தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

கற்பனை உரையாடல்

(வயிறு புடைக்க விருந்துண்டபின் உரையாடல் நடக்கிறது)
ஜெய: விருந்து எப்படி?
மோடி: செம, செம, செம, செம, சுமார்
ஜெய: அதென்ன, கடைசியா ஒரு சுமார்?
மோடி: நம்ம விருந்துல லோக்கல் பிஜே-பி. காராளையும் சேர்த்திருந்தா இன்னும் செமயா இருந்திருக்கும்!
ஜெய: நாம சந்தோஷமா பேசிட்டிருக்கச்ச அவாளப் பத்திப் பேசி என்னோட மூடை ஸ்பாயில் பண்ணாதேள்!
மோடி: ஓகே! ஓகே! அத விடுங்க! விருந்துன்னு சொல்லி இப்படி 45 வகைக் கூட்டோட அசத்திட்டீங்களே!
ஜெய: கூட்டோட எண்ணிக்கை 45! அதைக் கூட்டினா எண்ணிக்கை 9! அவ்ளோதான்!
மோடி: வாவ்! உங்களோடு நியூமராலஜி நம்பிக்கை ரியலி கிரேட்!
ஜெய: என்ன பண்றது! தமிழ்நாட்டு மனுஷாள் மேல நம்பிக்கை வைக்க முடியற-தில்லை! திடீர் திடீர்னு கைகழுவிடறா!
மோடி: உங்களைப் பத்தி நினைச்சாலே சோனியா காந்தியே மிரளுறார்! நீங்க என்னடான்னா தமிழ்நாட்டு மக்களைப் பார்த்துப் பயப்படுறீங்களே!
ஜெய: உங்களுக்கென்ன, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செஞ்சாலும் உங்க ஜனங்க உங்களை நம்புறாங்க! இங்க இப்படியா? மூணே மூணு பேரை உயிரோட எரிச்சதுக்கே தூக்குத் தண்டனை அது, இதுன்னு வெறுப்பேத்துறாங்க!
மோடி: எல்லாத்துக்கும் மக்களைக் குறை சொல்லிப் புண்ணியமில்லை! நாமதான் சில மோடி மஸ்தான் வித்தையெல்லாம் செய்யணும்...
ஜெய: அதென்ன வித்தை?
மோடி: காஷ்மீர் பிரச்சனை, ராமர் கோவில் பிரச்சனைன்னு எல்லா பிரச்சனையையும் ஒன் பை ஒன்னா கிளறிக்கிட்டே இருக்கணும்! அணையவும் கூடாது, முழுக்க எரிஞ்சு சாம்-பலாகவும் கூடாது! இப்போகூட ராமர் பால பிரச்சனையை அப்படி யூஸ் பண்ணிக்கலாம்!
ஜெய: இவ்ளோ தானா விஷயம் அட!
மோடி: இது மட்டுமில்ல. முக்கியமா எதிர்க்கட்சிகளை நமக்கு எதிரா ஒண்ணு சேரவே விடக்கூடாது! ராபர்ட் கிளைவ் மாதிரி பிரிச்சு மேயணும்!
ஜெய: அதெப்படி? இங்கதான் என் விஷயத்துல மட்டும் எல்லா கட்சிக்காராளும் ஒண்ணா சேர்ந்துக்கறாளே! இந்த லோக்கல் பிஜேபிக்காரனுங்ககூட என்கிட்ட ஒழுங்கா பேசறதில்ல!
மோடி: லோக்கல் பிஜேபி மேல எனக்கும்-கூட கோபம்தான். ஆச்சுவலா எனக்கு இவங்க-தான் விருந்து வச்சு மரியாதை தரணும். அதுக்குக்கூட தைரியம் இல்லாதவங்கதான் இவங்க! இவங்களுக்கு நான் புத்தி சொல்-லிட்டுப் போறேன்! டோன்ட் ஒர்ரி!
ஜெய: இது மட்டுமா? சினிமாவுலதான் கதாநாயகிக்கு மதிப்பில்லை, ஹீரோக்கள் ராஜ்ஜியமா இருக்குன்னா, இப்போ வர வர அரசியல்லயும் அதே நிலைமை தொடங்கிடுச்சு! எனக்கு மதிப்பேயில்லை!
மோடி: என்னயிருந்தாலும் நீங்க மார்க்கெட் போன நடிகை தானே! ஃபீல் பண்ணாதீங்க!
ஜெய: இவங்கதான் இப்படின்னா அந்தாளு அத்வானிக்கு என்னாச்சு? திடீர்னு அவர்தான் பிரதம வேட்பாளர்னு சொல்லிக்கிறார்? செலக்டிக் அம்னீசியால என்னைச் சுத்தமா மறந்திட்டாரா?
மோடி: கூல்! கூல்! கவலைப்படாதீங்க! அடுத்த தேர்தல்ல நாம எல்லாம் ஒண்ணு சேர்ந்து கலக்கலாம். உங்களை அடுத்த பிரத-மராக்க நான் சிபாரிசு பண்றேன்!
ஜெய: (விடாமல் கண்ணைக் கசக்குகிறார்)
மோடி: ஒகே. பிரதமர் பதவி கிடக்கட்டும்... உங்களுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க ஏற்பாடு பண்றேன் போதுமா?
ஜெய: (முகமெல்லாம் மலர்கிறது) இது... இது... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்! மோடின்னா மோடிதான்! தேங்க்யூ! பை! பை! போறப்ப மறக்காம லோக்கல் பிஜேபிக்குப் பாடம் நடத்திட்டுப் போங்க!