தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

ஹாலிவுட் கலைவாணர் - 13

காதல் மன்னன் சாப்ளின் வாழ்க்கையில் மேலும் ஒரு பெண் நுழைந்தாள். தன் அழகை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக ஹாலிவுட் நோக்கி வந்தவள். சாப்பிளின் கண்ணில் பட்டுவிட்டாள், மெக்சிகோவில். பல பெண்-களுடன் இவளையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா போன ஒருவன் அவளை சாப்பளினு-க்கு அறிமுகப்படுத்தினான். தீ பற்றிக் கொண்-டது. அவள் பெயர் ஜோன் பேரி (Joan Barry).
தான் நினைத்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க சரியானவள் என்று கணக்குப் போட்டார். வாரத்திற்கு 75 டாலர் சம்பளம் என்று ஒப்பந்தம் செய்தார். 1940 ஆம் ஆண்டில் இது பெரிய தொகைதான். இவளை நடிக்கவைக்க முயற்சி செய்தார். எதிர் பார்த்த அளவுக்கு நடிப்பு வரவில்லையே தவிர, வயிற்றில் கரு வந்தது. ஒரு முறையல்ல, இரு-முறை வந்தது. நொந்து நூலாகிப்போனார் சாப்-ளின். கருக்கலைப்பு நடந்தது. படப்பிடிப்பு நடந்-தது. எதிர்பார்த்தவாறு நடிப்பு அமையவில்லை.
வாரச் சம்பளத்தை 25 டாலராக குறைத்து-விட்டார். உடனே தலையெடுத்தது துப்பாக்கிக் கலாச்சாரம். யாரிடமோ ஒரு துப்பாக்கியை வாடகைக்கு வாங்கிக் கொண்டு வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையன்று சாப்ளினைக் குறி-வைத்தார். சுட்டுவிடப் போவதாக மிரட்டினாள். அப்பொழுது அவள் நடத்திய நாடகமும, நடிப்பும் முகபாவனைகளும் அவளின்மேல் மையலை மீண்டும் ஏற்படுத்தியது. அவளைக் காதலிக்கத் தொடங்கினார் சாப்ளின். மீண்டும் கருவுற்றாள் ஜோன்பேரி. இந்தக் கர்ப்பத்தை அவள் ரகசியமாக வைத்துக் கொள்ளாமல், சிலரிடம் கூறிவிட்டாள். அவர்களில் இருவர் பத்திரிகையாளர்கள். அதிலும் பெண்கள். அதிலும் திரையுலகக் கிசுகிசுக்-களை எழுதுபவர்கள். இவர்களிரு-வரைக் கண்டாலே ஹாலிவுட் வட்டாரத்தில் பலருக்கும் பயம்தான். அப்படிப்பட்டவர்-களிடம் சாப்ளின் காதலி கர்ப்பம் அடைந்திரு-க்கும் செய்தி கிடைத்தது. விடுவார்களா? கண், காது, மூக்கு வைத்துக் கட்டுரைகள் தீட்டி-விட்டனர். காதல் மன்னன் பட்டத்துடன் நிஜ உலக வில்லன் என்றும் வருணித்துவிட்டனர்.
ஜோன் பேரியை ஜஸ்ட் லைக் தட் என வைத்திருந்தார் போலும்! ஊனா ஒனில் என்ற பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தவர், தம் மனைவியாக்கிக் கொள்ளத் திட்டமிட்டார். அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாடக ஆசிரியர் யூஜின் ஒனில் என்பவரின் மகள். சாப்-பிளினை விட 36 வயது இளையவள். சாப்-பிளினுக்கு வயது 54. இவளோ 18 வயதே நிரம்பிய பருவ மங்கை. திருமணமும் நடந்தது. நான்காம் மனைவியான ஊனா ஓனிலிடம்தான் அவர் இல்வாழ்க்கைச் சுகத்தைச் சுவைக்கத் தொடங்கினார். பெரும் வயது வேறுபாடு அதற்கு தடையாக இல்லை.
