மொழி பெயர்ப்புச் சிறுகதை
முயல் கண்கள்
 |
பகுதி மட்டும் அடைக்கப்பட்ட அந்த பிளாட்டின் முன் வாசலின் இடைவெளியில் முயல் குட்டி ஒன்று வெளியில் குதித்து பின்பக்கமாக வருவதைக் கண்டு என்னை திகைக்க வைத்தது. அந்த கட்டடத்தின் வராந்தாவில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கும் முயல் குட்டியை பிடிப்பதற்கு ஓர் பேரழி வருவாளோ என என் மனம் கேட்க தோன்றியது
பிக் சிற்றி ப்ளூஸ் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் கட்டடத்திலிருந்து வெளியேற முயல்குட்டியை பிடிப்பதற்கு பின் தொடர்ந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து ஒன்று என் மனக்கண் முன் நிழலாடத் தொடங்கியது.
வேலை முடிவடையாத அந்த கான்கிரீட் ஏணிப் படிகளில் முயல் குட்டியை பின் தொடர்ந்து சென்ற இளம் பெண்ணை அக்கட்டடத்தின் மேற்பரப்பில், மது அருந்தி மயக்கத்தில் இருந்த இளைஞன் ஒருவன் பலத்காரம் செய்ய முயல, அந்த இளைஞனிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க முயற்சிக்கையில் கட்டடத்தில் இருந்து விழுந்து அப்பெண் மரணம் அடைகிறாள். இதுவே சினிமாவின் உட்கரு.
அதன்பிறகு எனக்கு முயல் குட்டிகளை காணும் நேரத்தில் ஆபத்து நடக்கும் ஒருவித அங்கலாய்ப்பு என் ரத்தத்தில் ஊற்று நீராய் ஓடிக் கொண்டிருந்தது.
அதனால் இளம்பெண், கட்டடத்தில் இருந்து விழும் காட்சி இப்பொழுதும் என் கண் இமைகளில் நிற்கிறது.
முயல், கட்டட வராந்தாவில் மேல் பிளாட்டுக்குச் செல்ல ஏணிப் படிகளில் குதிக்க, அதைப் பின் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குழந்தைகள், இரு சிறுவர்கள், அதற்கு பின்னால் ஒரு சிறுமியும் - சிறுமிக்கு மூன்று வயதிருக்கும். பிளாட்டின் மறு முனைக்கு சென்று-விட்ட முயல் குட்டியை சிறுவர்கள் பிடிப்பதற்கு முயல சிறுமி தன் அண்ணன்-களின் பின்னால் ஆரவாரத்துடன் ஓட கால் தவறிகிழே விழுந்தாள்.
வெள்ளை மார்பிள் தரையில் விழுந்ததால் சிறுமிக்கு தலை உடைந்து ரத்தம் பாயத் தொடங்-கியது. ஒரு நிமிடம் நான் என்னை அறியாமலேயே பயந்து நடுங்கி பின்னர் நடுக்கத்திலிருந்து விடுபட்டு குழந்தையை அள்ளி எடுத்து திறந்து கிடக்கும் வாசலின் ஹாலிங் பெல்லை அழுத்தினேன். சிறுவர்கள் பயத்தால் நடுங்கி நின்றார்கள். பெற்றோர்கள் வெளியில் வந்தார்கள்.
குழந்தை கீழே விழுந்ததை கூறினேன். அந்த வாலிபர் மருத்துவமனைக்குப் போகலாம் என சொல்லிக் கொண்டு நடக்கலானார். அவரை பின்-தொடர்ந்து சென்றேன். கீழே நிறுத்தி-யிருந்த காரில் ஏறும்போது, பயம் கவ்விக் கொண்டது. பின்னர் அதிகம் சிந்திக்காமல் அந்த வாலிபருடன் காரில் ஏறினேன். நான் அம்மனிதரை பின் தொடர்ந்து மருத்துவ-மனைக்கு செல்லும்வரை அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.
