தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

மனிதர்

கோயிலுக்குக் கொடுத்ததைவிட பெரியாருக்குக் கொடுத்ததே அதிகம்

விகேயென்.கண்ணப்பன்- இப்பெயரைத் தமிழ்நாட்டில் அறியாதவர்கள் இருந்தால் அது அதிசயம்! அக்காலத்தில் வள்ளல்கள் வாழ்ந்த-தாகப் படித்திருக்கிறோமே தவிர, நாம் பார்த்ததில்லை. ஆனால் இன்று வாழும் வள்ளலாக, நிஜத்தில் நம் முன்னே இருக்கிறார் விகேயென். கண்ணப்பன் அவர்கள்!
ஒரு சிலரை மேதை என்போம். அதை சிலர் ஏற்பர்; சிலர் மறுப்பர். அதேபோல ஒருவரை கவிஞர் என அழைப்போம். அதையும் சிலர் ஏற்பர்; சிலர் மறுப்பர். ஆனால் விகேயென் அவர்களைக் கொடைவள்ளல் என்றோ, கல்வி வள்ளல் என்றோ அழைத்தால் அதை மறுப்பதற்கு இன்று வரை யாருமில்லை. காழ்ப்புணர்ச்சியும், சுயநலமும், பொறாமையும், வஞ்சகமும் நிறைந்த இச்சமூகத்தில், இப்படி-யான ஒரு பெயரை எடுப்பது இமாலய சாதனை அல்லவா?
எளிமைக்கும், பணிவுக்கும் பெயர் போனவர். அனைத்துத் தரப்பு மக்களோடும் அன்போடு பழகக் கூடியவர். தன் நிறுவனத்தில் பணி-புரியும் 600 -க்கும் மேற்பட்ட தொழி-லாளர்களை தம் இதயத்திலே அரவணைத்துக் கொண்டவர். இப்படியெல்லாம் நாம் கூற-வில்லை. பயன்பெற்ற மக்களும், வாழ்வாங்கு வாழும் தொழிலாளர்களும் வாழ்த்துகின்றனர்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இதுவரை 103 தொழிலாள நண்பர்களுக்குச் சுயதொழில் செய்வதற்கு ரூ. 1 இலட்சம் வீதம் வழங்கியுள்ளார். அதையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பிறந்த நாளில் இதுவரை 1 கோடியே 3 இலட்சம் அன்-பளிப்பாக வழங்கியுள்ளார்.
இப்போது நினைத்துப் பாருங்கள்! யாராவது தம் தொழிலாளர்களுக்குச் சுய-தொழில் செய்ய ஊக்கப்படுத்தி ரூபாய் 1 இலட்சம் கொடுப்பார்களா? அதுவும் 103 தொழிலாளர்களுக்கு! இதுமட்டுமல்ல இதே தொழிலாளர் தோழர்களுக்கு பல்வேறு நிலைகளிலும் 550 பீரோ, 25 தங்கமெடல், 300 மிதிவண்டிகள், 90 எரிவாயு அடுப்புகள், 140 தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவை வழங்கியுள்ளார். மேலும் தொழிலாளர்களுக்கு இலவசமாக இருப்பிட வசதி செய்து கொடுத்து தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எதற்குமே கட்டணம் வாங்குவது கிடையாது.

இதுதவிர, பொதுமக்களுக்கு அவர்-கள் வாய்ப்பில்லாத நிலையில் இருந்-தால் திருமணத் தேவைகளுக்கான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்-களை அன்பளிப்பாக வழங்கு-கிறார். இவ்வளவு ஏன்? திரு-வெறும்பூர் விகேயென் நகரில் உள்ள திருமண மண்ட-பத்தையே இலவசமாகக் கொடுக்கிறார்.
இவைகள் இப்படியிருக்க, விகேயென் அவர்கள் செய்து வரும் கல்விப் பணிகள் அளப்பரியன. தம் பெற்றோர்கள், கலைஞர், ஆசிரியர் வீரமணி, அன்பில், மன்னை ஆகியோரின் பேரில் தலா 1 இலட்சம் வீதம், 8 அறக்கட்டளைகளை உருவாக்கி, பல்வேறு உதவி-களைச் செய்து வருகிறார். திருச்சி சேம்பியன் பள்ளி மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களுக்கு இதுவரை 18 இலட்சம் வழங்கியிருக்கிறார்.
