தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

எப்படி?

மெல்லக் கொல்வது சிலந்திகள் கையாளும் வழி. அதன் எச்சிலால் நூல் தயாரிக்கிறது. இது வலுவாக இருக்கும். இதை வலையாக அழகாகப் பின்னுகிறது. இதற்கான பயிற்சி எங்கும் எடுக்கவில்லை. இப்படி வலையை விரித்துவிட்டுப் பொறுமையாகக் காத்திருக்கிறது. இரை வலையில் சிக்கும். அதைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று இரையைக் கடிக்கும். இதன் விஷம் இரையின் உடலில் மெல்லப் பாய்ந்து அதற்கு மயக்கம் வரும். பிறகு இறந்துவிடும். சிலந்தி அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடும். ஒருவாரம் வரை வைத்திருந்து கூடச் சாப்பிடும்.
இன்னொரு வகைச் சிலந்தி உள்ளது. னுநடியீளை என்று அழைக்கிறார்கள். இதுவும் வலை கட்டும். அதை அகலமாகப் பிடித்துக் கொண்டு இருக்கும். வலையில் இரை வந்து மாட்டும் என்று வெயிட் பண்ணாது. மீன் பிடிப்பவர்களைப் போல இதுவும் இரை கண்ணில் பட்டதும் பறந்தோ நெளிந்தோ நகர்ந்தோ கிட்ட வந்ததும் வலையை இரையின் மீது வீசிப் பிடித்துச் சாப்பிட்டு விடும். மெல்லக் கொல்வது இதற்குப் பொருந்தாது.


திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை மாண்புமிகு மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார். ஆபாசமான அருவருக்கத்தக்க கதையினை அடிப்படையாக கொண்ட தமிழ் வருஷப் பிறப்பை மாற்றும் வகையில் தை முதல்நாள் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டை அரசு நடைமுறைப்படுத்தும் என அறிவித்திருக்கிறார். தமிழினத்தின் மானமீட்பு நடவடிக்கையான இதனை தமிழறிஞர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மதுரையில் ஒரு தமிழிறிஞர் (?) இருக்கிறார். பெயர் சாலமன் பாப்பையா. இவர்தான் சில நாட்களுக்கு முன் அங்கவை, சங்கவை என்ற அழகிய தமிழ்ப் பெயர்களை சிவாஜி திரைப்படத்தில் இழிவுபடுத்தியவர்.
பார்ப்பன சுஜாதா எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசி தமிழர்களை அசிங்கப்படுத்தியவர். இப்போது இந்த தமிழறிஞர் தை முதல்நாள் குறித்த அரசின் அறிவிப்பு குறித்து ஒரு கருத்தைக் கூறியுள்ளார். அதனையும் தமிழ் என்றாலே வயிறு எரியும் தினமலரில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரிதாகப் போய்ச் சேராது. பெயரளவுக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இது நடைமுறைக்கு ஒத்து வராது. வழக்கத்தில் உள்ள விஷயத்தை மாற்றுவது கடினம், இதுதான் பாப்பையா உதிர்த்த முத்துக்கள்.
வழக்கத்தில் உள்ள விஷயத்தை மாற்றுவது கடினமாம். சென்னை - ராஜதானி என்றுதான் வழக்கத்தில் இருந்தது. அதனை மாற்ற அண்ணா சட்டம் இயற்றி தமிழ்நாடு என்று ஆகிவிடவில்லையா? மெட்ராஸ் என்று வழக்கத்தில் இருந்தது, கலைஞர் போட்ட ஆணையால் சென்னை என்று வழக்கத்திற்கு வந்துவிடவில்லையா? தேவதாசி வழக்கம், உடன்கட்டை ஏறும் வழக்கம், பால்ய விவாகம் போன்றவையெல்லாம் அரசு கொண்டு வந்த சட்டத்தால் ஒழிக்கப்படவில்லையா? தமிழிலேயே இல்லாத வடமொழிப் பெயர்கள் கொண்ட ஆண்டுகள் எப்படித் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்? தமிழ் படித்த பாப்பையாவுக்குத் தெரிய வேண்டாமா? தமிழ்ப் படித்தது பிழைக்க மட்டும்தானா? பார்ப்பானும் தினமலரும் வயிறெரிவதில் கூட நியாயம் உள்ளது. தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழ் இலக்கியங்களைக் கற்று அதனால் பிழைக்கும் பாப்பையா போன்றவர்கள் இப்படிப் பேசுவது சரிதானா?
-பெரியாரிடி