தனது மகளின் தலை உடைந்து இரத்தம் பாய்ந்து கொண்டிருக்க நான் பதட்டத்தில் குழந்தையை மடியில் அமர்த்தியிருக்க எந்த ஆசாபாசமும் இன்றி உணர்வின்றி இருக்கும் இந்த மனிதனை, ச்சே, என்ன மனிதன் என்று எண்ணினேன்.
சிறுமி இந்நேரத்தில் மயக்கம் அடைந்தாள். எனது மனம் நடுங்கத் தொடங்கியது. மடியில் மயங்கிக் கிடக்கும் குழந்தைக்கு ஏதாவது சம்பவித்தால்... நான் நடுங்கிக் கொண்டிருந்-தேன். பயம் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்தப் பாலைவன நகரத்திலே மிகப் பெரிய மருத்துவ மனையின் முன்னால் கார் நின்றது. ஈதர் மணக்கும் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம் என்னை கவனித்தேன். சட்டையிலும், பான்டிலும் ரத்தம். பாலைவன நகரத்தில் என் சட்டை-யில் காணும் ரத்தம் போதும் என்னை சிறையிலிட..
நான் அந்த நபரிடம் சென்று, சார், தயவு செய்து என்னை நான் தங்கு-மிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உடல் முழு-வதும் இரத்தம். இந்த வேடத்தில் பேருந்திலோ, பஸ்சிலோ செல்ல முடியாது. யாராவது பார்த்தால் கொலை-காரன் என்றுகூறி போலீசில் பிடித்து கொடுப்பர். குடும்பம் காக்க கடல் கடந்து வந்தவன்.
அவர் சொன்னார். கொஞ்சம் நில்லுங்கள். நான் உங்கள் கூடவே வருகிறேன். மகள் அபாயக் கட்டத்தில் இருக்கிறாள். நான் சண்ணியை காண வந்த அந்த நிமிடத்தை சபித்தேன். நான் மருத்துவமனை வராந்தாவில் அமர்ந்திருந்தேன். மெல்ல என் மனம் எனது வீட்டை சுற்றியது.
ஊருக்கு அத்தியாவசியமாகக் கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டியிருந்ததால் சம்பளமும் கிடைக்க ஒரு வாரத்திற்குமேல் ஆகும் என்பதால் சண்ணியோடு கேட்டால் பணம் பார்த்துக் கொடுப்பான். நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவன் வீட்டில் இருக்-கிறானா என்பதையும் அறியாமல் அவன் தங்கும் வீட்டருகே வந்தது. நான் முயலை பார்த்த வீட்டின் எதிர் திசையில் உள்ள பிளாட்டில் அவன் குடும்பம் தங்கியது. அவன் வீட்டில் அருகில் செல்லும்போது தான் முயல்குட்டி என் முன் பிறவி எடுத்தது.
என் மனம் சதா குழந்தையைப்பற்றியே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் அக்குழந்தையின் தந்தையின் நிச்சயத்தன்மை என்னை அனுமதி இழக்கச் செய்தது. மருத்துவ மனையில் கூர்முனை மிக்க கத்தி குழந்தையின் தலையை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. என்னை பயம் நடுங்க வைத்தது. அக்குழந்தையின் உயிரின் பெயரால் எனது மேல் குற்றம் சுமத்தப்படுமோ கடவுளே, முன்பொருநாள் ஏதோ கவிதை வரிகள் தொண்டையில் இருந்து புறப்பட்டு வர மறுத்தது.