அதேபோல வாய்ப்புகள் குறைந்த தமிழ் மக்கள் 9000 பேருக்கு வேட்டி, 9000 பேருக்கு சேலை, 9000 பேருக்கு பிளாஸ்டிக் குடம் கொடுத்துள்ளார். மேலும் 400 குடும்பங்களுக்கு இலவசமாகப் போர்வெல், 170 குடும்பங்-களுக்கு அடிபம்பு மற்றும் போர்வெல், 30 குடும்பங்களுக்கு மோட்டார் பம்பு போர்வெல் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இது மட்டுமில்லை. குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு ரூ.1 இலட்சம், விழி இழந்-தோர் மறுவாழ்வு நிதியாக ரூ.2 இலட்சம், 3000 குடும்பங்களுக்குத் திருமண உதவித் தொகை, 800 குடும்பங்களுக்கு விலை மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் என அவர் வழங்காத நன்-கொடைகளே இல்லை. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை அவர் செய்துள்ள மொத்த நன்கொடைகள் 7 கோடியே 66 இலட்சம். சற்றொப்ப 8 கோடி ரூபாய். அதாவது 800 இலட்சம்.
இப்போது சொல்லுங்கள்! இவரைக் கொடை வள்ளல், கல்வி வள்ளல் என்றால் மறுப்-பார் யார்? அதே நேரம் விகேயென் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும் எனப் பலரும் நினைக்கின்றனர். நாமும் நினைத்தோம். இப்படி ஆயிரக்-கணக்கில், இலட்சக்கணக்கில், கோடிக்-கணக்கில் எப்படி நன்கொடைகள் வழங்க முடிகிறது என்பதுதான் அந்த மகா கேள்வி. அந்தக் கேள்வியோடு அவரை நாம் சந்திக்-கிறோம். கொஞ்சம் விரிவாகவும், வெளிப்-படையாகவும் அவர் பேசுகிறார்.
னு நீங்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலை குறித்து சொல்லுங்கள்?
நான் பிறந்தது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் எனும் சிற்றூர். இலட்சுமணன், - கல்யாணி என் பெற்றோர்கள். எனக்கு 3 சகோதரர்கள், 1 சகோதரி உள்ளனர். பள்ளிப் படிப்பைக் கிராமத்திலேயே முடித்-தேன். தொடர்ந்து 1967-1970 களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கட்டுமானத் துறையில் (நு - உஎடை) சேர்ந்தேன். னு துவாக்குடியில் விகேயென் (ஏமுசூ) நிறுவனம் தொடங்கப்பட்டது எப்போது?

1970 இல் பட்டம் பெற்ற நான் திருவெறும்-பூர் பாரத மிகுமின் நிறுவனத்தில் (ழெநுடு) வேலைக்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. நாம் ஏன் சுயமாகத் தொழில் தொடங்கக் கூடாது என்கிற சிந்தனை அப்போது ஏற்பட்டது. உடனடியாக துவாக்-குடியில் உள்ள இந்த இடத்தைத் தேர்வு செய்து, 3 தொழிலாளர்களுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.
பெல் நிறுவனத்தில் வேலை கிடைக்காத நிலையில் இந்த நிறுவனத்தை நான் தொடங்-கினேன். ஆனால் இதன் அடிக்கல் நாட்டு விழா 19.09.1971 இல் நடைபெற்ற போது பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் வி.கிருஷ்ண-மூர்த்தி தலைமையில், அன்பில் தர்மலிங்கம் அடிக்கல் நாட்டினார். அதேபோன்று நிறு-வனத் திறப்பு விழா 25.06.1972 இல் நடந்த போது, அப்போதைய பெல் பொது மேலாளர் பி.வி.கே.அச்சன் தலைமையில் அன்பில் அவர்கள் திறந்து வைத்தார்.
னு ஏமுசூ என்பதன் விரிவாக்கம் என்ன? உங்கள் நிறுவனம் முழுக்கவே ஊதா நிறத்தில் இருப்பதன் இரகசியமென்ன?