ஜோன்பேரியால் மீண்டும் பிரச்சினை. 1943 அக்டோபரில் ஜோன்மேரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் தந்தை சாப்ளின் என்று சாதித்தாள் ஜோன் மேரி. சாப்ளின் மறுத்தார். ஜோன் வழக்கு போட்டு-விட்டார். வழக்கு மன்றத்திலும் தான் தந்தை-யில்லை என்றே வாதாடினார். அதேநேரத்தில் ஜோன் பேரியின் மருத்துவச் செலவுகளுக்கும் குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காகவும் பணம் கொடுத்தார். அது தவிர 2100 டாலர் பணமும் கொடுத்தார். உடல்நிலை தேறி மீண்டும் ஏதாவது வேலைக்குப் போகும்வரை வாரம் நூறு டாலர் தொகையும் கொடுக்கச் சம்மதித்தார். ஆனாலும் குழந்தைக்குத் தாம் தந்தை அல்ல என்றே மீண்டும் மீண்டும் வாதாடினார்.
இரத்தப் பரிசோதனை (டி.என்.எ. மாதிரி) செய்து பார்க்கவேண்டும் என்ற கருத்தை நீதிமன்றம் கூறியபோது, அதனை ஏற்றுக் கொண்டார். சோதனை நடந்தது. குழந்தை சாப்ளினுக்குப் பிறந்ததல்ல என ஆய்வு முடிவு தெரிவித்தது. ஆனாலும் கூட, குழந்தையின் செலவை சாப்ளின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி மன்றம் கூறியது. அவர்தான் மனித நேயத்துடன் அதைச் செய்து வந்தாரே!
இந்த நிலையில் ஜோன்பேரி எங்கோ போய்விட்டாள், குழந்தையுடன். அப்போது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா நடத்தப்பட்டது. இதுதான் சமயம் என, காத்துக் கொண்டிருந்த அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான (F.B.I) ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அவரைப்பற்றி உளவு பார்க்கத் தொடங்கியது. அந்த நேரம் பார்த்து ஏடுகள் அவரை கம்யூனிஸ்ட் என்று எழுதத் தொடங்கின.
இப்படிப் பல முனைகளிலும் சாப்ளினுக்கு எதிர்ப்புகள் எழுந்து வளர்ந்து வந்தபோது, அவரின் காரியங்கள் யாவிலும் கை கொடுக்கும் இணையராக ஊனா ஓனில் உறுதியாக நின்றது பலரின் பாராட்டுக்கு ஆளாக்கிற்று.
சாப்ளினுக்குப் பெயரையும் புகழையும் செல்வத்தையும் வாரித் தந்த டிராம்ப் கதா-பாத்திரத்தை அவர் கைவிட்டுவிட்டார். சாதாரண பாத்திரத்தை வைத்து அவர் படம் தயாரிக்கத் தொடங்கினார். அப்படித் தயாரிக்-கப்பட்ட முதல் படம் தி கிரேட் டிக்டேடர் (The Great Dictator) பெரிய சர்வாதிகாரி! சகல அதிகாரிகளையும் தம் கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துபவர்கள். உலக வரலாற்றையே மாற்றிவிடுகிறார்கள் என்பதைக் காட்டும் படத்தை எடுத்தார்.
இட்லரை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். இட்லர் ஆஸ்திரிய நாட்டில் பிறந்து, ஓவியனாக வேண்டும் என்று ஜெர்மனிக்கு வந்து, அப்படி வாழ முடியாமல் போனவர். ஆனாலும் தன் பேச்சுத் திறமையாலும், விபரீதமான அரசியல் கொள்கைகளினாலும் ஜெர்மனியின் அரசாங்-கத்தைத் தன் கைக்குள் கொண்டு வந்து-விட்டவர். ஜெர்மனியர்களின் வாய்ப்பு வசதிகளை தடுத்து அவர்களை முன்னேற விடாமல் செய்து,. தங்கள் மேலாதிக்கத்தை வளர்த்து நிலைபெறச் செய்துவிட்ட யூதர்களின் மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் விதைத்து வளர்த்து அதனடிப்படையல் தம் அரசியலை வகுத்தவர். எங்கும் நிறைந்தவர்களாக, எதிலும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் பெற்றவர்-களாக யூதர்களே ஜெர்மனியில் இருந்தனர். (இங்கு ஆரியப் பார்ப்பனர்கள் போல) அவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டினால்-தான் அந்நாட்டின் மைந்தர்களாகிய ஜெர்-மனியர் முன்னேற முடியும் என்கிற சித்தாந்-தத்தை எடுத்துரைத்துப் பிரபலமாகி-விட்டார் இட்லர்.