அக்குழந்தையின் உயிரைப் பற்றியுள்ள மனக்குழப்பத்தில் இருந்து விடுபட்டு எனது குடும்பத்தின் நிலைமைபற்றி மனம் நடக்க ஆரம்பித்தது. எனது மகன் ஊரில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான். அதற்கு பணம் உடன் கொடுத்தாகவேண்டும். சம்பளம் கிடைக்கும்வரை காத்திருக்க முடியாத சூழ்நிலை. அங்கு எனது குழந்தைக்கு சிகிச்சையில், இங்கு நான் மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தைக்கு காவல் நிற்க எனக்கு என்மீது அக்குழந்தையின் தந்தை மீது கடுங்கோபம்.
இரத்த அழுத்தத்தால் குழந்தைக்கு மூக்கில் நரம்புகள் சிதைந்து துளித் துளியாக ரத்தம் கசிய ஆரம்பித்தது.
இனி மனதும், உடலும் அமைதியடையாமல் வேறு மார்க்கம் இல்லை. இல்லை எனில் மருத்துவமனை படுக்கையில் கிடக்க-வேண்டி-யது நானும்தான்.
மருத்துவமனை டாய்லெட்டில் சென்று முகம் கழுவி துடைத்துவிட்டு நிற்க எதிர்த் திசையிலிருந்து வீசிய குளிர்காற்று மனதை இதயமாக்கியது. நான், சார் நான் கிளம்-பட்டுமா? என கேட்க அவர் கொஞ்சம் பொறுத்திருங்கள், பின்னர் போகலாம் என்றார்.
பதினைந்து நிமிடம் கழித்தபோது அவரு-டைய நண்பர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் கவருடன் ரெடிமேடு பேன்டும் சர்ட்டும் கொடுத்தார். வெகு சீக்கிரம் என் ரூமுக்கு செல்லவேண்டும் என்ற அவசரத்தில் கால்-சட்டையை மாட்,ட கால்சட்டை முட்டுக்கு மேலே செல்ல மறுத்தது. அவசரம் அவசரமாக பான்டையும், சட்டையையும் சுருட்டிக் கொண்டே உடையுடன் வந்த நபரின் பின்னால் சென்றேன். வந்தவர் என்னை நான் தங்கு-மிடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு என் நண்பர் சண்ணியை அழைத்து விபரம் தெரிவித்தேன். அவன் அறிவுரை கூறினான். குடும்பம் காக்க கடல் தாண்டி வந்துள்ளோம். தேவையின்றி புலிவாலை பிடிக்கும் வேலையை நிறுத்திவிடு. இல்லையெனில் துன்பங்களை தானாக சுமக்க வேண்டியிருக்கும். நானும் இனிமேல் இதே மாதிரி செயல்படுவதில்லை என முடிவு செய்தேன்.
என் மகன் அறுவைச் சிகிச்சை முடிந்து நலம் அடைந்திருந்தான். வாரங்கள் பல கழிந்-திருந்தன. திடீரென கீழே விழுந்து ரத்த காயங்களுடன் காரில் எனது மடியில் கிடந்த குழந்தை, முயல் குட்டி சண்ணியின் வீடு அனைத்தும் என் மனதில் தோன்ற ஆரம்-பித்திருந்தது.
ஒரு விடுமுறை நான் மீண்டும் சண்ணி தங்கும் இடத்திற்கு சென்று இஸ்கத்தர் வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்தினேன். வாசல் திறந்தவர் அக்குழந்தையின் தந்தை.
வேனல் காலம் - கடுமையான வெயிலில் பயணம் செய்ததால் சட்டை வியர்வையால் நனைந்து வியர்வை நாற்றம் வீசியது. என்னை கண்டவுடன் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை கட்டி அணைத்து குதூகலம் அடைந்தார்.
ஒரு புதிய விருந்தினரைப்போல உபசரித்-தார். உட்கார வற்புறுத்தினார். சில நிமிடங்-களில் அப்பெண் குழந்தை என்னருகில் வந்து என் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள். எனக்கு குழந்தையின் நலம்பற்றி விசாரிக்-காததால், குற்ற உணர்வால் அதை மறைக்கும் மனப்பான்மையில் குழந்தையின் நலம்பற்றி விசாரிக்காது என் வீட்டின் பிரச்சினைகளைப் பற்றி பேசினேன். அதன் பின்னரே குழந்தையின் நலம் விசாரித்தேன். குழந்தை நலம்தானே.