ஏ என்பது என் நெருங்கிய நண்பரும், கல்லூரித் தோழருமான வள்ளியப்பனைக் குறிக்கும். முசூ என்பது எனது பெயரான கண்ணப்பன். நான் தொழில் தொடங்கிய போது, எனக்கு ரூ.2 இலட்சம் கடனாகக் கொடுத்து உதவியவன் என் நண்பன் (இப்பணம் அக்காலத்தில் 2 கோடிக்குச் சமம்). அந்த நன்றியின் அடிப்படையில், நண்பன் பெயரின் முதல் எழுத்தை என் நிறுவனத்திற்கு வைத்துள்ளேன்.
ஊதா நிறத்திற்கு எந்த இரகசியமும் கிடையாது. என் பெயர் கண்ணப்பன். இதில் கண்ணன் என்ற சொல் வருகிறது. அதனால் நீலநிறம் பயன்படுத்துவதாகச் சிலர் கூறு-கின்றனர். அது முற்றிலும் தவறானது. எங்கள் நிறுவனத்தைத் தனித்து அடையாளப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நிறத்தை நான் தேர்வு செய்தேன். இன்றைக்கு ஊதா நிறம் என்றாலே விகேயென் எனப் புலப்படுகிறது அல்லவா, அதுதான் என் நோக்கம்.
எங்கள் நிறுவனம் தொடங்கி 36 ஆண்டுகள் ஆகின்றன. கடுமையான போட்டிகளின் நடுவே-தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எங்கள் பணியில் எப்போதுமே நேர்த்தி இருக்கும். பொருளின் தரம் மற்றும் குறிப்-பிட்ட நேரத்தில் பொருளை ஒப்படைப்பதில் (னுநடஎநசல) மிகக் கவனமாகச் செயல்படுவோம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) மிகச் சிறந்த நிறுவனமாக எங்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து விருதும், நற்சான்றிதழும் வழங்கி வருகிறது. பெல் நிறுவனத்திற்காகச் சற்றொப்ப 240 நிறுவனங்களுக்கு பேப்ரி-கேசன் (குயசெஉயவடி) மற்றும் ப்ளாஸ்டர் (டெயளவநச) பணிகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். இதன் அனைத்து வளர்ச்சி-களுக்குமே எங்கள் தொழிலாளர்களே முழுக்-காரணம் என்பதை எப்போதுமே நான் மகிழ்ச்சியோடு கூறுவேன்.
எங்களின் ஏமு எனும் பெயரைச் சுற்றிலும் சிறுசிறு கோடுகளால் ஆன வட்டம் இருக்கும். அதில் எத்தனைக் கோடுகள் இருக்கின்றனவோ அத்தனை நிறுவனங்களை நாங்கள் வளர்த்-திருக்கிறோம் என்று பொருள். தொடக்கத்தில் ஏமு என்பதைச் சுற்றி 4 கோடுகள் மட்டுமே இருக்கும். இப்போது 18 சிறு சிறு கோடுகள் உள்ளன. அப்படியெனில் எங்கள் விகேயென் குழுமத்தில் 18 நிறுவனங்கள் செயல்படுவதாகப் பொருள்.
னு உங்களுக்குத் திருமணம் எப்போது நடைபெற்றது?
என்னுடைய திருமணம் திருச்சியில் 26.05.1978 இல் நடைபெற்றது. என் வாழ்-விணையர் பெயர் கண்ணாத்தாள் (என்ற) வசந்தா. நாங்கள் அந்தக் காலத்திலேயே ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டோம். இராஜாசர் முத்தையா செட்டி-யார், அன்பில் தர்மலிங்கம், சாதிக்பாட்சா ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர். அதற்கு அடுத்த நாள், எங்களின் சொந்த ஊரான கண்டரமாணிக்கத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமை தாங்கினார்.
எனக்கு விகேயென் ராஜா, விகேயென் கல்யாணசுந்தரம், விகேயென் நாராயணன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனை-வருமே தனித்தனியாகத் தொழில் செய்-கின்றனர்.
னு நீங்கள் இதுவரை 8 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளீர்கள். எப்படி உங்களால் இப்படி வாரி வழங்க முடிகிறது? இதற்கு உங்கள் வீட்டில் எதிர்ப்பு இருக்காதா?
