தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

இந்துத்துவா

மோடியின் மொழி என்ன ?
பயங்கரவாதமா? தீவிரவாதமா?

தீவிரவாதத்தை எதிர்த்தால் மத ரீதியான செயலா என்ற கேள்வி கேட்டவர் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று தெரிந்தால் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள்.
அறிவிக்கப்படாத ஆபத்தான ஆர்.எஸ்.எஸ். பேர்வழியான துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமியின் அழைப்பினை ஏற்று சென்னை வந்த நரவேட்டை மோடிதான்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் (14-1-2008) இவ்வாறு திருவாய் மலர்ந்து அருளி-யுள்ளார்.
தீவிரவாதத்தை எதிர்த்தால் அது மத ரீதியான செயலா? தீவிரவாதத்தை ஒழிப்பது குற்றம் என்றால் அதற்காக நான் எந்த விலையும் கொடுக்கத் தயார்! (தினத்தந்தி - 15-1-2008).
என்ன தீவிரவாதம், யார் அந்தத் தீவிர-வாதத்தை செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
சபர்மதி இரயில் எரிக்கப்பட்டது யாரால்? அதன் உண்மையான பின்னணி என்ன? என்றெல்லாம் சர்ச்சைகள் நடத்தப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ். தந்திரங்களை அறிந்தவர்-களுக்கு ஒரு உண்மை உறுதியாகவே புரியும். எந்தக் கொலைப் பாதகத்தையும் செய்துவிட்டு அடுத்தவர்கள்மீது பழி போடுவது என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய வழிமுறை.
ஈரோடு பக்கத்தில் சதுர்முகி என்ற ஊரில் பிள்ளையார் சிலைக்கு செருப்புமாலை போட்டுவிட்டு அடுத்தவர்மீது பழி போடவில்லையா? காவல்-துறை உண்மையைக் கண்டு பிடித்து, அதன் திரைமறைவு சூழ்ச்சியை அம்பலப்படுத்தியதே!
பானர்ஜி தலைமையான ஆணையம் - சபர்மதி ரயிலில் ஒரு பெட்டி எரிக்கப்பட்டது தொடர்பாக பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்ட.து.
அதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற மதவெறிப் படுகொலைக்கு யார் பொறுப்பு? இரண்டாயிரம் முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டனரே - அது யார் தலைமையில் ஆட்சி நடந்தபோது?
இந்தக் கேள்விக்கெல்லாம் விடை வெளிப்படையே கொஞ்சம் நஞ்சம் அரைகுறையாக சந்தேகம் கொண்டவர்-களுக்கு தெகல்கா ஊடகம் உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதம் புலனாய்வு முறையில் செய்திகளைச் சேகரித்து அம்பலப்படுத்திவிட்டதே!
இதற்கு ஒரு வரி நாணயமான பதிலோ - மறுப்போ நரேந்திர மோடியோ அவரது வக்கீலான சோ வோ சொன்னதுண்டா?
தெகல்கா நிறுவனத்திடம் பேட்டியளித்தவர்கள் வேறு யாரோ அல்ல, பா.ஜ.க., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம், கிசான் சங், ஏ.பி.வி.பி., அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்களும் அல்லவா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துத் தள்ளியுள்ளனர்
ஒரே ஒரு வரியை இதுவரை அதிகாரப் பூர்வமாக மறுத்தது உண்டா?
மதவாதத்தைக் கொலையாகக் கொண்டவர்கள் குஜராத்தில் நடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல்திட்டத்தை நடை-முறைபடுத்த, அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிப் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கால்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும், சேதாவிலும் ஆயுதப் பயிற்சி அளிக்கும் ஷாகாக்களை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் தானியங்கித் துப்பாக்கிகளைக் கையிலே பிடித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன என்று விவரிக்கிறது தெகல்கா.
திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த அவர்களுக்கு ராணுவத் தளவாடங்கள் தேவைப்பட்டன. வாள், கத்தி, திரிசூலம் என கையால் சண்டையிடும் ஆயுதங்கள் முதல் போருக்கான ஆயுதங்கள்வரை எல்லாமே தேவைப்பட்டன. குஜராத்திலுள்ள வி.எச்.பி. மற்றும் பஜ்ரங்தளங்களை நீங்கள் தீவிரவாதக் குழுக்களிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கிகள் இவை அனைத்தையும் தயாரித்து, மாநிலம் முழுவதும் விநியோ-கித்தும் வந்தார்கள். கோத்தரா சம்பவத்திற்குப் பிறகு இந்த ஆயுதங்கள் பெருமளவில் கொலைகாரர்கள் கையில் கொடுக்கப்பட்டன என்று விலாவாரியாக விவரிக்கிறது தெகல்கா.
தீவிரவாதத்தை எதிர்த்தால் அது மத ரீதியான செயலா என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் மோடி மஸ்தான் - இவர் ஆட்சியிலே அவரின் கட்சிக்-காரர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் கொ-லைக் கருவிகள் திட்டமிட்டு விநியோகிக்-கப்பட்டுள்ளனவே - அவற்றைக் கொண்டு சிறு-பான்மையினரைக் குத்திக் குதறி, குருதிக் குடித்துத் தாகம் தீர்த்தனரே. இதற்குப் பெயர் என்னவாம்? தீவிரவாதத்தை எதிர்ப்பது என்று பொருளா? மத ரீதியான செயல்லுக்கு அப்பாற்பட்டது என்றுதான் அர்த்தமா?
யார் யாரையோ பார்த்து பயங்கரவாதிகள் என்று கை கூசாமல் முத்திரை குத்தும் சோ கூட்டம், இந்த பஜ்ரங்தள் கொலைகாரக் கும்பலை எந்தப் பட்டியலில் சேர்க்க உத்தேசம்?
தங்களுடைய தர்மத்தைக் காப்பாற்ற தண்டத்தை (பலாகாரத்தை) பயன்படுத்து-வதும் தர்மமே எனும் மனுதர்மத்தைக் கையில் எடுத்து கொண்டு சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்கள் - யார் கண்டது?
சொந்தமாக துப்பாக்கி தொழிற்சாலை-களையும், பட்டாசுத் தொழிற்சாலைகளையும் வைத்து இருப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வின் பெரும்புள்ளிகள். அதில் ஒருவர் ஹரேஸ்பட் என்பவர் அவர் சட்டமன்ற உறுப்பினரும் கூட!
அவரிடத்திலும் பேட்டி கண்டு வெளி-யிட்டுள்ளது தெகல்கா.
தனது பட்டாசு தொழிற்சாலையில் வெடி-குண்டு தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கடத்தப்பட்டதை விவரித்துச் சொல்லியுள்ளார். அவர் சொன்னவையெல்லாம் தொலைக்-காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை மறுக்க முடியுமா? ராக்கெட் செலுத்தும் கருவியைக்-கூட அவர் தயாரித்துள்ளார்.
முதல் அமைச்சர் நரேந்திரமோடி காவல்-துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்த-வர் என்று கூறுகிறார் விசுவ ஹிந் பரிஷத் தலைவர் ராஜேந்திர வியாஸ்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த-போது எனக்குப் பயணிக்க சிறப்பு அனுமதியிருந்தது என்கிறார் எம்.எஸ். பல்கலைக் கழகத் தலைமைத் தணிக்கையாளர் திமய்ந்த் பட். ஜெ ஸ்ரீராம் என்று கூறினால் காவல்துறையினரோ புரிந்துகொள்வார்களாம்.
இப்படி ஒரு ஹிட்லரையும் விஞ்சும் கொலைகார ராஜ்ஜியத்துக்குச் சொந்தக்காரர் கேட்கிறார் தீவிரவாதத்தை எதிர்ப்பது மதவாதமா என்று.
படுகொலை என்ற காட்டு விலாங்-காண்டிதனத்தில் தங்களை மூழ்கடித்துக் கொண்டு மனித ரத்தவாடை வீசிய பா.ஜ.க. பிரமுகர்கள் மோடியை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள்!