பரவாயில்லை, மகளின் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது. தலையில் எட்டு தையல்கள் உண்டு. தையல் நேற்றுதான் பிரிக்கப்பட்டது. அவள் இன்றுமுதல் எல்.கே.ஜி. போய் வந்தாள் என்றார்.
அது ஒரு ஆந்திரா பிஹாரி குடும்பம். அவர் பெயர் இஸ்கத்தர். அவர் மனைவியின் பெயர் தெரியாது. மகள் பெயர் ரீமா.
அந்த வீடு பாலைவன நகரத்தில் உள்ள வீடுகளில் மனோரமாக இருந்தது. குயில், கிளிகள், முயல்கள், பூனை, மீன் இன்னும் சிறிய பிராணிகள் நிறைந்த வீடு. இவைகளை பராமரித்து உணவு கொடுப்பது இஸ்கத்தரின் மனைவியும், குழந்தைகளும் தான். இவர் மனைவியை வெளியே பார்க்க முடியாது.
வரவேற்பரையில் வழிபாட்டு (மூசல்வா) தொழுகை படம். தொழுகையின் போது தரையில் விரிக்கும் தரை விரிப்பு மடக்கி இடப்பட்டிருந்தது. அதனருகே ஒரு சிறிய பிரதிஷ்டை. கவனமாக பார்த்தேன். அது ஒரு இந்து தலித் பிரதிஷ்டை போலிருந்தது. மலையாள எழுத்தாளர் காஞ்ச ஏலய்யாவின் புத்தகங்கள் படித்து புரிந்து கொண்ட தலித் பிரதிஷ்டைக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிந்து ஒரு முஸ்லிம் வீட்டில் எப்படி என்று யோசனையில் ஆழ்ந்து அவரிடம் கேட்க முயன்றபோது, எனது எண்ணங்-களை புரிந்துகொண்ட இஸ்கத்தர் சொன்னார் - உங்கள் பார்வை பதிந்திருப்பது எங்கள் குடும்ப ரகசியத்தில் - சரிதானே என்றார். நானும் சரி என்றேன்.
இதனிடையே அவர் மனைவி டீயும், பலகாரங்களும் கொண்டு வந்தார். டீயை அருந்திவிட்டு கிளம்ப முயன்றபோது ஒரு கவரில் என் சட்டையும், பேண்டும் நன்றாக துவைத்து தேய்த்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
கறை அகற்றும் சலவை பவுடர்கள் தாராளம் உள்ளபோது சட்டையும், பேண்டும் ஏன் களையவேண்டும் என கூறி என் கையில் திணித்தார்.
சட்டையும், பேண்டும் திரும்ப கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமண நாள் அணிந்திருந்த உடை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டும் உடுத்தும் அந்த சட்டையும் பேண்டும் சண்ணியை காண சென்றபோது ஏன் உடுத்-தேன் என் மனம் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறது.
இஸ்கத்தர் என்னை நான் தங்கும் இடத்திற்கு கொண்டுபோய் சேர்த்தார்.
நாட்கள் நகர்ந்தோடின. வருடத்தில் ஒருமுறை ஊருக்கு செல்வதுண்டு. ஊர் செல்லும் நாளும் நெருங்கியது. மனைவி, குழந்தைகள் ஞாபகம். பிள்ளைகளை பார்க்க ஆவலாய் ஊர் திரும்ப முடிவெடுத்துவிட்டால் மனம் தொழிலிலோ வேறு எந்த காரியங்-களிலோ ஈடுபாடு கொள்வதில்லை.