அப்படியெல்லாம் நான் பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்கிறேன். எங்கள் வீட்டில் என் துணைவியாரோ, பிள்ளைகளோ யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மகிழ்ச்சி-யோடுதான் அவர்களும் ஏற்றுக் கொள்-கின்றனர். இந்த விகேயென் நிறுவனத்தில் நான், என்துணைவியார், 3 பிள்ளைகள் ஆக 5 பேருமே சமமான பங்குதாரர்கள். எனவே எந்த ஒன்றிலுமே அவர்கள் தனித்து முடிவு எடுக்க சுதந்திரம் உண்டு. அந்தளவிற்கு இந்த நிறு-வனத்தை தொலைநோக்குச் சிந்தனையோடு உருவாக்கிச் செயற்படுத்தி வருகிறோம்.
னு கோவில்களுக்கும் நன்கொடைகள் வழங்குகிறீர்கள், திராவிடர் கழகத்திற்கும் வழங்குகிறீர்கள். அதே போல இரண்டு நிகழ்ச்சி-களிலுமே பங்கேற்று வருகின்றீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
நான் கோவில்களுக்கு வழங்கியதைவிட பெரியாருக்கு வழங்கியது-தான் அதிகம். என்னைப் பொறுத்தவரை யார் எந்தெந்தத் தேவையோடு வருகிறார்களோ அதைப் பூர்த்தி செய்கிறேன் அவ்வளவுதான். கிராமத்திலிருந்து சிலர் தண்ணீர்த் தொட்டி வேண்டும் என்பார்கள், சிலர் பள்ளிக் கூடங்களுக்கு நாற்காலி வேண்டும் என்பார்கள், அதேபோல கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில்களுக்கு பொருள்கள் தேவை என்பார்-கள். ஒவ்வொருவருக்கும் என்னால் முடிந்ததைச் செய்து கொடுக்கிறேன்.
எனக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் கிடையாது. அதேநேரம் இறக்கும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம்? வாழும் போது மகிழ்ச்சியோடு வாழ்ந்து, பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதுதானே? னு உங்கள் வாழ்க்கை பரிணாமத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தராக பொறுப்பு வகிப்பது குறித்து...? ஆசிரியர் அவர்களும் அவரது குடும்பத்-தாரும் என் மீது வைத்துள்ள மதிப்புக்கும் மரியதைக்கும் நான் உளமார நன்றி கூறுகிறேன். கல்விப்பணியில் மிக பெரிய பொறுப்பு வேந்தர் பொறுப்பாகும். இதற்கு ஆசிரியர் அவர்கள் பொருத்தமானவர் ஆவார். இணைவேந்தராக என்னை நியமித்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த உச்சகட்ட மதிப்பாக இதை நான் கருதுகிறேன். ஆசிரியர் அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். னு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் விகேயென் தங்குமிடம் உள்ளதே? அதன் நோக்கம் என்ன?
தமிழ்நாட்டில் திருச்சி, குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், காரைக்குடி, மதுரை, இராமேஸ்வரம், இராணிப்பேட்டை, சென்னை ஆகிய இடங்களில் எங்களின் விருந்தினர் இல்லம் உள்ளது. இது முழுக்க முழுக்க எங்களின் தொழிலாளர்களுக்காக நிறுவப்பட்டது. தொழிலாளர் நண்பர்கள் சுற்றுலா சென்றால் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் அல்லவா? தங்குவதற்கு நல்ல இடமும், சிறந்த உணவும் கிடைத்தால் அது மனமகிழ் சுற்றுலாவாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் தொழிலாளர்கள் சுற்றுலா சென்றால் ஒரிரு நாள்கள் தங்க வேண்டி-யிருக்கும். அவர்கள் விடுதியில் அறை எடுத்துத் தங்கினால் செலவினங்கள் அதிகரிக்கும். எனவே அவர்களின் ஏதாவது ஒரு செலவை நாம் ஏற்றுக் கொள்வோமே என்ற அடிப்படையிலே இந்த விகேயென் இல்லங்கள் நிறுவப்-பட்டுள்ளன. இவையனைத்தும் முழுக்க இலவச-மாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் தங்குவதற்கு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இடம் கூடுதலாக இருந்தால் பொதுமக்களும் இலவசமாக உரிய அனுமதி-யோடு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 9 இல்லங்-களுக்கும் பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.2 இலட்சம் செலவு செய்கிறோம். ஒரு ஆண்டிற்கு கால் கோடி செலவாகிறது. இதில் குற்றாலத்தில் உள்ள விகேயென் இல்லத்தில் 500 பேரும், மற்ற இடங்களில் சற்றொப்ப 100 பேர்களும் தங்கலாம். (பேசிக் கொண்டிருக்கும் போதே இராமேசுவரம், கன்னியாகுமரி இல்லங்களில் தங்குவதற்கு 2 பரிந்துரைக் கடிதங்கள் வரு-கின்றன. புன்முறுவலோடு அதற்கு கையொப்-பமிடுகிறார் விகேயென் அவர்கள்)
னு உங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்து சொல்லுங்களேன்?