வேறு எந்த முதல்வரும் செய்ய முடியாததை மோடி செய்தார். (உண்மைதானே - இவ்வளவு கொலை பாதகங்களை வேறு எவர்தான் செய்யமுடியும்?).
மோடி முதல் அமைச்சராக இருந்திருக்கா-விட்டால் அவர் வெடிகுண்டையும் வீசியிருப்-பார் என்கிறார் அவரின் நெருங்கிய சகாவான அரவிந்த பாண்டியன்.
என்னை வெளியே கொண்டு வர நரேந்திர-மோடி மூன்றுமுறை நீதிபதிகளை மாற்றினார் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். பல வழக்குகளில் சிக்கிக் கொண்டிருந்த பாபு ஸ்ரீ ரங்கா.
காவல்துறையினரே எப்படியும் 70-80 முசுலிம்களைக் கொன்று இருப்பார்கள் என்று கூறுகிறார் இன்னொரு பிரமுகர் - சுரேஷ் ரிச்சர்ட்.
சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்டதற்குப் பழிக்குமேல் பழி வாங்கவேண்டும் என்ற யோசனை முதல் அமைச்சர் நரேந்திர மோடியிட-மிருந்தே வந்தது என்கிறார் பல்கலைக் கழகத் தலைமை தணிக்கையாளர் என்ற பெரிய பொறுப்பிலுள்ள திமிந்த்பட் என்பவர்.
நரேந்திரமோடி என்ற மரண வியாபாரியின் அட்டூழியத்துக்கும், நர வேட்டைக்கும், ஈவு இரக்கமற்ற ரத்தம் உறிஞ்சும் அட்டை மனிதன் என்பதற்கும் இன்னும் ஆதாரங்கள் மலை மலையாக உள்ளன!
பில்கிஸ் பானு என்ற ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை அவரின் உறவினர்கள் முன்னி-லையி-லேயே கூட்டாகச் சேர்ந்து வன்புணர்ச்சி செய்து தூக்கி எறிந்தார்களே - அந்தப் பெண்ணின் மூன்று வயது குழந்தையைப் பறித்து கருங்கல்லில் மண்டையை மோதி செதிர்காய் விட்டார்களே - அடயேப்பா - இந்தக் கூட்டத்தின் பின்னணியில் சர்வ அதி-காரம் படைத்த முதல் அமைச்சராகயிருந்த நரேந்திரமோடியான இந்தக் குரூரனுக்கு சபாஷ் போட்டு பூங்கொத்து கொடுத்து குஷாலா பாடும் கூட்டம் சோ கும்பல் என்று நினைக்கிறபோது, ச்சே... இந்தக் காலத்திலும் மனித உருவில் இப்படிப்பட்ட ஜென்மங்-களா? என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.
பெஸ்ட் பேக்கரியில் ஒரே இடத்தில் 14 பேர்களை துடிக்கத் துடிக்க நெருப்பு மூட்டி கரியாக்கினார்களே கயவர்கள் - அந்தக் கொடிய நிழ்ச்சியை நேரில் பார்த்த ஒரே ஒரு சாட்சி சஹீரா. அந்தப் பெண்ணையும் மிரட்டி ரூபாய் 18 லட்சம் லஞ்சமும் கொடுத்து (தெகல்கா அதனையும் ஆதாரத்துடன் வெளிப்-படுத்திவிட்டதே) கொலைகாரர்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்ல வைத்துவிட்டனரே. பாஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீவத்சா என்பவர்தான் இந்த வேலையைச் செய்தவர் என்பது அம்பலத்துக்கு வந்துவிடவில்லையா?
இந்துத்துவா வாதிகள் எந்த எல்லைக்கும் சென்று எந்தக் குரூரத்தையும் செய்யத் தயங்காத மனித உருவில் திரியும் விலங்குகளா - இல்லையா?