இட்லருடைய இந்த இனத்துவேஷம் சாப்ளின் எடுத்த படத்தின் அடிப்படை. இந்தப் படத்தில் இரு வேடங்களில் சாப்ளின் நடித்தார். ஒன்று சர்வாதிகாரி வேடம். சர்வாதிகாரியின் பெயர் அடினாய்டு ஹிங்கல் (Adenoid Hynel) மற்றொன்று யூதர் சவரத் தொழிலாளி.
அடினாய்டு என்பது தொண்டையில் வரக்கூடிய ஒரு நோய். அந்த வியாதியால் தொண்டை அடைத்துக் கொண்டு, பேச்சு யாருக்கும் விளங்காத மாதிரி இருக்கும். இட்லர் புகழ்பெற்ற பேச்சாளர். தன் பேச்சுத் திறமை-யால் மக்களிடையே செல்வாக்கு பெற்று ஆட்சியைப் பிடித்தவர். அவரைக் கேலி செய்வது-போல, இந்தப் பாத்திரைத்தை படைத்து, புரியாத பேச்சு பேசுபவர் என்று பாத்திரத்-தைப் படைத்துவிட்டார். அதற்கு ஏகப்பட்ட வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.
வழக்கம்போலவே, இந்தப் புதுமையைத் தம் படங்களில் எடுத்தாண்டவர்கள் (அதுதான், காப்பி அடித்தவர்கள்) ஏராளம்! நம் ஊர் சத்யஜித்ரே எடுத்த படத்தில் கூட இது இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்-களேன். சார்லி சாப்ளின் படங்களினால் ஊக்கப்படாதவர்கள் யாரும் கிடையாது எனும்போது நான் மட்டும் எப்படி விலக்காக இருக்க முடியும்? என்றே அவர் கூறினார்.
இன்னொரு விசித்திரமும் உண்டு. சார்லி சாப்ளினின் பரம ரசிகர் இட்லர். அவருடைய படங்களை விலைக்கு வாங்கித் தன் வீட்டில் திரையிட்டுப் பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்டவர்.
படத்தில் வரும் யூத நாவிதர் இட்லரைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்டவர். முதல் உலகப் போரின்போது ஒரு இராணுவ அதிகாரியைக் காப்பாற்றினார். பிற்காலத்தில் ஜெர்மனி இராணுவ அதிகாரி அவரைக் கொடும் துன்பப்படுத்தும்போது யூத நாவிதரைக் காப்பாற்றுவார். அவருக்கு ஒரு காதலி உண்டு. அவளும் யூதப் பெண்தான். இந்த வேடத்திற்கு ஹன்னா (Hannah) என்று பெயர் வைத்தார். விகடகவி என்பதைப் போல, எப்படிப் படித்தாலும் ஒரே மாதிரி வருமாறு பெயர் வைத்தார்.
படத்தில் ஒரு காட்சி. இட்லர் ஒரு கடிதத்தை எழுதி உறைக்குள் போட்டு ஒட்டுமாறு ஒரு அதிகாரியிடம் தருவார். அந்த அதிகாரி தன் நாக்கு எச்சிலால் பசைமேல் தடவி அதை ஒட்டிவிடுவான். இப்படிப்-பட்டவர்கள்தாம் உலகையே வெல்லவேண்டும் எனக் கனவு கண்ட சர்வாதிகாரியைச் சுற்றியிருந்தனர் என்பதை காட்சி காட்டிற்று.
இட்லரின் மேசைமேல் ஒரு பலூன் ஊதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். உலக உருண்டையைப் போல (குளோப் ழுடடிநெ) அதன்-மீது உலக நாடுகளின் படங்கள் வரையப்-பட்டிருக்கும். இட்லர் அந்தப் பலூனை எடுத்துத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளை-யாடுவார். காலால் உதைப்பார்! இந்த உலகம் இட்லருக்கு விளையாட்டுப் பொம்மை. அதனை இட்லர் படாதபாடு படுத்துவார் என்பதை சிம்பாலிக் ஆகக் காட்டுவார்.
