தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: புற்றீசல் போல் அன்றாடம் ஒரு கட்சி தொடங்கி வருகிறார்களே இது தான் ஜனநாயகமா?
- ஜீவிதா ரமேஷ், சே.பேட்டை
பதில்: மற்ற நாடுகளில் உள்ளது போல, பதிவு முறை, கணக்குத் தணிக்கைகள் ஆண்டுதோறும், குறைந்தபட்ச எண்ணிக்-கைகள். இவைகளும் - குறிப்பிட்ட ஆண்டுகால அளவுக்குப் பிறகே அவைகளுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் போன்ற நிபந்-தனைகளை உள்ளடக்கிய புதிய கட்டுப்பாடு (Parties Regulation Act) என்று அரசுகள் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கேள்வி: பல கிராமங்களில் இயங்கிவரும் நடுநிலை பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் SC/ST மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை முறையாக வழங்குவது இல்லையே? தற்போது கல்லூரியில் கூட இந்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் கூட முறையாக பயன்பாட்டில் இல்லையே? இதுபற்றிய தங்களின் தி.க. என்ன நிலை எடுத்துள்ளது?
- பள்ளபட்டி கா.காளிராசன், சிவகாசி
பதில்: பொத்தாம் பொதுவில் சொன்னால் பயன் இல்லை; ஆதாரபூர்வமான தகவல்களைத் தாருங்கள். பரிகாரம் - உதவி கிடைக்க நாங்கள் அத்துணை முயற்சிகளையும் செய்கிறோம்.

கேள்வி: சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆதீனங்கள் தமிழில் குடமுழுக்கு செய்வதை எதிர்த்து நீதிமன்றம் செல்வது ஏன்?
- கு.நா. இராமண்ணா, சீர்காழி
பதில்: கம்பனைப் போன்ற ஆரியக் கைக்கூலிகள்; ஆரியமாயையில் சிக்கிய சூத்திர பெருமக்கள் - மகா வெட்கம்

கேள்வி: தினம் தினம் போராட்டம் அறிவிக்கும் ஜெயலலிதா கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கின்றாரா?
- வீர. செல்வம், பூம்புகார்
பதில்: இல்லை; இல்லை. எல்லா ஊர்களிலும் தம் கட்சியில் உள்ளவர்கள் அடுத்த கட்சிகளுக்குத் தாவாமல் இருக்-கிறார்களா என்பதை உறுதியாகத் தெரிந்து-கொள்ளவே, இந்த அன்றாடப் போராட்ட அறிவிப்பு வித்தைகள்!

கேள்வி: ஒரு தனி நபருக்கு சமூகம் சார்ந்த பிரச்சனையோ அல்லது பொருளாதார பிரச்சினையோ, அல்லது உயிர்க்கு பிரச்சினை என்று வரும் போது மட்டும், அனைத்து படைப்புக்கும் கடவுள் தான் காரணம் என்று கூறுகிறவர்கள் கோரிக்கை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் வைக்காமல், நிகழ்கால ஆளும் அரசிடம் கோரிக்கை வைப்பது ஏன்?
- த. சுரேஷ், நாகர்கோவில்
பதில்: எல்லாம் ஆண்டவன் -- ஆள்பவன் செயலே தவிர, அவன் செயல் அல்ல என்பதை அறிவுபூர்வமாக, அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்ட காரணத்தால்!

கேள்வி: இலங்கையில் தமிழீழத்தில் நெருப்புக் குச்சியின் விலை ரூபாய் 2.00 அப்படியானால், தமிழீழத் தமிழர்களின் மிக மிக முக்கியமான தொழில்கள் என்னென்ன?
- வீ.மு. சின்னத்தம்பி, தொப்பக்காடு, ஈரோடு
பதில்: வாழ்வுரிமை கிட்டாத இருட்டில் உழலும் அவர்கள் நிலைக்கு இறங்கி, ஆதரவுக் குரல் கொடுங்கள் முதலில். மற்ற எண்ணிக்கையெல்லாம் பிறகு...!

கேள்வி: பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காத நாடுகளும் உலகில் உள்ளன. அடிப்படை உரிமைகளை பெண்கள் பெற தடையாக இருப்பது பலவகை மதங்கள்தானே?
- தங்க. விசயா, துறையூர்
பதில்: ஆம். அதிலென்ன அட்டி? இத்தகைய பிற்போக்குச் சிந்தனை வளர்ந்த வளரும் பல உலக நாடுகளிலும் உள்ளதே! அதற்கு மதம்தான் காரணம் ஒரு சிறு எடுத்துக்காட்டு. தலிபான் இயக்கம் உள்ள நாடுகள்!

கேள்வி: முன்பு ஒருமுறை சட்டமன்றத்தில் சிவபுண்ணியம் (ச.ம.உ) அவர்கள் அறிவியல் துறை அமைச்சகம் அமைத்திடவேண்டுமென்று வலியுறுத் தினார்கள்.
அறிவியலுக்கென்று ஓர் அமைச்சகம் தனியாக ஏற்படுத்தத் தாங்கள் முயற்சி செய்தால் கைகூடும் என்று கருதுகிறேன் செய்வீர்களா?
- அ. வையாபுரி, நத்தம் வேலூர்
பதில்: சிவபுண்ணியம் முதல், யார் புண்ணியத்தாலாவது வராதா என்று நினைத்தால் வராது. காலம் கனியும்போது கலைஞர் ஆட்சியில் தை முதல் நாள் புத்தாண்டு என்று எம்மை தை தை என்று ஆடவைத்துள்ளதே அதுபோல! காத்திருப்போம்!

கேள்வி: நரேந்திரமோடி - சோ - ஜெயலலிதா சந்திப்பு எதனை உணர்த்துகிறது?
- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: இந்துத்துவா - இந்து மத வெறி, பார்ப்பனியத்தை ஊன்றுகோலாக்கி தமிழ் மண்ணில் புகுவதற்கு பெரும் முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது!

கேள்வி: அண்மையில் புதுச்சேரி வந்த ஜனாதிபதி மேன்மை தங்கிய பிரதீபா பாட்டிலுக்கு அம்மாநில முதல்வர் மாண்புமிகு என். ரங்கசாமி விநாயகர் உருவம் பதித்த பரிசு பொருள் வழங்கியுள்ளாரே?
- மன்னை சித்து, மன்னார்குடி - 1
பதில்: பக்தி வேஷம் போடும் பகல் வேஷம் அது!