல் வாய்ப்புப் பெற்றவுடன் முதலில் ஆரியர்கள் கைவைத்தது எதில்? கல்வியில், வரலாற்றில்-தானே! மூளையைக் காயப்படுத்துவதை விட காவிப்படுத்துவது கரையேற விட முடியாத சுமையாகும்!
அக்னிஹோத்திரம் எழுதுகிறார்
ஆதாரபூர்வமாக எத்தனையோ கூறலாம் : முதலில் நக்கீரன் இதழில் வாரந்தோறும் கட்டுரை எழுதிய வைணவ மதச் சிந்தனை-யாளர் முதுமைமிகு அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பு. (அது நூலாக வெளிவந்துவிட்டது (நூலின் பக்கம் 168ல்).
கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம் என்ற கூசயனந ஆயசம மந்திரம்தான் பலருக்கும் ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?
அடியே. இந்த புனிதமான நூலை உன்னு-டைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்-தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் நம்பும். அதற்காகத்தானே தவிர வெறெதற்-காகவும் இல்லை.
இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம். நான் சில பல அத்தியாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி, இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோத்து கழுத்தில் கட்டுவார்கள். பனை-தால்-அதனால் தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.
அப்படிப்பட்ட ளுலஅடிட தான் தாலி. அதாவது ஊருக்குத் தெரிய வேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம்.
இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.
மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்று-தான். அதனால் பொதுவாகவே பெண்-களுக்கு வித்யா ரீதியான என்ன வாப்ப்புகளை கொடுத்தது மநு?
வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்த-தையும், சம்மதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது
நஸ்த்ரீ சூத்ர வேதமத்யதாம்
பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்ரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்-கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசை கூட அவள் காதில் படக்கூடாது.
அதனால்... பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்-காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்-கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.
இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதோ? வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்-போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்-பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.
அப்படிப்பட்ட நிலையில் . . . இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்ரர்களாக பாவித்தது மநு.
இன்றுகூட என்னை சந்தித்து வேத விளக்-கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் நீ சூத்ரச்சி, உன் அம்மா சூத்ரச்சி. உன் பெண்ணும் சூத்ரச்சி என்று கூறுவேன்.
உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்-பட்டு எப்படி? என்பார்கள். நமது ஸ்மிருதி-லேயே இதுதான் விதி என சொன்னதும் அப்படியா? என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுவார்கள்.
ஆக.. மநு-ப்படி பெண்கள் எல்லோருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்திரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால், சூத்ரன் வெளியே உழைப்பதைப் போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்க வேண்டும்.
அதாவது
ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
நஸ்த்ரீ சூத்ர வேதமத்யதாம்
அதனால், பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. யாகங்கள் நடந்தால் அதில் ஒதப்படும் வேதங்களை கேட்காமல் இருப்-பதற்காக புடவையால் காதை மூடிக்-கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.
அப்புறம்? . . .
ஸ்த்ரீதாம உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத். . .
அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.
உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பான் என்றும் இந்த நூலை மய்யமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்-போது வஸ்திரத்தை குறுக்காக அணிய-வேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள். இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்-படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.
பிறகு. . . இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்... பெண்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப் பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். சம்பந்தப்பட்ட விஷயம்தான். சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்-களை தெளிவு படுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என்று மநு சொல்லியிருக்கும்போது. . .
உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்-தால்தானே மநு சொல்வதை புரிந்து கொள்ள முடியும்
சரி! உபநயனம் என்றால் என்ன?
இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆக்கி விட்டார்கள். அதாவது ஏதோ ஆண்-மகனுக்கு முதல் கல்யாணம் போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.
உண்மையில் உபநயனம் என்றால், பிராமணப் பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது . ..?
இப்போது இருப்பதைப் போல அப்போ-தெல்லாம் பள்ளிக் கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சார்யர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம். அதாவது ஆசிரியர் மாணவனைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதுதான்.
இந்த சமயத்தில் அந்த குழந்தைப்பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் பெல்ட் (அந்தக் காலத்தில் துணியாலேயே) கட்டி விட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.
அப்போது அவனது அப்பா . . . பயலே. இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும் வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சார்யரோடு போ. . . என்று பையனை வழி அனுப்பி வைப்பார்.
அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக் கொண்டு நடப்பான்.இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?
- தொடரும் |