அணு அணுவாய் - 5

ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம். இந்த வாசகமெல்லாம் மக்கள் தொகைப் பெருக்-கத்-தைக் கட்டுப்படுத்த எழுதப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானிய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கிவிட்ட அமெரிக்காவுக்கு பொருந்துமா?
முதல் அணுகுண்டை ஹிரோஷிமாவில் போட்டு விட்டு வந்து, பொறுமையாக பதினாறு மணி நேரம் கழித்து நாங்கள் போட்டது அணுகுண்டு; அது அதிகம் பேரை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்றெல்லாம் அமெரிக்கா அறிவிக்கும் வரை விழி பிதுங்கிப் போய்தா இருந்தது ஜப்பான். இதுதான் அணு-குண்டு அழிவு என்று ஜப்பான் அறிந்து கொஞ்சம் யோசிப்பதற்கு நிமிர்ந்து பார்ப்-பதற்குள், அவசர அவசரமாக நாகசாகியில் போடப்பட்டது இரண்டாவது அணு குண்டு.
அடி வாங்கி மயங்கியிருப்பவனை எழுப்பி சோடா, கொடுத்து, தெளிய வைத்து, அடி விழுவது தெரிகிறதா எனக் கேட்டுவிட்டுத் திரும்ப அடிப்பதைப் போல, நான் போட்டது அணுகுண்டு என்ன ஆனதென்று பார்த்தாயா? என்று கேட்டுவிட்டு அடுத்த குண்டை வீசியது அமெரிக்கா.
நாகசாகியில் குண்டு போட்டுவிட்டு விரை-வாக ஒகினவானாவுக்குச் சென்று தரையிறங்க வேண்டும். இருக்கும் எரிபொருள் அளவுக்கு எவ்வளவு விரைந்து செல்ல முடியுமோ செல்ல வேண்டும் என திரும்பத் தொடங்கியது போக்ஸ்கார் விமானமும், கிரேட் ஆர்டிஸ்ட் விமானமும். தாமதமாக வந்து கொண்டிருந்து ஹாப்கின்ஸின் விமானமும் சரியான நேரத்து-க்கு நாகசாகியின் அழிவைப் படம் பிடித்துக் கொண்டது. மூன்று விமானங்களும் விரைந்து வந்து தரையிறங்கியது ஒரு ஹாலிவுட் படத்திற்கிணையான திரில் கொண்டது.
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை இயக்கவும் முடியவில்லை. இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு பாதையிலும் மற்ற சில விமானங்களும் நிற்கின்றன. வேறு வழியில்லை. வழக்கமாக மணிக்கு 120 மைல் வேகத்தில் தரையிறங்கும் விமானத்தை 150 மைல் வேகத்தில் தரையிறக்க உத்தரவிட்டார் ஸ்வீனே. பொறிபறக்க ஸ்வீனே-யின் போகஸ்கர் விமானம் சரியாக மதியம் 1 மணிக்குத் தரையிறங்கி ஓடுபாதையில் போகும் போது இரண்டாவது எஞ்சினின் எரிபொருள் தீர்ந்து போயிருந்தது. அடுத்த 20 நிமிடங்களில் மற்ற இரு விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறங்கின.
பின்னர் பொறுமையாக எரிபொருள் நிரப்பிக் கொண்டு மாலை 5.30க்கு ஓகின-வானாவிலிருந்து கிளம்பி இரவு 11.30க்கு டினியன் சென்று சேர்ந்தார்கள் மூன்று விமானத்தினரும்.
வெற்றிகரமான இரண்டாவது அணுகுண்டு வீச்சும் முடிந்தபிறகு ஆசுவாசப்படவில்லை அமெரிக்கா. ஒரு பக்கத்தில் வானிலிருந்து அமெரிக்கா இன்னொரு பக்கத்தில் சோவியத் படையெடுப்பு என நசுங்கிக் கொண்டிருந்த ஜப்பான் வேறு வழியின்றி சரணடைய வேண்டிய சூழ்நிலை, கிடைத்த ஒரு சோதனைக் களத்தை விட்டு விட மனமில்லை அமெரிக்காவுக்கு.
அதிசயமான இந்த அழிவுக்கருவி, ஏதோ ஒன்று தான் இருக்கிறது என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்பதற்குத்தான் அடுத்த குண்டை அவசரமாகப் போட்டது அமெரிக்கா. ஆனால் அத்தோடு நாங்கள் தயாரிப்பை நிறுத்திவிடவில்லை. சர்வ வல்லமை படைத்த நாடாகத் திகழ எங்களிடம் உலகையே அழிக்கும் ஆயுதம் இருக்கிறது என்று நிறுவ வேண்டும் என்பது அமெரிக்க அதிகார-மய்யத்தின் எண்ணம். அதற்காக அடுத்தத் தாக்குதலுக்கும் நாள் குறித்தது அது. ஆகஸ்ட் 3-வது வாரத்தில் 17 அல்லது 18ஆம் தேதிகளில் வீசுவதற்கு வாய்ப்பாக குண்டை இராணு-வத்திடம் வழங்கத் தயாராக இருங்கள் என்று இராணுவ ஜெனரல் ஜார்ஜ் மார்ஷலுக்குக் கடிதம் எழுதினார் மன்ஹாட்டன் திட்டத்தின் இராணுவ இயக்குநர் மேஜர் ஜெனரல் லெஸ்லீக்ரோவ்ஸ் குறிப்பு எழுதி அனுப்பினார். அதில் இன்னொரு பின்குறிப்பும் இருந்தது. அமெரிக்க அதிபரின் ஆணையில்லாமல் அது ஜப்பான் மீது பயன்படுத்தப்படக் கூடாது என்பதுதான் அது.