இந்தக் காட்சியும் பலப் பல நாட்டுப் படங்களில் காப்பி அடிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இட்லரின் சம காலத்தைவரான இத்தாலி நாட்டுச் சர்வாதிகாரி முசோலினியின் பாத்திரத்தையும் நுழைத்து விட்டார். அந்த வேடத்திற்கு கனப் பொருத்தமான குண்டு நடிகர் ஒருவரை நடிக்கவைத்தார். அந்த நாள்-களில் புகழுடன் இருந்த நடிகரான ஜாக் ஓக்கி (Jack Oakie) என்பவர் அந்த நடிகர்.
இந்த இரண்டு சர்வாதிகாரிகளும் சந்திக்கும் காட்சி. யார் பெரியவர். யார் சிறியவர் என்கிற தன் முனைப்பு (ஈகோ) தலை தூக்குகிறது. ஹிங்கல், தான் உட்கார்வதற்குப் பெரிய நாற்காலியையும் மற்றவர்கள் அமர்வதற்குத் தாழ்வான நாற்காலியையும் வைத்திருப்பார். முகோலினி இதை ஏற்க மறுத்து, ஹிங்கல் நாற்காலி அளவுக்கு இருக்கும் ஒரு மேசையின்-மேல் உட்காருவார். இந்தக் காட்சி இப்படி-யென்றால் இன்னொன்றில் வேட்டைக்குப் போகும் ஹிங்கல், வாத்து ஒன்றைச் சுட்டு-விடுகிறார். அப்பொழுது கால் தவறித் தண்ணீ-ரில் விழுந்து தடுமாறிக் கொண்டிருப்பார். யூத நாவிதரைத் தேடி வந்த இராணுவ வீரர்கள் முக ஒற்றுமையை வைத்து சர்வாதிகாரி ஹிங்-கலையே கைது செய்து விடுவார்கள். தப்பி ஓடிய யூத நாவிதர் ஒரு சந்தர்ப்பத்தில் இராணுவத்தில் சேரும்படி நேரிடுகிறது.. சுக வீரர்-கள் அவரைச் சர்வாதிகாரி ஹிங்கல் என்றே நினைத்து விடுவார்கள். இராணுவ வீரர்கள் கூட்டத்தில் யூதர் பேச நேரிடுகிறது. அந்தப் பேச்சு, அந்நாள்களில் மிகவும் பிரபலம் அடைந்தது. உலகத்தின் அமைதி நிலவ வேண்டும் என்கிற கருத்தைச் சொல்கிற படமாகவே அது அமைந்து இருந்தது.
இந்தப் படம் இரண்டாம் உலகப் போருக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. இருந்தாலும் 1940 அக்டோபரில்தான் வெளியிடப்பட்டது. படத்-திற்கு அமெரிக்க நாட்டில் வரவேற்பில்லை. இட்லரின் கொடுமையை அனுபவிக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை. ஏன் என்றால் படம் ரிலீஸ் ஆகி 15 மாதங்கள் கழித்துதான் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் (டிசம்பர் 1941) இறங்கியது. மேலும் டிராம்ப் பாத்திரம் இல்லாததை ஒரு குறையாகக் கருதி விட்டனர்.
அய்ரோப்பிய நாடுகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. இட்லரைத் தாக்கு-வதற்காக எடுக்கப்பட்ட படம் என்றே பலரும் கருதினார்கள். ஆனால், யூதர்களுக்காக எடுக்கப்-பட்ட படம் என்றார் சாப்ளின். இதனால் இவரையே யூதர் எனக் கூறினார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.
படம் நன்றாக ஓடினாலும், முந்தையப் படங்களைப்போலப் பணத்தை வாரிக் குவிக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு 1947 இல்தான் அவருடைய அடுத்த படம் வெளிவந்தது. இடையில் அவருக்கு எவ்வளவோ பிரச்சினைகள்.