நேசமிக்கவர்களுக்கு ஏதாவது அன்பளிப்-பாக கொடுப்பதற்கு பொருட்கள் வாங்கு-வதற்கும், விமான டிக்கெட் எடுப்பதற்கும் நேரம் போதவில்ல. அன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். அன்று இரவு ஊர் திரும்ப தயாராகி இருந்தேன். இந்நேரத்தில் இஸ்கத்தரிக தொலைபேசி அழைப்பு வந்தது. ஹலோ நண்பரே நலமா என்றார். நான், சார் நலம், இன்று இரவு ஊருக்கு திரும்புகிறேன் என்றேன்.
சரி எப்படியாவது உங்களைப் பார்க்க-வேண்டும். நான் இருமனதுடன் சரி என்றேன். மீண்டும் ஊர் போய்விட்டு வந்த பிறகு பார்க்கலாமே என்றேன். இன்றைக்கே பார்க்க வேண்டும் என்றார்.
நான் எனது சக நண்பர்களைப் பார்த்து-விட்டு ரூம் செல்லும்போது எனது வீட்டருகே இஸ்கத்தர் காரில் சாய்ந்து நின்றவாறே புகை பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.
அவர் வாங்க ஊர் சுற்றி வரலாம் என்றார். நான் இரவு ஊர் திரும்ப இருப்பதால் நேரமில்லை என்றேன். அவர் விடுவதாக இல்லை. பாலைவன நகரத்தில் பிரமாண்டமான நியோன் பிரப சாலையில் கார் பறந்துகொண்டிருந்த நேரம்.
திடீரென யாரும் எதிர்பாராத கேள்வி ஒன்றை கேட்டார் இஸ்கத்தர்.
பலாத்காரத்தை பற்றி என்ன நினைக்-கிறீர்கள் என்றார். என்னை நடுங்க வைக்கும் கேள்வியாக இருந்தது. திடீரென இப்படி ஒரு கேள்வியை எறிவார் என நான் எதிர்-பார்க்கவில்லை.
ஏன் இப்படி கேட்கிறீர்கள் நான் கசப்புடன் கேட்டேன்.
கோபப்படாதீர்கள் கேட்டேன். அவ்வளவு-தான். றுயவ னடி லடிர ழடைய க்ஷடிவ சுயகந. அவர் மீண்டும் கூறினார்.
பாவம் கொடூரம், மனிதன் மிருகமாக மாறும் ஒரு சடங்கு. காட்டு முகூர்த்தம். தயவு செய்து இதைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். நான் இஸ்கத்தருக்கு எச்சரிக்கை கொடுத்தேன்.
கேளுங்கள் - நான் இந்நகரத்தில் மிகப் பெரிய நிறுவனத்தில் அய்.டி. . பிரிவில் லீடர். என்கூடவே நிறைய தமிழர்களும், மலை-யாளிகளும் வேலை செய்கிறார்கள். உங்கள் நாட்டில் மிகப் பெரிய பெண் வாணிபம் நடப்பதாகவும், பலாத்காரம் நடப்பதாகவும் பேசிக் கொள்கிறார்களே. தமிழ்நாட்டில் காட்டுக்கள்ளன் வீரப்பனை பிடிக்க சென்ற போலீசார் வாச்சாத்தி 16 மலைவாழ் மக்களை பலாத்காரப்படுத்தி சிதைத்ததாக ஒரு நண்பர் கூறினார். சரி, உங்கள் நாட்டில் மிகப் பெரிய அரசியல் பிரமுகர் பற்றி சொல்வதுண்டு. புருவங்களை உயர்த்தியவாறே சூரிய முல்லி அப்படித்தானே.
அல்ல, சூரிய நெல்லி. நான் திருத்திக் கூறினேன்.
நீதிமன்றம் அப்பெண்ணுக்கு நீதி வழங்க-வில்லை என்ற மலையாள சக நண்பர்கள் பேசிக் கொள்வதுண்டு, சரிதானே.