அமெரிக்காவின் மெல்வின் ஜோன் பெலோசிப் சார்பாக விருது அளிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குச் சிறந்த சேவை செய்ததற்-க-ன விருதினை (னு.ஐளே- னுடிஉவடிச டிக ஐனேரளவசையட) இலங்கையில் 1996 இல் வழங்கினார்கள். அதே போல சமூக சேவகர் எனும் அடிப்படையில் கவுரவ டாக்டர் பட்டத்தினை (னுடிஉவடிச டிக ழடிடிரச) மலேசியாவில் உள்ள மெடிசினா ஆல்டர்நேடிவா எனும் அமைப்பு 2007 இல் வழங்கியது. 1970 இல் பி.இ முடித்து, 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 1981 இல் சார்ட்டட் பொறியாளர் (ஊயசவநன நுபேநேநச) எனும் சான்றிதழை அகில இந்தியப் பொறி-யாளர் நிறுவனம் (ஐளேவவைரவந டிக நுபேநேநச) வழங்கியது.
இந்தச் சான்றிதழ் மூலம் கட்டுமானத் துறையில் நிலஅளவையர், சொத்து மதிப்-பீட்டாளர், கட்டடச் சான்று உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் நான் கையொப்பம் இடலாம். இந்தக் கையொப்பம் இந்தியா முழுதும் செல்லுபடியாகும். இதன் அடிப்-படையில் ஒரு சிலருக்கு உதவியாக சில கையொப்பங்கள் வழங்கியுள்ளேன். மற்றபடி அதை வணிக ரீதியாக நான் பயன்-படுத்து-வதில்லை எனக் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட நகராட்சி-யில் பதிவு செய்திருக்கும் ஒரு கட்டிடப் பொறியாளருக்கு பல வகையிலும் வருமானம் கிடைக்கும். ஆனால் விகேயென் அவர்களுக்கு இந்திய அளவில் அரசு அங்கீகாரம் அளித்-துள்ளது. ஆனால் அவர் அதை விளம்பரப்-படுத்திக் கொள்வதுமில்லை; பயன்படுத்திக் கொள்வதுமில்லை!
அதேபோல துவாக்குடியில் உள்ள விகேயென் நிறுவனத்தில் மட்டும் 200 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அங்கு அவர்களுக்கு காலை,மதியம், இரவு 3 நேரமும் இலவச உணவுதான்.
அந்தச் சாப்பாடு எப்படி நன்றாக இருக்குமா? என விகேயென் அவர்களைக் கேட்ட போது, நான் தினமும் 3 வேளையும் இங்குதான் சாப்பிடுகிறேன் என்றார். ஏனென்று கேட்டதற்கு, தொழிலாளர்கள் மட்டும் சாப்-பிட்டால் உணவு தயாரிப்பவர்கள் சுவை குறை-வாகவும், தரமற்றதாகவும் செய்ய வாய்ப்பு உண்டு. நான் தினமும் சாப்பிடுவதால் சுவையும், தரமும் நன்றாக இருக்கும்தானே என்கிறார்.
இதற்கு மேல் நாம் என்ன சொல்ல? உண்மை சார்பாக உண்மையான வள்ளலிடம் இருந்து விடுதலை பெற்றோம்.
சந்திப்பு: வி.சி.வில்வம்