தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் வல்லத்தில் இயங்கிவரும் பெரியார்--மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியாரியல் சிந்தனை மய்யம் தொடங்கப்-பட்டுள்ளது. இந்தியாவின் பல பல்கலைக் கழகங்களில் காந்திய சிந்தனை பாடங்கள் உள்ளன. இந்திய சமூகச் சிக்கல்களுக்கு சரியான தீர்வான பெரியாரியல் பாடங்கள்-தான் மிகவும் அவசியம். அந்தப் பணியை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சென்னை பெரியார் திடலில் பெரியார் சிந்தனைப் பட்டப் படிப்புகளை திராவிடர் கழகம் நடத்தி வந்தது. பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இராமநாதன் அவர்கள் திறம்பட நடத்தி வந்தார். பின்னர் திருச்சிராப்பள்ளியில் பெரியாரியல் பயிற்சிக் கல்லூரியும் இயங்கியது. தற்போது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நிரந்தரமாக இயங்கும் வகையில் பெரியாரியல் சிந்தனை மய்யம் (Centre for Periyar Thought) தொடங்கப்-பட்டுள்ளது.
இந்த மய்யத்தில் 6 மாத சான்றிதழ்ப் படிப்புகள், 2 ஆண்டு முதுநிலைப் பட்டப்-படிப்பு (எம்.ஏ.), ஓர் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பு (எம். ஃபில்), 3 ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு (பி.எச்.டி) ஆகிய படிப்புகள் தொடங்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்பிற்கும் பின்வருமாறு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ்ப் படிப்பு - 6 மாதம் பாடத்திட்டங்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு - ஓர் அறிமுகம் - 1 நாள் வகுப்பு, பெரியாரின் கொள்-கைகள் - 1 நாள் வகுப்பு
பார்வை நூல்கள்: தாள் 1: 1. தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார், 2. உலகத் தலைவர் பெரியார் பாகம் - 2 - டாக்டர் கி.வீரமணி, 3. தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் - திராவிடர் கழக வெளியீடு, 3. பெரியார் ஆயிரம் - வினா விடை - பெரியார் திடல், சென்னை, 5. பெரியார் வாழ்க்கை வரலாறு - கவிஞர் கருணாநந்தம்
தாள்: 2
1. இந்து மத மூடப் பண்டிகைகள், 2. வகுப்புரிமை வரலாறு, 3.சமூக நீதி, 4. திராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும், ஏன்?
முதுநிலைப் பட்டப் படிப்பு (எம்.ஏ.) - 2 ஆண்டு பாடத்திட்டம்
முதற் பருவம்
1. தமிழர் பண்பாடு - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 2. பெரியாரும் காங்கிரசும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 3. பெரியாரும் பெண்ணுரிமையும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள்
இரண்டாம் பருவம்
1. பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 2. பெரியாரும் சமூக நீதியும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 3. வேத, இதிகாச, புராண, பண்பாட்டுத் தாக்கங்கள் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள்
மூன்றாம் பருவம்
1. பெரியாரும் நீதிக் கட்சியும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 2. பெரியாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 3. மன்னர்களும் மனுதர்ம சாஸ்திரமும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள்
நான்காம் பருவம்
1. பெரியாரும் திராவிடர் இயக்கமும் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 2. பெரியாரின் கலை, மொழி, இலக்கியச் சிந்தனைகள் - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள், 3. பெரியாரின் சமுதாயப் பண்பாட்டுப் புரட்சி - 1 வாரத்திற்கு 5 வகுப்புகள்