இவ்வளவையும் செய்துவிட்டு தீவிர-வாதத்தை தான் நான் எதிர்த்தேன் - இது குற்றமா என்று கொஞ்சுமொழி பேசுகிறாரே இந்தக் கொடியவர் - ஒரு கனம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சென்னையில் ஓர் அரங்கத்துக்குள், அழைக்-கப்-பட்ட குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த-வர்களின் மத்தியில் குஜராத் நிகழ்வுகளைப்-பற்றி நீட்டி முழங்கியிருக்கின்ற குஜராத் முதல் அமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி, அன்று சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் கரண்தப்பார் பேட்டி கண்டபோது (19-10-2007) பதில் அளிக்க முடியாமல் வியர்த்து விறு-விறுத்து, விழிப்பிதுங்கி ஒரு சில நிமிடங்-களுக்குள்ளேயே ஆடிப்போனது - ஏன்? தீவிரவாதத்தை எதிர்ப்பது குற்றமா என்று இக்கேள்வி கேட்டவர் அன்று கரண் தப்பாரிடம் எதிர் கேள்வி கேட்டு மடக்க வேண்டியதுதானே? ஓர்றற ஊடகத்தின் முன் நேர்மையான கேள்விகளுக்கு விடையிறுக்க முடியாத குற்ற-வாளி என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்து-விட்டதே! குண்டூரிலே அடிபட்டு குல்பர்கா சென்று மீசையை முறுக்கி என்ன பயன்?
ஒரு இனம் ஒழிக்கப்படுகிறதே - அதனைக் காப்-பாற்ற வேண்டுமே என்ற மனித நேயத்தோடு சிங்கள இனவெறி அரசின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து ஆயுதம் தூக்கினால் அவர்கள் பார்வையில் பயங்கரவாதம்.
ஆனால் ஒரு கூட்டம் கூட்டம் சிறுபான்மை மக்களை முற்றாக ஒழித்துக்கட்ட அரசின் உதவியோடு, காவல்துறையின் துணையோடு வேட்டையாடினால் அதற்குப் பெயர் என்னவாம்?
அவர்களைக் கேட்டால் அவர்கள் சொல்லக் கூடும் அதுதான் இந்துத்வா வாதம் - ராம ராஜ்ஜியம்.
காந்தியாரை கொன்றதற்கே பகவான் கிருஷ்ணன் கீதையை எடுத்துக்காட்டிதானே நியாயம் கற்பித்தார்கள்!
குஜராத்தில் கட்சி வேறுபாடின்றி மிசா குற்றவாளிகளைக் கைது செய்தேன் என்று தனது ஆட்சியின் நேர்மைக்கு அக்மார்க் முத்திரையைத் தனக்குத்தானே குத்திக் கொண்டு துக்ளக் ஆண்டு விழாவிலே பேசியிருந்தார்.
இதே நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் பொடா சட்டத்தின்கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 286 பேர்கள் முசுலிம்-கள், ஒரே ஒருவர் அதுவும் சீக்கியர்.
வேட்டையாடப்பட்ட மக்கள் குற்றவாளி-கள் - வேட்டையாடியோர் உதாரண புருஷர்கள் - இதுதான் மோடியின் ஹிந்து ராஷ்டிரத்தின் ராமராஜ்ஜியத்தின் உயர்ந்த-பட்ச ராஜ தர்மம்!
ஹிட்லரும் மடிப்பிச்சை வாங்கவேண்டிய இடத்தில் இருக்கும் இந்த நரேந்திரமோடிதான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டுமாம். அதே கூட்டத்தில் தன் அடங்கா ஆசையை அறிவித்திருக்கிறார் திருவாளர் சோ.
சிறுபான்மை மக்களின் ரத்தம் குஜராத்தில் மட்டும் குடித்தால் போதாது - இந்தியா பூராவுமே குடித்துத் தீர்க்க வேண்டும் என்ற அடங்கா வெறி, வார்த்தைகளாக வெளி-வருகிறது - இவர்கள் நாட்டு மக்களால் அடையாளம் காணப்பட வேண்டும். நாடு - காடு ஆவதற்குமுன் அது தடுக்கப்பட்டாக வேண்டும்.
இதற்குப் பரிகாரம் என்ன? தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுமக பேராயுதம்தான் இதற்கு முடிவு கட்டும். இது கல்லின்மேல் எழுத்து
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!