ஆகஸ்ட் மாதத்துக்கு மட்டும் என்றில்லா-மல், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கும் மூன்று அணுகுண்டுகள் வீதம் தயார் செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தி-ருந்தார்கள். இத்தனை குண்டுகள் வீசும் போதும் அதில் கொஞ்சமும் தயக்கமோ, அனுதாபமோ கொள்ளவில்லை அமெரிக்-காவும் அதன் வீரர்களும். குண்டு போடுவது என்று முடிவெடுத்தபின் அதில் சாவது நூறு பேராயிருந்தாலென்ன? நூறாயிரம் பேராயிருந்-தா-லென்ன? போர்வீரனுக்கு அது பற்றிக் கவலை இல்லை என்றே கருதினார்கள். வரலாற்றில் நிற்கப் போகிற இந்தப் புகழுக்காக (!) போட்டிப் போட்டுக் கொண்டு பணி-யாற்றினார்கள்.
லட்சக்கணக்கோனார் மடிந்த இரண்டாம் உலகப் போரை நிறுத்தியது. நாங்கள் போட்ட அணுகுண்டுதான். அரசு ஆணையிட்டால் அதைச் செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் நாங்கள் செய்தோம். எங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லை. நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று பின்னா-ளில் கூறினார் பால்டிப்பெடஸ். இப்படித் தங்களைத் தாங்களே சமாதானப்-படுத்திக் கொண்டாலும், அணுகுண்டுக்கான அவசியம் இல்லையென்கிறது வரலாறு.
ஜெர்மனியில் ஹிட்லர் மற்றும் இத்தாலியில் முசோலியின் வீழ்ச்சி அவர்களின் கூட்டாளி-யான ஜப்பானையும் வெகு சீக்கிரம் விழ வைத்திருக்கும். ஆனால் அதற்குள் தங்கள் புதிய ஆயுதத்தைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய அரிப்பு அமெரிக்காவுக்கு என்கிறார்கள் வரலாற்று நோக்காளர்கள்.
ஒருவழியாக ஜப்பான் தனது சரணாகதி அறிக்கையை ஆகஸ்ட் 12 அன்று வெளி-யிட்டது. ஜப்பானிய அரசர் ஹிரோஹிட்டோ கையொப்பமிட்டிருந்த அவ்வறிக்கை ஜப்பானின் பழைமைவாதிகளிடம் அதிருப்தி-யை ஏற்படுத்தியது. அதையும் கடந்து சரண-டைந்தது ஜப்பான்.
நமது எதிரிகள் மனித குலத்தைப் பூண்டோடு அழிக்கும் கொடூரமான ஆயுதங்-களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்-கிறார்கள். கணக்கிடமுடியாத மனித இழப்புகளையும் மீறி நாம் போரைத் தொடர்வதால், ஒட்டு-மொத்த ஜப்பானும் அழிவதைத் தான் பார்க்க முடியும். இன்னும் இருக்கும் கோடிக்-கணக்கான மக்களை காப்பதா இல்லை நம் முன்னோர்-களிடம் மன்னிப்புக் கோருவதா? இந்தக் காரணங்களால் தான் எதிரிகளின் இந்த உடன்பாட்டுக்கு நாம் ஒத்து வரவேண்டிய அவசியம் இருக்கிறது என்று ஜப்பான் மக்கள் மத்தியில் உரையாற்றினார் ஹிரோஹிட்டோ. ஜப்பானிய துருப்புகள் சரணடைந்தன. ஹிரோஷிமா, நாகசாகி உள்ளிட்ட ஜப்பான் அனைத்து இடங்களும் அமெரிக்க, ரஷ்ய, இங்கிலாந்து கட்டுப்படைகள்வசம் வந்தன.
குண்டு வீச்சின் தன்மையை அளவிடும் கருவிகளோடு கிரேட் ஆர்டிஸ்ட் போர் விமானத்திலிருந்து பிரெடரிக் போக் இறக்கிய மூன்று பாராசூட்டுகளில் ஒன்றில் கையெழுத்-திடப் படாத கடிதம் ஒன்று இருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்த பாராசூட்டை போர் வீரர்கள் கண்டெடுத்தனர்.
மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் தகவல் அதில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தை ஒரு மாதத்திற்குப்பின் உரியவரிடம் சசேபோ கப்பல் படைத் தளத்தில் வைத்து வழங்கப்படும் வரை வெளியில் வரவில்லை. அணு ஆயுதத்-திற்குப் பொறுப்பான கலிபோர்னியா பல்-கலைக் கழக அறிவியல் ஆராய்ச்சிகளை மூவரிடமிருந்து தங்களுடன் முன்பு ஆய்வில் ஈடுபட்டு பின்னாளில் டோக்கியோ பல்கலைக் கழகத்தின் அணு ஆய்வாளராகப் பணியாற்றிக் கெண்டிருந்த சியேகிச்சி சாகனே என்ற பேராசியருக்கு எழுதப்பட்டிருந்தது.
(அடுத்த இதழில்) |