பார்வை நூல்கள்
தாள் : 1
1 தமிழர் பண்பாடு - வி.டி.செல்வம் கே.கே.பிள்ளை, 2. பெண் ஏன் அடிமையானாள் - தந்தை பெரியார், 3. சமூக நீதி - டாக்டர் கி.வீரமணி, 4. சுயமரியாதை இயக்க வரலாறு, 5. பெரியார் களஞ்சியம், 6. தமிழர் தலைவர் - ச.வே.சுப்ரமணியம், 7. தந்தை பெரியார் - கவிஞர் கருணாநந்தம்
இரண்டாம் பருவம்
1. புரட்சியாளர் பெரியார் - பத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தர வடிவேலு, 2. பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி - டாக்டர் கி.வீரமணி
ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பு (எம்.ஃபில்.) - 1 ஆண்டு பாடத்திட்டம்
முதற் பருவம்
1. ஆய்வு நெறியியல் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள் (5 மணி நேரம்), 2. பெரியார் சிந்தனைகள் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள் (5 மணி நேரம்)
இரண்டாம் பருவம்
1. உலகச் சிந்தனைகள் (விருப்பப் பாடம்) (சாக்ரடீசு, அரிஸ்டாடில், பிளாட்டோ, கான்பூசியஸ், லட்டோ) - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 2. நூலகப் பயன்பாடு, கருத்தரங்கு, ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 3. ஆய்வேடு அளித்தல் தொடர்பாக - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள்
விருப்பப் பாடம்
ஆய்வேடுகள் பெரியாரியல் மையப்படுத்தி அமைய வேண்டும்
1. தொன்மைச் சிந்தனைகள் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 2. இடைக்காலச் சிந்தனை - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 3. நவீனகாலச் சிந்தனை - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள்
பார்வை நூல்கள்
தொன்மைச் சிந்தனைகள் (புத்தர், மகாவீரர் சங்க இலக்கியத்தில் சமுதாயச் சிந்தனை)
தாள் : 1
1. ஆய்வு நெறியியல் - டாக்டர் தமிழ்ண்ணல், 2. பெரியார் களஞ்சியங்கள் - தொகுப்பு பெரியார் திடல், சென்னை, 3. பெரியாரியல் - டாக்டர் கி.வீரமணி, சென்னை, 4 பெரியாரியல் - புலவர் ந.ராமநாதன், சென்னை, 5. Laotzh, Confucius - Humanist Anthology, 6. Socrates, Plato, Aristotle - Great Philosophy Thomas & Thomas
முனைவர் பட்டப் படிப்பு (பி.எச்.டி.) - 3 ஆண்டு பாடத்திட்டம்
முதற் பருவம்
1. ஆய்வு செய்யும் முறைகள் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 2. பெரியார் சிந்தனைகள் - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள்
இரண்டாம் பருவம்
1. உலகச் சிந்தனைகள் (விருப்பப் பாடம்) - 1 வாரத்திற்கு 3 வகுப்புகள், 2. ஆய்வேடு
மூன்றாம் பருவம்
1. ஆய்வேடு
நான்காம் பருவம்
1. ஆய்வேடு
அய்ந்தாம் பருவம்
1. ஆய்வேடு
ஆறாம் பருவம்
1. ஆய்வேடு
பார்வை நூல்கள்
தாள்: 1
1. ஆராய்ச்சி நெறிமுறைகள் - பதிவாளர் டாக்டர் ச.வே.சுப்ரமணியன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், 2. பெரியார் களஞ்சியங்கள், பெரியார் திடல் சென்னை, 3. பெரியாரியல் - டாக்டர் கி.வீரமணி, சென்னை, 4 பெரியாரியல் - புலவர் ந.ராமநாதன், சென்னை, 5. Periyar, the Social Scientist - Prof Dr. N. Velusamy, 6. உலகச் சிந்தனை குறித்த நூல் - கு.வெ.கி.ஆசான், 7. King’s Research Methods - G. Das, 8. How to Get a Ph.D. - Eatable M.Phil, D.S. Pugh
பெரியாரியல் குறித்து மேற்கண்ட படிப்பைப் பெற விரும்புவோர், பெரியாரியல் சிந்தனை மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் - 613 403 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.