நான் தலையாட்டி சரிதான் என்றேன். மீண்டும் பல பாலியல் பலாத்கார கதைகளை பேச ஆரம்பித்தார்.
இத்தனைப் படிப்பும், தெய்வத்தின் நாடு, தெய்வத்தின் மக்கள் என்றும் சமத்துவம் பேசும் மார்க்சிசம் நிறைந்த மண்ணில் ஏன், நான் ஒரு நிமிடம் இஸ்கத்தர் முன்னிலையில் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றேன். பின்னர் இஸ்கத்தரை வெறுப்படையச் செய்ய பிஹாரை-விட நாங்கள் மோசமில்லை என்றேன்.
இஸ்கத்தர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
நண்பரே உங்கள் நாட்டில் பலாத்காரம் செய்-யப்பட்ட பெண்களை யாராவது திருமணம் செய்து கொள்வதுண்டா?
எனக்கு தெரிந்தவரையில் இல்லை. சரி பலாத்காரம் செய்த நபர் அதே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்களாவது...
இல்லை.
அப்படியென்றால் நீங்கள் என்ன மனிதர்கள்.
நாடு திரும்ப சில மணி நேரங்களே உள்ள நிலையில் என்னை தேவையில்லாமல் கேள்வி-கள் கேட்டு தொல்லைப்படுத்தாதீர்கள். தயவு செய்து நான் தங்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் நான் கெஞ்சினேன்.
சரி போகலாம். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அந்நபர் திருமணம் செய்து-கொண்டால் உங்கள் மனம் எப்படியிருக்கும். அது நல்லது. ஆனால், அந்த ஆள் செய்த குற்றம் மாய்ந்து போவதில்லையே. தாம்பத்திய உறவுமூலம் தான் செய்த குற்றம் - நேசத்தினால் அக்குற்றத்தை கழுவ முடியும். ஆனால், நேசமுள்ள உடல் உறவும் நேசமில்லா உறவும் இரண்டு சம்பவங்-களல்லவா!
இது உங்கள் அபிப்ராயமா? ஆம்.
நெடுஞ்சாலையில் பறந்து சென்று கொண்டிருந்த அந்த கார் ஒரு பிரமாண்ட ஹோட்டலில் பார்க் செய்ய சிகரெட்டை பிடித்தவாறே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த இஸ்கத்தர் என்ற மனிதரை எனக்கு புரிந்து-கொள்ள பெரும் கஷ்டமாக இருந்தது.
பின்னர் உலக தத்துவ ஞானிகளின் கட்டுரைகள், கவிதைகள், அவர் வாயிலிருந்து உதிர தொடங்கியது.
நெருதா ஒக்டோவி போசின் கவிதைகளை பிரமாண்டமாக பேசி கொண்டிருந்தார்.
அவர்கள் பேச்சுக்கள் இந்தியாவின் ஜாதி, மத மேலாதிக்க வாதிகளின் வர்ணாசிரமம் வரை நீண்டு செல்கிறது.
அவர் புதுடில்லியில் பிரபலமான கல்விக் கூடத்தில் படித்த இளம் வயதின் நாட்களுக்கு மெல்ல அவர் மனம் செல்லத் தொடங்கியது. பின்னர் திரைப்படங்களில் காணும் சில காட்சிகள் அரங்கேறுகின்றன.
என் மனைவி இந்தியன் ஜாதி மேலாதிக்கத்தின் இரை. அவள் ஆந்திராவை சேர்ந்த தலித் பெண்மணி.
நான் பிஹாரில் சுமாரான பொருளாதார வசதி நிறைந்த சூழலில் பிறந்து வளர்ந்தவன். என் சக நண்பர் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்-தவர். ஒரு ஜமீன்தாரின் மகன். ஒரு விடுமுறை காலத்தில் என்னை அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். கிறிஸ்துமஸ் குளிர்காலம். காடு, வயல், நதிகளை தாண்டி நான் அவனது வீட்டிற்குச் சென்றேன்.
அந்த குடும்பம் மிகப்பெரிய பரம்பரை நில பிரபுத்துவ குடும்பம். அந்த கிராமம் முழுவதும் எனது நண்பனின் தந்தையின் சொல் பிடிக்குள் சிக்குண்டிருந்தது. அவர் மிகப்பெரிய செல்வந்தர்.
பரந்து விரிந்து கிடந்த அவ்வீட்டில் பந்தாவான ஒரு அறை எனக்கு ஒதுக்கப்-பட்டிருந்தது. இரவு உணவு அருந்திய பின்னர் எனது நண்பன் என்னிடம் ஓர் அதிசயம் காத்திருக்கிறது என்று ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.
இஸ்கத்தர் இதை சொல்லும்போது இன்னொரு மனிதனாக மாறிக் கொண்டிருப்-பதை நான் கவனித்தேன்.
சில நிமிடங்களில் 16 வயது பருவ மங்கை என் அறைக்குள் கடந்து வந்தாள். என் நண்பன் சொன்ன அதிசயம் இவள் தான். அவள் அவ்வீட்டில் வேலை செய்யும் வேலைக்-காரியின் மகள்.
அவ்வீட்டில் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்து.
அவள் என் முன்னாள் தலை குனிந்து நின்றாள். நான் அவளை பலாத்காரமாக கட்டி அணைத்து கட்டிலில் தள்ளினேன். அவள் எதிர்க்கவில்லை. நடைப்பிணம்போல் கிடந்-தாள். என் மிருக வெறிக்குள் சிக்குண்டு சின்ன-பின்னமாகச் சிதறி கிடந்தாள். அவள் பெயரை கேட்கும் மரியாதை கூட என்னிடம் இல்லை.
இரண்டு நாட்களும் இதே வேலைதான். பின்னர் நான் ஊர் திரும்பினேன். எனது நண்பர் வழி அனுப்ப வந்தபோது, நாங்கள் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக, ஜமீன்தார்-களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இவர்கள். என் நண்பர் உரக்கச் சிரித்துக்கொண்டே சொன்னான். நானும் அவனைப் போலவே சிரித்தேன். காலம் கடந்தது.
பத்திரிகை புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவனானேன். இந்தியாவின் ஜாதி மேலாதிக்கத்தின் படு பயங்கரம் என்னை பொதிய தொடங்கியது. என் மனம் பழைய நாட்களு-க்குச் சென்றது. சீரோ வால்ட் வெளிச்சத்தில் தன் உடைகளை அள்ளி பொதிந்து சுருட்டி கட்டி இறங்கிப்போன அந்த பெண்மணி என்னை மயக்க நிலையில் பின் தொடர்ந்திருக்க வேண்டும். பூலான் தேவியைபோல ஆயிரத்திற்கு மேற்பட்ட தலித் மலைவாழ் பெண்களின் நிலைபற்றி படித்து அறிந்தேன். பிடைக்கும் அவள் முயல் கண்கள் எந்நேரமும் என்னை வேட்டையாடிக் கொண்டிருந்தன.
ஒரு கவிஞனைப்போல் இஸ்கத்தர் தொடர்ந்து சொன்னார்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நான் வளைகுடாவிற்குப் பணிக்குச் சென்றேன். விடுமுறைக்குச் சென்றபோது வீட்டில் திருமணத்-திற்கு நிர்ப்பந்தித்தார்கள்.
நான் ஆந்திராவில் சந்தித்த அப்பெண் ஞாபகம். பழைய நண்பனை அழைத்து அவள் அங்கிருக்கிறாளா? என்று கேட்டேன்.
அவன், ஆசை என்றால் உடனே வா என்றான். என் அவள் பசுமையான கட்டுடலு-டன் சமர்த்தாக இருக்கிறாள். சில மாதங்கள் எங்கள் வீட்டில் விருந்தினர்க்கு காட்சியாக்கப்-பட்டாலும் பிரமாத அழகுடன் ஜொலிக்கிறாள்.
நண்பா அதற்கல்ல. நான் அவளை திருமணம் செய்துகொள்ள...
தமாஷ் வேண்டாம் என்றான்.
நான் என் தாய் தந்தையோடு விபரத்தை கூறினேன். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியாக நான் ஆந்திராவில் அவளை தேடி கண்டு பிடித்தேன். அவள் சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் தாய் மரணம் அடைந்ததோடு அனாதை ஆனாள். பின்னர் ஒரு விலை மாதாக மாறியிருந்தாள்.
நான் அவளை நேருக்கு நேர் சந்தித்தேன். எனது கண்கள் அவள் முகம் நோக்கி பார்க்க மறுத்தது. உன்னை அழைத்துப் போக வந்தேன் என்றேன்.
யார் அழைத்தாலும் போக வேண்டியவள்-தானே என கூறி அவளுக்குரிய பொருள்களை பொதிந்து கட்டி எடுத்து வந்தாள். அனைத்தும் அறிந்ததுபோல் அவள் செய்கை இருந்தது.
பம்பாயில் பதிவுத் திருமணம் செய்து-கொண்-டோம். பின்னர் ஒரு சமூகநல இயக்கத்தின் நிழலில் ஆக்கிவிட்டு நான் பாலைவன நகரத்திற்குச் சென்றேன். சில மாதங்கள் கழித்து விசா வாங்கிச் சென்று நான் அவளை இங்கு அழைத்து வந்தேன். நான் ஒரு முஸ்லிம் ஆகவும், அவள் ஒரு தலித் இந்து-வாகவும் வாழ்கிறோம். எங்களுக்கும் பிள்ளை-களுக்கும் சொந்தம் கிடைக்குமா? நான் செய்த பாவம் மன்னிக்கப்படுமா?
இல்லற வாழ்க்கையில் அன்பு, அறம் பொருந்திய வாழ்வாயிருந்தால் உறுதியாக நான் இஸ்கத்தரோடு மறுபடி கூறினேன். நான் பயணம் செய்யப்போகும் விமானம் ஒரு சில மணி நேரங்களுக்குள் புறப்பட தயாராகிக் கொண்டிருக்கையில் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
நான் கேட்டேன், இல்லற வாழ்க்கைப்பற்றி சுகமான வாழ்க்கை, மூன்று குழந்தைகளுடன் அவளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. உள்நாட்டு தெலுங்கு மட்டுமே தெரியும். நான் அவளுக்காக தெலுங்குப் படித்தேன். என் மனைவிக்கு இப்போதும் பிஹாரி தெரியாது. பாவம் நேரத்தின் பாதை மாறும்போது மொழிகளின் எல்லைகள் மறந்து போய்விடும். இஸ்கத்தர் புன்னகை பொங்க சிரித்துக்-கொண்டே காரில் ஏற கூறினார். கார் விமான தளம் நோக்கி பறந்துகொண்டிருந்தது.
மனித நேசத்தைக் கற்பிக்க இசங்களை தொட்டு பேசி, சம்பிரதாய சடங்குகளை காட்டி, கடவுள், சாத்தான் என கற்பித்து மத நூல்-களை கற்பித்து, சொர்க்கம் என்றும் நரகம் என்றும், பாவம் என்றும் புனிதம் என்றும் கூறி மனித மனங்களை சிதைத்துக் கொல்லும் சில காட்டு மனிதக் குணத்தை தாண்டிய ஓர் மனிதனை நான் முதல் முறையாகப் பார்த்தேன்.
விமானம் உயரே பறக்க என் மனமும், மனித நேயத்த்தைத் தேடி பறந்து கொண்டிருந்தது.
|